செவ்வாய், 11 செப்டம்பர், 2018

தைலம் தயிர்.

இன்று தைலம், தயிர் முதலிய சொற்களை நுணுகி ஆய்ந்து அறிந்து அகமிக மகிழ்வோமாக.

தடவு என்ற சொல்லை நோக்குங்கள்.  நம் கையானது சென்று இன்னொரு பொருளைப் பொருந்துதலையே தடவு என்பது குறிக்கிறது.  தடவு என்பதில் இறுதியில் நிற்கும்  ~வு என்ற இறுதி,  ஒரு வினையாக்க விகுதியாகும். இவ்விகுதி வினைகளை உருவாக்கவும் வரும்.  பெயர்ச்சொல்லாக்கத்திலும் வரும். எடுத்துக்காட்டு:   உறவு.  ( உறு+  வு :  இதில் று என்பது உகரத்தை இழந்து அகரமாகி வுகரமுடன் இணைந்து சொல்லமைகிறது காண்க.)

தடவு என்பதன் அடிச்சொல்:  தட என்பதுதான்.  தள்> தடு> தட.

தள் என்பது தய் என்றும் திரியும்.  தய் பின் தை என்றும் உருக்கொள்ளும்.

இதன் அடிப்படைச் சொல்லாக்கப் பொருளானது  பொருந்துதல் என்பது. நான் என் முகத்தைத் தடவும்போது,  என் விரல்கள் அல்லது உள்ளங்கை சென்று முகத்துடன் பொருந்துகிறது.  பொருந்தாவிடில் தடவுதல் என்ற வினை நிகழ்வதில்லை.

பாலின் உள்ளீடு தயிராகிறது.  எப்படி என்றால் பாலில் பொருந்தாமல் விரிந்து நின்ற கண்ணறியாத அணுத்திரள்கள்  ஒன்றுடன் ஒன்று பொருந்திவிடுகின்றன. ஆகவே இத்திரள்கள் பொருந்திவிடுகின்றன. கட்டியாகித் தயிர் உருவாகிறது.  உண்மையில் இச்சிறு திரள்கள் தைத்துக் கொள்கின்றன. தைத்தலாவது பொருந்துதல்.

தய் >  தயிர்.  ( இர் என்பது சொல்லாக்க விகுதி).
தய் > தை.   அதாவது தய் = தை. 
இதனைத் தை+இர்  என்று காட்டி, தய்+இர் என்று உருப்படுத்தி, தயிர் என்று முடித்தாலுமொன்றும் வேறுபடுதல் இல்லை.

பைம்மை > பசுமை.
பை+ இர் =  பையிர் > பயிர்.

ஐகாரத்துக்கு அகரம் நின்று நிகர்தரும்.  செய்யுளில் இது நிகழ்வதை அறிந்த தொல்காப்பிய முனி,   ஐகாரம் குறுகி ஒலிக்குமென்றார்.  இது சொல்லாக்கத்திலும் நிகழ்வது ஆகும்.

தைலம்  தேய்க்கும்போதும் கை தேய்க்குமிடத்துப் பொருந்துகிறது.   தேய்பெறும் எண்ணெய் போலும் பொருள் தைலம் ஆகிறது. 

தை= தய்.  தய்+ இல் + அம் =  தயிலம் > தைலம்.

தைவருதல்:  தேய்த்தல்.  "தைவரு மன்னே!"  -  ஔவையார்,  புறநானூறு.

தை:  பொருந்துதல்.  தையல்:  துணிகளைப் பொருந்த இணைப்பவனின் செயல்.

தையல் = பெண்.  பொருந்தும் மறுபாதி.

தை > தைமாதம் : எல்லாம் பொருந்திவரும் மாதம்.

தய் =  தை எனப்பட்டதேனும் மரபுப்படியே எழுதுதல் வேண்டும்.  தைலம் தைலமென்றே எழுதுக.   தயிர் அவ்வாறு எழுதுக.  தைர் என்று எழுத ஏதும் உரிமம் வழங்கப்படவில்லை என்பதை அறிக.


---------------------------------
அடிக்குறிப்புகள்:

தை+ இல் + அம் =  தய்+ இல் + அம்.
தை =  தேய்த்தல்.  தள் > தை > தய்.
இல் = இடம்.
மரம் :  மரத்தில் என்றால் மரமாகிய இடத்தின்`கண்
என்பது பொருள.
அதுபோல,  தை இல் என்றால் தேய்க்கும் இடத்தில்.
அம் என்பது அமைதல் குறிக்கும் ஒரு விகுதி.
பிற்காலத்தில் இது வெறும் விகுதியாகிவிட்டது இயல்பு தான்.
தை இல் அம் =  தேய்க்கும் இடத்து ஒட்டிக்கொள்வது.
அதுவே  தைலம்.  தேய்ப்பிடத்தில் பொருந்திக்கொள்ளும் இளகுபொருள்.

தை இல் அம்  >  தை + ல் + அம் = தைலம்.  இகரம் கெட்டது.
இதுவுமது:  தய் இல் அம் > தயிலம்.> தைலம்.  இகரம் கெட்டது.
தை என்பது தய் என்பதே ஆதலின் இகரம் தேவை இழந்தது.
.

திங்கள், 10 செப்டம்பர், 2018

தூக்கம் கலைந்து வந்த தூக்கமே.



தெய்வத்  தைத்தேடிக் கண்ட தேனுலா---- வான்
தெரியக் காட்டிய தேகுளிர் வான்நிலா
வையத் தழகெலாம் காட்டும் வாரிகள் ---- எல்லும்
வானில் எழுமுன் னர்ஒளி சேரிருள்.

பச்சைப் பசேலென்  றேமரம் தோகைபோல் --- விரிந்து
பார்க்க விழிகட் குள்அழ கேகுமே.
நிச்ச லும்இக் கவின்தனைக் காண்பவர் --- இறை
நேர்ந்த அருள்தனை நன்கு பூண்பவர்.

வெள்ளி உருக்கித் தெளித்த போர்வையோ --- இங்கு
விரித்த ஏரி கொண்டு காட்டும் நீரினில்;
துள்ளி எழுந்து விழும்பெரு மீன்`களைக் ----- கண்டு
தூக்கம் கலைந்தது    பின்வந்த தூக்கமே.

{ ஒரு புகைப்படத்துக்கு ஒரு செய்தி விளக்கமாக எழுத முற்பட்டுப்
பின் ஓர் இசைப்பாடலாக  வெளிப்பட்டு, இப்போது இதை ஒரு கவிதை 
போல் மாற்றியமைத்து இங்கு வெளியிடுகிறோம். இசைப்பாடலாக எம் 
சொந்த மெட்டில் அமைந்தது.  இப்போது வேறுபட்டுள்ளது. } 

தேனுலா :  இனிய உலவுதல்.
வாரிகள்:  ஆறுகள்.
எல்லும் :  சூரியனும்.
ஒளிசேர் இருள்:  உதய  நேரத்தின் முன்.
நிச்சலும் - நித்தமும்; நாள்தோறும்
கவின்:  அழகு
பூண்பவர்:  பெற்றுக்கொண்டவர்.
இறை: கடவுள்
நேர்ந்த : கொடுத்த.
 பின் வந்ததூக்கமே:  பின் வந்தது ஊக்கமே.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

தெய்வத்தைத் தேடிய தேனுலா.

தெய்வத்தைத் தேடிய தேனுலா.
இப்படத்தில் நம் இறைப்பற்றாளரும் மென்பொருள் குழும்பு உரிமையாளரும் பொறியியலாளருமான ஐயப்ப அடியார் சுவாமி மோகன் அவர்கள் ஷில்லோங் இராமகிருஷ்ண மடாலய சுவாமிகளுடன் நின்று இறைவன் முன்னிறுத்திய இயற்கை எழிலை எண்ணிப் பரவசம் அடைகின்றனர்.

அவன் சபரியிலும் இருப்பான்; அசாம் தென்றலிலும் மேகங்களிலும் இருப்பான்;   அவனில்லாத இடமுண்டோ?  ---  என்பதை  மடாலய சாமிகள் விளக்கிக்கொண்டிருப்பார் போலும்.

கம்மலாக இருக்கும் அசாம் அடிவானம் இறைப்பற்றின் விம்மலாக விரிந்து நிற்கின்றது காண்பீர்.

பாரதி  -
அவர்தம் குழும்பு இயக்குநரும் இயற்கையை நுகராதவரல்லர்.


அருள்மிகு காமக்கியா ஆலயக் கோபுரத்தின்முன் சாமி. மோகனும்
பாரதியும் கும்பிட்டபின் மகிழ்வுடன் நிற்கின்றனர்.




குருசாமி மோகனும்  அவர்தம் இயக்குநர் பாரதியும்.

ஷில்லோங்க் இறைவணக்கச் சுற்றுலா





Ramakrishna Mission building at  Shillong  Assam.

இறைவணக்கம் இயன்ற பின் இயற்கை அழகும் கண்டனர் நம் பற்றாளர்.








Assam( India) beauty with our devotees



 




 









These  videos were taken by our Singpore devotees who are on a pilgrimage to holy sites in
Assam. They are Mohan Sami and his company director Bharathi and other supporters.
Where there are more than l copy, you have the choice of the best that works.


அசாமின் அழகில் நம் இறைப்பற்றர். BEAUTY OF ASSAM


நம் இறைப்பற்று அன்பர் மோகன், அவருடைய குழும்பு இயக்குநர்  பாரதி  இன்னும் ஆதரவாளர்கள் --  இன்று அசாம் மாநிலத்தில் இந்தியாவில் உள்ளனர். அவர்கள் கண்ட இயற்கை அழகை நீங்களும் கண்டு மகிழுங்கள்.


ரவுடி என்ற சொல். rowdy

ரவுடி என்ற சொல்லை இப்போது சிந்திப்போம்.  ஆங்கிலமொழி ஆய்வாளர்களின் கருத்துப்படி  இதன்பொருள் காட்டுப்பக்கத்திலிருந்து வருகின்ற கரடுமுரடாக நடந்துகொள்கின்ற மனிதன் என்`கின்றனர். இந்தச் சொல் தமிழர்களிடையேயும் வழங்குகிறது.

சிலவேளைகளில் ஒரே ஒலியை உடைய இருவேறு சொற்கள் ஏறத்தாழ ஒப்பு வைக்குமளவுக்கு ஒற்றுமை யுள்ளவையாய் இருப்பது முண்டு.  ஆனால் தமிழர்கள் அல்லது ஏனை இந்தியர்கள் ரவுடி என்று சொல்லும்போது "காட்டான்" என்ற பொருளில் சொல்வதில்லை.  இந்திய நகரங்களில் உள்ள ரவுடிகளெல்லாம் பெரும்பாலும் நகரத்தில் இயங்குவோரே ஆவர்.  சிற்றூர்களில் இத்தகைய ரவுடிகள் குறைவு என்று சொல்லப்படுகிறது.

ர வுடி என்ற ஆங்க்கிலச் சொல்லும்  ரவ் என்பதுடன் தொடர்புடையதாய்த் தெரிகிறது.  ரவ் (row)  என்பதாவது ஒத்துப்போகாத இருவர் ஒலியெழுப்புவது என்பதும்  கவனத்திற்குரியது ஆகும்.

நகரங்களில் ரவுடிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் நடமாடுவார்கள்.

இவர்கள் இரவு நட்சத்திரங்கள்  ( night stars  ) என்போர்.  இரவில் வெளியில் சென்று ஒத்துப்போகமுடியாத நிகழ்வுகளில்  (rows) கலந்துகொண்டு ஒலியெழுப்பிக்கொண்டிருப்பார்கள்ள்

இரவு + உடு + இ.=

இ என்பது விகுதி.  இங்கு மனிதனைக் குறிக்கிறது.  உடு என்பது நட்சத்திரம் என்று பொருள்தரும்.

இருக்கும் வீட்டிலிருந்து இரவில் உடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவதால் இரவில் உடுத்துக்கொண்டு செயல்படும் இவர்களை இரவுடி என்றும் சொல்வதற்கு இடமுண்டு. இரவூடு அலைவதால் இரவூடி> இரவுடி> ரவுடி என்றும் இருக்கக்கூடும்.

ஆங்கிலம் தமிழ் கலப்பினால் 800 க்கு மேற்பட்ட சொற்களில் இவ்வாறு ஐயப்பாடு நிலவுவதாக மொழி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆங்கில ரவுடி  (rowdy)  "  மென்மையாக நடந்துகொள்ளாத காட்டான் "  என்று பொருள்படுவது;  தமிழில் வழங்குவது    இதனினும் சற்று வன்மையைத் தெரிவிப்பது.

முடிவு செய்வதும் கடினமே ஆகும்.

சனி, 8 செப்டம்பர், 2018

ஏழுமலை பக்தர் உள்ளம் வாழுமலை


ஏழுமலையில் சிங்கப்பூர் பக்தர்கள்.
-------------------------------------------------

சிங்கப்பூர்ப்  பத்தர்கள் பூசை செய்தார்
சிறப்பாக மலையானைப் போற்றி நின்றார்:
"எங்கப்பன் எங்கையன் என்றும் எம்பால்
இடையின்றிப் படைவெல்லும் வன்மை சேர்ப்பான்
தங்கப்பொன் அணிகலன்`கள் தந்து நிற்பான்
தடைநீக்கிக் குடைக்கீழூர் தண்டி கூட்டி
உங்கட்கும் ஒண்செல்வம் கொட்டும் நாளை
ஓடோடி வரச்செய்வான்"  நாடிச் செல்வீர்!!


மலையான் - ஏழுமலை யப்பன்
தண்டி - தகுதி
 எங்கப்பன் எங்கையன் -  பேச்சு வழக்குத் துதிகள்.
தங்கம் - கலப்பில்லாத சீனத் தங்கம்
தங்கம் என்பது எதுகை நோக்கித் "தங்க(ப்)"
என்று நிறுத்தப்பட்டது. இது தொகுத்தல்.
அன்றி "தங்கப் பொன்" -  தங்குவதற்குப் பொன்
என்று பொருளுரைப்பினும் நற்பொருளே. தங்குவதாவது:
செல்வாகாமல் இருப்பில் வைத்தல்.
பொன் - பிரிட்டீஷ் தரத்துப் பொன்.
தண்டி - பெரிது என்று உலகவழக்கில் உள்ளது. " அம்மாந்தண்டி
மூக்கு" என்றால் பெரிய மூக்கு என்பது.  வசூல் செய்வோனும்
தண்டியே.  இங்கு அப்பொருளில் இல்லை.
"குடைக் கீழ் ஊரும் தண்டி (தகுதி)".

 Devotee Mohan is with  the  company  director. (engineer by qualification).

எத்திசையும் புகழ்மணக்கும் பத்துமலை முருகன்


கோலாலம்பூரை அடுத்துள்ள பத்துமலை முருகன் ஆலயம் செல்லும் படிகள் இங்கு படத்தில் தெரிகின்றன.  ஆலயம் இப்போது புதுப்பிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.  படம்:  வரப்பெற்றது ஆகும், நன்றி.


மேகம்

பெட்டாமெதாசோன் வேலரெட் என்ற சொல்லைப் போல மேகம் என்ற சொல்லில் அறிந்து உயர்த்திக் கருதத்தக்க அமைப்புகள் ஏதுமில்லை. மிக்க எளிதாகவே அமைந்த சொல்லே அது.

வானத்தில் மேலே இருப்பது மேகம்.  முதலில் மேல் என்ற சொல்லின் இறுதி லகர ஒற்று  ஒழிந்தது.  இலக்கண ஆசிரியர் லகர ஒற்றுக் கெட்டது என்பார்கள்.  கெட்டது என்றால் இல்லாததானது.  இப்போது மே மட்டுமே உள்ளது.  அதில் கு அம் ஆகிய சிறு துண்டுச் சொற்களைத் தந்து நீட்டினால்
மேகம் ஆகிவிடும்.

கு என்பது சேர்விடம் குறிக்கும் சிறு சொல்.   சிங்கப்பூருக்கு,  மலாக்காவிற்கு என்பவற்றில் அது உருபாக வந்து சேருமிடம் குறிக்கும்.  மே கு அம் என்பதில் "மேலுக்கு" என்பது பொருள் கொண்டாலும் பொருளற்ற இணைப்பு என்று கொண்டாலும் அதனால் கூறத்தக்க விளைவுகள் எவையுமில்லை.  நீங்கள் எப்படி வைத்துக்கொண்டாலும் நல்லதே.  அம் என்பது அமைவு என்பதன் அடிச்சொல். இங்கு விகுதியாக வருகிறது.  அதற்குப் பொருளிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.  ஏன் இப்படிச் சொல்கிறோம் என்றால், சொல்லமைப்பில் அமைந்தபின் உள்ள மொத்தப்பொருள் அல்லது இறுதி அடைவே நாம் சொல்லைப் பயன்படுத்த உதவுவது ஆகும். நாற்காலி என்பதில் நாலு என்றும் கால் என்றும் பிரித்தறிவது சொல்லாய்வுக்குப் பயன்படலாம்; அதில் உட்காருவோனுக்குத் தேவையில்லை.  முக்கால்கள் உள்ளதை  நாற்காலி என்று குறித்துவிட்டாலும் பெரும் விளைவுகள் ஒன்றுமில்லை.

வானிற் பறக்கும் மேகத்தைக் கையால் பிடிப்பதைவிட இச்சொல்லை அறிந்துகொள்ளுதல் மிக்க எளிதாம்.

மேகம் என்பது சிற்றூர்களில் பேச்சில் அறியப்படும் சொல் ஆகும்.  மேலே உள்ளது என்பதுதான் பொருள்.  மேலே உள்ளவெல்லாம் மேகமாகிவிடுமா?  நாலு கால் உள்ளதெல்லாம் நாற்காலியா?  ஆகவே இது பகுதி காரணமும் பகுதி பயன்பாடும் உய்த்த காரண இடுகுறிப் பெயர்.  நிலாவும் சூரியனும் மேலேதான் உள்ளன!  அவை மேகமல்ல. சொல்லமைப்பில் முழுமையும் காரணங்களைத் தழுவிச் சொற்கள் அமைதல் குறைவு. வீட்டில் பேசும் பணிப்பெண்ணைப் பேச்சாளர் என்பதில்லை. ஆனால் அவளும் பேசுகிறாள். ஆகவே "பேச்சாளர்" என்பதுகூட முழுமையும் காரணம் தழுவியது என்று கூறுவதற்கில்லை.

காரண காரியங்களை ஆராயப்போனால் சூரியன் உதிப்பதுமில்லை;  அழுந்தமிழ்வதுமில்லை.  பூமியே சுற்றிக்கொண்டு போகிறது.

அஸ்தமிப்பது என்பது அழுந்தமிழ்வது ஆகும்.  அழுந்து > அஸ்து; அமிழ் > அமி.
அஸ்தமி. நிலத்துக்குள் அல்லது கடலுக்குள் அழுந்துவது;  அப்புறம் அமிழ்வது. இதைப் பார்த்துக் கோபமுற்றோர் அழித்துவிட்டனர்.  ஏறத்தாழ ஈராயிரத்துக்கு மேலான இடுகைகள்   --  இவை பழையகால நெகிழ்தட்டுக்களில் (ப்ளோப்பி டிஸ்க்) உள்ளன. மேற்கொண்டு அவற்றை வெளியிடவில்லை,   மீளா இருளில் சில மூழ்கியிருக்கலாம். 

சங்கப் புலவர் சிலர் பாடியவாக ஒன்றிரண்டு பாடல்களே கிடைக்கின்றன. அவர்கள் நல்லிசைப் புலவர்கள்.  ( அப்படியென்றால் பெரும்பெரும் புலவன்மார்.)  வாழ்க்கை முழுமைக்கும் இரண்டு பாட்டுத்தாம் பாடினரோ? பல்லாயிரம் இருக்கும்.  நம் கைக்கு எட்டியவை :  2.

எட்டியவையே கிட்டியவை: அவை கொண்டு தமிழ் போற்றுவோம்.


வெள்ளி, 7 செப்டம்பர், 2018

மோகன் வரையாது வழங்கினவர்.

Click here for Mohan Swami's photo:  http://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_85.html


மோகன்  நினைப்பினிலே முன்வந்து நிற்பதெல்லாம்
ஆகும் பொழுதெல்லாம் அன்புடனே --- தாகம்
பசியின்றிப்  பாரோர் மகிழப்பா    டிக்கை
மிசைக்காசு தந்துவத்த லாம்.

இதன் பொருள்:   மோகன்  நினைப்பினிலே -  மோகன் அவர்களுடைய எண்ணங்களில்;   முன் வந்து நிற்பதெல்லாம் -  முதலாக மேம்பட்டுத் தோன்றுவதெல்லாம்;   ஆகும் பொழுதெல்லாம் -  தேர்வு செய்யப்படும் நல்ல நேரத்திலே;  அன்புடனே -  நேயமான நெஞ்சமுடன்;  பாரோர் -  இன மத வேறுபாடின்றி எம்மனிதரும்;  தாகம் பசி இன்றி மகிழ - நீர் வேட்கையும் உணவை வேண்டுதலும் ஆகியவற்றுக்காகத் துன்பமடையாமல்,  பாடி - நல்ல இசையின் அரவணப்புடன்;  கை மிசை -  கைகளில்;  காசு தந்து -  அவர்களுக்குச் செலவுக்குப் பணம் தந்து;  உவத்தல் ஆம் - தம்  மனம் மகிழ்வு கொள்ளுதல் ஆகும். 

இவர் முதியோர் இல்லங்கள் பலவற்றுக்கு வரையாது வழங்கியவர்.
இவர் படம் முன் இடுகையில் உள்ளது.

இறைவன் இவருக்கும் இவர் மனையாளுக்கும் செல்வங்களை வாரி
வழங்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறோம்.

ஊருணி நீர்நிறைந்  தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
என்றார் வள்ளுவனார்.

ஊரில் உள்ள மக்களெல்லாரும் குடிப்பதற்கு நீர் எடுக்கும் குளம் அல்லது ஏரி ஊருணி  எனப்படும்.  ஊர் உண்ணும் குளம் ஊர்+ உண்+ இ;  அக்குளத்தில் நீர் நிறைந்திருந்தால் எப்படி இருக்கும்?  ஊரார் மகிழ்வுடன் நீரருந்தித் தாகம் தவிக்காமல் இருப்பர், மகிழ்வர் அல்லரோ?   அறிவாளி  ஒருவருக்குப் பணம் கிடைப்பது அது போன்றதே.  அதனால் பலருடைய துன்பங்களும் தீரும். ஒரு தற்குறியிடத்தில் பணம் இருந்தால் அது நன்மக்களுக்கும் முதியோருக்கும் சிறாருக்கும் கல்வி உணவு உடை உறையுள் முதலியவற்றுக்குப் பயன்படாது. மோகன் உலகு அவாம் பேரறிவுடையார்:  இப்பாரிலுள்ளோர் விரும்பும் சிறந்த அறிவு மிக்கவர் என்று பொருள். திரு வென்பது செல்வம். 

ஒரு சமயம் கோவில் அன்னதானத்துக்கு ஓர் ஆயிரம் பற்றாக்குறை ஏற்பட்டது,  கேள்விப்பட்டவுடன் அந்தக் காசைக் கொடுத்து உதவினார்.

வண்டி வசதி இல்லாத அன்பர்களுக்கு தம் உந்து வண்டியில் பூசை பாட்டு நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வார்.

இன்று சமைக்கவில்லை என்று மட்டும் சொல்லக்கூடாது, இவரிடம். உடனே சாப்பாடு வீட்டுக்கு வந்துவிடும்.

இத்தகைய பரந்த உள்ளம் பாரிக்கு இருந்தது.  பாரி என்ற சொல்லே பரந்த என்ற சொல்லுடன் தொடர்புடையது.  பர > பார். முதனிலை நீண்டு பெயரானது.  இவரும் அத்தகைய அன்னதானப் பிரபு ஆவார்.

நான் இந்த உடல் அன்று என்ற வேதக் கருத்தை மிகவும் போற்றுவார் இவர்.

இவருடைய துணைவியார் ரஜினி அம்மையார் இவர் போன்ற தங்கமான குணத்தவர்.

இவர்கள் எல்லா நலமும் பெற்று மகிழ வாழ்த்துவோம்.

இறைப்பற்றில் முடியிறக்கிய மோகன்.

நம் இறைப்பற்றாளர் திரு மோகன் இப்போது இந்தியாவில் திருவாச்சி என்னும் இடம் சென்று சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.  முடியிறக்கிய பின் இங்குக் காட்சி தருகிறார். அதற்குமுன் உள்ள அவர் தோற்றத்தையும் கீழே வெளியிடுகிறோம். அடியில் உள்ள படத்தில் பூசை நடைபெறுகிறது.

வீசுதலும் விசிறியும்.

விசிறி என்ற சொல்லைச் சிந்திப்போம். 

முதலில் நாமறியத்தக்கது இச்சொல்லில் விகுதி உள்ளதா என்பதே. இதில் விகுதி உள்ளது என்றே முடிவு செய்தல் தகும்.

இதன் வினைச்சொல் விசிறுதல் என்பதாகும்.  காற்று வீசச்செய்யும் ஒரு வீச்சுமட்டையைக் கையில் பிடித்துக்கொண்டு அசைத்து இயக்குதலே விசிறுதல் ஆகும்.

வீசு > விசு > விசிறு > விசிறுதல் என்று சொல் வருகிறது.

இங்கு வீ என்ற நெடில் வி என்று குறிலாகிறது.  று என்னும் வினையாக்க விகுதி  சேர்ந்து விசிறு என்பது அமைகிறது.   று என்பதும் பல சொற்களில் உள்ள வினையாக்க விகுதியே ஆகும்.   அறு, இடறு, உளறு,  கூறு என்று பலவாய்ச் சொற்களில் இது வந்துள்ளது. வீசு என்ற சொல்லும் வி என்று குறில்தொடக்கமாகிறது.  இது சொல்லியல்புகளுடன் பொருந்தியதே ஆகும்.

வினையிலும் பெயரிலும் தொடக்க ஒலி குறுகுதல் உண்டு.  எ-டு:  தோண்டு> தொண்டை.  நாக்கு > நக்கு.  அல்லது நக்கு> நாக்கு எனினுமாம். இவை இருபுறமும் அமைவன.  நா> நாவு > நவிலுதல் என்ற அமைப்பையும் அறிக. இவற்றை உணர்ந்தோர் சிலரே.

வீசு என்பது விரிந்து அசைதல் குறிக்கும் சொல். இதனுடன் உறவுடைய சொற்கள் பல.   விசும்பு என்ற சொல்லும் உறவுடையதே.

விசுவநாதன் என்ற பெயரைக் காண்க. இதில் வரும் விசு என்பது விசும்பு என்பதனுடன் நெருங்கிய சொல்லே.  விசுவம் என்னும் உலகப் பொருட்சொல்லும் விசு என்பதனுடன்      நாம் தொடர்பு
காண்பதே  யாகும். விசுவநாதன் விசும்பில் உள்ளவனாய் உணரப்பட்டவன். ஆகவே விசு > விசுவம் பொருத்தமே.  விசு என்பது இச்சொற்கு அடி. நாவினால் போற்றப்படுவோன் நாதன்.

விர்> விரி >  விசி.
விர் > விரு > விசு.
விர் >  விய் > வியன்  (வியனுலகு).
விர் > விய் > வியா  (வியாபாரம் ).
விர் > விய் > வியை > விசை. ( இயக்கம்).

இவற்றின் மூலம் விசி > விசிறு > விசிறியை அறிந்து மகிழ்க.

எல்லாம் சொல்லவும் அவற்றைப் படிக்கும் நாம் இருவரும் நேரம் உடையோமல்லோம்.

வைரஸ் என்னும் கள்ளமென்பொருள் மறுபடி தாக்குதல்.

முன் சைற்றேங்கர் என்ற பெயருடைய கள்ள மென்பொருள் உலாவி ஒட்டுமெல்லியுடன் இணைக்கப்பட்டு இத்தளத்துக்கு அனுப்பப்பட்டு அது பல அரிய இடுகைகளை அழித்துக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இஃது இப்போது சரிசெய்யப்பட்டுள்ளது.

அண்மையில் எஸ் எஸ் ஷெடியூலர் என்ற மெல்லியங்கி  அனுப்பப்பட்டு அது இடுகைகளை அழித்துக்கொண்டிருந்தது.  அதுவும் கண்டுபிடித்து அழிக்கப்பட்டுள்ளது.  இது துரோஜன் என்ற தாக்குதல் மென்பொருளுடன் தொடர்பு உள்ளது ஆகும்

இப்போது புதிய விண்டோஸ் மென்பொருளில் இயக்கப்படுகிறது. தாக்குதலும் கடுமையாகியுள்ளது.

வியாழன், 6 செப்டம்பர், 2018

சமாளித்தல் - சொல்.

ஒருவன் மற்போரில் சிறந்தவன்.  அவனுடன் சென்று பொரு(து)வதாயின் தகுந்த பட்டறிவும் பயிற்சியும் இருந்தாலே முடியும் ........  என்று அறிந்தோர் சொல்வர்.   இல்லாவிட்டால் பொலிசை இல்லாமல் கொடுக்கல் வாங்கல் செய்தது போல் ஆகிவிடும்.

மற்போரின்போது அவனுடன் சம ஆளாய் நிற்கவேண்டாமோ?

சம ஆளாய் நில்!

சம ஆள்!

சம  ஆள்  இ     (  இ என்பது வினைச்சொல்லாக்க விகுதி).

சமாளி.

நம்மவன் திறனை நாமே ஐயுறலாமோ?  இவன் சமாளித்துவிடுவான்.

அதாவது:  சம ஆளாய் நின்றுவிடுவான்.

இப்போது சமாளி என்பதன் பொருளும் அமைப்பும் புரிந்திருக்குமே....

அறிந்து மகிழுங்கள்.



கடகமும் வடமொழியும்.

கடகம் என்ற சொல்லினை விளக்கி எழுதியிருந்தோம்.  அது வெளியாரனுப்பிய கள்ள ஒட்டுமெல்லியால்  அழிபட்டுவிட்டது. அதிற் கண்ட சில இங்கு மறுபதிவு செய்யப்படுகின்றது.

கடகம் என்பது ஓர் இராசியின் பெயர்.   இராசி என்பதென்ன?  இது இரு + ஆசு+ இ என்று பிரிவுறும் சொல்.  கிரகங்கள் எனப்படுபவை இருக்கும் இடமே இராசி. இந்தச் சொல் இருத்தல் வினையைத் தொடக்கமாகக் கொண்டு அமைந்திருத்தலைக் காண்க.   ஆசு என்பது பற்றுக்கோடு.  பற்றிக்கொண்டு நிற்பது பற்றுக்கோடு.  ஆசு என்ற சொல்லும் ஆதல் என்னும் வினையினடியாகப் பிறந்த சொல்லாகும்.  ஆசு என்ற சொல் யாப்பிலக்கணத்திலும் பயின்று வழங்கும் சொல்.  ஆசு எதுகை என்னும் வழக்கையும் நோக்குக.  சொல்லாக்கத்திலும் இது ஆங்காங்கு  வரக்காணலாம்.  ஈண்டு கூறியவற்றால் ஆசுற்று நிற்கும் அல்லது இருக்குமிடம் இராசி என்பது அறிக. ஒரு சொல்லுக்கும் உள்ளமைப்புக்கும் பொருளுக்கும் தொடர்பில்லை என்றால் இவ்வாறு விளக்குதல் இயலாது.

கடகம் என்பது நண்டு என்ற உயிரியைக் குறிக்கும்.  நண்டு கடிய அல்லது கடுமையான ஓடுகளை உடையது. அந்த ஓட்டுக்குள் நண்டு வாழ்கிறது.  இது ஞண்டு என்றும் வரும்.  நயம் -  ஞயம் போலுமே இது.

கடு + அகம் என்பதால் கடிய ஓட்டின் அகத்திருப்பது நண்டு என்பதோ இனி விளக்காமலே புரியும்.

இப்போது கடகம் தமிழன்று என்று வாதிடலாம்.  கடு என்பதும் அகம் என்பதும் சொல்லும் பொருளும் தமிழ் தான்.  இதைச் சொல்வதால் எனக்கென்ன இலாபம்?  ஒன்றுமில்லை.  உண்மை அறிவு.  அவ்வளவுதான்.

சமஸ்கிருதம் என்பது இந்திய மொழிதான்; அது இந்தோ ஐரோப்பிய மொழி என்று அதனுடன் தொடர்பு கொள்வார் மேலை நாட்டினர்.  இதற்கு ஆதாரமாக அதில் வழங்கும்  பல அயற்சொற்களைக் காட்டுவர். இவ் வயற்சொற்கள் வெளியிலிருந்து வந்தவையாகக் கூடும் என்பது வரலாற்றாசிரியர்  ரோமிலா தாப்பார் கூறியுள்ளார்.   சமஸ்கிருதம் இந்தியாவில உருவான மொழியே. 

அதன் ஒலியமைப்பு திராவிட மொழிகளின் ஒலியமைப்பே  இவ்வாறு சுனில்குமார் சட்டர்ஜீ என்ற மொழிநூலறிஞர் கூறியுள்ளார்.  மூன்றில் ஒரு பங்குச் சொற்களே அயற் சொற்கள் என்று டாக்டர் லகோவரி என்ற பிரஞ்சு மொழிநூலார் கூறினார்.  சமஸ்கிருதத்தைத்  தாய்மொழியாகப் பேசிய வெளிநாட்டினர் யாருமில்லை.

இம்மொழியின் முன்னோடிக்கு இலக்கணம் எழுதிய புலவன் பாணன் வகுப்பைச் சேர்ந்த பாணினி. முதன்முதல் காவியம் படைத்தவன் வால்மிகி. இவன் ஒரு தலித்து. மகாபாரதம் பாடிய புலவன் மீனவனான வேதவியாசன்.
சமஸ்கிருதத்தில் பிராமணர்கள் பிற்காலத்திலேதான் பண்டிதராயினர்.  பிராமணர்களும் இந்தியரே.  ஆரியர் அல்லர்.  ஆரியர் என்று ஓர் இனமும் இல்லை.

உங்களிடம் வேறு ஆதாரங்கள் இருந்தால் இங்கு பின்னூட்டம் செய்யுங்கள்.

வடமொழி மரத்தடி மொழி என்று பொருள்படும் என்றார் திரு வி.க.  வடம் என்றால் மரம்.  வடம் எனின் கயிறு என்பதுமாம். இத்துடன் நிறுத்துவோம். 

சமஸ்கிருதம் என்ற பெயர்:  சம என்பதும் கிருதம் என்பதும் எம்மால் விளக்கப் பட்டுள்ளன.  

இதன் முன் பெயர் சந்தாசா.  இது சந்த அசை என்ற தமிழ்ச் சொற்களின் சிதைவு ஆகும்.

http://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_13.html

மதங்கத்தை ( மிருதங்கத்தை )  அடித்தால்  தம் தம் தம் என்று ஒலியெழும்,  இதுதான் தம்தம்.  த-வுக்குச் ச வருவது இயல்பு.  ஆகவே தம்தம் என்பது சம்தம் ஆகிறது. சம்தம் என்பது புணர்ந்து சந்தம் ஆகிறது.  இப்படித்தான்  சந்தம் என்ற சொல் உருவாகிற்று.  போலி:  தசை > சதை.   த-வுக்கு  ச மோனையாகவும் வரும். இது யாப்பியல். ஓட்டுக்குள் தங்குவது ஓர் உயிர்.  தங்கு > சங்கு.  வந்து தங்கி அரசன் போட்ட சாப்பாட்டைத் தின்று கவிபாடிய இடமே சங்கம். அன்னதானம் போட்டால்தானே கோயிலுக்குக் கூட கூட்டம் வருகிறது?  தங்கு > சங்கு >  +அம் = சங்கம்.  மொழி என்பது ஒரு திரிந்தமைவு.

சமஸ்கிருதம் என்பத் சந்தமொழி. இது இறைவணக்கத்துக்கு ஏற்றதாகக் கருதப்பட்டது.

சமஸ்கிருதம் தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் விருத்தி செய்யப்பட்டது என்று ஆசிரியர் கா. அப்பாத்துரை அவரது நூலில் எழுதியுள்ளார்.  அவரதம் "தென்னாடு "  "தென்மொழி" நூல்களைப் படிக்கவும்.  எம்மிடம் இருந்த குறிப்புகள் அழிந்தன.

பொதுமொழியாக உருவாக்கப் பட்டது சமஸ்கிருதம்.  அதன் முற்காலப் புலவர்கள் யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்!

புதன், 5 செப்டம்பர், 2018

குட்டிகளைக் கைவிட்ட தாய்க்கரடி கதை.


குட்டிகாப் பாற்றிய மீனவர்க்குத் தாய்க்கரடி
கட்டிமுத் தம்தந்த காட்சிமுன் ---- குட்டியிணை
நட்டேரி நண்ணி நடுங்குகுளிர்  தாங்காமல்
விட்டோடி  வந்த வினை.


இதன் பொருள்:  வெண்பா:

முன் -  முன்னதாக,   குட்டி இணை - தாய்க்கரடியானது  இரண்டு  குட்டிகளை,  நட்டேரி நண்ணி -  நடு ஏரியை அடைந்ததும்,   நடுங்கு குளிர் தாங்காமல் -  நடுக்கம் தருகின்ற பனிக்குளிர் தாங்காமையினால்,  விட்டோடி வந்த வினை -  அவற்றை அந்த நடு ஏரியிலே போட்டுவிட்டு கரைக்கு நீந்தி விரைந்து வந்துவிட்ட பாவம் நடைபெற்றது;   ( அடுத்ததாக )  குட்டி காப்பாற்றிய -  அந்த இரண்டு கரடிக் குட்டிகளையும் நீரில் மூழ்கி இறந்துவிடாமல் காப்பாற்றிய; மீனவர்க்கு -  அங்கு வந்த மீன்பிடிப்பவர்க்கு;   தாய்க் கரடி -  அந்த அம்மாக் கரடி;  கட்டி -  அணைத்து;  முத்தம் தந்த காட்சி -  முத்தம் இட்ட ஒரு காட்சி;
(ஆகிய இவற்றைக் காணொளியில் காணலாம் என்றபடி.)

 
https://www.bobshideout.com/view/bear-cubs-bho/?src=outbrain&utm_source=outbrain&utm_medium=00a186e67b7d8095b4427c98ca583f1ed2&utm_campaign=00a190414572aef59f9426aa58bfd790f9&utm_key=70&utm_content=0008015f945b77891f18c2c501b075e079&utm_term=BHO_D_SG_bear-cubs-bho_gil_6002


https://www.coolimba.com/view/bear-cubs-co/?src=outbrain&utm_source=outbrain&utm_medium=00cacb9ce042edadf66fe95e33faccd687&utm_campaign=00736dda714ed8ef9dd4d2e80ea5980c3a&utm_key=66&utm_content=00ccad20fb3ab95a6f6f5e9cd04ad640e6&utm_term=CO_D_SG_bear-cubs-co_gil_1255

மகமும் மாகமும் சொல்லும் பொருளும்.

மகம்:  இச்சொல்லை " மகம் " என்று எழுதினும்  " மஹம்"  என்று எழுதினும்  இஃது மக என்னும் அடிச்சொல்லினின்று தோன்றிற்றென்பதை மறைத்திடுதல் இயலாமை அறிக.

மக என்பது நீங்கள் அறிந்த சொல்லே.

"பெற்ற தாய்தனை மக மறந்தாலும்" என்று இராமலிங்க அடிகளார் பாடவில்லையா?

மக+ அன் =  மகன்;  இங்கு மக என்ற சொல் அகரத்தில் முடிய அடுத்துவரும் அன் விகுதியும் அகரத்திலே தொடங்க, இரண்டு அகரங்கள் இணைதலால் ஓர் அகரம் கெடும்.  இதை உணருமுகத்தான் கடினமாக்கிவிடாமல்,  விகுதியில் உள்ள தொடக்க அகரத்தை வீசிவிட மக+ன் = மகனாகும். வாத்தியார்கள் சிலர் மக என்பதில் அகரம் கெட்டது எனினும் ஒப்புக.  பின் மக்+ அன் = மகன் ஆகும். எப்படியும் ஒன்றுதான். மக் என்பது ஒரு சொல்வடிவம் ஆகாது.  பிறமொழியில் மக் என்பது சொல்லாய் நிற்கும்.  எ-டு:  மக்டோனல்டு.  இதற்கு டோனல்டின் மகன் என்று பொருள்.  நம் வீட்டு மக தான் அங்கு சென்று மக் என்று மட்கி விட்டது.

 இது இலக்கணத்தில் கூறப்படும் புணரியல் ( சந்தி ) அன்று.  இங்கு நிலைமொழியோடு வந்து சேர்வது விகுதி அல்லது இறுதிநிலை. அதாவது இஃது சொல்லாக்கப் புணர்ச்சி. எனினும் மக என்பதை நிலைமொழி போல் கொண்டு விகுதி வருவதாகக் கொள்வதாயின் மக என்பதில் உள்ள அகரம் கெட்டதாகக் கொள்வதும்  ஆகுமென்`க்.

மகள், மகார் (ஆர் விகுதி),  மக்கள் (கள் விகுதி) என்பனவும் இவ்வாறு அறிந்துகொள்ளத்தக்கவை.

மகன் மகள் உடையவனையே அல்லது உடையவளையே மன்பதை மதித்தது. மன்பதை எனில் சமுதாயம், குமுகாயம்.  மகன் உடையவன் பெரியவன். அவனால்தான் நாலைந்து மகன்`களையும் வயலுக்கு அனுப்பிப் பாடுபடச் செய்ய முடியும்.  எண்ணிக்கை இருந்தால்தானே படைவலிமை.  ஆளிருந்தால்தானே உழைக்கமுடியும். உழுதல் முடியும்.  இதனால் மக என்ற சொல் திரிந்து மா என்றாகும்.  அப்போது மா என்பது பெரிது என்றும் பொருள்தரும்.  மக என்பது மகா, மஹா என்றும் திரியும்.

எப்போது பிறந்தாள் தாயாகிய ஆதி பராசக்தி.  அறியோம். அறிய முடியாமையின் அது மாயா.   அதை அறிய முற்பட்டால் அறிவு அதன் எல்லையை அடைந்து நின்றுவிடுகிறது.  ஆகவேதான்  அது மாயா.  (மாய் : வினைச்சொல்;  ஆ:  விகுதி.   நிலா விலா முதலியவற்றில் ஆ விகுதி நின்று சொல்லை மிகுத்து முடித்தது )   --சிந்தனைத் திறன்  முடிந்துவிடுவது மாய்தல்.   மகா மாயா என்பதைப் பிறப்பில் மாயா - அறிய இயலாதது என்று உணர்க.  மகா என்பதைப் பிறவா என்றும் கொள்ளலாம்.  பிறவாத அறிய முடியாத பொருள் இறை.

மகவு என்ற ஒரு சொல் இருக்கின்றது.  மகத்தல் என்று ஒன்றிருந்து ஒழிந்திருக்கவேண்டும் என்று நினைக்க இடமிருக்கின்றது.   மக என்ற அடி இன்று வினையாக வழங்கவில்லை. அதாவது பிற - பிறத்தல் போல் மக - மகத்தல் இல்லை.

மகவுடைமை பெருமை ஆதலால்,   மக பெருமை குறிக்கும்.

மக + ஆன் =  மகான்  (பெரியோன் என்பது பொருள்).

மகம் என்ற நக்கத்திரம்  ( நட்சத்திரம் ) ஐந்தாகப் பிறந்தவை ஆகும்.  பிள்ளைகள் போல.  மக + அம் =  மகம்.  அம் விகுதி. நகுதல் : சிரித்தல் மற்றும் ஒளிவீசுதலும் ஆம்.

இனி உலகம் என்றும் பிறவும் குறிக்கும் மாகம் என்ற சொல்லை அறிவோம்.

மக + அம் = மாகம் (  முதனிலை நீண்டு  விகுதி பெற்ற சொல் ).

இது பிறந்த அல்லது இறைவனால் அமைக்கப்பட்ட இவற்றைக் குறிக்கும்:
உலகம் ( உண்டானதாகச் சொல்லப்படுவது).
வானம்  (உண்டானதாகச் சொல்லப்படுவது.)
மேகம்  ( நீரால் உண்டாவது ).
துறக்கம் ( இறைவனால் உண்டானது).
திக்கு  ( இறைவனால் உண்டானது ).
மாசி மாதம்.  (  மக என்பது இங்கு மா என்று திரிந்தது.  அம் விகுதி பெறாமல் சி விகுதி பெற்று மாதப் பெயர் ஆனது. )

இனி மா + கம் என்றும் பிரித்து விளக்கலாம்.   மா = பெரிது;  கம் என்பது உலகம் என்ற சொல்லின் பின்பகுதி.  இது ஒரு "போர்ட்மென்டோ" ஆகும்.

இதைப் பற்றிய உரையாடல் மேலும் அறிய:

தலைப்பு: விடைதெரியாத சொற்கள்.



அறிந்து மகிழ்வீர்.

தட்டச்சுப் பிறழ்வுகள்:  பின்னூட்டம் இடுக.  திருத்தம் பின்னர்.

பார்வை: 20.5.2022 1832


செவ்வாய், 4 செப்டம்பர், 2018

குரவர் குரு என்ற சொற்கள்


 குரு குரல்


குர் என்பது  ஓர் ஒலிக்குறிப்புச் சொல்:


(குர்)   >    குரீஇ   :   குருவி



குர்  >  (  குரு. ) .:   ஒலி.
குரு >  குருவி  ( குர் என்று ஒலியெழுப்பும் பறவை).
குரு >  குரை  ( ஒலி யெழுப்புதல் -  நாய்).
குரு >  குரம்   (ஒலி)
குரு > குரல்  ( தொண்டையிலிருந்து எழும் ஒலி)
குரு > குரவை  ( ஒலி, ஒலி எழுப்பி மகளிர் விளையாடுதல் )
குரு > குருமி  (ஒலி)
குரு > குருமித்தல் (ஒலித்தல்)
குரு >  குரூஉ  (குரு)
குரு > குரோதம் ( ஒலி எழுப்பிப் பகை காட்டுதல்)-  குரோதித்தல்.
குரு > குரவன்  ( ஆசிரியன் : ஒலி எழுப்பிக் கற்பிக்கிறவன்).
குரு :  ஆசிரியன்:   ஒலி எழுப்பிக் கற்பிக்கிறவன்.

குரைத்தல் > குலைத்தல். ( ர > ல போலி)

தொடக்கத்தில் குரு என்பதும் குரவன் என்பதும் ஆசிரியனைக் குறிக்கக் காரணம் அவன் பெரிதும் ஒலிசெய்து கற்பித்ததனாலேதான்.

வாத்தி என்ற சொல்லும் வாயொலியைக் குறித்து எழுந்தது: வாய்> வாய்த்தி > வாத்தி > வாத்தியார்.

உப+ அத்தியாயி என்பது உபாத்தியாயி.1  அது வேறு.  வாத்தியையும் உபாத்தியாயியையும் குழப்பிவிட்டனர்.

ஓலைச்சுவடிகள் அதிகமில்லை. பகர்ப்பு ( காப்பி) செய்வதற்குச் செலவு  (பண்டமாற்று )  ஆனதால் வாயினால் கத்தியே " படித்தனர்".

------------------------
 1  உபாத்தியாய  :  முன் காலத்தில் வேதம் இலக்கணம் முதலியன சொல்லிக்கொடுத்தோர்.. உபாத்தியாயினி என்பது அவர் மனைவியையும் குறிக்கும்.



அருளாளர் நாராயணகுருவின் எதிர்கால ஞானம் -( முன்னுணர்வு).



அருள்மிகு நாராயண  குருக்களும் கவி குமரனாசானும்


நம் சிங்கைத் தீவில் வாசுப் பிள்ளை என்று ஒரு மலையாளி இருந்தார். இவரை அறிந்த பின் சீர்மிகு நாராயண குருக்களின் வரலாற்று நிகழ்வுகள்  சிலவற்றை அறிந்துகொண்டோம். 

குருக்கள் மாதவம் புரிந்து பல அரிய ஆற்றல்களைப் பெற்றிருந்தார் என்று அறியலானோம்.  காந்தியடிகள் கேரளா சென்ற காலை ஸ்ரீ நாராயண குருக்களைச் சென்று கண்டு தமது பணிவன்பினைத் தெரிவித்துக்கொண்டார் என்று கூறுப.  குருக்களின் புகழ் எங்கும் பரவியிருந்தது.
சிங்கப்பூரிலும் ஸ்ரீ நாராயண மிஷன் என்னும் மடாலயம் இயங்கிவருகின்றது.

குமரனாசான் என்பவர் ஓர் மலையாளக் கவியாவார்.  அவர் குருக்களை பலமுறை சென்று தரிசித்ததுடன் அவர்தம் இறையுரைகளையும் பெற்று மகிழ்ந்தவர்.

ஒரு சமயம் வழக்கம்போல் குருக்களைச் சென்று கண்டு அவர்தம் ஞான உரைகளைக் கேட்டு உயர்நிலையை உணர்ந்தார்.  பின் இறையுணா அருந்திவிட்டு  அன்று சற்று விரைவாகவே விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார்.  குரு இருந்துவிட்டு நாளை போகலாமே என்று சொல்லிப்பார்த்தார்:  குமரனாசான்  கேட்கவில்லை. அவ்விடத்திருந்து ஆசான் அகன்றக்கால், குருவானவர் சற்று கவலையுடன் காணப்பட்டார்.

அருகிலிருந்த ஏனைச் சீடர்கள் குருவைத் துருவிக் கேட்கத் தொடங்கிவிட்டனர். ஏன் எப்போதுமில்லாத கவலையுடன் காணப்படுகிறீர்கள் என்று அவர்கள் வினாவினர்.   கேள்விகள் ஒரு நெருக்கடி நிலைபோன்ற சூழலை எட்டவே குருக்கள் அவர்தம் மனத்துக்கண் இருந்த ஆழ்ந்த  கவலையை வெளியிட வேண்டியதாயிற்று.

“குமரனாசான் இன்று நம்மை விட்டுப் பிரிந்துவிடுவார்.” என்பதை வெளிப்படுத்தினார்.   எப்படி என்றனர் சீடர்கள். அவர்  ஓர் ஆற்றைக் கடக்கப் போகிறார்; அங்கு வள்ளம் கவிழ்ந்து உயிர் துறப்பார்  ----  என்பதைக் குருக்கள் விளக்கினார்.  சீடர்கள் “ குருவே நீங்கள் எப்படியாவது தலையிட்டுக் காப்பாற்றுங்கள்”  என்றனர் . 

 “ இயற்கையின் முடிவுகளில் யாம் என்றுமே தலையிட மாட்டோம்”  என்றனர் குருக்கள். ம் மியுரையைக் குமான் புறந்தள்ளிப் புறப்பட்டுவிடுவார் என்பும் குருவானர் நன்`குணர்ந்தே.  “எது நடைபெற வேண்டுமோ அது நடைபெறும். அதில் தலையிட்டு மாற்றங்கள் செய்யாமல் நம் நேரம் வரும்வரை நாமும் சென்றுகொண்டிருப்பதே இறைவனுக்குப் பிடித்தது”  என்று சொல்லிவிட்டார்.

 சில மணி நேரத்தில் அவர் சொன்னதுபோலவே மடத்திற்குச் செய்தி வந்தது.  கவி குமரனாசான் படகு கவிழ்ந்து உயிரிழந்தார்.
இந்நிகழ்வு குரு ஒர வருவதுரைஞர் என்பதைக் காட்டிற்று.

அருளாளர் நாராயணகுருவின் வரலாற்றினைப் படித்துள்ளேமெனினும் குரு பற்றிய இத்தகு நிகழ்ச்சி யொன்று அங்குக் கூறப்படவில்லை.  அதாவது குரு ஓர் முன்னுரைஞர்    என்பதும் குமரனாசானின் மரிப்பினை முன்னறிந்திருந்தார் என்பதும் அந்நூலில் கூறப்படவில்லை. இது மேற்கூறியவாறு அறிந்தவர்வாய்க் கேட்டுணர்ந்தது ஆகும்.

குருவானவர் தாம் செய்த எதற்கும் விளம்பரம் தேடாது அமைந்து வாழ்ந்த உயர்பெற்றியினர் என்பதும் இதன் மூலம் தெரிகிறது.

(குமரனாசான் பற்றிய ஒரு வலைத்தளம் செல்லத்தக்க சான்)றிதழைப் பெற்றிருக்கவில்லையாதலின் அங்குச் சென்று எதையும் ஆராய இயலவுமில்லை. )

குறிப்பு:  ஒரு என்பது ஓர் என்றும் ஓர் என்பது 
ஒரு என்றும் தன் திருத்த மென்பொருளால் 
மாறிக்கொள்கிறது.  திருத்தியுள்ளோம். மீண்டும்
பின்னர் நோட்டமிடுவோம். நன்றி.

திங்கள், 3 செப்டம்பர், 2018

தலைவேர் பக்கவேர் அறிவாளிகள்.

அறிவாளிகள் உலகில் பலர்.  ஒருவர் அறிவாளி என்பதற்கு அடையாளம் என்னவென்றால் அவரைச் சூழ்ந்து நிற்கும் அவருடைய புகழ்தான் என்று நாம் நினைக்கலாம்.  ஆனால் சில அறிவாளிகளின் வாழ்க்கையை ஆராயும் போது அல்லது மேலெழுந்த வாரியாகப் பார்த்தாலும் கூட,  அவர்களும் பல இடங்களில் சறுக்கி விழுந்து அப்புறம் மீண்டிருப்பதும்  சிலர் மீளாமலே அக்குறையுடன் தம் வாழ்நாளைக் கழித்திருப்பதும் மக்களும் அவர்பால் உள்ள அன்பினால் அக்குறைகளை ஒருவாறு அசட்டை செய்துவிட்டு அவரைப் போற்றிக் கொண்டாடி இருப்பதையும் காணலாம்.  மொத்தத்தில் அவர்வாழ்க்கை நிறைவானது என்று எண்ணுவதற்கில்லை.

ஆனால் குறையே இல்லாத அறிவாளியோ அல்லாதவரோ உலகத்தில் இல்லை என்றே சொல்லலாம்.  சிற்சில குறைகளை நாம் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை  அல்லது அவர்பால் ஏற்பட்டுவிட்ட பற்றுவிரிவால் ( விசுவாசத்தால்)  மனத்திற் பதிவுசெய்துகொள்வதில்லை என்று திண்மையாகச் சொல்லலாம்.

" நானும் மனிதன் தான்;  உங்கள்போல் என்னிலும் குறைகள் உண்டு"  என்று சில அறிவாளிகள் தங்கள் சிந்தனைகளில் சிந்தியிருக்கிறார்கள்.

ஒரு சமயம் ஒருவருடன்ஒரு கோவிலில்  உரையாடிக் கொண்டிருக்கையில் "இந்தக் கோவிலில் சில நடவடிக்கைகளைத் திருத்தம் செய்தல் வேண்டு"  மென்று அவர் கூறினார். அதற்கு நான் இவை தலைவரால் செய்யத் தக்கவை என்றேன்.  அவர் உடனே தலைவர் என்ற சொல்லைப் பிடித்துக்கொண்டு: "தலைவேர்"   "பக்கவேர்"  என்று தாவரவியல் முறையில் விளக்கினார்.  ஆகவே எந்தச் சேவையிலும் தலைவேராக உள்ளவர்களும் பக்கவேராக உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பது ஓர்  இயல்பான பாகுபாடு என்று நாம் கருதலாம்.  இதை வேறு விதமாக பேரோடைகள்  சிற்றோடைகள் என்றும் பகுத்துக் கூறுவதில் தவறில்லை.  ஆனால் இதில் நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால் தலைவேரும் பக்கவேரும் ஒன்றாக இணைந்து செயல்படுபவை ஆகும்.  அவற்றின் வேலைகளில் எவையும் எதிர்மறைத் தன்மை உடையவை அல்ல.

ஆனால் ஓடைகளைப் பொறுத்த வரை ஒரு பேரோடை உலகின் ஒருபகுதியில் இருக்கலாம்; இன்னொன்று  வேறொரு பகுதியில் இருக்கலாம்.  அவற்றிடை எத்தகைய பிணைப்பும் இல்லாமல் இருத்தலும் கூடும். சிந்தனைச் செல்வர்களை எடுத்துக்கொண்டால் ஒருவர் ஓர் இலாகாவில் வேலைசெய்து ஓய்வு பெற்றவராகலாம்; இன்னொருவர் வேறோர் இடத்தில் தன்முனைப்பாகவும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றிச் செயல்பட்டவராக இருத்தலும் கூடும். இவர்கள் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு  ஆளுமைகளுடனும் கட்டின்மையுடனும்  செயல்பட்டவர்கள்.  இவர்களின் கருத்துகள் பேரோடைக் கருத்துகள் சிற்றோடைக் கருத்துகள் என்று பகுக்கப்படுதலில் ஏற்புடைமை காணுதற்கில்லை. பேரோடைச் சிந்தனையாளர் ஒரு பல்கலைக் கழகத்தில் வேலைபார்த்திருந்தால் அவர் கூறிய கருத்துக்கள் அப்பல்கலையில் உள்ள பிற மேலாண்மை அலுவலர்களின் கருத்துகளுக்கு ஒத்துச் செல்வனவாகவே இருக்கவேண்டும். இல்லையென்றால் அவர்தம் சீட்டுக் கிழிந்துவிடலாம்.  அத்தகைய அச்சத்தில் எழுதியவை அல்லது சொன்னவை ஒரு திறந்த சிந்தனை என்று கொள்வதற்கில்லை.  அவருக்கு எதிர்மறையாக இருக்கும் பிறரின் கருத்துகள் சிற்றோடைக் கருத்துகள் என்பது உண்மையில் தவறாகும்.

படிப்பாளிகள் பெரும்பாலும் கைகட்டியே தொழில்மேற்கொள்வதால் ஒவ்வொரு கருத்தும் ஆய்வு செய்யப்படவேண்டியதாகும். கட்டின்றி வெளிப்படும் கருத்துகள் மேலானவை; எனினும் அவையும் ஆய்வுக்குரியவை தாம். எதையும் மெய்ப்பொருள் கண்டே ஏற்கலாகும். ஊதியத்துக்கு இயங்குவோன் கருத்து  அவன் தன் ஊதியம் காக்குமாறு வெளியிடப்பட்ட கருத்தே என்று முடிக்கவும்.

இறையின்பம். (2010ல் பாடியது)

இறையின்பம்

முன் யாம் எழுதிய பல   கவிதைகள்  தொலைப்பேசிகள்வழியாகக்  கிடைக்கவில்லை என்று சொல்கின்றனர்.  இவற்றை மீட்பதும் கடினமே.

இதை மீட்டு அளிக்கின்றோம்.    2010ல் எழுதியது.


பாட்டு:

தனித்தலையாய் இறையின்பம் தினைத்துணையே நன்மை!
பனித்தூய்மை அடியரொடும் இனித்திடுமா றாழ்ந்து
நினைத்தமர்ந்து நிலைப்படுத்தி நிறைவினையே காணல்
அனைத்துலக அடியவரும் பனைத்துணையென் றேற்பர்.


இதன் பொருள்:

தனித்தலையாய் = தானே தனியராய்; இறையின்பம் = இறைவன் பால் பத்தி (பக்தி) கொண்டு அவனை நாடிச்சென்று இன்புறுவது;
தினைத்துணையே நன்மை! = சிறிதளவே நன்மை தருவதாகும்;

பனித்தூய்மை அடியரொடும் = பனியைப் போல தூயவரான அடியார்களுடன், இனித்திடுமாறு =இன்பம் உண்டாகுமாறு ; ஆழ்ந்து நினைத்து = தியானம் செய்து;
அமர்ந்து நிலைப்படுத்தி = உட்கார்ந்து மனத்தை நிலைப்படுத்தி; நிறைவினையே காணல் = அத்தியானத்தின் வெற்றியைக் காணுவது;
அனைத்துலக அடியவரும் = ஏனை மதங்களின் அடியார்களும் பனைத்துணையென் றேற்பர். =பெருநன்மை பயப்பது என்று ஏற்றுக்கொள்வர்.,கூட்டு முயற்சி ஆதலினாலே. என்றவாறு.

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

கடத்தற்கு அரியவையும் கடுமையானவையும்.

ஆதிகாலத்திலிருந்து தமிழர் கடல் என்று நாம் சொல்லும் நீர்ப்பரப்பினை அறிந்திருந்தனர்.  அது கடப்பதற்கு அரியது என்று அவர்கள் முடிவு செய்தனர். அதைக் குறிப்பதற்கு ஒரு சொல் தேவைப்பட்டது.  கடப்பதற்கு அல்லாத நீர்ப்பரப்பு என்ற பொருளில்  கட+ அல் என்று புணர்த்துச் சொல் படைத்தனர். இதற்கு முன்னரே நீர் என்ற சொல் இருந்தமையால் " நீர்விரி" என்று படைத்திருக்கலாம். நீர் விரிந்தது என்பதை விட அவர்களுக்கு மண்டையின் முன்னணியில் நின்ற கருத்து ஒரு கவலை:  கடக்க முடியவில்லையே என்பதுதான்.

"விரிநீர் வியனுலகு" என்ற தொடரை வள்ளுவம் வழங்குதல் காணலாம். ஆழி என்பது கடல் ஆழமானது என்பதைக் குறிக்கும்.  "ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள"  என்று கம்பனில் வந்துள்ளது.

கடப்பதற்கு அல்லாதது என்று சும்மா இருந்துவிடவில்லை.  படகு தோணியென்று மிதவூர்திகளை உருவாக்கி இறுதியில் கடந்தே வெற்றிகண்டனர்.  போலிநீசியர் என்போர்  இந்தோனீசியர்களின் மூதாதைகள் என்பர்.  அவர்கள் தென் கண்டத்துக்கு அடுத்துள்ள நியூசிலாந்து வரைசென்று மவுரிகள் ஆனார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். இதை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் எல்லா மனித இனத்தவரும் முயற்சி திருவினை ஆக்கும் என்றே உலக வரலாற்றில் இயங்கியுள்ளமை காணக்கிடக்கின்றது.

கடத்தற்கு அரிது என்ற கருத்தில் இன்னொரு சொல்லும் அதே அடிச்சொல்லிலிருந்து பிறந்தது.  அதுதான் வேங்கடம் என்ற இடப்பெயரில் உள்ள கடமென்ற சொல்.  அது கட + அம் என  அம் விகுதி பெற்று அமைந்தது என அறிஞர் சுட்டிக்காட்டியதுண்டு.  மிக்க வெம்மையான இடம் என்பதுதான் " வேம்" என்ற அடைமொழி பெற்றுச் சொல் அமைந்துள்ளது.  வேகும் > வேம்.  இடைக்குறை.  ( மற்ற உதாரணங்கள்:  ஆகும்> ஆம்;  போகும் > போம்.)  (  மலையாளம்:  ஆணு என்பது ஆகுன்னு  (ஆகிறது) என்பதன் திரிபு).

வேம்<>வெம்.  வெம்+ கட+ ஆசலம் = வெங்கடாசலம்.  வேகும் வெம் என்பன தொடர்பின. வெங்கிடாசலம் என்றும் சிலர் எழுதுவதுண்டு.

ஓரிடத்தைத் தாண்டிச் செல்வதென்பது அத்துணை எளிதன்று. இன்று நாம் இதை உணர்வதில்லை. சிறிய நீர்வடிகாலொன்று வந்து நீங்கள் செல்லும் திசையில் குறுக்கிட்டாலும் அதற்கும் ஒரு சிறுபாலம் அமைக்கப்பட்டு நீங்கள் எங்கேயும் தவறி விழுந்துவிடாமல் பெரும் பாதுகாப்பு வழங்கப்படும் உயர்ந்த காலத்தில்  வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். ஆதலால் கடந்து செல்லற் கரிது என்னும் கருந்து ஆழ்ந்து சிந்தித்தாலன்றித் தோன்றிவிடாது.

கடப்பதன் எளிதின்மையை புலப்படுத்திய  இதுபோன்ற சொற்கள் உங்களுக்கும் கடப்பது கடுமையான காரியமென்பதை உணர்வித்திருக்கவேண்டும்.  எனவே கடு என்பதிலிருந்தே கட என்பது தோன்றியது என்ற சொல்லாய்வின் விளிம்பில் நீங்கள் கொணர்ந்து நிறுத்தப்பட்டிருக்கவேண்டுமே.   சொல்லைச் சிந்தியாதவர்க்கு இந்தச் சொற்பயணம் நேர்வதில்லை.

கட்டியாய் உள்ள எதையும் துருவித் திருகி மென்மையாக்குவதே கடைதல் ஆகும்.  கடையக் கடையச் சில பொருள் குழைவாகிவிடும்.  சில உடைந்து துகள்கள் பறக்கும்.   இங்கு கடு > கடை என்பதன் தொடர்பை நீங்கள் அறிந்திருக்கவேண்டும்.  கடலை என்ற கடுமை உடைய விளைபொருளை வாயிலிட்டால் அதைக் கடிக்க வேண்டும்.  கடு> கடலை; கடு > கடி என்பதன் தோற்றமுணர்ந்தீர் அல்லீரோ? மென்மையானது இறுகிவிட்டால் கடு> கட்டி என்பதும் கற்பனையாகாதன்றோ?

கடுமையான சூழ்நிலைகள் வாழ்வில் தோன்றிக்கொண்டே இருப்பவை. திருமணம் செய்துகொள்வதுகூட எளிதாய் இருப்பதில்லை.  கடு>கடி;  கடி - கடிமணம் என்ற சொல்லமைப்பின் பொருளை உணர்ந்திருக்கவேண்டுமே.

மரக்கட்டை என்பதில் கடு> கடு+ஐ > கட்டை என்பது வெள்ளிடைமலையாம்.

கட்டை என்பது நீளமின்றியும் காய்ந்து இறுகியதாகவும் இருக்கும்.  மரக்குழம்பைக் காயவைத்து இறுக்கமாக்கிக் காகிதம் செய்யப்படுகின்றது.  காய் என்பது காய்தல் வினை.  காய்> காய்+கு+இது+அம் >  காய்கிதம் > காகிதம் ஆனது. (இது அது என்பன சொல்புனைவில் இடைநிலைகளாக வரும்: இன்னொன்று எடுத்துகாட்டாக:  பரு(த்தல்+ வ் ( உடம்படுமெய்) + அது + அம் = பருவதம் எனக் காண்க)

காய்ந்தாலும் காகிதம் சற்று மென்மை கொண்டதாதலின் அதற்கேற்ப, காய்க்கிதம் என்று வல்லெழுத்துக்களை மிகுக்காமல் காகிதம் என்றே சொல் மென்மையை வருடி நிற்கிறது. (வல்லெழுத்து மிகுதல் காய்த்தல் என்னும் வினையுடன் சென்று மயங்கும் )  இப்படிச் சொற்களைக் கவனத்துடன் அமைப்பது தமிழில் சொல்லமைப்பு உத்தியாகும். இதைப் பல சொற்களில் சுட்டிக்காட்டியுள்ளோம்.  பழைய இடுகைகளைக் கவனத்துடன் படிக்க.

தொடக்க காலத்துக் காகிதங்கள் கடுமையாக இருந்தன. பின்னரே அழகும் ஒளியும் நெளிதிறலும் உடைய காகிதங்கள் மனிதனால் செய்ய முடிந்தது.
ஆகவே கடுதாசி என்ற சொல் முன்னர் படைக்கப்பட்ட சொல்லாதல் தெளிவு. கடுதாசி என்பதன் இறுதியில் வரும் தாசி,  தாசி என்னும் வேசி யென்று நினைத்துவிடாதீர்.   கடுதாள்சி என்பதே மருவிக் கடுதாசி ஆனது,  புணர்ச்சியில் கடுதாட்சி என்று ஆகி டகர ஒற்று நீக்கப்பட்டாலும்  கடுதாசி என்றே வரும். இப்படி ஒற்று வீழ்ந்த சொற்கள் பல.  சொல்லிக்கொடுக்கும் வாத்தியார் உட்பட:  வாய்த்தி ( வாய்ப்பாடம் சொல்பவர்) > வாத்தி > வாத்தியார்.
உப அத்தியாயி> உபாத்தியாயி  என்பது வேறுசொல்.    தேய்ந்து அழிதலை உடைய உடல் தேய்கம் >  தேகம் ஆனது போல.  ஆட்சி என்ற சொல்லும் சிற்றூராரால் ஆச்சி என்று பேச்சுவழக்கில் வழங்கப்படுதல் காண்க.

மேலும் சில  "கடு"  அடிச்சொல் :  http://sivamaalaa.blogspot.com/2016/12/blog-post_87.html

அறிவீர் மகிழ்வீர் 

(மறுபார்வை நிகழும்.)

சில எழுத்துக்கள் வேறு கணினிகளில் வேறுபடத் தோன்றுகின்றன.} மறுபார்வை : 1136 03092018/      0507  06092018

சனி, 1 செப்டம்பர், 2018

கொளுத்துதல்,

கொள் என்பது பலபொருளொரு சொல்.  கொள் என்றொரு கூலம் (  தானியம் ) உண்டு, அதைக் குறிப்பிடவில்லை. இந்தக் கொள் என்பது குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படுவதாம்.

கொள் என்று ஒரு துணைவினை உள்ளது. எடுத்துக்கொள் என்ற வினையில் தானே கொள்ளுதலை அது குறித்தது.

கொள் என்பது தல் என்ற விகுதிபெறின் கொள்தல் >  கொள்ளுதல் என்றாகும். முதனிலை திரிந்த தொழிற்பெயராய் கொள்தல் > கோடல் என்றுமாகும்.

கொளுத்து என்பது கொள் என்பதன் பிறவினை.  கொள்ளும்படி செய்தல் என்பது பொருள். கதவில் உள்ள கொண்டி  கொளுத்து என்றும் சொல்வதுண்டு. கதவைப் பிறர் திறக்காமல் அடைக்கும் விதமாகக் கதவில் கொளுத்து இடப்படும். ஒரு நெட்டாணி அதற்குரிய வளையத்தில் ஏற்றப்பட்டுக்  கதவு திறக்க இயலாமல் அடைப்பது  கொளுத்திடுவது என்பர்.

கொளுத்து என்பது தீயேற்றப்படுவதையும் குறிக்கும்.  மடமையைக் கொளுத்து என்று பாரதி பாடியதில்  தீயால் அழிக்கப்படுவதைக் குறித்தது.

இனி  ஓர் இடுகையில் அறிவு கொளுத்துதல் என்று எழுதியிருந்தோம். இங்கு அறிவுபெறுமாறு செய்தல் என்று பொருள்படும்.

ஆனால் பயிர் கொளுத்துதல் என்று சொன்னால் பயிர் நட்டு வளரச் செய்வது என்று பொருள். பயிருக்குத் தீவைப்பது என்று பொருளன்று என்பதை மனத்திலிருத்தவும்.

கொள் > கொள்ளி. இது நெருப்பேற்றிய கோல் குச்சி முதலியவற்றைக் குறிப்பது.  கொள்ளி வைத்தல் : பிணத்துக்குத் தீயிடுதல்.   கொள்ளிப்பேய் : வாயில் நெருப்புக் கக்குவதாகச் சொல்லப்படும் பேய்.

கொள் என்பதில் பிறந்த சொற்கள் பல. சில அறிந்தோம். நன்றி.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

வான்மீதிலே இன்பத் தேன்மாரி: இராமராவின் மெல்லிசை.

நாம் இன்னும் தமிழ்மொழியைப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் எம் போன்றோர் வெளிநாட்டினர்.  தமிழைத் தாய்மொழியாகப் போற்றும் நாட்டில் அல்லது மாநிலத்தில் வாழவில்லை. வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் சீரகம் சோம்பு பட்டமிளகாய் தாளிப்பு வகையறாக்கள் விற்கும் கடைக்குப் போனால்தான் தமிழ்ப் பேச வாய்ப்புக் கிட்டுகின்றது. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நாம் வெளியில் சந்திப்பவர்கள் 99 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் அல்லது சீனர்கள்.  ஆங்கிலம்,  சீனம்,  மலாய் முதலிய மொழிகள் பெரிதும் பயன்படுகின்றன.

நம்மில் பலர் தமிழை அறிந்து வைத்திருப்பதற்குக் காரணம் பேரளவில் திரைப்படங்களையே சாரும். திரையரங்குகட்குச் சென்று படங்களைப் பார்க்காவிட்டாலும் தமிழ்த் திரைப்பாடல்களை ஆங்காங்கு வானொலி தொலைக்காட்சி வாயிலாகக் கேட்க முடிகிறது. இது ஊட்டச்சத்தினை உட்கொண்டது போலாகும். சற்றுத் தரம் தாழ்ந்த திரைப்படங்கள் வருவதைக் கருத்தில்கொண்டு  அவற்றில் நாம் விரும்பும் பண்பாட்டுக் கூறுகள் குறைந்துகொண்டு செல்வதனால் பரத நாட்டியம் பழைய இசை (கர்நாடக சங்கீதம் ) முதலியவற்றைக் கற்றறிய ஒரு சாரார் செல்வதும் வரவேற்றற்குரியதே ஆகும். கோவில்களிலும் ஓரளவு தமிழ் வழங்குகிறது. கிறித்தவ தேவாலயங்களிலும் தமிழ் போற்றப்பட்டு வருகிறது.

திரைப்பாடல்களில் பல இனிய மெட்டுகளிலமைந்த மெல்லிசைப் பாடல்கள் நம் மனத்தைவிட்டகலா இடத்தினைப் பிடித்துக்கொண்டுள்ளன. அத்தகைய பாடல்களிலொன்றுதான் "வான்மீதிலே' என்ற பாடல்.  பானுமதி ஆண்பாடகருடன் இனிமையாக வழங்கியது இப்பாடல்.

அண்மையில் இரண்டு குருசாமிகள் எம்மைக் காண வந்தனர்.  தேநீர் (கொழுந்துநீர்)  முறுக்கு முதலியவை கொண்டு பணிவன்பு தெரிவிக்கப்பட்ட பின்பு அவர்கள் இந்தப்பாடலைப் பற்றிப் பேசி அதை எம்மைப் பாடும்படி கேட்டனர். யாமும் இயன்றவரை இதைப் பாடினோம்.

வான்மீதிலே இன்பத்
தேன்மாரி பெய்யுதே;
வண்ணம்சேர் கலாமதி
வீசும் வெண்ணிலாவினில்   (வான்)

சுகாதீத மேவும்
அனுராக கீதம்
சுதியோடு பாடும்
மதுவண்டு கேளாய்.
சதாநந்த ஜீவிய கானம் இதே (வான்)

வசந்தத்தில் ஆடும்
புனர்ஜென்மம் நீயே
மையல்கொண்டு நாடும்
தமிழ்த் தென்றல் நானே

மனம் ஒன்று சேர்ந்தே
உறவாடும் போது ( I stopped here)
நிஜம்தான் என் ஆருயிர்)
மெய்வாழ்வு நான்)
எனை ஈன்ற ? போகமும்)
மோகமும் மாறாது.)

BRACKETED LINES  IN DOUBT. supplied by the swamis
I tried to elicit the lines from youtube but owing to
frequent reloading unable to retrieve them.

இதை அவர்களுக்காகப் பாடினேம். இதை யாம் கேட்டிருக்கிறோமே அன்றிப் பாடிப் பயிற்சி செயததோ அடிக்கடி பாடியதோ இல்லை;  வரிகளும் சரியாகத்
தெரியவில்லை என்றேம். இருந்தாலும் நன்றாகப் பாடியதாகத் தெரிவித்தனர்,
மணிப்பவழ நடையில் (  மணிப்பிரவாளம் ) அமைந்த நல்ல பாடல். பலரையும் கவர்ந்தது ஆகும்.  ( நீங்கள் அறிந்திருந்தால்,  இப்பாடலின் வரிகளை இங்கு பின்னூட்டம் இடுங்கள். மேலே தரப்பட்ட வரிகளில் தவறுகள் சில இருக்கலாம் என்று நினைக்கிறேம்  ).

இந்தப் பாடலுக்குத் திரையில் பானுமதியும் மறைந்த ஆந்திர முதல்வர் ராமராவும் நடித்திருந்தனர்.  அண்மையில் அவர் மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் காலமானது நம்மைச்  சோகத்துள் உய்த்தது. அவர்கள் குடும்பத்தாருக்கு நம் இரங்கல் உரித்தாகுக,  இருவரின் நினைவாகவும் இப்பாடல் உள்ளது.

திருத்தம் பின்