வெள்ளி, 24 நவம்பர், 2017

ஐயப்பன் பக்தர்கள் நாளை அறப்பணி


நாளை   21.11.2017 ஐயப்ப பற்றர்கள் முதியோர்
இல்லம் சென்று அறப்பணி செய்து

அங்குள்ளோரை மகிழ்விக்கிறார்கள்.
அவர்கள் உங்கட்குச் சொல்வதுபோல்
அமைகிற கவிதை இது .


ஐயப்ப பத்தர்கள் நாங்களே--- நாங்கள்
அன்புகொண்   டங்கு வருகிறோம்

மெய்யாய் முதியோரைக் காணுவோம் ---கண்டு
மேலாம்  அறப்பணி பூணுவோம்,


மூதாட்டி கட்குப்பல் சேலைகள்---ஆண்
முதியோர்க ளுக்குப்பல் வேட்டிகள்.
ஆதாரம் அற்றார்க்குச் சாப்பாடு---எங்கள்
அய்யப்ப    சாமிவ   ழிபாடு


இல்லமோ அன்றெங்கள் இல்லமே --- நாங்கள்
இயற்றுவ தய்யப்பன் உள்ளமே,
சொல்லிடும் நற்பணித் திட்டமே ---இங்கு
சூழ்குமு கத்துநல் வட்டமே. 




இளைஞர் திருமோகன் சாமியே --- குழு
இதன் பொறுப்பேற்ற முன்னவர்;
கிளைஞர் மினுங்குறு நட்பினர் --- போலும்
மிறைத்தல் மிகக்கொள் உறுப்பினர்.
 



ஆதாரம்  - வாழ்வாதாரம் 
அன்று   -  அத் தினத்தில் 
கிளைஞர் - உறவினர்.

குமுகம் - சமுகம்.
மிறைத்தல் - பாடுபடல். உழைத்தல்.

மினுங்குறு - ஒளிவீசும்;  மேலெழும்.

சில தொடர்களுக்குப் பொருளுரை:


இல்லமோ அன்றெங்கள் இல்லமே  :   இல்லமோ  -  குறிப்பிட்ட

முதியோர் இல்லம் என்பது;

அன்று எங்கள் இல்லமே:  நாங்கள் வந்து சேவையாற்றிய போது

அது எங்கள் சொந்த இல்லம் (போல் ஆயிற்று).

சூழ்குமு கத்துநல் வட்டமே.  :  சுற்றியுள்ள மக்கட்கு  நல்ல

வட்டாரமாகிவிட்டது.
 
 


வெண்டளையும் சில இடத்துப் பிற தளையும்
தட்டு வந்த சிந்து கவி .

இது "எளிதாக்கப்"பட்டுள்ளது.



இப்போது சந்தக் கவிதைகளைத் தெரிந்துகொள்வோம்.
இது முதலில் சந்தமின்றி பெரும்பாலும் வெண்டளையில் எழுதப்பட்டுப் பின் சந்தம் வரும்படி மாற்றப்பட்டது.
சந்தத்தின்பொருட்டு சீர்கள் அறுக்கப்பட்டு ( வகையுளி ) சொற்கள் முழுமையாக நில்லாமல் தொடுக்கப்படும்.  எடுத்துக்காட்டு:
ஒரு சொல்லின் பகுதி அடுத்த சீரில் சென்று சேரக்கூடும்.
மூதாட்டி கட்குப்பல் சேலைகள்---ஆண்
முதியோர்க ளுக்குப்பல் வேட்டிகள்.
இது  சொற்களாக நிறுத்தப்பெறின்:
மூதாட்டிகட்குப்   பல் சேலைகள்---ஆண்
முதியோர்களுக்குப்   பல் வேட்டிகள்.
என்று வரவேண்டும்.
ஆனால் சந்தம்:
மூதாட்டி/ கட்குப்பல்/ சேலைகள்---ஆண்
முதியோர்க/ ளுக்குப்பல்/ வேட்டிகள்.
என்றபடி அமைதல் காண்க.


சில இடங்களில் இது பின்பற்றப்படாமல் விடப்பட்டது.

கிளைஞர் மினுங்குறு நட்பினர் --- போலும்
மிறைத்தல் மிகக்கொள் உறுப்பினர்.  

இதை நீங்கள் சந்தம் வரும்படி படித்துக்கொள்ளுங்கள்:
கிளைஞர் மி / னுங்குறு/ நட்பினர் --- போலும்
மிறைத்தல் மி/  கக்கொள் உ   /றுப்பினர்.
இப்படிப் படிக்கும்போது,  நட்பினர் என்பது றுப்பினர்
என்பதுடன் இயைந்தொலிக்கும்.


இக்காலத்தில் சந்தப்படி பிரித்தெழுதுவதை ஆசிரியர் 
சிலர் விரும்புவதில்லை. பொருள்தெரியக் 
கடினமாக்விடுவதால். 
 



last edited   21/11/201 7  1225 MST
 post screen appearance differs -  noted.

WARNING:  This post may appear disorderly on
your screen.  This is due to some inherent fault 
in the post software. Please read with caution.
We are not able to rectify it. 

கருத்துகள் இல்லை: