continue from https://sivamaalaa.blogspot.sg/2016/09/blog-post_16.html
வள்ளுவர் திருவள்ளுவர் என்ற பதங்களில் உள்ள வள் என்ற அடிச்சொல்லைக் கவனிப்போம். வள் > வளம் என்பது செழிப்பைக் குறிக்கிறது. வள் என்பதனோடு அல் விகுதி வந்திணைந்து வள்ளல் என்ற சொல் அமைகிறது. வள்ளியோன், வள்ளியன் என்ற வடிவங்களும் வள்ளல் என்பதே. வள் : அதனோடு இ விகுதி சேர்ந்து வள்ளி என்ற பெண் பெயர் அமைந்து முருகனுடன் கூடிவரும் வள்ளி நாய்ச்சியைக் குறிக்கிறது. வள்ளியம் : குழல், மரக்கலம், மெழுகு என்பன பொருள். இவற்றுக்கும் வள்ளியம்மைக்கும் யாது தொடர்பு என்று கேட்கத் தோன்றுகிறது? வள் அடி அம் விகுதி பெற்று வள்ளம் என்றாகி தோணியைக் குறிக்கும், தொன்னை, அதனுடன் ஓர் அளவுக்கும் அது பெயர். வள்ளம் என்பது வட்டில் என்றும் பொருள்தரும். வள் > வள்+து = வட்டு. வட்டு+இல் : வட்டில். வள் பு விகுதி பெற்று, வள்பு என்றாகித்
தோல் குறித்து, பின் உரம் என்ற சொல் ஏறி வள்ளுரம் ஆகித் தோலுடன்
சேர்ந்த புலால், இறைச்சி முதலியவும் குறித்து, மகிழ்விக்கிறது! வள்ளை என்பதோ ஒரு கொடியையும் குறித்து ஒரு பாட்டினையும்
குறிக்கிறது.
வள் > வளி காற்று. அதிலிருந்து சூறாவளி வந்துவிடுகிறது.
வள் > வளை > வளையல் , வளைவி :
வளை என்பது வள் என்பதிலிருந்து வந்த மற்றோர் சிறந்த அடியாகும்.
இப்படி வள் அடிச்சொல் ஆய்வு செய்து, வள்ளுவர் திருவள்ளுவர் யார்
என்று கண்டுபிடிப்பது முயற்கொம்புதான். திருவள்ளுவருக்கும், வள்ளுவக்குலத்துக்கும், தோலுக்கும், இறைச்சிக்கும் முரசுக்கும் ஏதும்
தொடர்பு இருப்பது அயற் சிந்தனைகளை உள்ளே புகுத்தாமல் சொல்லாய்வு ஒன்றையே கொண்டு கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆய்வு தொடரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக