சனி, 4 பிப்ரவரி, 2017

புற வலம் the external strength. ப்ரபல

ஒருவன்,  தன் வீட்டுக்கு வெளியே,  அதாவது வெளியுல்கில் புகழுடன்
விளங்கவேண்டும். வீட்டில் யாரும் புகழ்ந்தால் என்ன? புகழாவிட்டால்
என்ன என்று இருந்துவிடலாம். வீட்டிலிருப்போர் ஒருவனை மெச்சுவதும்
நல்லதுதான். அதற்கும் பலன்கள் உண்டு. என்றாலும் வெளியுலகப் புகழே பலரும் விரும்புவது என்று சொல்லலாம்.

புறத்தே புகழ் இருப்பின், அவன் வலிமையுடன் இருக்கிறான் என்று பொருள்.  அதற்கு ஒரு சொல் அமைப்போம்.

புறம் :  இதை ப்ர என்று மாற்றுங்கள்.
வலம்: இது பலம் என்பதன் வேறன்று.  வலிமையே வலம். புகழே வலம்.  வலமே பலம் ஆகும். பலம் என்பது பல என்றும் அம் இறுதியின்றிப் பிறமொழியில் நிற்கும்.

ஆகவே,  புற வலம் என்பது ப்ரபல அல்லது ப்ரபலம் என்றாகும்.

ப்ரபல என்ற சொல்லமைப்புக்குப்  புற வலம் என்பது அடித்தளம். எனினும் அது வழக்கில் இல்லை. தமிழில் ஒழிந்த நூல்கள் பல. அவற்றிலெங்காவது இருக்கலாம். கிட்டாததைப் பேசி என்ன கிடைக்கிறது!

கருத்துகள் இல்லை: