வியாழன், 23 பிப்ரவரி, 2017

சைகை சைதன்யம்

சைகை என்ற சொல்லினைப் பார்ப்போம்.
புன்செய் என்பது புஞ்சை என்றும் நன்செய் என்பது நஞ்சை என்றும் வழங்குவதுடன் முன் சிலகாலம் இங்ஙனமே எழுதப்பட்டும் வந்தது.
சொற்கள் திரிதலை வாத்தியார்கள் ( இவர்கள் வாய்மெழிப் பாடங்கள்
சொல்லிக்கொடுப்போராதலின் இப்பெயர் பெற்றனர் : வாய்த்தி > வாத்தி > வாத்தியார், உப+ அத்தியாயி > உபாத்தியாயி, உபாத்தியாயர் என்பது
வேறு சொல்; குழப்புதல் வேண்டா) பெரும்பாலும் விரும்புவதில்லை.
ஆனால் மொழியே ஒரு திரிந்தமைவுதான். குகைமாந்தனின் காலத்தில்
சிறு சொல்தொகுதியாய் இருந்த மொழி, பின் திரிபுகளால் விரிந்தது
என்பதுமுணர்க. பல சொற்களையும் ஆய்ந்தால் இதை நாமுணரலாம்.
எனவே, செய்கை என்பது சைகை என்று திரிந்தது. செய்>சை.
இதன் தொடர்பில் சைதன்யம் என்ற சொல்லைக் கவனிப்போம். இதன்
பொருள்: தானே முயன்று அடைவது என்பதுதான். பிற பொருள் இதில்
ஏற்றிக் கூறுவது மனிதனின் பொருள்விரிப்புத் திறனேயன்றி வேறில்லை. தானே ஒருவன் முயன்று அடைவது எது? பல இருக்கலாம் எனினும் இங்கு காரண இடுகுறியாய், அறிவாற்றலைக்
குறித்தது. செய் + தன் + இயம் = செய்தன்னியம் > சைதன்னியம் > சைதன்யம் என்பது திரிபு. இது தமிழ்மூல அமைப்புச்சொல் எனினும்
வழக்கில் பிறமொழியில் மிகுதியாய் வழங்கியிருப்பதானால் அந்த‌
மொழிக்குத் தானமாய்த் தந்துவிடுவதில் இழப்பு ஒன்றுமில்லை.
அறிவே கடவுள் என்ற கொள்கையினால், சைதன்னியம் அறிவாகிய‌
கடவுளையும் குறித்துப் பின் பொதுப்பொருளிலும் வழங்கினது அறிக.
மனிதன் அறிவுவாழ்நன். (அறிவுஜீவி). எனவே அறிவுவாணனாகிய‌
மனிதனையும் குறித்தது

will  edi later.

கருத்துகள் இல்லை: