செவ்வாய், 15 மே, 2018

தோற்றவர் இன்னொரு தோல்வியாளர்க்கு ஆதரவு.



காண்குறைசார் கட்சி கருநாட காவினிலே
வீண்பறைதான் இந்நாள் முழக்கியதோ===தானிறந்தே
அடுத்து நின்  றோர்க்க   தளித்தவா   தாரம்
படுத்துவிட்ட தற்கோ படம்.


பொருள்:

காண்குறைசார் :  ஒரு கட்சியின் பெயர். இந்த
எழுத்துப்பெயர்ப்புக்கு வேறுபொருள்களும் ஊட்டலாம்.

கருநாடகாவினிலே :  கர்நாடகமாநிலத்தில்.
வீண்பறைதான்:    பயனற்ற ஆரவாரம்.
முழக்கியதோ:  வெளிப்படுத்திக்கொண்டிருந்ததோ.
தான் இறந்தே -  தான் தோல்வி அடைந்து.
தோல்வி என்பது ஆள்வதற்குத் தகுதியை இழப்பதாகும்.
இறப்பதற்குச் சமானம்,
அடுத்து நின்றோர்க்கு:   அவர்களுக்கும் குறைவான தகுதி
அடைந்தவர்கள் கட்சிக்கு.
அளித்தவாதாரம் -  அளித்த (தந்த)  ஆதாரம்.
படுத்துவிட்டதற்கு - இனி எழும்ப வழியில்லையாய்
வீழ்ச்சி அடைந்ததற்கு.
படம் -  எடுத்துக்காட்டும் அறிகுறி. 

தேர்தலுக்குமுன் சம நிலையிலிருந்தபோது அளிக்காத
ஆதரவைத் தோற்றபின் அளிப்பது, இனி நிலைநிற்க 
முடியாமையால் கீழ்நிலையில் உள்ளோரிடம் சரண் 
அடைந்து மேலிருப்போரிடம் சம்மாகிவிட நினைக்கும்
உத்தியாம். இத்தகைய உத்தி எதிர்காலத்துக்குக் 
கைகொடுக்குமா என்பதே கேள்வி.


அயம் இரும்பு உலோகம் இஸ்திரி முதலியவை/

எந்த மொழியைப் பேசினாலும் பேசும் போது சொற்களைச் சரியாகப் பலுக்க (     )  வேண்டுமென்று அவ்வொலிகளைத் தெரிந்தவர் கூறுவதுண்டு. சற்று  குறைகண்டாலும் பலர் சொல்லத் தவறுவதில்லை.  இவ்விடயத்தில் எல்லோரும் வாய்ப்பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார்களே.  1

சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முந்திய காலங்களிலும் பலரும் நிகண்டுகள் அல்லது அகரவரிசைகளைப் பார்த்தே,  ஒரு சொல் தமிழ்ச்சொல்லா அல்லது பிற மொழிச் சொல்லா என்று கண்டுபிடித்தனர்.   மாங்காய்  என்ற சொல் மலாய் மொழியிலும் உண்டு.  அது மலாய் அகராதியிலும் இருந்தபடியால் அதைச் சிலர் மலாய் என்றனர்.    ஆனால்  மா என்ற மரம் குறித்த சொல் அங்கு இல்லை.  மா+காய் = மாங்காய் என்பதில் காய் என்பதும் அங்கு இல்லை.  மேலும் இது இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து கொண்டுவரப்பட்டது,  ஆகவே அகராதிகளைப் பார்த்துச் சிலர் தவறான முடிவுகளை எட்டினர்.

இரும்பை முதல்முதல் தமிழர்கள் அறிந்திருக்கவில்லை. பின் அதையவர்கள் செய்யவும் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டனர்.  அதை அறியுமுன்பே பொன்னை அவர்கள் அறிந்திருந்தனர். பொன் நகைகளை உருவாக்கும் பொற்கொல்லர்கள் அல்லது தட்டார்களும் அவர்களிடையே தோன்றித் தழைத்திருந்தனர். பொன்னோடு ஒப்பிட  இரும்பு பின் வரவு என்பது சொல்லால் அறிந்துகொள்ளலாம்.    இரு+பொன் =  இரும்பொன் என்று இரும்பிற்குப் பெயரிட்டனர்.  இரு என்பது பெரிய என்று பொருள்படும் சொல்லும் ஆகும்.   இருங்கடல் என்றால் பெருங்கடல்.  " நளி யிரு முந்நீர்"  எனின் பெருங்கடலின் நடுப்பகுதி என்றும் பொருள்கொள்ளலாம்.  நள் -  நடு.
நளி =  நடுப்பகுதி. நள் - நடுவை, இ - உடையது, நளியிரு: பெரிய நடுப்பகுதியை யுடையது.    நிற்க,  இந்த இரும்பொன் என்ற  பெரிய பயன்பாடு உடைய பொன்போன்ற உலோகம் ( மண்ணினின்று கிடைப்பது),  பின் பெயர்த்திரிபினை அடைந்தது,  இரும்பொன் >  இரும்பு ஆகியது. இதை எமக்கு முன்னிருந்த தமிழறிஞர் கூறியுள்ளமையின் வேறு கூறோம்.

இரும்பை நம்மனோர் அடுத்து வாழ்ந்தோரிடமிருந்து அறிந்துகொண்டனர் என்பதற்கு இன்னொரு சொல்லையும் சுட்டிக்காட்டுவேம்.   இச்சொல் அயம் என்பது.  சித்தவைத்திய நூல்களில் அயச் செந்தூரம் என்றோரு மருந்து கூறப்படுகிறது,   அயமெனப்படுவது இரும்பு,  அயல் என்ற சொல்லுடன் இது தொடர்புடையது,  அயல் என்பதில் அ என்பது இங்கில்லாமல் தொலைவில் இருப்பது என்று பொருள்படுவது.  அல் என்பது விகுதி.  அவல் என்பதில் வரும் அல் விகுதி போன்றதே,  அவி+அல் =  அவல். இகரம் கெட்ட புணர்ச்சி.   இங்கு அல் விகுதி வருவது போலவே அயல் என்பதும்,  இனி அயம் என்பது அ+அம் = அயம் என்றாகும்,   அங்கிருந்து  அல்லது தொலைவிலிருந்து வந்தது என்பது பொருள்.இரும்பைப் பற்றிப் பெரிதும் அறியாதிருந்த காரணத்தால் அப்பொருளில் உள்ளமைப்புகளை அல்லது உள்ளீடுகளைக் கண்டு அவர்கள் பெயர்வைக்கவில்லை.  அது அயற்பொருள் என்பதுமட்டுமே அவர்கள் கண்டுகொண்டது ஆகும்,  பொன் அவர்கள் அறிந்திருந்தனர்,  ஆனால் அயம் அல்லது இரும்பு அவர்கள் புதிதாகக் கண்டுகொண்டது ஆகும்.

அயம் 2  என்பது தவிர இன்னொரு பெயரும் தமிழில் உண்டானது,  அதுவும் இந்த அகரச் சுட்டடியாகவே தோன்றியது.   அ+இல் என்ற இரண்டும் இணைக்கப்பட்டு அயில் என்ற சொல் அமைந்தது.  இங்கு இல் என்பது இருப்பது என்று பொருள்தருவது.  குடத்தில், மடத்தில் என்று  இல் என்று வேற்றுமை உருபாய் வந்து இடம் குறிக்கவில்லையா?  அதுவேபோல் அந்த இடத்திலிருந்து அதாவது தொலைவிலிருந்து வந்தது வந்து நாமறிந்துகொண்டது என்ற பொருளிலே இன்னொரு பெயரும் அமைந்துவிட்டது,  மண்ணினுள் தொலைவில் இருந்து எடுக்கப்படுவது எனினும் அமையுமேனும் அது அயல்வரவு குறிக்கவில்லை.

தகத்தக என்று மின்னியது தக> தங்க > தங்கம் ஆனது.    பொலிவு மிக்கது பொன் ஆனது.  பொல் என்பது அழகு.  பொல்லா என்பது எதிர்மறையில் வந்து அழகில்லாதது என்பதைத் தெரிவிக்கிறது.  பொல் என்ற சொல்லின் இறுதி லகர ஒற்று  0னகர ஒற்றாய்த் திரியத்தக்கது.    பொல்> பொன் ஆகும்.  பொல்> பொலிவு என்பது அழகு.

இந்த உலோகங்கள் எல்லாம் மண்ணிலிருந்து எடுத்து உருக்கப்பட்டபின் அவை மீண்டும் மண்ணாகும் வரை சுற்றிவந்து பயன் அளிக்கக்கூடியவை ஆகும்.  ஆகவே இரும்புவேலை செய்கிறவன் அவற்றை வேண்டியவாறு மீண்டும் உருக்கி வேறோர் உருவில் அமைத்துக்கொள்வான்; பிறருக்கு அளிப்பான்.  உல் என்பது உலவு என்பதன் அடிச்சொல். உல் =  சுற்றிவருதலை உடைய; ஓகம் =  ஓங்கும் பொருள்,  ஓங்கு என்பது இடைக்குறைந்து ஓகு என்றாகும்.  ஓகு+ அம் =  ஓகம்.   அதை ஓங்கு+ அம் = ஓங்கம், இடையில் உள்ள ஒற்றை எடுத்துவிட்டால் ஓகம் ஆகிவிடும் என்றும் காட்டலாம்.  முதலில் தமிழர் அறிந்துகொண்டது பொன் ஆகையால் அது ஒரு முறை உருவாகச் செய்யப்பட்ட பின், உருக்கி இன்னோர் உருவாகச் செய்துகொள்ள, அது மதிப்பிலும் பயன்பாட்டிலும் ஓங்கி நின்றது.  இக்காரணத்தால் பொன் உலோகம் ஆனது.  பின்வந்த இரும்பு செம்பு முதலானவையும் உருக்கி ஓங்குமாறு உலவ விடப்பட்டவையே ஆகும்.  ஆக உலோகமென்பது தமிழில் எழுந்த சொல் என்பது தெளிவு,

உருக்குதல் என்ற சொல்லும் அவற்றை நீர் போலும் காய்ச்சி,   வேண்டிய உருவில் அமைத்தல் என்பதையே தெரிவிக்கிறது.  உரு> உருக்கு> உருக்குதல்.

இஸ்திரி என்ற இரும்புத் திண்பட்டை அடிப்பெட்டியானது,  துணியின்மேல் வைத்து இழுக்கப்படுவது ஆகும், இழுத்து இழுத்து இருத்தித்  துணியைச்  சுருக்கம் இல்லாமல் நிமிர்த்துவதால்  இழுத்திரி எனப்பட்டது.  இரு > இரி. இரு என்பது கேரளத்தில் இரி என்றே வழங்கும்.  இழுத்திரி பின் இஸ்திரியாகி அயலாகக் கருதப்பட்டது.  இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு மானின் கழுத்தில் ஊறுவதாகக் கருதப்பட்ட வாசனை கழுத்தூறி என்று அழைக்கப்பட்டுப் பின்பு கஸ்தூரி ஆகிவிட்டதுபோன்ற திரிபே ஆகும். இவற்றை அவ்வளவு எளிதில் மறைத்துவிட இயல்வதில்லை.

பிழைகள் காணப்படின் திருத்தம் பெறும்.


அடிக்குறிப்பு:

1.  வாய் > வாய்த்தி > வாத்தியார் (  பணிவுப் பன்மை)  -  யகர ஒற்று ஒழிந்த சொல்.
உப அத்தியாயி > உபாத்தியாயி என்ற சங்கதச் சொல் வேறு. பழங்காலத்தில் பாடநூல்கள் இல்லை அல்லது குறைவு.

2   ஐ என்பது வியப்பும் ஆகும் .  வியப்புக்குரிய கடினப்பொருள்,  பல்வேறு உருக்களில் செய்துகொள்ள இயல்வது என்றும் கூறுதலுண்டு.  ஐ > அய்> அயம்
என இருபிறப்பிச் சொல்.

திங்கள், 14 மே, 2018

அள் > அழ சொல்லியல் தொடர்பு.

கண்ணிற் பட்டவுடன் நெஞ்சினை அள்ளிக்கொள்ளவேண்டும்.  அதையே அழகு என்று சொல்கிறோம்.

இந்தக் கருத்து அழகு என்ற சொல்லிலே அமைந்து கிடக்கின்றது.  இப்போது எப்படி என்று சிந்தித்து அறிவோம்.

அள் >  அள்ளு.  அள்ளுதல் என்ற சொல்லையும் அள் என்ற அடிச்சொல்லே பிறப்பிக்கிறது.  அள்ளுதல் என்பது வினைச்சொல் ஆகும்,

அள் என்பதே அழகு என்ற சொல்லுக்கும்  மூலமாகிறது.

அள் >  அழ.

ளகர ஒற்று எப்படி ழகரமாகும்.  இப்போது காட்டுவோம்.

கொள் >  கொழு > கொழுநன்.
கொள் > கொழு >  கொழுந்தன்.
கொள் >  கொள்வனை.

கொழுப்பு என்பது இருக்கிறதே அது உடல் கொண்டிருக்கும் (கொள் > கொண்டு) திண்ணிய எண்ணெய்தான்.  இச்சொல்லும் கொள் என்பதிலிருந்தே பிறந்தது.  கொள்> கொழுப்பு.
கொள் என்ற   தானியமும் கொழுப்பை மிகுதியாய் உள்ளடக்கி இருப்பதாலேயே அப்பெயர் பெற்றது.

கொள்ளுதலாவது உள்வைத்திருத்தல்.

இப்போது அள் என்ற அடிச்சொல்லுக்கும் அழ என்ற அழகு என்ற சொல்லின் முற்பகுதிக்கும் உள்ள உறவினை அறிந்துகொண்டிருப்பீர்கள்.

யாமெழுதிய ஒரு கவிதைக்கு விளக்கம் எழுதலாம் என்று எண்ணினேம். அதை நன் கு அறியுமுன் இதை அறிவது ஒருவாறு உதவும்.  பின்பு
சந்திப்போம்.

ஞாயிறு, 13 மே, 2018

விகுதியும் மிகுதியும். விக்ருதி மிக்குறுத்தி.

விகுதி என்ற சொல்லை நாம் பல இடுகைகளில் சந்தித்திருக்கிறோம். இதைப்பற்றி யாம் முன்பு எழுதி விளக்கியதுண்டு.

விகுதி என்ற சொல்லில் தி இறுதியில் உள்ளது.  இதைப் பிரித்து எடுத்துவிட்டால் மீதமிருப்பது விகு என்பதே.  ஆனால் விகு என்ற ஒரு வினைச்சொல் இல்லை.   எனவே விகுதி என்பது நாம் நினைப்பதுபோல்  ஓர் இயற்சொல் அன்று.   அது திரிசொல்லே.

மிஞ்சு என்ற சொல் விஞ்சு என்று திரிகிறது.   இதுவேபோல் சில மகர வருக்கத் தொடக்கத்துச் சொல் வகர  வருக்கத் தொடக்கமாகத் திரிந்துவிடுகின்றன. இத்தகைய திரிபு சொல்லின் தொடக்கத்தில்மட்டுமே வரும் என்பதில்லை. சொல்லின் இடையிலும் வரக்கூடும்.  எடுத்துக்காட்டு: அம்மை >  அவ்வை.( ஔவை).

எனவே  மிகு > மிகுதி என்ற சொல்லே  விகுதி என்று திரிந்தது.  விகுதி என்பதற்குத் தமிழிலக்கணத்தில் இறுதிநிலை என்றும் கூறுப.

உகத்தல் என்ற சொல்லை எடுத்துக்கொண்டால்,   உக என்பது சொல்லின் பகுதி.   தல் என்பதே விகுதி.   தல் என்பதைக் கொண்டு கூட்டியபடியால் சொல் மிகுந்தது.

மிகுதி  என்பது  சொல்லின் மிகுதியே.  விகுதியைக் கண்டுணர்ந்த காலை சொல் மிகுதலையே உணர்ந்தனர்.  பின்னர் சில விகுதிகளின் சேர்க்கையில் சொல்லின் பொருளும் சற்று மாறுதலை அடைந்தது.  அப்போதும் அதை விகுதி என்றே அழைத்தனர்.

ஆனால் இதை விக்ருதி என்ற சமத்கிருதச் சொல்லுடன் தொடர்புபடுத்தினர் சில புலவர்கள்.   விக்ருதி என்பது சமத்கிருதத்தில் ஓர் இலக்கணக் குறியீடு அன்று, அது பொதுவான மாற்றம் குறிக்கும் ஒரு இயல்பான சொல்.  ஆதலால் விக்ருதி வேறு. விகுதி வேறாகும், பிரத்யாய என்பது விகுதி என்று பொருள்படுவதால்,  விகுதியை ஏன் பிரத்தியாயம் என்று அழைக்கவில்லை?

மேலும் விக்ருதி என்பது மிக்குறுத்தி என்பதுபோல் ஒலிக்கிறது.  ஆனால் அது வேறு எனப்படுகிறது. மிக்கு உறுத்தும் எதுவும் வேறாகுமன்றோ?


சனி, 12 மே, 2018

சிறிதாவதும் கூம்புவதும் குறிக்கும் சொற்கள்

நாம்  இன்று சொற்களைப் பற்றிய ஒரு  சிந்தனையில் ஈடுபடுவோம்.  சிந்தனை என்றாலே துளிதுளியாக மழைநீரைப்போலச் சொட்டிச் சிந்துவது என்றுதான் பொருள்.  எதை என்றால் மூளையில் எழும் எண்ணங்களை.  அதனால்தான் சிந்தித்தல் என்று சொல்கிறோம்.  சிந்துதல் > சிந்தித்தல். எண்ணங்கள் சிறிது சிறிதாக  வெளிவரச் செய்தல்.  இதுதான் இதன் சொல்லமைப்புப் பொருள் என்றாலும் இந்தச் சொல் அமைந்து வெகுகாலம் ஆகிவிட்டபடியால்,  அப்பொருளை இன்று நாம் உடனடியாகக் கண்டுகொள்ள முடியவில்லை.

சிந்து என்றால் அதன் பொருள் உங்களுக்குத் தெரியும்.  ஆனால் அதன் அடிச் சொல் சின் என்பது.  சின் து =  சிந்து ஆகிறது.  முந்து பிந்து என்பதுபோல் அமைந்ததே இச்சொல்லும்.   முன்+து என்பது முந்து ஆனது.  பின்+து என்பது பிந்து ஆனது.  பந்திக்குப் முந்திப்போ; படைக்குப் பிந்திப்போ என்பார்கள்.  பந்தி என்பதும் பலர் இருந்து உண்ணும் நிகழ்வு.  பல் > பன் > பன் தி  என அது பந்தி ஆயிற்று.  வெந்து  என்ற வினை எச்சத்தில்  வே> வெம்> வெம்+து =  வெந்து ஆனது தெளிவு.   வென் என்பது அடிச்சொல் அன்று.

சிந்து என்பது அடிக்கு மூன்று சீர்களே உள்ள பாட்டில் வரும்.

செந்தமிழ் நாடென்னும் போதினிலே~

இவ்வடியில் மூன்று சீர்களே உள்ளமையினால் அது சிந்தடி எனப்படும்.

நூல்களில் சிறிய நூலுக்கும் சிந்து என்று பெயராம். இது விற்பனையான
இடமே சிந்து நதிக்கரை.   அது அங்குள்ள நதிக்கும்   உள்ளவர்கள் பேசிய மொழிக்கும்கூடப் பெயராகி விட்டது.   

சிலர் மீன் சினையைக் குழம்பு வைத்துத் தின் கிறார்கள்.    சிறு சிறு முட்டைகள் ஒட்டிக்கொண்டிருப்பதால் அது  சின் >  சினை எனப்பட்டது.    சின் என்பது சில் என்பதிலிருந்து தோன்றிய சொல்லே.

கோபத்தைச் சினம் என்பர்.   பழங்காலத்தில் சினத்தை ஒரு சிறு செயலாகக் கருதினர் என்று தெரிகிறது.  அதைப் போற்றத் தக்கதாகக் கருதவில்லை. கோபமே பாபங்களுக்கெல்லாம் தாய் தந்தை என்றனர்.  சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்றும் கூறினர்.    ஆறுவது சினம் என்றனர்.  சின் என்ற அடியினின்று தோன்றிய இச்சொல்லுக்குப் பெருமைக்குரிய செயல் அல்லாதது என்பதுதான் சொல்லமைப்புப் பொருள்.  கோபம் என்ற சொல்லும் கூம்புதலைக் குறிப்பது;  கூம்புதலாவது குறுகுவது.

கூ > கூம்பு.  கூம்புதல்
கூ > கூபு > கோபு > கோபம்.  கோபு> கோபித்தல்.
மனச் சுருக்கத்தைக் குறிக்கிறது. 
இங்கு கூ என்பது கோ என்று திரிந்தது.    மகர ஒற்று மறைந்தது இடைக்குறை.

கூகூ என்று கூவும் பறவை கோகிலம் என்று பெயரிடப்பட்டுள்ளது காணலாம்.

 திருத்தம் பின்

வெள்ளி, 11 மே, 2018

தொண்ணூறு அகவைக்கு அப்பாலும் - மகாதீர்.

இன்னிசைப் பஃறொடை வெண்பா.
 (பன்னிரண்டு அடிகள்)

------------------------------------------

தொண்ணூற்றுக் கப்பாலும் தோன்றும் அரசியல்
பண்ணூறும் தேனிலவு மாமேதை;   அன்னவர்க்குக்

கண்ணூ  றழகு கழிந்திடாக் கங்கினிலும்
எண்ணூறும் சிந்தனைச் சிற்பி-   மகாத்தீரே!

நாட்டுநலம் மக்களே  நாடும் நலமனைத்தும்
கேட்டுவரு முன்னரே கிட்டிடச் செய்கையர்.

கள்ளம் இழைத்திட்ட காழ்ச்சொல்  கழுதைகளை
வெள்ளம் எனவந்து வீழ்த்திப் புரட்டியவர்.

விள்ளும் அனைத்திலும் வேண்டும் நகைச்சுவையர்;
கொள்ளும் ஒழுங்கோடு சட்டம் திகைபவரே.

மூலவ நல்லமைச்சாய் முன்னிருந்து மேல்நடத்தி
நாளும் நயம்தருக நன்கு.





குறிப்புகள்:


மூலவ நல்லமைச்சாய் =  பிரதமராய்.
அவர்க்கு அரசியலுடன் இப்போது ஒரு தேனிலவு
என்பது கவிதை.
வாழ்க்கையின் இறுதிக்கு  வந்துவிட்டேன் என்று 
அவர் சொன்னாலும் அழகு இன்னும் உள்ளது.

கண்ணூறு அழகு ----  அவர் பார்வையிலிருந்து கிளர்ச்சி தோன்ற
ஊறிவரும் அழகு.

கங்கு -  முடியும் இடம்.  ஓரம்.

எண்ணூறும் - எண்மை ஊறும்.  எளிமை மேலிடும்.

அகவை எண்கள் கூடும் என்றும் கொள்ளலாம்.

எல்லையிலும் : இது கங்கினிலும் என வந்தது.

செய் கையர் -  செய்யும் கையை உடையவர்.

திகைபவர் -  உறுதி செய்பவர்.

கழுதைகளை -  தை என்பது குறுகி ஒலிக்கும்
ஐகாரக் குறுக்கம்.

பிழைத்திருத்தம் வேண்டின் பின் 

புள்ளி  மறைந்த ஓர் எழுத்து  புள்ளி இடப்பெற்றது.









செவ்வாய், 8 மே, 2018

திருநீறும் விபூதியும்.

விபூதி என்னும் சொல் வேறு வழிகளிலும் சிலரால் விளக்கப்பட்டுள்ளது. இது தமிழிலும் வழங்கும் சொல்லாகும்.   இதனை இன்று தமிழின் மூலம் உணர்வோம்.

இதற்கு மற்றொரு பெயர் திருநீறு என்பதாகும்.  எரிந்து முடிந்தபின் கிடைப்பது நீறு எனப்படும்.

தகரமும் சகரமும் ஒன்றுக்கொன்று நிற்பதுண்டு.  தனித்தன்மை வாய்ந்த கோளாகிய சனியின் பெயர்   இப்படி அமைந்தது  ஆகும்:

தனி >  சனி.
தட்டு > சட்டம்.  ( சகரத்தில் மாறி விகுதி பெற்றது).
தம் பற்று >  சம்பத்து.   (தாம் பற்றி வைத்திருப்பவையே ஒருவனுக்கு சம்பத்து)

இங்கு  காட்டிய வற்றுள் ச-த திரிபு உணர்த்தப்பட்டது.

எனவே:

விழுமிய  பூச்சு  :  விழு+ பூசி > விழுபூதி. > விபூதி.

திருநீறணிதல் உயர்கொள்கை ஆனபின் இச்சொல் படைக்கப்பட்டது.
நீறிலா நெற்றி பாழென்பது தமிழர் கொள்கை.  நீறு பூசுதல் விழுமிய பூச்சு ஆகும். விழுமிய =  சிறந்த.

Malaysia elections - pages unresponsive.

Malaysia elections tomorrow.

Certain functions are not responding.

Will try posting later.

Postscript:  Our blog was also jammed. The perpetrators achieved this by deleting the .dll files of the browsers you used to connect to their websites.

திங்கள், 7 மே, 2018

குழந்தையைக் கற்பழிப்பார்க்குத் தூக்கு சரியானது.

ஊர்வசிகள் அரம்பையர்தாம் தோற்றுப் போகும்
ஒப்பற்ற அழகுடையார் எப்போ தும்தான்
பார்வையிலே படங்கள்தரும் காட்சி தம்மில்
பார்க்கின்றார் சுவைக்கின்றார் பழங்கள் யாவும்
ஆர்கைக்கும் கிட்டாவோ என்ற  சந்தே
அடுத்தவீட்டில் எதிர்த்தவீட்டில் பாவப் பட்ட
நேர்சிறிய பெண்குழந்தை தம்மேல் பாய்ந்து
நீள்நரகக் குறுஞ்செயல்கள் நிகழ்த்து கின்றார்.

வன்புணர்வு மேற்கொள்வார் அவர்க்குத் தூக்கு
வாய்ப்பதுதான் சரியான ஒறுத்தல் என்று
துன்(பு)ணர்ந்த சட்டத்தால் நாட்டில் நன்மை
தோன்றுவதும் கைகூடும்; தீமை தோய்ந்த
கண்ணிருந்து மன்பதையைக் கருகச் செய்யும்
காளையரால் காய்க்குமொரு நன்மை உண்டோ?
புண்வளர்ந்த முகத்தவர்கள் புவியின் நீங்கிப்
போயினிந்த நோயழியும் மே வும்   நன்றே!

அருஞ்சொற்கள்:
என்ற சந்தே -  என்று அசந்தே.
ஒறுத்தல் = தண்டனை;
துன்பு -  துன்பம்
மன்பதை =  சமுதாயம்.
காய்க்கும் -  உண்டாகும்.
நன்றே - நன்மையே.
வன்புணர்வு = கற்பழிப்பு.

ஜூரோங்க் கொசுக்கள்

நகரமயம் ஆகிவிட்ட ஜூரோங் வட்டம்
நலிவில்லாச் சிங்கையிலே நாலு பேர்கள்
புகழ்மலியப் பேசிடுமோர் புதுமை ஆக்கம்;
பொலிவான அடுக்குமனை, தொழில்கள் மேவும்.
துகள்கூளம் இல்லாத தூய்மை போற்றும்
சுடர்பகுதி இங்குபல கொசுக்கள் என்றால்
தகவுரிய தகவலிது என்ப தாமோ?
தணியாத கொசுப்படைக்கு வெற்றி யாமோ!

 குறிப்புகள்:

நகரமயம்:   இங்கு ஜுரோங்க் என்னும் புதுநகர்
உள்ளது.  எல்லா வசதிகளும் உள்ளன.

ஜுரோங்க்:  இது ஒரு மலாய்ச் சொல். இடப்பெயர்.
இதை மொழிபெயர்க்க முடியவில்லை. இச்சொல்லுக்கு
என்ன பொருள் என்பதிலும் மூலச் சொற்கள் எவை
என்பதிலும் மாறுபாடுகள் உள்ளன.

நலிவில்லா -  கெடுதல் இல்லாத.

நாலு பேர்கள்:  மக்கள்.

பொலிவு:  அழகு.
அடுக்குமனை:   அடுக்குமாடி வீடுகள்.
சுடர் பகுதி :  விளங்கும் இடம்.
தகவுரிய :  உண்மையான.
கொசுக்களைக் கொல்லப் பல முயற்சிகள்
நடந்துகொண்டுதான்  உள்ளன;    ஆனால்
மழை பெயத பின் எப்படியோ வந்துவிடுகின்றன.
ஆகவே " தணியாத".
உலகம் உள்ளளவும் அவையும் இருக்கும் என்று
தெரிகிறது.   என் செய்வோம்?




ஞாயிறு, 6 மே, 2018

மோட்சம் என்ற திராவிடச்சொல்.

மோட்சம் என்பது ஒரு திராவிடச் சொல்லே ஆகும்.


இதை இப்போது ஆராயலாம்.


மேல் என்ற தமிழ்ச்சொல் சில திராவிடமொழிகளில் மோள் என்று

திரிந்து வழங்கும்.


ஒன்று இன்னொன்றன்மேல் மோதுகிறது. மேல்சென்று இடிப்பதை

மேது என்று வினையாக்காமல் மோது என்றல்லவா வினைச்சொல் ஆக்குகிறோம்? மே> மேல்; மே> மோ > மோது. ஏகாரச் சொற்கள் ஓகாரமாகும். ஏம் ‍= பாதுகாத்தல்; ஓம் = பாதுகாத்தல்; ஓம் > ஓம்புதல் : பாதுகாத்தல். பல சொற்களை ஆராய்ந்தால் இது தெற்றெனத் தெரியவரும்.


மோள் > மோட்சு > மோட்சம்.



மே > மோ > மோச்சம். சு, அம் விகுதிகள்.


இது பேச்சு வழக்குச் சொல். இறந்தவன் மேலே போய்விட்டான் என்பது பேச்சு வழக்கு. அதிலமைந்ததால் மோச்சம் என்ற சொல்அதுபின் மோட்சம் என்று திருத்தப்பெற்றது. ட்ச என்றால் ஒலி இனிமையாகிறது என்று கருதினர்.


முது > முதுமை.


முது > முத்து > முத்தி > முக்தி.


மோள் > மோட்சம்.



முக்தி மோட்சா!!

விஷிஷ்டம்: விரித்து இடப்பட்டது; சொற்பொருள் ஆக்கம்.

இன்று நாம் ஒரு நல்ல சொல்லை அறிந்துகொள்வோம்.  இதைப் பலரும் அறிந்திருப்பார்கள் என்று நாம் நினைக்கவில்லை. இதற்குக் காரணம் இச்சொல் அடிக்கடி எதிர்கொள்வதன்று,

விசிஷ்டம் என்பது தமிழ்ச் சொல் என்று கூறுதற்கில்லை. இதை விசிட்டம் என்று  சங்கத ஒலி நீக்கி எழுதினாலும் சொல் தமிழாகிவிடாது.

இதன் பொருள் :  சிறப்பானது என்பதாகும்.

எந்த ஒரு கோட்பாட்டையும் கொள்கையையும் சிறப்பானது என்று ஒரு நூலாசிரியர் வருணிக்கலாம்அப்படி வருணிக்கையில் அது விஷிஷ்ட கோட்பாடு அல்லது கொள்கை என்று அடைமொழி தந்து முன்வைக்கலாம். சிறப்பான இரண்டன்மை என்று வருணிக்க விஷிஷ்டாத்வைதம் என்பார்கள். எடுத்துக்காட்டாக:  கடவுள் வேறு, மனிதனின் ஆன்மா வேறு என்னாமல் இரண்டும் ஒன்று என்றால்அதாவது:  இரண்டற்ற தன்மையது என்றால்  அதனை விஷிஷ்டாத்வைதம் என்னலாம். பிரம்மம் என்ற மூலத்திற்கு எந்த பகுப்பும் இல்லையாதலால் அது இரண்டற்றது என்பர்; இதனை விஷிஷ்டாத்வைதம் என்று கூறுவர்.

விஷிஷ்டம் என்பதன் ஒரு முன்பகவு: விஷி என்பது.

விய் > வியன்.    விரிவு.
விய்விஷ்;
விய் > வியிவிஷி .

விய் என்பது விர் என்பதனுடன் தொடர்புடைய அடிச்சொல்.

விர் > விய்.     விர் > விரி.    
எனவே விரிவிஷி எனினுமாம்.

விய் > விய > வியப்பு. 

பிரமித்தல் என்பதும் பெருமித்தல் என்பதன் திரிபே.

வியந்து போற்றற்குரியது சிறப்பானது ஆகும்.

இதிலிருந்து விஷிஷ்டாத்வைதம் என்ற தொடரில்  விஷிஷ்டம் என்பதன் பொருளையும் சொல்லுருவையும் கண்டு இன்புறலாம்.

இஷ்டம் என்பது : இட்டம் :  இடு + அம்.

விஷி+ இஷ்டம் =  விஷிஷ்டம் என்பது எளிதாக அறியலாம்.

சனி, 5 மே, 2018

தேர்தல் முடிவுகள் கேட்கும் மனக்கிளர்ச்சி.

தேர்தலிலே வெற்றிஎந்தப் பக்கம் என்று
வேர்த்திடவே கூடியங்கு வீற்றி  ருந்து

சார்தலின்றிச் சாய்வின்றித் தொலைநற் காட்சி
சாற்றுகிற முடிவுகண்டு  சடைதல் இன்றி

ஓர்தலுடன் கருத்துரைகள் ஊறக் கேட்டார்
ஓய்வினையும் மறந்தவராய் ஆயும் மக்கள்;

தீர்தலுண்டே உளக்கிளர்ச்சி  !குடிநல் லாட்சி
தேர்ந்திடவே நேர்ந்திடுமே ! தேசத்  தோர்க்கே.


பொருள்:

 சார்தல் - கட்சிச்சார்பு.
 சாய்தல் - ஒருதலைச் சாய்வு
சடைதல் -  சோர்வு

குடியாட்சியில் தேர்தல் முதன்மை வாய்ந்தது.
அறிவிப்புகள் வெளியாகும்போது என்னே குதூகலிப்பு.
இத்தகைய மன இணைப்புகள்தாம் குடியாட்சியைச்
செழிக்கச்செய்கின்றன.

ஆழ்ந்த நேயர் - ஆஞ்சநேயர்.

இராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர்,  சங்கத்திலும் சென்று பாடியுள்ளார். இவர் நன் கு தமிழறிந்தவர்.  என்றாலும் பெயரொற்றுமை மட்டும் கருதி, இவரைத் தமிழறிந்தவர் என்று முடிவு செய்யலாகாது என்று   ஐயுறு தாமசு கூறியுள்ளார்.

ஆகவே பல சொற்களை எடுத்துக்காட்டினோம்.  எதிர்த்துப் பேசுவோரை ஒடுக்க நினைத்துக் கள்ளமென்பொருளால் பல இடுகைகள் அழிக்கப்பெற்றன. நாம் சொன்னதைப் படித்தவர்கள் பலர்.  அவர்களெல்லாம் மறந்துவிடுவரோ?

நாம் எடுத்துக்காட்டிய சில:

இர் + ஆம் + அர் = இராமர்,  ராமர், ராமா.

இர் என்பது விட்ணுவைக் குறிக்கும் அடிச்சொல். நீலமும் ஆகும்.

இராவண்ணன் > இராவணன்.

இப்படிப் பல சொற்கள் தெளிவுபடுத்தப்பட்டன.

இதன் தொடர்பின் ஆழ்ந்தநேயம் உடையவரே ஆஞ்ச நேயர் என்பதும் விளக்கப்பட்டது.  இராமர்பால்  ஆழ்ந்த நேயமே ஆஞ்சநேயமானது.

வால்மீகியார் தமிழறிந்தவர்.

All materials in this blog are copyright.  This material may not be published, broadcast, rewritten, or redistributed.

வெள்ளி, 4 மே, 2018

பேதி என்ற சொல்லமைப்பில அறியத்தக்கவை


பேதி என்ற சொல்லை ஆராய்ந்து அதைப் பகுதி வேறு விகுதி வேறாகப் பிரிக்கலாம்.   தி என்பது விகுதி என்றபடி பல சொற்களை ஆராய்ந்து வாத்தியார் மூலமும் கேட்டு உணர்ந்துகொண்டிருக்கிறோம்.  அந்த விகுதியாகிய தி என்பதை எடுத்துவிட்டால் மிச்சமிருப்பது பே.   இந்தப் "பே" என்ற பகுதிக்கு எருவாயால் வெளிப்படுதல் என்ற பொருளில்லை.  பே என்று யாரிடமாவது சொன்னால் அவர்கள் பேயைத்தான் சொல்கிறாள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்வார்கள். 

பே என்பது ஒரு சொல்தான்.  நிகண்டிலும் இருக்கலாம். ஆனால் வேறுபொருள் குறிக்கிறது.  நாம் ஈண்டுத் துணியும் பொருளைக் குறிக்கவில்லை.  ஆகவே அதை வினைச்சொல்லாக ஏற்றுக்கொள்ள இயலாது.

பே என்பது பேயைக் குறித்தாலோபேபே என்று உளறுவதைக் குறித்தாலோ நாம் நினைக்கும் பொருள் வரும்.  ஆனால் பேதி என்ற சொல்லில் அதற்கான சுவடு எதுவுமில்லை.

மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா.  உடனே தெரியவில்லை. காரணம் அது ஒரு திரிசொல். அதன் உண்மையான பகுதி பெய் என்பது.  பெய்தலாவது  நீர் அல்லது நீர்வடிவில் கீழிறங்குதல்.  

மழை பெய்கிறது.   குழந்தை  மூத்திரம் பெய்கிறான்.   கூரிய சீரிய சொற்களைப்  பெய்து அவர்தம் கட்டுரையை வரைந்துள்ளார்.

மழை தூறுகிறது என்றும் சொல்வோம். ஆனால் கேரளத்தில் அவன் தூறி என்றால் மலம் கழித்தான் என்று பொருள்.

எனவே இச்சொற்கள் பலவாறு பயன்படுபவை.

நீராகப்  பின்வழியால் பெய்தல் நிகழுமாயின் அதுவே பெய்தி ஆகிறது. இதிலுள்ள பெய் என்பது பே என்று திரிந்து  "பேதி" ஆகிவிட்டது.

செய் என்பது சே என்று திரிந்து சேதி வடிவம் கொண்டதுபோலுமிது.

ஆகவே பே என்பது வேறுபொருள் குறித்த ஒரு சொல். அது பெய் என்பதன் திரிபு.

பெய் > பே > பேதி.  கழிச்சல் என்பது பொருள்.

முதனிலை நீண்டாலும் நீளாவிட்டாலும் இடையில் வந்த ஒற்றுக்கள் கெடுதல் 
நடைபெறும்.  எடுத்துக்காட்டு:

காய்+கு+இது+அம் =  காய்கிதம் > காகிதம். யகரஒற்றுக் கெட்டது.  கு இது என்பன இடைநிலைகள், சொல்லமைப்புக்காக வந்தவை. இவற்றை எடுத்துவிட்டால் காய்+அம் என்று வந்து வேறு சொல்லாகிவிடும். இதைச் சொல் ஆய்ந்தவனறிப் பிறன் அறியான்.
காயவைத்த மரக்குழம்பு கொண்டு ஆன தாள்.  காய்தல் வினை.

வாய்ப்பாடம் சொல்பவன் வாத்தி.   வாய்> வாய்த்தி > வாத்தி.  வாய் - சினை.
பேர் உடையவள் பேர்த்தி.  பேத்தி.  யாருடைய பெயரை.?  ரகர ஒற்றுக் கெட்டது.


படித்துத் தெளிவாகவில்லை எனில்முதலில் தெரியாத வாத்தியிடம் கேட்டுக் குழப்பம் அடைந்து அப்புறம் தெரிந்த வாத்தியிடம் கேட்டுச் சென்மமுழுதும் குழப்பம் தீர்ந்த நிலையை அடைக.  கசடறக் கற்க அதுவே சரியான வழி.  

திருத்தம் பின்.

The British promoted castes and not Brahmanas or others

A reading in history should help,  here is a passage for you.

Looking at caste with colonial glasses makes one overlook the more obvious aspect of Tribalism. In fact, it was British who solidified tribal caste boundaries. Yes, the British initially recruited Mahars because in early decades of 19th century they were not in any position to choose. As we have seen, the British stopped Mahar recruitment by 1892 and preferred “handsome high caste men” in army. Introduction of postal services dealt a blow to traditional jobs of Mahars as “messengers”. Thus like many other low castes, Mahars had to migrate to urban centres of British India. In this environment, they became low paid labourers in their traditional professions. The recruitment to menial jobs were done on basis of caste and caste divisions were reinforced like never before

 

Far from the fluid, open-ended labour and tenancy relationships in rural environments of Peshwa’s Maharashtra, the Dalits became subject to caste conventions like never before in towns of British India [19]

Thus, we agree with Indologist Susan Bayly when she says that untouchability as we know it is largely a product of British colonialism

Untouchability as we now know it is thus very largely a product of colonial modernity, taking shape against a background of new economic opportunities including recruitment to the mills, docks and Public Works Departments, and to the labour corps which supported both the British and sepoy regiments[20]

Instead of making Manu the villain and attributing every blame to his Smriti, perhaps all Hindus need to wake up and read all the texts that are painted as fountainhead of discrimination. Caste discrimination existed and exists even now in our society. This is an undeniable fact and we should all work towards eliminating it. Instead of attributing all the blame of discrimination on one Smriti and one community, we should ask how much of our inherent tribalism was responsible. We should also ask whether by blaming one community we are only rekindling the same tribalism and furthering Caste animosities.

 


Article : True Indology.


Further reading:

Susan Bayly, Caste, Society and Politics in India from the Eighteenth Century to the Modern Age pp.226 

Please note that when you read material of this kind, you have to be circumspect. The British of the age of  colonial governance are not the same as the British of today.  One should not therefore harbour any grudge against the British of today for something that happened during the Raj era. as they do not know what transpired as we do not know what our great grandfathers were doing.

வியாழன், 3 மே, 2018

மன்னித்தல்

 மன்னித்தல் என்பது தொன்றுதொட்டுத் தமிழ் நாட்டுச் சிற்றூர்களில் வழங்கிவருவதாகும்.

பெரும்பாலும் ஒருவருக்கு இன்னொருவரிடம் உள்ள நட்புறவானது, சில காரணங்களால் வீழ்ச்சி அடைந்துவிடக்கூடும்.  இவர் விருந்துக்கு அழைத்து, அவர் வருகிறேன் என்று சொல்லி, விருந்து நிகழ்ச்சிக்குப் போகவில்லை என்றால்  மனம் புண்பட்டுவிடும்.  அப்போது நேராய் நின்றுகொண்டிருந்த  நட்பு வீழ்ந்தது என்பது தெளிவு.

மன்னுதல் என்றால் நிலைபெறுதல்.  நிலைபெற்று -- மன்னி  நின்ற நட்புறவு, ஒடிந்து வீழ்ந்துவிட்டது.  அதை மீண்டும் நிலைபெறுவிக்க -  மன்னிக்க வேண்டும். "  மன்னிக்க வேண்டும்;  "  என்று கேட்கையில்  " நிலைபெறச் செய்ய வேண்டும்"   என்பதுதான் வேண்டுகோள்.  வேறேன்றுமில்லை.

வீழ்ந்தது எழவேண்டும்; ஒடிந்தது ஒட்டவேண்டும். அதுதான் "  மன்னிப்பது" எனப்படுகிறது. 

உறவை மீண்டும் நிலைகொள்ளச்செய்ய ஒத்துக்கொண்டால்,  அதுவே.  பொறுத்தலாகும்.   முன்போல அன்புடன் தொடர்வோம் என்பது.

மன்னுதல்  -  அடுத்தல்; நிலைபெறச் செய்தல்.
மன்னல்  என்பதும் அது.

மன்னித்தல் என்பது பிறவினை.

மன்னித்தல் என்பது வேற்றுமொழி அகரவரிசைகளில் இருந்தால் அதை இங்கு பின்னூட்டம் செய்யவும்.

மன்னும் இமயமலை எங்கள் மலையே!



புதன், 2 மே, 2018

குருவிபோல அமைந்தது புள் பக விழுமானம்.

புஷ்பக விமானம்

விழுமிய = சிறந்த.  விழு = சிறந்த.  வி -  சுருக்கத் தலையெழுத்து.
 வி மானம். 

புட்பக விமானம்/ வானூர்தி

பூக்கள் செடியிற் பிரிந்து வெகுதொலைவுக்குப் பறப்பதில்லை. வெறும் பூக்களால் ஆன வானூர்தி அல்லது விமானம் பறக்கவியலாதது.
கடவுள்கள் பறப்பதற்கு விமானம் அல்லது வானூர்தி தேவைப்படுவதில்லை. அவர்கள் எப்படியும் பறக்கலாம்.

ஆகவே இலங்கை சென்ற  புட்பக விமானம் ஓர் இன்றியமையாத கருவியாகச் செயல்பட்டிருக்கவேண்டும். வெறும் பூக்கள் அல்ல.

புள் + பகம் = புட்பகம் ஆகிறது.

புள் என்பது பறவை.

பகம் என்பது பகுதி. பகு+ அம் = பகம். இவ்விமானம் அல்லது வானூர்தி  முன்பகுதி பறவை போன்ற  உருவிலானது என்பது பொருள்.

இது புஷ்பக என்று பிறழ உணரப்பட்டு , புஷ்பம் என்பதனோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.  புள் என்ற சொல் தெரிந்த வான்மீகியும் தமிழனாதல் வேண்டும்.சங்கப் புலவன்.  இராமகாதையில் பல சொற்கள் தமிழினுடன் தொடர்பு உடையவை ஆகும். இது முன்னர் நாம் கூறியதேயாம்.

தமிழிலிருந்து சில நூல்கள் சமஸ்கிருதத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட போது, எழில்மலை என்பதை எலிமலை என்று பிறழ உணர்ந்து,  அந்த மணடலத்தை ஆண்ட மன்னனும் எலி வருக்கத்தைச் சேர்ந்தவன் என்று தவறான ஒரு கதையைக் கட்டி, உலவவிட்டு விட்டனர் நம் பண்டிதர்கள். மன்னனும் எலி உருவினன் அல்லன்; மலையும் எலிமலை அன்று.  தவறான மொழிபெயர்ப்பு.
அதுபோலவே பகுதி குருவி போன்று அமைக்கப்பட்டது புட் பக விமானம்.
இப்படி அமைத்தது பறக்கும்;   பூ என்னும் புஷ்பம் பறக்காது. இதை உணரவேண்டும்.

எழில் > எலி வருக்கம் என்பது மூஷிக பரம்பரை என்று மொழிபெயர்த்தனர்.  மேடை நாடகங்களில் அம்மன்னன் பாவம் எலிமுகத்தன் ஆனான்.

வி என்பது விழுமியது என்பதன் முதலெழுத்து.
மானுதல் = ஒத்திருத்தல். மானு+ அம் =  மானம்.
(குருவியை) ஒக்க அமைந்தது.
வி+ மானம் = விமானம்.
மனிதன் குருவியைப் பார்த்துப் பறக்கக் கற்றுக்கொண்டான்
என்பதே உண்மை.  ரைட்  சோதரர்களும் முதலில் இறக்கை அணிந்துதான்
பறக்கப் பார்த்தனர்.