ஓரமென்பது ஒரு பக்கத்தின் முடிவு அல்லது எல்லை. இதை ஓர் என்ற சொல்லுடன் தொடர்புறுத்தவேண்டும். ஓர் என்பது ஒரு பெயர்ச்சொல் அல்லது எண்ணுப்பெயர் , ஓர்தல் என்ற வினைச்சொல் உண்டென்றாலும் அது ஒருபக்க இறுதிக்குச் செல்வதைக் குறிக்கவில்லை. இதிலிருந்து நாம் அறிவது யாதெனின் ஒரு பெயரிலிருந்து விகுதி இணைந்து இன்னொரு பெயர் தோன்றுமென்பதுதான், விகுதி வினைச்சொல்லில்தான் இணையவேண்டுமென்பதில்லை என்று உணர்ந்துகொள்ளவேண்டும்,
ஓர் + அம் > ஓரம் ஆகும்.
ஓர் + அல் = ஓரல் (பொருள்: ஒடுக்கம்).
ஒரு பக்கமாகப் போ என்றும் பேச்சில் உள்ளது. ஓரம் கடந்தால் வீழ்ச்சி ஏற்படலாம் ஆகையால் வீழ்ச்சி ஏற்படுமுன் உள்ள இடமே பக்கத்தின் எல்லை ஆகும்.
விகுதி பெறும் சொல் உண்மையில் நீண்டு விடுகின்றது , நீள்வது மிகுதி . மிகுதி என்பது விகுதி என்று திரிந்து வழங்குகிறது. ம - வ திரிபு இது.
மிஞ்சுதல் - விஞ்சுதல் .
மழித்தல் - வழி த்தல்
மிரட்டுதல் - விரட்டுதல்
விரட்டுதல் என்பதற்கு அச்சுறுத்தல் என்றும் பொருளுண்டு.
மிருகம் : இது விருகம் என்றும் வரும்.
மீதம் - வீதம் ( விடப்பட்டது, மிகுந்தது என்ற பொருளில் )
( மிகுதம் > மீதம் , பகுதி > பாதி எனல் போல.
பகு பா, மிகு > மீ.
இது மிகுதி > விகுதி என்பதை உறுதி செய்கிறது,
விகற்பித்தல் என்பதும் மிகற்பித்தல் (மிகல்+ பு+ இ+ தல் ) என்பதன் திரிபே.. மிகுதி என்பதும் வேறுபடுதலே. குறைதல் இன்னொரு வேறுபாடு.\\
சொற்கள் சிறப்புப் பொருளில் வழங்கிப் பின் பொதுப்பொருள் அடைகை இயல்பாம்.
இதன்மூலம் ஓரம் என்பது விளக்கப்பட்டதுடன், தொடர்புடைய சிலவும் அறிந்து இன்புற்றோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக