புதன், 16 டிசம்பர், 2015

சிவஞான போதம் 3: பொருளை.......

சிவஞான போதம் 3-ம்  பாடலின் முன்னுரை இவ்விடுகையில்  http://sivamaalaa.blogspot.sg/2015/12/3.html கண்டு மகிழ்ந்தோம்.  

இப்போது அதன் பொருளை அறிந்துகொள்வோம்.


உளதில தென்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கத்து அறிதலின் கண்படில்
உண்டிவினை இன்மை உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா.

உடம்பு  கண்ணால்  காணப்படுவது  ஆகும் .   ஆனால்   ஆன்மாவோ   கண்ணுக்குப்  புலப்படாததாய்  இருக்கின்றது.   புலப்படும்  உடலைக்கொண்டு    புலப்படாத  ஆன்மா வை    அறியும் வழியை  இப்பாடல்   தெரிவிக்கிறது.  இதை  அனுமானப் பிரமாணம்   என்பர்   பணடிதன்மார். 

மாயா  இயந்திரத் தனுவினுள்   ஆன்மா  உளது.   -   மாயையின்  விளைவினால் இயங்குவதாகிய  இவ்வுடம்பினுள்   ஆன்மா  இருக்கின்றது . மாயை  காரணம்;   உடம்பு   காரியமாகிறது, 


தனு   என்பது  உடல்.    தன் + உ =  தனு ,  தன்  -  தன்னுடைய .   உ  என்பது உடல்  என்பதன்  முதலெழுத்து .  தன்  + உ  ,  இரண்டும் கூட்டி  தனு  ஆனது.  ஒரு முழுச் சொல்லும் ஒரு குறைச்சொல்லும்    கலந்த  கலவை. தனு  எனவரும்  வேறு  பொருள்தரு  சொற்களும் உள்ளன.  அவை வேறு   இது வேறு.    ஆகவே  தனு  -  ஒரு இனிய புனைவுச் சொல்  ஆகின்றது.   தன்னுடல்  என்பதை  ஒரு மறைமுக வழியில்  குறிப்பிடுவது.    தேகம்  (தேய்+கு+  அம்  = தேய்கம் >  தேகம் ) தேய்தல் உடையது ;  அழிவுடையது .  அழி  உடலில்   அழியா  ஆன்மா  உள்ளிருக்கிறது.   இதைச்   சற்று  மறைவாகத் தனு  என்றது  மிக்கப் பொருத்தமாகும்.

  இலது என்றலின்   =   இல்லை  என்று சொல்வதனால்  .
இல்லாததை  எப்படி இல்லை என்று சொல்வது?   ஆன்மா இல்லை என்று சொல்லும் போதே   ஆன்மா  என்ற சொல் வந்துவிடுகிறதே  , உலகம்  அறியாத ஒன்றைக்  குறிப்பிட்டு  அதை இல்லை என்று சொல்ல இயலாது. முடியுமா என்று பாருங்கள்.

எனது  உடல்  என்றலின்  =   என்னுடைய உடம்பு  என்று சொல்வதனால் .
இவ்வுடல்  ஆன்மாவின் உடைமை  என்பது     பொருள் ஆகிறது அன்றோ.? 


ஐம்புலன் ஒடுக்கத்து அறிதலின்  -   கனவின் போது  கண்,  மூக்கு, செவி   வாய்,  தோல்  (மெய் ​) ஆகியவை ஒடுங்கி   விடுகின்றன.   ஐந்து உணர்ச்சிகளும் ஒடுங்கிப் போகின்றன.  ஆன்மா இருப்பதனாலன்றோ இப்படி நடக்கிறது என்றபடி.  சமாதி  பழகும் போதும்  ஐம்புலன்களும் ஒடுங்கி விடுகின்றன.  உடல் கட்டைபோல் கிடக்கிறது.   அப்போது   அறிவதனால் .(ஆன்மா   உள்ளது )

சமாதி  <  சம + ஆதி.     ஆதியில்  ஓர் உடலினுள்  ஆன்மா  இருக்கவில்லை.  அது பின்புதான்  உடலை எடுத்தது.  அது  ஆதி நிலைக்குத் திரும்புதல் போல  உடலினின்றும்   ஆன்மா  பிரிந்து எழுந்து  நிற்பதே  சமாதி. ( நிருவிகற்ப  சமாதி  முதலியவை நோக்குக ).   ஆதியின் ஒத்த  சம நிலை  சமாதி.  


  கண்படில்  உண்டிவினை இன்மை உணர்தலின் =   கண் படும்போது  (உறங்கும்போது)   உணவு  மற்றும் வேறு   எல்லாமும்  விட்டு க்   கிடக்கிறோம்.   உடல் அற்ற நிலையைப் போல   ஆதலினால்.

கண்படல்  = உறங்குதல்.

உண்டி வினை :   இது  உண்டியும்  வினையும்  என்று   உம்மை   (உம்  என்ற இடைச்சொல் )  விரியும்.   எனவே உண்டி வினை  என்பது உம்மைத் தொகை .  உண்டி - உணவு.      வினை  -  உடலுக்குத் தேவையான  மற்றெல்ல்லா  நுகர்வுகளும்,   (போகங்கள்  யாவும் ),  உடல்  உடையவன் வேண்டிப் போகும்  யாவும்  போகங்கள்.  ஆகவே  வினை  என்பது   ஏனைப்   போகங்கள்    என்று   பொருள்தரும்,

 இவ்வாறு   ஆன்மா  உள்ளதென்பதை சிவமதம்  நிலை நாட்டுகிறது,

இது  ஆன்மா இல்லை என்றாருக்கு அறிவுறுத்துவதாகிறது.

ஆன்மா இல்லை என்போனுக்குச் சூன்யாத்மவாதி  என்று பெயர்.
எனது உடல் என்பவனுக்குத் தேகாத்மவாதி என்று பெயர்.
ஐம்புலன் அன்றிப் பிறிதில்லை என்போன்  இந்திரியாத்மவாதி
கண்படுதல் காலத்து  அறிதல் ஒப்பாதவன் பிரணாத்மவாதி.
உணர்த்த உணர்தலின் ஆத்மா உண்மை மறுப்போன் அஞ்ஞானாத்மவாதி.

தான் ஆத்மா  இல்லை என்பதால் தான் இறந்தபின்  ஒன்றுமி ல் லை   என்பான்  சூன்யாதமவாதி .

இவர்கள் கொள்கைகளையெல்லாம் இந்நூல் மாறுத்து நிற்கின்றது. 

Some typos corrected and re edited.  Some  virus has made changes ,   These have been reverted.   கண்படும்போது   not  காணப்படும்போது.    Pl note comments if any  by readers do not reach us. 

செவ்வாய், 15 டிசம்பர், 2015

" வம்ச புத்திரி "

Taman Puteri Wangsa என்ற மலாய் மொழிப்  பெயரைத் தமிழில் சொல்வதானால் வம்சம் என்ற சமஸ்கிருதச் சொல்லை ப் பயன்படுத்தி  "  வம்ச  புத்திரி "  குடியிருப்புப் பேட்டை  என்று  சொல்லலாம்.  குல இளவரசி  ,,,,,,, என்றும் கூறலாம்,  ஒரு தலைமுறைக்கு மட்டுமின்றி  அந்த  அரச குலத்துக்கே  இளவரசிகளுக்கெல்லாம் ஓர்  இளவரசி ஆனவள் .......... என்று புகழுரைக்கலாம் ,

நல்லது.  இப்போது வம்சம் என்ற சொல்லை ஆராய்வோம். இது பற்றி முன்னர் யாம் எழுதியதுண்டு.  இப்போது சொல்வதில் சிறு மாற்ற வளர்ச்சி இருக்கக்கூடும். பெரும்பாலும் யாம் பார்த்து எழுதுவதில்லை. 

வருமின்  அதாவது  வாருங்கள் என்னும் சொல்  வம்மின்  என்று திரியும் .  வந்தான்   என்ற  இறந்த கால வினைமுற்று  வரு என்ற பகுதி  வ  என்று திரிதலைக்  காட்டுகிறது/  

இவை போல  வ  என்ற  பகுதி  வம்மிசம் அல்லது  வம்சம்   என்ற சொல்லில் முன் நிற்கிறது, உண்மையில்  இது  வருமிசம் என்று இருந்து  வம்மிசம் என்று திரிந்தது என்று சொன்னாலும்  உண்மையிலிருந்து தொலைவு  ஆகிவிடாது .

குழந்தைகள் பிறந்து  பல தலைமுறைகள் மென்மேலும் தொடருமானால் 
அதுதான்  வம்சம்  ஆகிறது.  , மேலும் என்ற சொல்லுக்கு ஈடானது  மிசை என்ற பழந்தமிழ்ச் சொல். 

வ  + மிசை + அம்   =  வம்மிசம் ஆகிறது.,

மிசை என்பதில் உள்ள  ஐ  கெட்டது.  ( விடப்பட்டது)

ஆகவே    வ + மிச் + அம்   =  வமிசம்  >  வம்சம் ஆகும்.  ச்  + அ  =  ச .

வருதல் எப்படி பிறப்புகள் தொடர்தலை க் குறிக்கும்.?    தொடர் குறித்தது மிசை என்னும் சொல்.  வருதல் பிறப்பு .

போக்கு வரவு என்ற தொடர்  பிறப்பும் இறப்பும் குறித்ததே சிவஞான போதத்தில்.  அதுபோலவே  ஆகும்.

வம்சம் என்ற சொல் பேச்சில் இன்றும் உள்ளது.  அவன் வம்சம் கருவற்றுப் போக என்று திட்டுகையில்  அது வந்துவிடுகிறது,  

அது மலாய் வரை பரவி மகிழ்வு தருகிறது..

puteri wangsa =  dynasty princess.  A nice phrase to hear.


திங்கள், 14 டிசம்பர், 2015

சிவஞான போதம் பாடல் 3

சிவ ஞான போதத்தின் மூன்றாவது பாடலைக் கண்டு மகிழ்வோம்,

உளதில தென்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கத்து அறிதலின் கண்படில்
உண்டிவினை இன்மை உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா.

ஆன்மா உள்ளது, ஆன்மா இல்லை என்று இருவிதமாகப் பேசப்படுகிறது ஆன்மா இருக்கிறது.

எனது உடல் என்றும் சொல்வர். எனது எனப் படுதலால் நான் என்பது இவ்வுடல் ஆயின் என் உடல் என்று கூறுவதென்ன? நான் என்பதில் வேறுபட்டதாகவன்றோ உடலைச் சொல்கின்றனர். ஆகவே நான் உள்ளேன்; எனக்கு உடலும்  இருக்கிறது. நான் என்பது உடலினை வைத்திருக்கும் ஆன்மா ஆகிறது.   ஆன்மா  தேகி .  தேகத்தை உடையது,

கனவின்போதும்  ஐம்புலன்களும் ஒடுங்கி விடுகின்றன.அப்போது நான் இருக்கிறேன்,( உடல் செயலற்றுக் கிடக்கிறது. உறங்குவது போலும் சாக்காடு., இரண்டும் ஒப்புமை உடையன ) ஆதலின், உடலின் வேறான ஆன்மா இருக்கிறது.


உறங்குங்கால் உண்ணுதல் முதலிய ஏனைச் செயல்கள் நடைபெறுவதில்லை. நன்மை தீமைகளைப் பட்டறிய முடிவதில்லை. ஆனால் மூச்சு ஓடுகிறது. அதனாலும் ஆன்மா உள்ளது. மூச்சு வேறு; ஆன்மா வேறு.



யாராவது ஒன்றை நமக்கு உணர்த்தினால் அதனை நாம் உணர்ந்துகொள்கிறோம். அதனாலும் ஆன்மா உள்ளது என்பர் . ஒரு அறிவியலாளர், தாம்  அனுப்பிய துணைக்கோளம் செவ்வாயில் இறங்கிற்று என்கிறார். அவர் சொன்னதும் உங்களுக்கு விளங்குகிறது. அது புரிந்தது உங்களுக்கா? அல்லது உங்கள் உடலுக்கா? உணர்த்தியவுடன் நீங்கள் உணர்ந்தீர்கள் . ஆகவே உங்கள் உடலின் வேறான உங்கள் ஆத்மா உள்ளது. தற்கால முறைப்படி ஒரு மனிதனின் மூளையை அறுவை செய்து தேடினால் இந்த உணர்ந்த செய்தியை மூளையின் அணுத்திரள்களில் கண்டெடுக்க முடிவதில்லையே. அது  எங்கு பதிவாகியது

இவற்றை விளக்குகிறது இந்தப் பாடல். இதன் பொருளை அடுத்த இ
டுகையில் ஆராய்வோம் .
will edit 

சனி, 12 டிசம்பர், 2015

புத்திரி etc

மகள் என்பது குறிக்கும் புத்திரி,  மற்றும்  ஆண்பால் புத்திரன்,  பலர்பால் புத்திரர்  முதலியன  தமிழில் வழங்கும், இவற்றைத் தமிழாக ஏற்றுக்கொள்ளவில்லை   தமிழ்ப்புலவர்.

இவற்றின் அடிச்சொல்லைக் கண்டு பிடிப்போம்.

புதல்வன் என்பதன் அடியை முன் இடுகையில் ஒரு பத்தியில் குறித்துள்ளோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/12/blog-post_63.html

இதுவும் அதே புது என்னும் அடியினின்று வருவதே.

புத்திரி புதியவளாக  வந்து இருப்பவள்.  அதாவது   குடும்பத்தில்   பிறந்து  புதிய உறுப்பினளாய்  இவ்வுலகில்  வந்தவள்-.   தாய்  தந்தையர்  முன்னரே தோன்றிப்   பழமை எய்திவிட்டவர்கள். முதலில்  பிறந்த குழந்தையைக்  குறித்துப்  பின் வளர்ச்சி பெற்றுப்  பெரியவர்கள் ஆனோரையும் குறித்தது இச்சொல்.  

புது + இரு + இ =  புத்திரி.  ( தகரம் இரட்டித்தது. )
புது + இரு + அன் =  புத்திரன் .
புது + இரு+ அர்  = புத்திரர்.  

இரு என்ற சொல்லை இடையில் செருகி அமைந்த இன்னொரு சொல்:

நம் + புது+  இரி =  நம்பூதிரி.

இதில் பூதிரி  என வந்தது  முதலெழுத்து நீண்டதனால். 

முதனிலை திரிதல் தொழிற்பெயரிலும் பிற பெயரிலும் வரும்,,

புத்திரி  என்ற சொல் மலாய் மொழியிலும் உள்ளது.  அங்கு அதற்கு "இளவரசி " என்று பொருள்.  பல மொழிகளிலும் புகுந்துள்ள இந்தப் புத்திரச் சொல்லை அமைத்து வழங்கிய  பெருமை தமிழினது ஆகும் . 

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பிற மதங்களும் சிவஞானமும்

முன் இடுகையிலிருந்து  தொடர்வோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/12/blog-post_11.html


இதனைச் சிறிது ஒப்பாய்வு செய்வோம்.


இஸ்லாமிய மார்க்கத்திலும் கிறித்துவ சமயத்திலும்கூட,   ஆன்மா இருப்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது,   ஆனால் இந்து மதத்துக்கும் அவைகட்கும் ஒரு வேறுபாடு உண்டு,     அவற்றின் கூற்றுப்படி  ஒருவன் பிறக்குமுன் அவன்தன்  ஆன்மா இருக்கவில்லை.  அவன் பிறக்கும்போதுதான் அவன் ஆன்மாவும் உண்டாகி அவனுள் இருக்கத் தொடங்குகிறது.முன்பிறவி  இல்லையாகையால், முன் அவன் ஆன்மாவும் இல்லை.


அவன் இறக்கும்போது, அது அவனைவிட்டுப் போய்விடுகிறது. எங்கு போயிற்று என்பது தெரியவிட்டாலும்,  இறைவனிடம் சென்றுவிட்டது என்பர் அம் மதத்தினர்.


இந்து மதத்தில் நம் ஆன்மா முன்னும் இருந்தது. பின் இந்த உடலை எடுத்தோம். இதைப் பிறவி என்றும்  சென்மம்  (ஜென்மா)   என்று,ம் கூறுவர்.  இந்த உடலை விட்டுச் சென்றுவிட்டபின்னும் இருப்போம்.  ஆன்மா என்றும் இருப்பது.  கடவுளும் என்றும் இருப்பவர்.    இதில் கடவுளுக்கும் ஆன்மாவுக்கும் உள்ளதோர் ஒற்றுமை.தெளிவுபடுகிறது .


கடவுள் என்பவர் பெரிய ஆத்மா.  நாமோ சிறிய துண்டு ஆதாமாக்கள். எப்படித்  துண்டுகள் ஆனோம்?  அதை வேறொரு சமயத்தில் சொல்வோம்


We shall also look at the Christian concept of purgatory  later. 

சிவஞான போதத்திலிருந்து...(பாடல் 2)

இப்போது சிவஞான போதத்திலிருந்து ஒரு பாடலைக் கண்டு
இன்புறுவோம்,

இது அந்நூலின் இரண்டாவது பாடல்.

அவையே தானேயாய் இரு முதலின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.   (2)

அவை என்றது:  உலகில் உள்ளவற்றின் தொகுதியை.
தானேயாய் :  (அவை அனைத்தும்) தானேயாக  
நீக்கம் இன்றி:  வேறுபடாதவாறு.
நிற்கும் :  நிலவும், இயங்கும் என்பது.

போக்கு என்றார் இறப்பினை,
வரவு:  பிறப்பு.

இரு முதலாவது நன்மை தீமை அல்லது நல்வினை தீவினை.
இருமுதலின் ‍-  நல்வினை தீவினை ஆகிய காரணங்களால்.

ஆணையின் : என்பது இறைவனின் ஆற்றலினால் என்றற்கு 

. தானவ னாகிய தற்பரந் 2தாங்கினோன்
ஆனவை மாற்றிப் பரமத் தடைந்திடும்
ஏனை யுயிர்வினைக் கெய்து மிடஞ்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே..    2134   

என்பது  திருமந்திரம்.

அவையே  தானேயாய்  என்ற போதப் பாடலினோடு ஒப்பிடுக.   2தற்பரம்   என்பது  தானே பரமென்று  உணர்தல்.   தன்  + பரம் = தற்பரம்.    பர + அம்  =  பரம்.  எங்கும்  பரந்து  நிற்கும் இறை .

பிறந்த குழந்தையைப் புதுவரவு என்றும் கூறுவதுண்டு.  புதல்வர் என்பது இக்கருத்தில் அமைக்கப்பட்ட சொல் ஆகும்.  புது + அல் + வு + அர்   =  புதல்வர் .  இங்கு  அல்.  வு. அர்  மூன்று விகுதிகள் புகுத்தப் பட்டுள்ளன  இந்தப் பாடலில் வரவு  என்பது புதுவரவு  போன்ற கருத்தமைப்பே  ஆகும், பேச்சிலும் போய்விட்டார் என்பது இறப்பு  குறிக்கும்,    தொடர்ந்து நடைபெறுவதால் போக்கு வரவு என்றார்.

இவ்வுலகின் அனைத்தும் இறையாகிய அவனே ஆகி  நீக்கம் அற நின்று   தன்  ஆற்றலினால் இருவினைகளின் பயனாய்ப்  பிறப்பினையும் இறப்பினையும் நிகழ்த்துகின்றான் என்றபடி.  ஆணை என்பது ஆற்றல் .
நீக்கமற  நிறைந்திருக்கும்  பரிபூரணானந்தம்  என்று இறைவனைப் போற்றினார்  தாயுமானவரும் 

அன்றே  :    இது அசைச்சொல்.  ( இடம் நிரப்பிப்  பாடலை  நிறைவு செய்துவைக்கும் சொல். )   அல்லவோ   அல்லோ என்பனபோல்.   கேட்போனின் இசைவை  வெளிக்கொணரப் பயன்படுத்தப்படும்  சொல் எனினும்  அது,  

இது  தொடர்[பான கருத்துகள் சில  அடுத்த இடுகையில்  காண்போம்,

ஆன்மா  அல்லது ஆத்மா பற்றிப் பேசுவோம்   .

வியாழன், 10 டிசம்பர், 2015

பிரபஞ்சம் அஞ்சுகம் அஞ்சாலி

உலகம் என்பதைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உள்ளன.   ஆனால் பிரபஞ்சம்  அல்லது ப்ரபஞ்சம்  என்ற பதத்தையும் பயன்படுத்தி வருகிறோம்.

இந்தச் சொல் எப்படி அமைந்தது என்பதைக் காண்போம்.

நிலம், தீ, நீர், வளி விசும்பு என்ற ஐந்து பூதங்கள் . பூதங்கள்  என்றால் இறைவன் புதிதாகப் படை த்தவை.  புதிதாக என்றால் தொடக்கமாகப் படைத்தவை.  புது + அம்  = பூதம்.  இன்னொரு வழியில் சொல்லவேண்டுமானால் முன் இல்லாதிருந்த நிலையில் புதிதாகத் தோன்றியவை.

இந்தப்  புதியனவாய்த் தோன்றிய  ஐந்தும் கலந்த அமைப்பே உலகம்.
தொல்காப்பியர் சொன்னபடி :

"நிலம்தீ  நீர்வளி விசும்போ டைந்தும் 

கலந்த மயக்கம் உலகம் ஆதலின். "

ஆகவே உலகம் பிறக்க ,  முதற் பிறந்த ஐந்துமே உலகம்.


ஐந்து என்பது அஞ்சு என்று திரியும். பேச்சிலும் அஞ்சு என்பதே வழங்கும்.  

எடுத்துக்காட்டு:

" அமைச்சு  அரசேய்ப்ப  அஞ்சவத் தைத்தே " (   சிவ . போ , 4  )

அஞ்சுகம்:   அஞ்சு ​+  உகம் ,

உகம் <=  உக + அம்  ,   உக என்பதில் ஈற்றகரம்  கெட்டுப்  புணர்ந்தது.  ஐந்தை உகந்தது என்று பொருள்.(   ஒரு கிளி, ஒரு மெல்லாடை   )

அஞ்சாலிகள் añcālikaḷ  வரவை ஐந்தால் வகுப்போர். அஞ்சு +  ஆல் + இ.n. < அஞ்சாலி. Cultivators, so called because they are entitled to only one-fifths of the produce of their cultivation, the remainder being paid to the king; நிலவருவாயில் ஐந்தி லொருபங்கை மட்டும் வைத்துக்கொண்டு நான்கு பங்கை அரசனுக்குக் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்படும் குடிகள். (R.)    (பேரகராதி )  

இனி,   பிரபஞ்சத்துக்கு வருவோம்.

பிறப்பு + அஞ்சு + அம்  =  பிறப்பஞ்சம்  >  பிரபஞ்சம் >  ப்ரபஞ்சம் .

முதலில் ஒரு "ப் "  நீக்குக.

அப்போது பிறபஞ்சம்  வரும்.

தமிழில் உள்ள இந்த "ற -வுக்குப் பதில் "ர "-வைப்  போடுக .

இதில் ஒரு பெரிய மாற்றம் இல்லை.  பிரபஞ்சம் ஆகும்.

அப்புறம் ப்ரபஞ்சம்  என்று அழகாக வரும்.

இனிப் பிரிக்கும்போது  ப்ர  +  பஞ்ச  என்று  மாற்றிப் பிரிக்க.

சொல் அமைந்த விதத்தையே  மறைத்துவிடலாம்.

அதுதான்  திறமை.


 Note:Hackers have changed the spelling  of   certain words in this post   and rendered it   unintelligible. in certain respects.  We have restored it   We shall review it after an interval. 



இது 26.12.2017ல்   மறுபார்வை   செய்யப்பட்டது.      ஆனால் எதையும்  மாற்றவில்லை.    மீண்டும்  பார்க்கப்படும்.

செவ்வாய், 8 டிசம்பர், 2015

வாய்தா

வாய்தா என்ற சொல் உருது மொழியிலும்    வழங்குகிறது.   தமிழ்  நாட்டிலும்  சிற்றூர்களில் வழங்குகிறது.  நிலம் வைத்திருப்போர் கட்டவேண்டிய வரியை இது குறிக்கின்றது.

வருவாயின் அல்லது நிலத்தின் வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட தொகையை  இறுத்தலே வாய்தா ,   இது மிகவும்  அழகாக அமைந்த ஒரு சொல்.  நாட்டு வழக்காகிய இச்சொல்லை  அமைத்து  அசத்தியவர் யார் என்பது தெரியவில்லை,  உருதுமொழிச் சொல் என்று தமிழாசிரியர் கருதினர்.

இந்தச் சொல்லைப் பற்றித்   தமிழ் வாத்தியார்கள்  சிந்திக்கத் தொடங்கியது முஸ்லீம்  அரசர் காலத்தில்.  ஆகவே   அவர்கள் உருது என்றனர்.  அதற்குமுன் சங்க காலத்தில் பேச்சு வழக்கில் அது இருந்ததா என்பதை  அறிய வழி ஒன்றுமில்லை.  சங்கப் புலவர்களின் சொற்றொகுதியில்  இலக்கியங்கள் வாயிலாக கண்டுகொள்ளப்படாத சொல்லைப்   பேச்சில் வழங்கியதா என்று கண்டுபிடிக்க வழி இல்லை.  தமிழாகவும்  இருக்கலாம்.  அல்லாமலும் இருக்கலாம்.

உருது மொழி பிற்காலத்தது.  தெக்காணி  மொழியில் இருந்து உருவாகியது
என்பர்.  இப்படிச் சொன்னால்  மேன்மைக் குறைவாகப் படுவதால்  இதைச் சிலர்  மறுப்பர்.  தென் + கணம்  >  தெற்கணம்  >  தெக்கணம் >  Deccan >  DeccANi >  தெக்காணி  > தக்காணி.   எனவே  தென் கணத்தே தோன்றி வளர்த்ததே உருது,  இதைப் பேசியவர்கள் முஸ்லீம்கள்.   அரபி எழுத்துக்களை பயன்படுத்தி எழுதினர்.  அரபியில் குர் ஆன்  வாசிக்க அறிந்தோருக்கு இந்த நிலை மிகவும் வசதி,

வருவாயிலிருந்து தரப்படும் தொகையை  வருவாய் + தா      என  அமைத்து    அதைச்  சுருக்கி   (வரு என்பதைக்   குறைத்து )  வாய் + தா  =  வாய்தா என்றனர்.
கணக்கு எழுதும்போது   வருவாயில் தந்தது  என்று  முழுவதையும் எழுதி நேரத்தை  ஒழித்துக்கொள்ளாமல்  வாய்*தா  என்று எழுதிக்கொண்டு  மிச்ச நேரத்தில் சுக்கு நீர் அருந்தி மகிழலாம்.  இலக்கணம் விளக்கெண்ணெய் எல்லாம் புலவன்  பேசிக்கொண்டிருப்பான்.     என்ன என்ன விளைந்தது என்று எழுதவேண்டுமானால்  து பரு ;  க பரு  என்று எழுதினால் போதாதா?     துப் பரு =  துவரம்பருப்பு ;  கப்பரு =   கடலைப் பருப்பு. என்று  புதுமை  செய்துகொள்ளும் திறனுடையார்  வணிகர்.

உபரு :     உளுத்தம்பருப்பு. என்றும்  எழுதலாம்.   தாள்  மிச்சம்.

வாய்தா   என்ற சொல் போல் அமைந்தது தான் che'Gu  என்ற மலாய்ச் சொல்லும்,    Incik  Guru   ( Mr  Teacher)     என்பதே  அங்ஙனம் அமைந்தது,   இதில்   பாதி.  அதில் பாதி.   இதைப் பற்றி  முன் எழுதியுள்ளோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/10/etc.html

You will find more examples of similar word formation at the above post,



திங்கள், 7 டிசம்பர், 2015

சென்னை வாசிகள் இயல்பு நிலைக்குத் திரும்பி......

சென்னை வாசிகள்,
மிகுந்த  நெஞ்சுரம் கொண்ட மக்கள்.
ஊரையே உருட்டிப்  புரட்டிப் போட்ட வெள்ளத்தில்
உள்ளே வீடுதேடி வந்த பம்புக்குட்டியை
ஈரத்  துணியை முறுக்கிப் பிழிவதுபோல்
சூரத் தனமாய்த் திருகிக் காட்டுகிறார்கள்.

ஒரு சாலை மேம்பாலத்தைத்  தொட்டுச் செல்லும்
பெருவெள்ளமும்  ஏற்படக் கூடுமென்பதை
இப்போதுதான் கண்டிருக்கிறோம்.

உயிரிழப்புகளும்  பொருளழிவுகளும்  நேர்ந்து
பஞ்சு படாத பாடு படுகின்ற மக்களையும் காண
நெஞ்சு சுக்கு நூறாகிவிடும்
உணவுப் பொருளும் உதவிப் பொருளும் கொண்டுவந்தோரை
உதைத்தனர்  சிலர்;   அது
பதைத்து  நிற்கும் மக்களை
மறைத்து முன் நிற்கும்  காட்சி !
இதைத் தானா நாகரிகம் என்பது?

விரைவில் இயல்பு நிலைக்குத்   திரும்பி
துன்பம் களையப்பட்டு
அன்பு நிலையமாய்ச்
சென்னை செழிக்க
இன்னருள் இறைவன் தருக .


.


வியாழன், 3 டிசம்பர், 2015

சாமர்த்தியம்

இப்போது சாமர்த்தியம் என்ற சொல்லைக் கவனிப்போம்.

இதனை சா+ மரு(வு) +  து + இயம் என்று பிரிக்கவேண்டும்.

ஒரு மனிதன் சாவை மருவி நிற்கும் சூழ்நிலையிலும் எதிர் நீச்சல் போட்டு, அந் நிலையினின்று
வெற்றிகரமாக விடுபட்டு, இயல்பு நிலைக்குத் திரும்புவதே சாமர்த்தியம் எனப்படும்.

சொல் இக் கருத்தில் புனையப்பட்டபின்,  ஏனைத்  திறன் வேண்டும் சூழ்நிலைகளையும் குறிக்க வழங்கப்பட்டுப்,
பொருள் விரிவடைந்தது.

இப்போது சொல்லமைப்பை  மீண்டும் கவனிப்போம்.

சா + மரு + து+  இயம்.

சா + மருத்து + இயம்.

சா + மர்த்தியம்

சாமர்த்தியம்.

இயம் என்பது ஈண்டு விகுதியாய்ப் பயன்படுகிறது.  எனினும் இவ்விகுதி  இயங்கு என்பதன் அடிச்சொல்லும் ஆகும்.   சாவு மருவு நிலையிலும் இயங்கி வெல்லுதல் என்று  இயம் என்பதற்கும்  பொருள் விளங்கும்படியாக  அமைந்துள்ளது  அறிந்து மகிழற்பாலதாம். பின் நாளில்  இயம் என்பது வெறும் விகுதியாகவும்  சொல்லமைக்கப் பயன்படுவது காணலாம்.

து என்பது பலசொற்களில் இடை நின்று சொல்லமையும்.  எ-டு:  பரு (த்தல்) +  (அ)து +   அம்  =  பருவதம்.  பரிதாகிய மலை,  1

சொல் அமைந்த விதமே இங்கு விளக்கப் பட்டது.   அமைந்த சொல் எம்மொழிக்குரிய து என்பதை  இவ்விடுகை தொடவில்லை.  இச்சொல் தமிழிலும் வழங்குவது.

இதனை  வேறு வழியிலும் விளக்கலாம்,    ஆங்கு புகாது விடுப்போம், 2


-----------------------------------------------------------------------------------------------

Notes:

1.   அது , இது  என்பன  "து "  வெனக்    குறைந்தியலும் . மலாய்  மொழியிலும் இங்ஙனம்   தலைக்குறையும்.  cf.   itu  >  tu.   e.g.  Sakitnya tu  disini.  (Cita Citata ). இது  (Tamil) =   itu  (Malay)  >  tu.   In English :   it is  >  'tis  (in poetry).   இது  (Tamil)  compares with  it (English).  There is no doubt Tamil இது  is original.

2.  சம(ம்) +  ஆர்த்து  +  இயம்  = சா மர்த்தியம் ;   ஆர்த்தல்  (வினைச்சொல் ).. 
also  சம + அறுத்து +  இயம் .   அறுத்தல் (வினைச்சொல் ). In each case 'sama'  would be shown to have become elongated as  'saama'.  On the other hand,    ஆர்த்து    shortened to  அர்த்து.   &  அறுத்து   transformed  to  அர்த்து. respectively  in such proposals.

புதன், 2 டிசம்பர், 2015

A problem that kicks the leadership

Sadly, governance in Tamil Nadu is nil. The water this year was not abnormal or an aberration. It is Chennai's residents who suffer at the end of the day," he said. Tamil Nadu may have received `940 crore from the Centre for flood relief measures. How this as well as other sources of funds are put to use will determine the fate of the bustling cosmopolitan city. 

Read more at:
http://economictimes.indiatimes.com/articleshow/49963247.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

http://economictimes.indiatimes.com/articleshow/49963247.cms?


நகர்த்தூய்மை புரத்தலிலே நாட்டமிலை புறத்தகற்றா
நகர்க்குப்பை அடைப்பதனால் நடுக்குறுத்தும் படுவெள்ளம்
தகர்த்தேரி புடைத்துவரும் தண்ணீரும் இடைக்கலந்து
தாளமிட வைக்கிறதே தலைவர்தலை  உதைக்கிறதே

ஃபித்னா: இஸ்லாமிய (அரபுச்) சொல்லின் பொருள்.

சோதனைக் கெதிராகக் கிளர்ந்து போராடுதலும் வெற்றி கொள்ள முயலுதலும் ஆகிய செயல்முயற்சிகளைக் குறிப்பதாகக் கூறுகின்றனர். ஒருவனை சோதனைக்கு உட்படுத்துதலையும் இது குறிக்கும் என்பர்.

பண்டை அரபியில் இதன் பொருளுக்கும்  தற்கால அரபியில் இதற்குள்ள பொருளுக்கும் வேறுபாடுகள் உண்டு என்று சொல்லப்படுகிறது. பொதுச்  சொன்னூற்  ( general lexical )  பொருளையும் தனியே கருதுதல் வேண்டுமென்பர்.

இது 34 முறை ஃபித்னா என்றே முழுச்சொல்லாக திருக்குர் ஆனில் பயன்பாடு கண்டுள்ளது. 26 முறை பல்வேறு தொடர்புடைய வினைச்சொல் வடிவங்களில் அந்நூலில் வந்துள்ளது என்பர் குர் ஆனில் புலமை பெற்றோர்.


Temptation, trial; sedition, civil strife,  of    a ‘trial’ (or ‘temptation’)  ,  in the sense of    ‘testing’ someone. என்றெல்லாம் ஆங்கில எழுத்தாளர்கள் பொருள் கொண்டுள்ளனர்.

நிலையான அரசாட்சியில் அமர்ந்துள்ளோனை எதிர்த்து நிற்றலையும் இது உள்ளடக்குமாம். ஆனால் கிளர்ச்சிக்கான காரணங்கள் அல்லது அடிப்படைகளை இது குறியாதென்பர்.

"Fitnah is also commonly used in the accusatory meaning of the word, esp directed at people who seek to create schisms or exacerbate schisms within the Muslim community as a whole."

என்றும் அறிந்தோர் கூறுவர்.

வரலாற்றில்  நெடுநாட் பயன்கண்டுள்ளதும் பலவேறு பொருட்சாயல்களையுடையதுமான ஒரு சொல்லை மொழிபெயர்த்துத் தமிழில் தருதல் அத்துணை எளிதென்று கூறிவிட இயலாது.  

செவ்வாய், 1 டிசம்பர், 2015

The Chennai floods

இருப்பதற்கோ இடமில்லை வீட்டுக்குள்ளே
இடுப்பளவு தண்ணீரில் படுப்பதெங்கே
உடுப்பதற்கும் உடையில்லை உணவுமில்லை
குடிப்பதற்குக் கிடைப்பதெலாம் வெள்ள நீரே
வெடிப்புகளும்  வீழ்குழியும்  வீதியெங்கும்
வேலையில்லை கூலியில்லை வேகுமுள்ளம்
நடிப்பினொடு நலம்கேட்பர் போலும்  காணோம்
நாளைக்கும் மழையென்றால் நசிப்பர் அந்தோ

திங்கள், 30 நவம்பர், 2015

வலியோன் என்ற சொல்

இச்சொல்  பல் வேறு வகைகளில் முடிவதை இப்போது கண்டுகொள்வோம்.

வல்+ இ+  ஒன்  =  வலியோன்

 இதிலிருக்கும்  லகர ஒற்று  (ல்)  இரட்டித்தும்  வரும்.

வல்  +  ல் + இ + ஒன்   =  வல்லியோன் .

இடையில் இகரம் தோன்றாமல்  வருதலும்  அமையும்,

வல் + ல் +  ஓன் =  வல்லோன்.

மேற்சொன்னபடி  லகர ஒற்றுப் பெறாமலும் வரும்:

வலோன் :     (  மதிவலோன்,  கலைவலோன் )/

வலவர் .  வலார்  என வரும் பிற  பின்னொரு நாள் காண்போம்.

இப்போது  வல்லியோன் என்பது வந்த ஓர்  எடுத்துக்காட்டு:

"இமைப்புவரை அமையா  நம்வயின் 
மறந்து  ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே ."

குறுந்  248.

  

வியாழன், 26 நவம்பர், 2015

"பண்டைப் புலவோர்" ஒரு கண்ணோட்டம்

புலவர் என்ற சொல் புலம் + அர்  என்றமைந்த சொல்லாகும் .

புலம் என்பது காட்சி என்றும் பொருள்படும். கட்புலம்  அதாவது  கண்ணின்  காட்சி  அல்லது காட்சித்திறன்,  அதுபோல்  செவிப்புலம்   என்றும்  அமையும் ,

புலம் என்பது  புலன் என்றும் வரும்.  இது போல வருதலின்  போலி எனப்படும்,
அதாவது புலம் என்ற சொல்லில் மகர ஒற்று வந்ததுபோல்  னகர  ஒற்று வந்து அதே சொல்லாய்ப்  பொருளோடு அமையும்.  புலன்  எ-டு :  ஐம்புலன்,   மெய்ப்புலன் .

புலம் என்ற சொல் புல் என்ற சொல்லிற் பிறந்தது.  புல்லுதல் என்றால் பொருந்துதல்.  காணும் திறன் உள்ள கண்ணோடு  காணப்படும் பொருள் சென்று ஒளியால் பொருந்துகிறது.  ஆகவே புல் > புலம்  ஆயிற்று .

புலம் + அர்  என்பதில்  மகர ஒற்று  மறைந்து   புல+ அர்  என்றாகி  வகர உடம்படு மெய்  தோன்றிப்  புலவர் என்று சொல் அமைந்தது.  அர்  விகுதி சேர்க்காமல்  ஓர் என்பதைப்  போட்டால்  புலவோர் என்று வரும்.  இரண்டும்  ஒன்றுதான் .
புலவர் என்பது  இப்போது பணிவுப் பன்மையில்  (மரியாதை ​​) வருவதால்
இக்காலத்தில் கள் விகுதி சேர்த்துப்   புலவர்கள் என்றாலே  பன்மையாகிறது,
ஆனால்  ஓர் விகுதி "கள்"  இல்லாமல் பன்மை காட்ட வல்லது.  ஆகையால்  மறைமலையடிகள் "  முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் "  என்று தம் நூலொன்றுக்குப் பெயரிட்டார்.

புலவர்  என்பது  புலவு + அர்  என்றும் பிரியும்  ;  அப்போது புலால் உண்பவர்கள்
என்றும்  பொருள் தரும்,   புலவு = புலால் , இறைச்சி .

வடபுலவர்  என்று வரும் கூட்டுச் சொல்லில்  வடதிசையில் உள்ள மக்கள்;
வட திசையில் உள்ள புலவர்கள் ;  வடக்கே புலால் உண்போர்  என்று மூன்று விதமாகப் பொருள் கொள்ளலாம்;  காரணம் புலம் என்பது இடம் என்றும் பொருள் ஏற்கும் சொல்.இடம் நோக்கிப் பொருள் கொள்க.  மயக்கம் இன்றிப் பொருள் வரவேண்டுமானால் வடபுலத்தார்  தென்புலத்தார்  என்று இடம் சுட்டுவது நன்று     புலம் பெயர்ந்த மக்கள் என்ற தொடரையும் நோக்கவும் ,  புலவு என்பது இறைச்சி  அல்லது புலால் என்றும் பொருள் கூட்டுவது


ஔவைப்பாட்டி
"புலவு    நாறும்   என்  தலை தைவரு மன்னே"  என்று புற நானூற்றில் கையறு  நிலையில் ாடுதல் காண்க.

browser collapsed  will edit later




ஒரு புதிய கூட்டுச்சொல்

சக்கிலியன்  என்ற தொடரில்  கடைசி  இடுகையை எழுதிக்கொண்டிருந்த  போது,   இறைச்சி முதலியன  உண்ணுதல்  அல்லது  பேச்சு வழக்கில் :"கவிச்சி உணவு"  என்று சொல்லப்படுவதற்கு ஒரு புதிய சொல் தென்பட்டது,

மாமிசம் என்னும் சொல் தமிழன்று  எனப்பட்டாலும்  அதற்கு   மா மிசைதல் என்ற தனித்தமிழ்ச் சொற்றொடரே மூலம்   எனற்பாலது  யாம் காட்டினோம்.

ஆகவே  கவிச்சி உணவுக்கு "மாமிசைவம்"   என்று  ஒரு புதிய கூட்டுச்சொல்லை  நாம் படைத்துப் பயன்படுத்தலாம்,

ஆனால் இதில் ஒரு இரட்டுறல் உள்ளது,

எப்படி:

பிரித்தால்  மாமி + சைவம் என்று வரவில்லையா?


புதன், 25 நவம்பர், 2015

சக்கிலியன் iv

தமிழ் நாட்டுச் சாதிகளில் பலர் விலங்குணவு உண்பவர்கள்.  விலங்குணவு என்றால் பிண்ணாக்கு முதலிய விலங்குகள் உண்ணும் தீனியைச் சொல்லவில்லை .விலங்கையே கொன்று அதன் ஊன்  தின்போர்.  மா மிசையும்  தரத்தினர் . மா-  எனின்  விலங்கு .  மிசை -  உண்ணுதல்,
மா+ மிசை +  அம்  =  மாமிசம்.   மிசை என்பதில் உள்ள ஐ  கெட்டது  -  dropped,


ஒவ்வொரு சாதிக்கும் அறுக்கப் பட்ட விலங்கின்  பங்கு  போடப்பட்டு  ஒரு  பகுதி  தரப்படுமாம்,  இவர்களில் சலவைத்தொழிலாளிக்குத்   தலை ஒதுக்கப்படும்.   ஆகவே  வxxனுக்குத்   தலை கொடுப்பார்களாம் . அவன்  "ஆட்டுத்தலைக்குப்  பறந்தது போல" என்ற பழமொழி இதனைச்   சுட்டும் ,(உவமைத் தொடர் )

இது பழங்காலத்தில்  என்பர்.

சக்கிலியனுக்கு  இறைச்சியே தரப்பட்டது  என்பர்   .

சக்கிலி என்றால்  flesh eater என்று பொருள்படும்     சட் குலி  என்ற பெயரின்  திரிபு இது  என்கிறார்  அறிஞர்  வின்ஸ்லோ.  இது பிராகிருதம்  என்று சிலர்  நினைக்கின்றனர்  1

இச்சொல்லின்  மூலம் ஆராய்வதற்குரியதாய் உள்ளது   2


----------------------------------------------------------------------------------------------------------------------,

Notes:

1

from  Malayalam dictionary  also: as follows:-

. ചക്കു (page 340)
ചക്കിലിയന്‍ T. M. (f.— ലിച്ചി) A Tamil shoemaker. (T. fr. S. ശാഷ്കുലി "flesh-eater," Winsl.) Tj


2

The chakalas caste  also a low caste  is said to have derived their caste name from a telegu word   chaku which means to wash.  They worked as washermen in the villages,  The relationship of this word to  chakkili needs to be looked into.  In chakkusnana washing is also mentioned but of the deity's eyes,    ref:  Case and Tribes of South India.  In preparing leather for shoe -making, washing and other procedures are involved.

The chakkilian performed  duties as executioner  in respect of  caste  adultery offences  committed by
certain persons esp women.of certain castes,   (  Turnbull  )  
  They also functioned as guards over thottian girls attaining puberty  (as per  Madras Gazettier)

RSS

மாட்டைக் காக்கப் போனதனால் 
கோட்டை பறிபோய் விட்டாலோ 
நாட்டை நடத்தத் தகுதிதரும்
சீட்டைப்  பெறல்பின் எளிதாமோ?    

செவ்வாய், 24 நவம்பர், 2015

போட்ட குப்பையிலே.....

நீங்கள் போட்ட குப்பையிலே
நெளிகிற பூச்சி  புழுக்களையே
நீங்கள் வெறுத்த போதிலுமே
உங்களை வந்தே சேர்ந்திடுமே.

மழையின்  நீரும் ஓடாமல்
வெள்ளப் பெருக்கால் கேடாமே!
உளையும் சகதியும் மிதமிஞ்சி
ஊர்க்குள் உயிர்கள் வதமாமே

ஏரியுள் கழிவுகள்  சேராவேல்
என்றும்,குடிக்க  நீராமே
மாரியும் உம்மைக் காப்பாளே
மாய்க்கும் நோய்களைத் தீர்ப்பாளே!

ஏரியுள் கூளம் எறிந்தாலோ
எடுத்திடச் செலவு  தெரிந்தாலோ.
காரியம் நல்லது கைக்கொள்வீர்
கடமை இதுவென மெய்சொல்வீர்.:

சிவனும் சிவப்பாலமும்

இந்த சிவப்பாலம் என்பது  சிங்கப்பூரில் கம்போங் ஜாவா சாலையில்  (road)  இருந்த ஒரு பாலம்.   சிவ எனும்  அடைமொழி பெற்றிருந்ததால் அங்கு சிவன் இருப்பார் என்றோ சிவன் கோயில் இருக்குமென்றோ  நினைக்காதீர் .  அது ஒரு சிவப்புச்  பூசிய பாலமாக இருந்ததுதான் காரணம்.  மலாய் மக்கள் அதை  Jambatan Merah என்று  கூறினதால், அதை மொழி பெயர்த்து  சிவப்புப் பாலம் என்றனர் தமிழர் .   அப்புறம்  அது  சிவப்பாலம்  என்று  குறுகி  அமைந்தது.  (மரூஉ )  jambatan  பாலம்    merah  சிவப்பு.

மலாய்க் கம்பங்கள்  அல்லது சிற்றூர்கள்  அருகிலிருந்தன.  இப்போது  இவைகள் அங்கில்லை.   பாலத்துக்கு வேறு  சாயம்  பூசியவுடன்  அங்கிருந்த merah puteh gang ( a secret society)  செங்கருமைக்  குண்டர்  கோட்டியினர்  எங்கு போயினர்  என்பதை யாரும் அறிந்திலர்.  குண்டர்கள்  தங்கள்  மண்டர் தகுதியை இழந்தனர் போலும். ( மண்டர்  {தமிழ் }-  champions.     திவாகர நிகண்டு காண்க.)

ஏன் வேறு சாயம் பூசினார்கள்?   ஒன்றுமில்லை;    இருந்த சாயங்களைப் பூசி
இனிமை  காண்பதற்கே.  கட்டுக் கிடையாய்க் கிடக்கும் சாயங்கள் கெட்டுப் போகும். பூசி மகிழ்க .

பாலம்  இருக்கிறது;  (மேம்படுத்தப் பட்டு).
பாடை  மறைகிறது.  பார்வை  மாறுகிறது.

இலுப்பை மற்றும் இனிமை


==========================

இலுப்பைக்கும் இனிமைக்கும் உள்ள தொடர்பினை அறிந்துகொள்வோம்.

இலுப்பைக் காய் பழுத்தவுடன் சர்க்கரை போலும் ஓர் இனிமை இதில் உள்ளது. யாம் சுவைத்துப் பார்த்தவை வியட்நாம், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாட்டில் விளைந்தவை. இதை மலாய் மொழியில் "சிக்கு"   chiku என்பார்கள்.  chiku  not siku. Do not mispronounce.  Now written as ciku. 

இலுப்பை என்ற சொல்லின் அடி, இல் என்பது. அது சிதைவு அடையாமல் சொல்லில் இன்னும் வாழ்கின்றது.

இனிமை என்ற சொல்லின் அடி இன் என்பது. இது, இன்> இனி> இனிமை என்று அமைந்தது. இன்மை (இல்லாமை) என்பதில் வரும் இன் - சந்தியில் தோன்றியதாகையால் அது வேறு என்க.


இல் என்பது இன் என்று மாறும். இவ்விரண்டில் இல் என்பதே மூலம். இல் என்பது பல்பொருள் கொண்ட ஓர் மூலச்சொல். இதன் எல்லாப் பரிமாணங்களின் உள்ளும் இங்கு யாம் புக முற்படவில்லை, பரிமாணம் ஆவது பரிந்து சிறப்பது. அதாவது தோன்றிப் போல இருப்பவற்றினின்று அழகுற்று வேறுபடுவது,, தோன்றிப் போன்மையின் வேறுபடல். மாணுதல் = சிறத்தல். மாண்> மாணு > மாணம். எனவே பரிமாணம். பரிதல் - வெளிப்படுதல். பரி > பரிதி. முன் வெளிப்பட்டதாகிய சூரியன். அதிலிருந்து வெளிப்பட்டன ஏனைக் கோள்கள். காற்றுப் பரிதல் ( வெளிப்படல்) என்னும் பேச்சு வழக்கை நோக்குக.. இத் தடப் பெயர்வு நிற்க



இல் = இன். l and n interchangeable  and not language-specific,
இல் >இலுப்பை
இன் > இனிப்பு.

இல்> இலுப்பு> இலுப்பை.
இன் > இனுப்பு > இனிப்பு.
இலுப்பு> இனுப்பு > இனிப்பு.

இனிப்பு என்பதைப் பேச்சில் இனுப்பு என்று பலுக்குவோர் பலர் உளர். அது இனிப்புக்கு முந்திய வடிவம்.

தமிழில் இனுப்பு என்பதை இனுப்பு என்றே பேசினோரும் அதை இனிப்பு என்று பேசினோரும் என இருசாரார் இருக்க, இனிப்பு என்பதே எழுத்தில் முதலில் வந்து நிலைத்துவிட்டது;

மொழி ஆய்வு வேறு. மொழியை தற்கால நிலைப்படி மரபு காத்தல் என்பது வேறு. பேச்சுக்குப் பிந்தியது எழுத்து. விரி வரிக்க - விவரிக்கத் தேவை இல்லை.


Shall meet and greet again.  Pl stay tuned.

Learn more:   பின் து  > பிந்து   முன் து >  முந்து;  மன் + திறம்  மந்திரம்   திறம் >  திரம் Said long ago a few times ........Enjoy.

திங்கள், 23 நவம்பர், 2015

Ancient Tamils:ஆசீவக மதம்

:திரு காந்தி வாண்டையார்   ஆசீவகம்  என்ற சமயம்  பற்றி  எழுதிய சில வரிகள்  இங்கு மீள்பதிவு  செய்யப்பட்டுள்ளன .   நமது  இவ்விடுகைக்கு  இது போதுமானது.  தமிழகத்தில் தோன்றி வளர்ந்த  இந்த  ஆசீவக  மதம்  தன்  சிறப்பியல்புகளில்  சிலவற்றைச்   சமண  (ஜயன )  மதத்திற்கு  வழங்கியுள்ளது.  இதன் கொள்கை ஒற்றுமையின் காரணமாக ஆசீவகத்தைச்  சமணம் என்று  மயங்குவர்  சிலர் .    வெளி  மாநிலம்  ஒன்றில்  முழுவளர்ச்சி  அடைந்த நிலையில்  சமணம் பின் தமிழகத்திற் புகுந்தது. (ACE_or After the Christian Era.) 

#370

F.S.Gandhi vandayar  F.S.G   

Tolkappiam & Thirukkural explicit the   ":Asivagam" 
and this religion was created by tamil 'Aasiriyans'. 

This religion was the base for all traditions in India. Even Buddha learnt Asivakam and included 

some of the concpets into his fold. Jainism never came into being in tamil land before common era. 

Jains also sweeped some of the concepts of Asivakam. All the Stone layouts in tamil land was 

belonging to Asivakam and not jainism. 

The athinathar Jains temples were created during 400 ACE and all of them were turned into siva 

temples now. 

The theory of Jainism in tamil land has been wrongly concluded so far. This has been re-

researched and latest conclusions have been made by scholars. Tamil Iyyanar tradition is the first 

form of Asivakam. 

A detailed topic shall be written by me after some time.

f.s.gandhi  3rd November 2006, 11:37 PM

ஆசீவகம்  பற்றி  மணிமேகலைக்  காப்பியத்திற்   குறிப்பிடப் படுகிறது 


ஆசீவகம்  என்ற சொல்லைப் பார்ப்போம் .


ஆசு  +  ஈவு  +  அகம்,

ஆசு  =  பற்றுக்கோடு;   ஆதரவு,  பற்றி  நிற்பது.

ஈவு  =   தருவது;   இது  ஈதல்  என்ற சொல்லிலிருந்து  அமைந்தது. 

அகம்  -   வீடு;  இங்கு  அமைப்பைக் குறிக்கிறது.

பற்றிக்கொள்ள  ஒன்றும்  கிடைக்காத  மனிதன்  பற்றி  நிற்க இடம்தரும்  கொள்கையமைப்பு.
ஆசிரியன்  என்ற சொல்லும்   ஆசு என்பதினின்றே  தோன்றியுள்ளது. 

இனி  முதற் பதமான  ஆசு என்பதைப்  பார்ப்போம்.

ஆதல் :   தொடங்குதல்,   உண்டாகுதல்.   அமைதல்.  சரியாகுதல், விளைதல்,  முடிதல்.

ஆ >  ஆசு .  சு என்பது  தொழிற்பெயர் விகுதி. 

மா >  மாசு :   அழுக்கு.    மா  என்பது   கருப்புக்கு  அணிமையானது  என்று பொருள் படும்.

வினை அல்லாத சொல்லிலும்  சு  விகுதி  வந்தது.

மா  > மால்.   கருப்பனான  சாமி,
மா  - மா நிறம்
" கரிய மால்  உந்தியில்  வந்தோன்."     :     ஔவையார் 
.

இவ்வாறு  ஆசீவகம் என்ற சொல்லையும்  சொற்பொருளையும்  அறிந்து மகிழ்வீர் . 

வள்ளுவர் மதத்தைக் கண்டுபிடிக்க......

திருவள்ளுவர்  எந்த மதத்தைச் சார்ந்தவர்  என்பதுபற்றி  சில \ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாதம் நடந்தது.  அதில்  நானும் கலந்துகொண்டு  எழுதினேன்.  அங்கு எழுதியது:  29th August 2006, 10:02 PM

ஆய்வு என்றால் என்ன?

கவிஞர் பாபநாசம் சிவன், திருவள்ளுவரின் வழியைப் பின்பற்றித் தம் பாடல்களின்வாயிலாகப் பல நல்லறங்களைப் போதித்துள்ளார்!!
ஆனால், சிவனின் மதத்தை அவர் பாடல்களின் வழி நாம் நிறுவினால், PhD வாங்குவதுடன், உலகப் புகழும் அடைந்துவிடலாம்.

காந்தியைப் பற்றி எழுதிய சிவன். " அகிம்சைதனிலே புத்தரவர்" என்று ஒரு பாட்டில் எழுதியிருக்கிறார்.

இன்னொரு பாடலில் "புத்தரைப் போற்றுதல் நம் கடனே" என்றும் பாடியுள்ளார்.

ஆகவே, அவர் பௌத்தர் அல்லது, புத்த மதத்தின்பால் மனச்சாய்வு உள்ளவர்.

வள்ளுவர் மதத்தைக் கண்டுபிடிக்கச்  சிலர் கையாண்டுள்ள வழியைப் பின்பற்றி, எல்லாருடைய மதங்களையும் கண்டுபிடித்துவிடலாம்.

இதற்காக ஒரு தனித்திரி தொடங்கினால் பௌத்தர்கள் மகிழ்வார்கள். எப்படி என் கண்டுபிடிப்பு? ஆய்வு என்றால் இதன்றோ ஆய்வு

------------------------------------------------------------------
கீய்வு


அப்படியானால் பாடலை வைத்து, வள்ளுவன் என்ன மதம், இளங்கோ என்ன மதம், பாபநாசம் சிவன் என்ன மதம், கம்பதாசன் என்ன மதம், கண்ணதாசன் என்ன மதம் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியாது என்று நீங்கள் கூறுவதுபோல் தெரிகிறதே?

அப்படியானால், இங்கு நடந்துவரும் ஆய்வு உங்களுக்கு உடன்பாடில்லை என்கிறீர்களோ?

ஒரு பாடலை வைத்து, பாரதிதாசன் என்ன மதம் என்று கண்டுபிடித்துவிட்ட நிலையில், இது ஒரு பின்னடைவுதான்!!

பாருங்கள்:

"பின்னை ஒரு கடவுளைப் பேண நினையார்,
பேரொளியைக் காணுவாரென் றாடு பாம்பே!"

என்று பாரதிதாசன் பாடியுள்ளதால், அவர் பௌத்தர் என்று முடிவு செய்யலாம் என்றலவோ எண்ணிக்கொண்டிருந்தேன்!! பேரொளி என்றால் புத்தர்!! The Light of Asia என்றும் ஆங்கிலத்தில் கூறுவர்!!

கம்பதாசன்  - கண்ணதாசன் கிறிஸ்தவர்கள்!!
காளிதாசன் மட்டும் காளிபக்தர்!

பாரதி மட்டும் எந்த மதத்திலும் இல்லைபோலும். அவர்:

""யாரும் பணிந்திடும் தெயவம் -- பொருள்
யாவினும் நின்றிடும் தெயவம்.
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டா!"

என்று பாடி, எல்லா மதமும் ஒன்றுதான் என்கிறார்.

எப்படி என் ஆய்வு?

name as indicator of religion

என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

என் சொந்தக்காரன் ஒருவன் - பெயர் சுப்ரமணியந்தான். ஒரு மலாய்ப்பெண்ணை மணந்துகொண்டான். இரகசியப் பெயர் ஹாசான் அப்துல்லா!! அலுவலகத்தில், வெளியில் பெயர் சுப்ரமணியன். மலாய்க்காரி (விரிவுரையாளர் ) மனைவி: "abang hasan! abang hasan" என்று கூப்பிடுவாள்.

இன்னும் பல உதாரணங்கள் உள்ளன. இவனை விடக்கூடாது என்று நாங்கள் கோயில் பூசைக்கு வரி கேட்டோம். 61 மலேசிய வெள்ளி கொடுத்தான். கோவிலுக்கு வந்து எங்களைப் பார்த்து "ஹலோ" சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

நாடறியாத, இறுதி நாளில் வெளிப்பட்ட மதமாற்றங்கள் பல உள்ளன.

இந்திய நாடு போற்றிய ஒரு பெருந்தலைவர், திருமணத்தின்போது மதமாறிக்கொண்டார், பின்னர் அது மறைக்கப்பட்டது என்று இணைய தளத் தகவல்களில் முன் வந்தது அறிவேன்.

பெயர் ஓர் அடையாளக் குறியாகலாம். ஆனால், முற்றிலும் நம்பத் தகுந்தது அன்று.

இப்படி எழுதியபின் வாதம் ஓரளவு அடங்கிவிட்டது.
------------------------------------------------------------------------------------------------------------
கம்பதாசன் :   அருள்தாரும் தேவமாதாவே என்ற  புகழ்பெற்ற பாடலை  எழுதியவர்.

கண்ணதாசன் :  ஏசு  காவியம் பாடினார் .


சனி, 21 நவம்பர், 2015

mUshikam மூஞ்சூறு

உறுதல் என்ற சொல் தமிழில் மிகுதல் என்று பொருள்படுதல்.அறிவீர் .

மூஞ்சி  உறு >  மூஞ்சூறு  :  மூஞ்சி நீண்ட சிறு விலங்கு.1

இது கதவாணர்க்கு விளங்கியதோ இல்லையோ,  அவர்கள் அந்த விலங்குக்கு ஒரு சொல்லைப் படைக்க விழைந்து:

மூஞ்சி + இகம்1 ‍ மூஞ்சிகம்  அதாவது மூஞ்சி சற்று விரிந்த  விலங்கு என்ற பொருளில் ஒரு சொல்லைப் படைத்தனர். இச்சொல்லும் அழகுடன் அமைந்திருந்தது.  மூஞ்சிகம் என்பது வெளிப்படையாகத் தமிழாக இருக்கவே, 2

மூஞ்சிகம் >  மூசிகம் ஆனது. நன்றாக இல்லை. இறுதியில் மூஷிகம் ஆயிற்று,

ஒரு புதிய இனிய சொல் கிட்டியது......

குறிப்புகள்:


1. மூஞ்செலி   நச்செலி  என வருவன காண்க .

2. இகுத்தல் -  (பல பொருள் உடையது ).  இதிலொன்று:  விரிதல் (to spread out).  இகுத்தல்  >  இகம்  (இகு + அம் )

3 முன் > மூன் >  மூஞ்சி   தலை நீண்டு விகுதி பெற்ற சொல்.  இப்படித் தலை நீண்ட பலவும்  முன் இடுகைகளில் கண்டு பட்டியலிட்டுக் கொள்க.


மறப்புமங்கை

நினைப்பதை விடுப்பதோ மனமே‍=== நீ
மறப்பதில் ஒப்புயர்வு இலாதவளே!
இணைப்புறக் கருத்துகள் வாராமல் நிற்கையில்
முனைப்புற இழுத்துவா முன்னவற்றை


நினைப்பறைக் கதவுகள் சாத்திவிட்டாய்
மறப்புமங் கையுடன் கூத்தடித்தாய்
உனை ந‌ம்பி செயல்படத் தொடங்கிய எனை வெம்பிக்
கரைந்தழச் செயல்தகுமோ முறையோ


This is not about anything relating to my output for this blog or literary work.
It is about something you may never be able to guess. Just enjoy the riddle.

வெள்ளி, 20 நவம்பர், 2015

சக்கிலியன் III

சக்கிலியன்   என்ற  சொல்லைத் தொடர்ந்து நோக்குவோம்.

சகக்களத்தி என்ற சொல்  சக்களத்தி  என்று மாறியுள்ளதை முன்மாதிரியாகக் கொண்டு இதனை நோக்கினால்  சக்கிலியன் என்பது  சகக்கிலியன் என்று இருந்திருக்கவேண்டும். அப்படியானால்  அதற்குப் பொருள்  அஞ்சி ஒடுங்கின பிறருடன் தாமும் அஞ்ச்சினவர்கள்  என்று பொருள்.

கிலி என்பது  அச்சம். பௌத்தம்  மற்றும் சைவம் ஆகிய சமயங்களின் போட்டியின் போது  சைவத்திற்கு மாற  அல்லது பௌத்தத்தை விட்டு மாற அஞ்சினவர்கள்   என்பதாக பொருள் கொள்ளுதல் பொருத்தமானதாகும்.  இம்மக்களைப் பாதித்த வேறு வரலாற்று  நிகழ்வுகளையும்  ஆய்வது   இன்றியமையாதது.

தொடரும்

முன் இடுகைகளையும் காண்க  

செவ்வாய், 17 நவம்பர், 2015

கற்பழித்தவனை..........

Indonesian newlyweds ate alleged rapist's genitals: police

A police chief (L) speaks to suspected murderers Rudi Efendi (C) and his wife Nuriah, who were arrested over claims they dined on the genitals of the woman's suspected rapist after her husband allegedly murdered him and cut off his private partsView Photo

Couldn't they deal in a civilised manner.............?

Read more at:

https://sg.news.yahoo.com/indonesian-newlyweds-ate-alleged-rapists-genitals-police-073323976.html 

திங்கள், 16 நவம்பர், 2015

Plant bombs NOTIN MY NAME

https://sg.news.yahoo.com/singaporean-muslim-facebook-post-paris-031039821.html

Read the above post  wherein a Singaporean Muslim has  spoken up.

Islam is a religion of peace,  there is no place in it for setting up  bombs,

https://sg.news.yahoo.com/singaporean-muslim-facebook-post-paris-031039821.html

சக்கிலியன் II

http://sivamaalaa.blogspot.sg/2015/11/blog-post_15.html

மேற்கண்ட  (முன்) இடுகையிலிருந்து தொடர்கிறோம். ]

நாளடைவில்  சக்கு என்பது சக்கு  நீராட்டுதலைக் குறித்தது  ஆகுபெயர்.

சக்கிலியர் அரசாண்டதாகவும் கதை இருக்கிறது.  அவர்களில் ஒருவர்  3 மணி நேரமே  கொலு வீற்றிருந்தார் என்றும் பின் பதவி  துறந்தார் என்றும் கூறுவர்.

  இவர்கள் சாக்கிய முனியைப் பின்பற்றினர் என்றும்  ஆகையினால் இப்பெயர் பெற்றனர்  என்றும் கூறுகின்றனர்.
சாக்கியர்  >  சாக்கிலியர் >   சக்கிலியர்  என்று வந்தது  என்பர் போலும்.
இங்ஙனம் முடிவு  செய்வதாயின் சக்கிலி   என்பது முழுச்சொல்லின் திரிபு  என்றும்  இலி  என்பது  பின்னொட்டு அன்று என்றும்  கொள்ளவேண்டும்,

அவர்கள் தொழில் எப்போது  மேற்கொண்டனர் என்ற கேள்வியும் உள்ளது.

Errors occurred and we could not continue.  Shall develop later. 

ஞாயிறு, 15 நவம்பர், 2015

சக்கிலியன்

சக்கிலியன் என்ற சொல்லை இப்பொழுது  சற்று பார்ப்போம்..

இது ஆய்வு செய்து உடன் அறியக்கூடிய சொல் அன்று.

வண்ணான் என்பது  ஒரு சாதிப் பெயராகவும்  ஒரு தொழில்செய்வோனின் பெயராகவும் ஒருங்கு காணப்பெறுவது போன்று  சக்கிலியன் என்பது அத்துணை தெளிவாக இல்லை.    வண்ணான் எனில் துணிகட்கு வண்ணமூட்டுபவன்  என்று எளிதில் அறியலாம்.   சக்கிலியன்  என்பதை  அங்ஙனம் உடன்கூற இயலவில்லை.

சக்கிலியன்  என்பதை  சக்கு  இலியன்  எனப் பிரிக்குங்கால் சக்கு என்பது இப்போது  வழக்கில் இல்லை. ஆனால்  அது யாழ்ப்பாணத்து அகரவரிசைகளில் சக்குஸ்நானம்  என்ற சொல்லில் பொதிந்து காணப்படுகிறது:  அதன் பொருள்:

 n. < சக்கு¹ + ஸ்நானம்  Ceremonial washing of the eyes of a deity in a temple; விக்கிரகத்தின் கண்களை நீராற் சுத்தி செய்யும் பூசைவகை

 இலியன்  என்றால் இல்லாதவன் என்பது பொருள்.  இலியன்  அல்லது இலி  என்பது வரும் பல சொற்கள் உள.   அவற்றைக் காண்போம்:

ஒப்பிலியன் >  உப்பிலியன்   (உப்பிலியக் குடி )
இறையிலி 
பிறப்பிலி 
இறப்பிலி 
கட்கிலி   invisible,  God. (கண் + கு​ + இலி ​)
என்பிலி  எலும்பிலி  ( புழு )
தப்பிலி 
போக்கிலி > போக்கிரி    திரிபு:  ல > ர 
நெய்ப்பிலி ( a flaw in precious stone,  esp  ruby)
பொருவிலி   (= ஒப்பிலி )
அறுகிலி  ( ஒரு பூண்டு ) 

எனப் பலவாம்.

சக்கிலியன் என்று  அன்  விகுதி  பெற்றால்  ஆண்பால்;  சக்கிலிச்சி என்று பெண்பாலில் வரும். 

எனவே மேற்சொன்ன பூசை  சக்கிலி என்னும் தோல்வினைஞர்கட்கு 
விலக்கப்பட்டது  என்று  பொருள்படும்.  பின்பு  முற்றிலும் விலக்கப்பட்டனர்  போலும்.  இது மேலும்  ஆய்தற் குரியது. 

தொடரும் 



சனி, 14 நவம்பர், 2015

paris attacks

பாரீஸ்  படுகொலைகள்  பாவமென்றும் பார்க்காத 
யாரவர்கள் நோக்கம் எதுவெனினும்----வீரமற்ற
கோழைச்  செயலே கொடுமை உகப்பவனோ 
ஆழிசூழ் ஞாலமாள் வோன்.