ஆயத்தம் என்ற சொல்லைப் பற்றி உங்களுடன் சிந்திக்கலாம் என்று இரண்டு
மாதங்களுக்கு முன்னரே எண்ணியிருந்தாலும் அதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிட்டிற்று.
ஆயத்தம் என்பது தயார் நிலை, முன்னேற்பாடு என்று பொருள்படுவது. இச்சொல்லின் முன்னிருப்பது ஆய என்பது. ; மற்ற சொல் அற்றம் ஆகும்.
அற்றம் எனின் தருணம். தகுந்த நேரம்.
அற்றம் என்பது பேச்சு வழக்கில் அத்தம் என்று திரியும்.
இங்ஙனம் திரிதல் தமிழில் பெருவழக்காகும். பேச்சில் இங்ஙனம் திரிவன
பல. சிற்றம்பலம் > சித்தம்பலம் > சிதம்பரம் என்பது காண்க.
ஆய + அத்தம் = ஆயத்தம்.
இங்ஙனம் சரியான தருணம் எனப் பொருள் தந்தாலும், வழக்கில் இது
ஏற்ற தருணங்களை உண்டாக்கிக்கொண்டு இருத்தல் என்று விரியும்.
இஃது இனிதாய் அமைந்த சொல் ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக