தென்றல் உலவிடும் போதினிலே
என்றன் மனமும் கவிதையிலே
ஒன்றாய் உறைந்து விடுகிறதே --- இதை
மன்றில் தெளிக்க விரும்பிடுதே.
மனத்தைக் கவிதை இனிமையிலே
திணித்தே களிப்பை மிகுத்திடுதே
அனைத்தும் அகலாக் கனிந்திடுமே
-- எனை
இணைத்தே இனிமைத் தமிழினிலே.
கடலில் அமிழ்ந்தும் அணைந்துகரை
கடந்து தடவும் அலைகளைப்போல்
உடலில் பெருகும் உணர்வதையே---யான்
இடவும் பதங்கள் கிடைத்திலவே
அகலா - அகலாமல்.
இது ஒவ்வோர் அடியும் வெண்டளை வரும்படி
பாடப்பட்டுள்ளது. அடுத்த அடித் தொடக்கத்தில்
தளை வேறுபடலாம்.
சில வாரங்களாக யாம் பாடியவை எல்லாம்
விருத்தங்களாக அமைந்திருந்தன. இந்நிலை
மாறி வரவின்போதே வேறு பாக்கள்
வர வேண்டியபடி இவ்வரிகள் வழிந்து
வந்தன. அம்மன் அருளால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக