ஆ என்று வியந்து பெரிது பெரிது என்ற சொல்லிக்கொண்டு ஆயிரம் என்ற
சொல்லை அமைத்த தமிழன், அவனுடன் ஒட்டிய இன்னொரு மொழிக்கும் அதே பாணியில்தான் ஒரு சொல்லை
அமைத்துப் போற்றினான்.
ஆயிரம் பார்த்தவுடன் அகமே அசந்து போகிறதன்றோ?
அகம் + அசர் + அம்
அக + அசர் + அ
சக + சர ( இரண்டு துண்டுச்சொற்களின் தலையிலும் சகரம்
ஏறிக்கொண்டது)
சகசர சகஸ்ர.
ஸகஸ்ர
அகர முதலாய சொற்கள் சகர முதலாய்த் திரியும்
என்பது முன்னே பலமுறை சொல்லப்பட்ட.து
ஆயிரத்தையும் சகஸ்ரத்தையும் கண்டு அசந்த காலம் மலையேறிவிட்டாலும்
இந்தச் சொற்களில் அவை அகன்றுவிடாமல் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக