தமிழில் சொல்லும்போது இடக்கராகத் தோன்றும் சில சொற்களையும்
தொடர்களையும் அவை தமிழ் என்னாமல் வேறு மொழியினுடைய என்று கூறிவிட்டால் அந்த இடக்கான பொருள் மேலெழாது அடங்கிப்போகும். சிலவிடத்து இவ் வுபாயத்தை அல்லது ஆம்புடைமையைக் கையாண்டுள்ளனர் இந்திய இலக்கியவாதிகள். இது ஒரு செயலாற்றுத்
திறன் என்றே உயர்த்தவேண்டும். எந்த எந்த இடங்களில் அவ்வாறு செய்துள்ளனர் என்று விரித்து விளக்கலாம். ஆனால் அது புதைத்ததை மீண்டும் கிண்டி மேலெடுத்தது போலாகிவிடும்.
ஆனால் எடுத்துக்காட்டாக மட்டும் ஒன்றைக் காட்டி முடித்துவிடலாம்.
அது சாணக்கியன் என்பதே. பிரித்துப் பார்த்தால், சாண் நக்கியன் என்று
இடக்கர்ப் பொருள் வருகிறது. ஆகவே இவன் தமிழனே ஆனாலும்
இவனை வடதிசைக்குப் பெயர்த்துவிடின் தொல்லை இராது.
இவன் எழுதினான் என்று சொல்லப்படும் அர்த்தசாத்திரமும் தமிழிற்போந்து பின் சமஸ்கிருத மொழியிற் பெயர்க்கப் பட்டதென்றே
தெரிகிறது. தமிழ் மூலம் தொடர்பு துண்டிக்கப்பட்டுக் கிடப்பதாகக்
கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் குமரசாமிப் பிள்ளை இதனை மீண்டும்
அழகிய வெண்பாக்களாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவற்றைப் பாடி
இன்புறுக.
எடுத்துக்காட்டுக்கு:
ஆடையால் மற்றை அணியால் அலங்கரித்துப்
பீடடைய வந்த பெருமூடர் -நீடவையில்
எத்துணையும் பேசாது அடங்கி இருப்பரேல்
அத்துணையும் மேன்மை அவர்க்கு ".
(சாணக்கிய நீதி வெண்பா)

இது அவையடக்கம் வலியுறுத்தியது. பேச வேண்டிய சமையத்துப் பேசவேண்டும். இன்றேல் " நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நன்மரம் " என்று குற்றமாகும் . இ
துபோலும் கருத்துக்கள் மன்னர் அவைக்குரிய என்றாலும் இன்றும் பொருந்துவனவாம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக