பர என்ற அடிச்சொல்லில் திரிந்த சொற்கள் சிலவற்றை முன் இடுகைகளில் கண்டு மகிழ்ந்தாலும் . இன்னும் பல உள்ளன. அவற்றைப் பற்றி நேரம் கிட்டுங்கால் கண்டு இன்புறலாம்.
இப்போது சில,முன் கூறியவை, பொழிப்பாக:
பர > பரவை பரந்தது: கடல்.
பர > பரமன் பரந்தது: கடவுள்.
பர > பரயன் >பரையன் > பறையன்
ஐவகை நிலங்களிலும் பரந்து காணப்படுவோன்.
பர > பராக்கு கவனம் பரவ நிற்றல்.
பர > பற ஓரிடத்தினினின்று இன்னோர் இடத்துக்கு வானிற்
போதல்.
பர > பரன் எங்கும் பரந்திருப்போன்.
பர > பார் : பரக்க நோக்குதல்.
பர > பார் (பரந்த இப்பூமி ).
பர > பார் > பாரித்தல் பரவுதல் .
பர > பார்ப்பு: பார்த்துக்கொள்ளவேண்டிய பருவத்தின. குஞ்சுகள்.
பர > பார் > பார்ப்பான். கோயிற்காரியம் பார்ப்பவன்.(வேறு பொருளும்
கூறுவர் ). அரசின் பார்வை பெற்றோன் .
பர > பரயன் > பரையன் > பறையன்.
ஐந்து நிலங்களிலும் பரந்து காணப்படுவோர். செய்தி பரப்புவோர்.
பர > பறை > பறைதல் : சொல்லுதல் ( செய்தி பரப்பு )
பர > பரை > பறை: அடித்துச் செய்தி பரப்பும் கருவி.
இவை அனைத்தையும் அவ்வப்போது தொட்டு மேலும் ஆய்வோம்.
இவற்றுள் "பரவு , பரப்பு" என்னும் கருத்துக்கள் எந்த அளவுக்குத் தெளிந்து காணப்படுகிறது ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக