திரைத்துறையில் பாட்டெழுதத் தேடினான் வாய்ப்பதனை;
மறைத்தனனே ஆட்டிவைத்த மாயிருள் ஆசைகளை!
குரைத்ததுபோல் சத்தமிடும் கோத்தளி பாடல்களால்
நிறைத்தபல நீள்படங்கள் அன்னாற் கறிமுகமே.
இசையறிஞர் நெஞ்சிரக்கம் ஏற்பதனால் ஊதியமாய்ப்
பசைவரவும் கேட்டவர்கள் தந்தபுகழ் உந்திடவும்
மிசையுறுகா மப்பசியால் மெல்லியலார் பாடுநரின்
தசையுறவும் வன்புணர்வும் கொண்டுவிழ லாயினனே.
தகுதிதன தெத்தகைத்தோ தானறியாக் காரணத்தால்
மிகுதியுறச் சிந்தித்தான் மேலுலகோர் தாம்பழித்தான்;
அகதியெனச் சாய்ந்திடுவன் தண்டனையன் னாற்கினியே
தொகுதியிழந் தான்புரையத் தோல்வியிலே வீழ்படுமே.
அரும்பொருள்:
மாயிருள்: பேரிருளில் அல்லது இடர்களில் புகுத்தும்.
கோத்தளி : கோத்து அளி - பழம்பாடல்களில் வரும் சொற்களைப்
பொறுக்கிக் கோத்துத் தந்த.
அறிமுகம்: மக்களிடையே அறியத்தக்கவன் ஆன நிலை.
ஏற்பதனால்: ஏற்பட்ட இரக்க உணர்வை முன்னிறுத்தி முனைந்ததனால்.
பசை வரவு : ஊதியம் செலவு போக அதிக மிருத்தல். ஒட்டாதது -
செலவிடப்பட்டது; ஒட்டியது: பசை; மீதப்பட்டது,
கேட்டவர்கள்: பாடல்களைக் கேட்டவர்கள்,
மிசை: மேலாகிய; ( அதிகமான )
மேலுலகோர்: முன் காலத்து வாழ்ந்து மக்களிடை வணக்கத்திற்கு
உரியோர் ஆனவர்கள்.
அகதி: கதியற்றோன்.
தொகுதி : தேர்தலில் வெற்றி பெற்ற இடம்.
இழந்தான்: மறு தேர்தலில் அடைந்த தோல்வியாளன்.
புரைய - ஒத்த.
வீழ்படும் : வீழ்ச்சி அடைவான் .
யாப்பியற் குறிப்பு:
தொடக்கச் சீர்கள் ஒவ்வோர் அடியிலும் கருவிளங்காய்ச் சீர்களாய்
வருமாறு தொடுக்கப்பட்டுள்ளன.
முதல்பா தவிர பிற எல்லாச் சீர்களும் நிரைநடுவாகிய சீர்களான் இயன்றுள்ளன.
ஒவ்வொரு பாவும் ஏகாரத்தில் இறுகின்றது.
முதல்பா தவிர அடிதோறும் தளை வெண்சீர் வெண்டளையாய் யாவுமியன்றன.பின்வருமடி கலித்தளை.
ஆகவே முதல்பா தவிர , சந்தம்: தனதனதாம் தாந்தனதாம் தாந்தனதாம் தாந்தனதாம் என்பதாகும்.
படித்து மகிழ்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக