நீர் (தண்ணீர், வெந்நீர் என்பவை) தமிழில்போல் சங்கத மொழியிலும் உள்ளது. சமஸ்கிருதத்தில் 1/3 பகுதி திராவிடச் சொற்கள். ஏறத்தாழ 1/3 மேலை மொழிகளுடன் தொடர்பு காணக்கூடியவை. இறுதி 1/3 எங்கிருந்து வந்தன என்று தெரியாதவை என்றார் டாக்டர் லகோவரி. தெரியவில்லை என்பவற்றில் பல தமிழில் காணக்கூடியவை. நாமும்பல சொற்களை எடுத்துக்காட்டியுள்ளோம். தமிழினின்று போந்தவை என்றால் அவற்றுக்கு மதிப்புக் குன்றுமென்பதால், ஒப்புக்கொள்ள வெட்கப்படுவான் வெள்ளைக்காரன்.
சமம்+மதி > சம + மதி > சம்+மதி = சம்மதி. இதை இப்படிக் காட்டாமல் சம் என்பதை முன்னொட்டு என்றும் மதி என்பது வினைச்சொல் என்றும் கூறுவான் சங்கத ஆசிரியன்.
சம் எங்கிருந்து கிட்டியதென்றால், தமதென்பார்.
அமை> சமை > சம் என்பது தெளிவித்துள்ளோம்.
ஒரு சீனனிடம் போய் சமஸ்கிருதப் பாட்டைப் பாடினாலும் தமிழ்பாட்டுப் பாடினாலும் எல்லாம் ஒருமாதிரியாய் இருப்பதாகச்
சொல்கிறான். ஆகவே மொழி நூல் அறிஞர் சட்டர்ஜி , சமஸ்கிருத ஒலிமுறை திராவிட மொழிகளின் அமைப்பைத் தழுவியது என்று உண்மையைச் சொல்லவேண்டியதாயிற்று.
சமஸ்கிருதம் தென்மொழி சார்ந்ததே. தமிழ் உள்ளிட்ட முன்னிருந்த
பாகதங்களிலிருந்து சொற்களைப் பெற்று இனிதாக அமைக்கப்பட்டதே
சமஸ்கிருதம்.
சமஸ்கிருதம் வளர்க்கத் தமிழ் மன்னர்கள் பலர் கடினமாக உழைத்துள்ளனர். தமிழ்ப் புலவர்களும்தாம். வேதம் பாடியோரில் பல தமிழர் இருந்தனர். தமிழ்ச்சொற்களை ஆண்டுள்ளனர். தென்கிழக்காசியா எங்கும் அதைப் பரப்பினான் ராஜ ராஜ சோழன்.
ஆரியன் என்று யாரும் வந்ததற்கு ஆதாரம் இல்லை. ஆர்ய என்பது தமிழ்ச்சொல் என்று ஆதாரம் காட்டியுள்ளார் தேவ நேயப் பாவாணர்.
ஆர்தல், அறிவு என்பன தமிழ்ச் சொற்கள். அரிவ் என்று அது அரபியிலும் சென்று வழங்கியது உண்மை.
Garden of Eden என்னும் எழில் தோட்டம் தமிழ் நாட்டில் இருந்ததென்று சில அரபு நூல்கள் சொல்வதாக ஓர் இஸ்லாமிய அறிஞர் எழுதியுள்ளார்.
சமஸ்கிருதத்திலிருந்து பல சொற்களை மேலை மொழிகள் மேற்கொண்டன. தமிழிலிருந்து நேரடியாகவும் மேற்கொண்டன.
ஐ என்பது தமிழில் மேன்மை குறிப்பது. ஐயன், தமையன்.
ஹை என்ற மேன்மை குறிக்கும் சொல் ஏன் ஒலியொத்து வருகிறது.
ஏர் - arable என்ன தொடர்பு ?
ஆராயலாமே!
will edit. enjoy the post first.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக