சனி, 17 செப்டம்பர், 2016

சேனை என்ற சொல்

இப்போது சேனை என்ற சொல்லைக் கவனிப்போம்.

இது பல மொழிகளில் வழங்கும் சொல். சேனா என்றும் வழங்கும். தமிழில்
சேனை  என்று வழங்கும்.

பலர் சேர்ந்து போருக்குப் போவதே சேனை. எனவே சேர் என்பது சே என்று கடைக்குறைந்து திரிந்தது.

நை என்பது ஒரு விகுதியாகவும் இயங்கும்.  சேர்ந்து நைவித்தல் அல்லது நையச் செய்தல் எனற்பாலது நை என்றும் வரும்.

சே + நை =  சேனை ஆயிற்று.

இது தமிழ் மூலங்களை உடையது.

யானை, குதிரை காலாள் தேர் என்ற நான்கும் கலந்தது சேனை
எனவும் படும். இதுவும் சேர்தல் கருத்தேயாகும்.


இனிச் செரு என்னும் போரிடுதல் பொருள்தரும் சொல்லும் சேர் என்று திரியும்.

கரு > கார் என்று திரிதல் போலும் ஒரு திரிபே இது.

செரு என்பது சேர் ஆகி,  சேர் பின் சே என்று நின்று சொல்லைப் பிறப்பித்தது எனினும்  ஆகும்.

செரு > சேர் >  சே > சேனை

செருதலாவது போரிடுதல் .செருப்படை  செருபடை என்ற வழக்குகள் காண்க .

சே என்ற கடைக்குறைச் சொல்லினின்று பிறந்த இன்னொரு சொல்  சேமி என்பது .    சே > சேமி > சேமிப்பு .

கருத்துகள் இல்லை: