ஞாயிறு, 26 நவம்பர், 2017

கருணை செய்யும் ஐயப்பன்.

இன்று காலைமுதல் மதியம் வரை எம் கணினி வேலை
செய்யவில்லை. தொடங்கி ஓடுவதற்கு முடியாமையால் அது பழுதுபார்க்கப்பட்ட நேரத்தில் ஓர் ஐயப்பன் பாட்டு 
மனத்துக்குள் வடிவெடுத்தது.

இதை நீங்கள் நினைக்கும் இராகத்திலோ மெட்டிலோ
 பாடிக்கொள்ளலாம். யாம் எழுதுகையில் மனத்தில்
 நின்ற மெட்டு, கீழே தரப்பட்டுள்ளது. இது யாம் 
 யூ டியூபில் கேட்ட மெட்டை ஒற்றி எழுந்த பாடல்.

சாமி ஐயப்பா
காக்கும் கையப்பா
கருணை செய்யப்பா.  (சாமி)

பூமி கண்ட வாழ்வினிலே
பூத்தசந்த கண்களிலே
சேமி உன் தன் சீர்வடிவே
சேரும் துணை யாய் உறவே  (சாமி).

காதில் வந்து மோதும் அன்பர்
நாம ஒலிகளே
வேதமாகக் கொண்டு நெஞ்சே
வேகமாகவே நெகிழ்ந்தே,,
மீது பொழி அருள்மழையே
யாதும் துன்பம் தீர்வுறவே   (சாமி )



இதை எழுதிகாலை நினைவில் நின்ற மெட்டு:

எம் எம் மாரியப்பா பாடிய: “ இந்த இன்பமே தந்த 
பைங்கிளி ஜீவன் அல்லவோ?”  (படம்: மருத நாட்டு 
இளவரசி, பழைய படம்).

இம்மெட்டில் கொஞ்சம் பேதமாக வரும்..


கருத்துகள் இல்லை: