ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

சடக்கு சடு: அடிச்சொல். சடு, சட்டு

சடக்கு என்பது பற்றி முன் எழுதியதுண்டு.  அது சென்ற ஆண்டிலே எழுதப்பட்டமையினால், அழிபாடாது தப்பிற்று.

https://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_67.html

அழித்தலை எப்படிச் சாதித்தனர் எனின்,  ஓர் ஒட்டு மென்பொருளை
அறிமுகம் செய்வித்து, அதை ஏற்கும் படிச்  செய்தனர். பல உலாவிகளிலும் உள்ள கடிதங்களை எல்லாம் ஓரிடத்திலே காணலாம்
என்றனர். யாம் உலாவியைத் தொடங்கியவுடன் அந்த ஒட்டுமெல்லி  (Browser Add-on) அழிக்கும் தன்வேலையைத் தொடங்கி அழித்துக்கொண்டே இருக்கும். யாம் அறியாமல் இது நடைபெற்றது. பல சங்கப் பாடல்களுக்கு யாம் எழுதிய உரையும் அழிந்தன. அவை எம் பழைய கணினிகளில் இருக்கக்
கூடும்.  தேடிப்பார்க்கவேண்டும். அது நிற்க.

சடக்கு என்பதில் சடு என்பதே அடிச்சொல்.  சடு, சட்டு என்பன விரைவுக்குறிப்புகள். இம்மட்டோ?  இந்தச் சடுவும் அடு என்பதன்
திரிபன்றி வேறில்லை.  முன் இடுகையின் தொடர்பாகவே இதைப்
பார்த்தல்வேண்டும்.   https://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_67.html. a/m.  இடையீடின்றி அடுத்து அடுத்து நிகழ்வதே
விரைவு ஆகும். அடுத்தல் அடிப்படை வினை. விரைவு என்பது
அவ்வினை நிகழ்வின் வெளிப்பாடன்றி வேறில்லை என்று அறிக/

இங்கிருந்து,  சடக்கு என்பதைச்  சாலை என்ற மலேசியப் பொருளில் உணரலாம்.  பெரும்பாலும் சாலைகள் வீடுகட்கு அடுத்திருக்க அமைக்கப் பட்டிருந்ததாலும், வண்டிகள் விரைவு காரணமாகவும்
சடக்கு என்பது பொருத்தமான, சாலை குறித்த சொல் ஆகும்.

சடுகுடு பற்றிப் பின் பேசலாம்.

கருத்துகள் இல்லை: