படுதலும் படுத்தலும்.
ஒரு முனையால் மட்டும்
தொட்டால் அது படுதல். இது தன்வினை எனப்படும். ஆனால் அகன்ற நெடிய பொருள் தன் முழுமைப் பக்கமும்
மற்றொரு பொருளின் பக்கத்துடன் படுமாறு தொடுமாயின் அது படுத்தல் எனப்படும். ஒரு மனிதன் தன் முதுகுப் பகுதி அல்லது முன்பகுதி முழுமையும் பாயில்
படுமாறு அதன்மேல் கிடப்பானாயின் அவன் அப்பாயில் படுத்துள்ளான் என்று சொல்வர். இங்கு படுத்தல் என்பது படு என்பதன் பிறவினையாகிறது.
அதாவது அம்மனிதன் தன்
உடலைப் பாயிற் படும்படி கிட்த்துகிறான் என்பதாகும்.
படம்
இனிப் படம் என்பதைப்
பார்ப்போம். இது படு+அம் என்று அமைந்த சொல். ஒரு பொருள் இன்னொரு பொருள்மேல் படுவதனால் அல்லது
படுப்பதனால் ஒரு பதிவு உண்டாகுமாயின் அந்தப் பதிவே “படம்” ஆகிறது. இனி ஒன்றன்மேல் ஒரு பொருள் படிந்து ஒரு உருவோ பதிவோ
உண்டாகுமாயின் அந்தப் படிவும் படமே ஆகும்.
அடுதலினின்று அடித்தல்
என்பது இன்னொரு சொல்லாய்த் தோன்றியதுபோல் படுதலிலிருந்து
படிதல் என்பதும் படித்தல் என்பதும் தோன்றின. படி+ அம் என்பதும் படம் ஆகும். இது உருவம் படிதலையும் உள்ளடக்கும்.
இனி:
படி + அம் = படிவம் (வகர உடம்படு மெய்)
படி + கு + அம் = படிகம் ( கு சொல்லமைப்பு இடைநிலை; அம் விகுதி)
படி என்ற அடிச்சொல்லிலிருந்து இன்னும் பல புதிய சொற்களையும் உருவாக்கலாம். இசைவான புதுப்பொருள் கிட்டினால் அப்போது அமைப்போம். நம்மிடம் ஏராளமான விகுதிகள் உள்ளன; ஒரு கவலையும் இல்லை.
இதையறியால் படம் என்ற
சொல்லைத் தமிழன்று என்று ஒரு அகரவரிசை உடையோன் கூறியுள்ளது நேயர்கள் அறிந்ததே. அது உளறல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக