திங்கள், 27 நவம்பர், 2017

சிற்றரசன் வள்ளுவன்



வள்ளுவன் என்ற சொல்லைப்பற்றிப் பல ஆய்வுகள் நடந்துள்ளன. பெரும்பாலும் தனிப்பட்டவர்களின் ஆய்வுகளே நம்மை வந்து எட்டியுள்ளன.

இச்சொல் எங்கனம் அமைந்ததாயிருப்பினும், நாஞ்சில் நாட்டில் பண்டைக்காலத்தில் ஒரு சிற்றரசன் இருந்தான். இவன் நாஞ்சில் வள்ளுவன் என்றே குறிக்கப்படுகிறான்.

இவன் பாண்டிய மன்னருக்கு அடங்கி ஆட்சிசெய்தவன். வறிய புலவன்மாரை ஆதரித்தவன். இவனைப் புலவர் பலர் பாடிப் பரிசில் பெற்றிருப்பர் என்றாலும் புறநானூற்றில் இவனைப் பாடிய சில பாடல்களாவது கிடைத்துள்ளன

ஓளவைப் பாட்டியும் இவனைப் பாடியுள்ளார்.

வள்ளுவர் என்போர் சிற்றரசர்களாய் இருந்தனர் என்பதை இப்பாடல்கள் தெளிவிக்கின்றன.




ஒரு போர்க்களக் காட்சியின் புறநானூற்றில் வள்ளுவன் யானை மீதிருந்துகொண்டு போர்மறவர்கள்பால் உத்தரவுகள் விடுத்துப் போரை இயக்கியுள்ளதை இங்குப் பாடலுடன் பொருளும் தந்து எழுதியிருந்தோம். பாடலிலுள்ள அருஞ்சொற்களை அறிந்து மகிழ்ந்தகாலை இக்காட்சியில் வந்த வள்ளுவனை இங்குப் படிப்போர் அறியாது நெகிழவிட்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
 

கருத்துகள் இல்லை: