ஞாயிறு, 13 மார்ச், 2016

சி- போதத்தின் 7ம் பாடலைப் பொருளுணர்.......

இனி சிவ ஞான போதத்தின் 7ம்  பாடலைப்  பொருளுணர்ந்து கொள்வோம். 



யாவையும் சூன்யம் சத்தெதிர் ஆகலின்
சத்தே அறியா தசத்தில தறியா
திருதிறன் அறிவுள திரண்டலா ஆன்மா.


சத்து எதிர் ‍: சிவத்தின் முன்னிலையில் (சன்னிதானத்தில்)

யாவையும் சூன்யம் : எல்லாமும் ஒன்றுமின்மையே.

சத்தே அறியாது : ஆகவே சிவம் எதையும் அறியாது.
அதாவது, சிவம் அறிந்துகொள்வதற்கு சிவத்தின் முன்னிலையில் எதுவுமே இல்லை.( சூன்யமான நிலை)

நாம் அறியவேண்டியது :   சிவம் உலகைப் படைக்குமுன் ஒன்றுமில்லை ஆதலால் சிவம்   அறிதற்குப்  பொருள்   எதுவும் இல்லை.

அசத்து அறியாது: சிவத்தின் வேறான இவ்வுலகமும் சடமாதலின்
சிவத்தால் படைக்கப்படினும் சிவத்தை அறித   லாகாது;

இலது: இவ்வுலகிற்கு அறிவு என்பது இல்லாததனால்.

உலகில் படைக்கப்பட்டவை சடம்; சிவத்தை  அறியாது;
ஆன்மாவின் நீங்கிய மனித உடலும் சடமே: அதுவும் சிவத்தை அறிய முடியாது.
மாயையும் சடமே: அதுவும் சிவத்தை அறியாது.
சடமென்பது அறிதிறம் அற்ற ஒன்று என்பதாகும்.

இரண்டலா ஆன்மா: சிவமும் உலகமும் ஆகிய இரண்டும் அல்லாத மூன்றாவதாகிய ஆன்மாவானது;

இரு திறன் அறிவு உளது : சிவமும் உலகமும் ஆகிய திறத்தன இரண்டையும் அறியும் அறிவாற்ற‌ல் உள்ளதாகும்.

ஆண் பெண் என்னும் பாலியல் வேறுபாடு மனித உடலுக்கும் விலங்குகட்கும் வேறு உயிரினங்கள் சிலவற்றுக்குமே ஆதலின்,
சிவம் என்பதே இங்கு ஏற்ற சொல்வடிவம் என்க. சிவன் சிவை
என்பன மொழிமரபு காரணமாக புழங்கும் வடிவங்கள். அல்லா, God -the usual pronoun being He with a capital H, என்பன போலும் பிறமொழிச் சொற்களும் அவ்வம் மொழிமரபுகளால் அறியப்படுவன என்பதுணர்க.

சிவத்தை ஆணாக  (சிவனாக) வழிபடினும் பெண்ணாக  ( பார்வதி ,துர்க்கை . சிவை ​ ....  இன்ன பிற ​ ) வழிபடினும் ஒன்றுதான். காரணம் சிவம் ஆணுமில்லை, பெண்ணுமில்லை.  உயிரினங்களுள்  இனப்பெருக்கத்துக்காக ஏற்பட்டவை இப் பாகுபாடுகள். இறைமைக்கு இனப்பெருக்கமில்லை. இறை தனித்திருந்து இலங்கும் தவமணி.   இங்கு தவமாவது இயல்பில் தீமை இலாமை.  சிவஞான  போதம்  சிவத்துக்கு  ஆண்பால் விகுதியோ  பெண்பால் விகுதியோ கொடுத்துப் பாடவில்லை.  "ஞானம்"    என்று  வரும்போது இதில் கவனமாக  இருந்துள்ளனர் பண்டை  ஞானாசிரியன்மார் 

பொருள் அறிக  ; இன்புறுக .

will edit later.







சனி, 12 மார்ச், 2016

சி- போதத்தின் ஏழாம் சூத்திரம்

தன்னிகரற்றுத் தானேயாய் நிலைத்தியங்கும் சிவமானது,  எதையும் நோக்கிச் செல்லாது. அது என்றும் இருந்தபடி இருப்பது.

உலகம் என்பது அச்சிவத்தினால் படைக்கப்பட்டது.  ஆனால் சடம். அதற்கு அறிவு ஏதும் இல்லை. அதுவும் எதையும் நோக்கிச் செல்வதற்குரியதன்று. அதுவும் இறைவனால் அழிவுறுங் காலம்வரை  இருப்பதுதான்.

மூன்றாவதாக உள்ளது மற்றொன்று.  அதுவே ஆன்மா. அதற்கு அறிவு உள்ளது. உலகிற்கு ‍ அதாவது உலகமெனும் சடத்துக்கு அறிவு இல்லை. ஆகவே ஆன்மா அறிவுடைமையால் சிவத்தை நோக்கிச் செல்லும் தகுதி படைத்தது. இருந்தவாறிருப்பதில்லை. மாறிச் சிவத்தை நோக்கிச் செல்வதாகும். ஆன்மா அன்றி வேறு படைப்பு எதற்கும்  அத் தகைமை இல்லை என்பது உணர்க.

ஆன்மா தவிர்த்த அனைத்துப் படைப்பும் உலகம் என்பதில் அடக்கிக் கூறப்பட்டது.

யாவையும் சூன்யம் சத்தெதிர் ஆகலின் 
சத்தே அறியா   தசத்தில  தறியா  
திருதிறன் அறிவுள  திரண்டலா ஆத்மா.


இது சிவஞான போதத்தின் ஏழாம் சூத்திரம் ஆகும். மேல் முன்னுரைத்தது பொதிந்த இந்தப் பாடலை அடுத்துப் பொருளுணர்ந்து கொள்வோம்.

வெள்ளி, 11 மார்ச், 2016

"சிவகவி' யில் சமய விளக்கம்

எம். கே  தியாகராஜ பாகவதர் உச்ச நிலை நட்சத்திரமாக விளங்கிய காலத்தில் ஒரு   நாள் அவர் கல்விக் கடலாகத் திகழ்ந்த  அருள்மொழி அரசர் திருமுருக கிருபானந்த வாரியாரை மிக்கப் பணிவுடனும் அடக்கத்துடனும் அணுகினாராம்.   எப்படி ?    வாரியார் அடிகள் சொற்பொழிவு நடாத்திக்கொண்டிருந்த  மேடைக்கே சென்று அவர் காலடிகளை வணங்கினாராம்.    இப்படி அவரை அணுகியதன் பயனாக  பாகவதருக்கு  ஒரு கதை  கிடைத்தது.  அந்தக் கதையே பிற்காலத்தில் " சிவகவி " என்ற திரைச் சித்திரமாக வெளிவந்து  அதில் நடித்த யாவரின் புகழையும் உயர்த்தியது.
தம் பெயரைப் படத்தில் காட்டவேண்டாம் ,  கதையை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று வாரியார் அடிகள் பாகவதரைப் பணித்தாராம்.

பெயர் சிவகவி என்றிருந்தாலும் உண்மையில்  அது முருகனைப் பாடமாட்டேன் சிவம் ஒன்றையே பாடுவேன்  என்று அடம் பிடித்த பொய்யா மொழிப் புலவரின் கதை .

இதை மக்களிடம் கொண்டு செல்ல   பாபநாசம் சிவன் எழுதிய

வள்ளலைப் பாடும் வாயால்   ---- அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ -----
வெள்ளிமலை வள்ளலைப் பாடும் வாயால்  -----   அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ ------    என் தன்
சாமியைப் பாடும் வாயால்  -------  தகப்பன்
சாமியைப் பாடுவேனோ ?

அப்பனைப் பாடும் வாயால்-------ஆண்டிச்
சுப்பனைப் பாடுவேனோ? ------ என் தன்  அம்மை
அப்பனைப் பாடும் வாயால்  ------  பழனியாண்டிச்
சுப்பனைப் பாடுவேனோ?

வள்ளியின் கண்வலை வீழ் சிலை வேடன்
கள்ளனைப் பாடுவேனோ ?


அம்பிகை பாகன் எனும் -----  அகண்ட
சுயம்புவைப் பாடும் வாயால்
தும்பிக்கையான் துணையால் -----  மணம்பெறும்
தம்பியைப் பாடுவேனோ?

என்பது படத்தில் காட்சிக்கேற்ற  சிறந்த பாடலாய் அமைந்துவிட்டது .

 புலவரின் தருக்கை அடக்க முருகனே  வேடனாக வந்து புலவரின் பாடலில் பொருட்குற்றம் கண்டு பொன் பற்றினின்றும் அவரை விடுத்துத்   தன்  அருள் வடிவு தெளியக்காட்டி  ஆட்கொள்ளுகின்றான்.
அப்போது பாகவதர் பாடும் :  சொப்பன வாழ்வில் மகிழ்ந்து  சுப்ரமணிய சுவாமி  உனைமறந்தார்  என்ற பாட்டு மிகவும் புகழ்ப்பெற்ற இனிய பாடல்.

சிவமும் யாமே  முருகனும் யாமே  பிற கடவுளர்களும் யாமே,  யாம் ஒருவரே ---- என்ற   இறை ஒருமையைப்  படம் விளக்கிச்  செல்கிறது.

இந்து மதத்தின் கடவுட் கொள்கை  அதுவேயாம் .இதை இராமகிருஷ்ணரும்  விவேகாநந்தரும் நன்கு நிலைநிறுத்தி யுள்ளனர்.   நம் சைவத் திருமுறைகளும்  பறைசாற்றுவதும் வேறன்று.

முருகு என்றாலே அழகு என்று பொருள். இயற்கை அனைத்தும் அழகன்றிப் பிறிதில்லை .முருகன் இவ்வியற்கை அழகின் அம்சம் அல்லது அமைப்பு என்பதை உணரவேண்டும் .சிவஞான போதம் இவ்வுலகை  -  இயற்கையை  இறைவனின் சான்றாக எடுத்துரைக்கிறது,

The lyrics amount to excellent poetry.  After all William Shakespeare was also a stage poet.




   

வியாழன், 10 மார்ச், 2016

ஏவும் அணியில் எலியும் இணைந்திடில்....

எப்போதும் வீட்டில் இலாததினால் ---- பின்னால்
எலிகள்  புகுந்து வி-  ளையாடியே  .
ஒப்பாத நாசங்கள் செய்தகதை ---- நான்
உரைத்திடில் கேட்டே இரங்குவிரோ!

அடுப்பினில்  வாயுக் குழாய்தனையே---- கடித்தே
அங்குமிங்  கும்சிதறச் செய்ததனால் 
கடுப்பினில் கம்பால் அடித்துத் துரத்துதல்
கால  மனைத்திலும்  பின்வருமோ?

மரத்துக் கதவினில் கை நுழைக்கும் ---- படி
மலைத்துக்  குலைந்திட ஓர் துளையே
அடைத்ததைச் சீர் செய ஐம்பது வெள்ளிகள்
ஆங்கவற்    றோடிணை  சேர்துயரே!

பாவம் பணிப்பெண் உழைப்பு மிகுந்தது
பண்ணினள் தூய்மை  அவட்குநன்றி
ஏவும்  அணியில் எலியும் இணைந்திடில்
என்னசெய்  வாள்  இதை   எங்க்குசொல்வோம் ?


பூ கவி பாடினால்.............

ஒரு தோட்டத்துப் பூ கவி பாடினால் இப்படிப் பாடுமா?



தோட்டத்தில் மலர்ந்திருந்தேன்
தொட்டிட வந்தாய் தோழி
காற்றென அசைத்தாள் என்னைக்
காத்தனள் கொஞ்சநேரம்;
ஆட்டமோ என்னைக்கண்டே
அசையாதே என்றவாறு
பூட்டினாய் விரல்கள் என்மேல்;
பூவெனைப் பறித்தேவிட்டாய்!

வருடினாய் விருப்பம்போலே
வகைகெட மாட்டிக்கொண்டேன்
நெருடினாய் நிமிர்த்திமோந்து
நேர்ஒரே முத்தம்தந்தாய்!
குருடியே` என்றேவையக்
கொதித்திட வலிமையில்லை.
மருள்தரக் கசக்கிப்பின்னே
மாய்ந்திடக் களைந்திடாதே!

கவியை உருக்குலைத்து .......

சீரும் தளைமற்றும் சேராக் கவிதைக்குள்
ஊறும் அழகை உருக்குலைத்து --- வாருமே
வெண்பா விளைந்திடக் காண்போம்; வெளிறிய
மண்பாவா னாலும்    மதி


செவ்வாய், 8 மார்ச், 2016

ஆஸ்திகம்

ஆஸ்திகம் -   இது அருமையாக அமைந்த சொற்களில் ஒன்று. அதன் பொருள் இறையுண்மை என்பதாகவே இதுபோது வழங்குகிறது.  "இல்லை  என்பார் யாரையா ? என் அப்பனைத் தில்லையில் போய்ப்  பாரையா !"   என்று சுத்தானந்த பாரதியார் பாடினார் . தில்லையில் பற்றரைக் கவர்பவனாய்  அவன் உள்ளான். ஆனால் எங்கும் இருப்பவன் இறைவன்.

யாண்டும் உளனால் பற்றுடையானுக்கு வேண்டிய வேண்டியாங்கு உதவி புரிபவனாய்  அவன் இலங்குகின்றான்.  இறைப் பற்றனுக்கு இல்லைஎன்பானுக்கு  இல்லாத பற்றுக்கோடுகளெல்லாம்  இயல்கின்றன. அவன் நேரில் வாராதபோதும்,  அவன் உள்ளான்,வந்து  உதவுவான் என்ற நம்பிக்கை உள்ளது.  இதுவே  "ஆசு "   என்பது.

ஆதல் என்ற வினையிலிருந்து ஆசு என்கிற சொல் அமைகிறது. சு என்ற விகுதி அல்லது  இறுதிநிலை  வினையாக்கத்திற்கும்  உதவும் .  ஏய் !  என்று
விளித்துத்  திட்டுவதற்கும் உதவும்.  ஏ >  ஏசு . (ஏசுதல் ).  குகை மாந்தன் அவ்வளவு பேசத்தெரியாதவன்.  அவன்   பே !  பே!  பே !  என்று ஒலி  எழுப்பவே தெரிந்தவன், அதனோடு  -சு  விகுதி இணைந்து பேசு  என்னும் சொல் அமைந்தது.  சொற்கள் அமைதற்கும்  விகுதிகள் அமைதற்கும்   காலம்  தேவைப்பட்டிருக்கும்   மொழியானது மெதுமெதுவாக வளர்ந்து வந்த கலை.
Rome was not built in a day!  எவ்வாறாயினும்,   இப்போது அறிய வேண்டியது  -சு விகுதி வினையிலும் பெயரிலும் வந்துறும் எனற்பாலதே,  ஆசு  என்பதால் துணையாதல், உதவியாதல்,  பக்கம் நின்று நடைபெறுவித்தல் என்று இன்னும் யாம்  சொல்லாத  பல ஆக்க  நிலைகளைக் காட்டுதலால்  அஃது எத்துணை இனிமையாய் அமைந்த  சொல்  என்பது புலப்படும் .

ஆத்திகனுக்கு அதிகமான பற்றுக்கோடு  உள்ளது.  உண்மையான அல்லது மன நிலை சார்ந்த ஓர் ஊக்கம் தருவதாக அது இருக்கிறது.  ஆகவே -

ஆசு  +  அதிகம் = ஆசதிகம் >  ஆஸ்திகம்.

அல்லது:

ஆசு  + திகை + அம் >   ஆசு  +  திகம் >  ஆஸ்திகம்.

திகை அம்   என்பதில்  ஐ கெட்டது .  கெட்டால்    திக் + அம்  =  திகம்.

திகை > திசை;
(திக் )   >  திக்கு.  (திக்குத் தெரியாத காடு)  திக்கு = திசை.
(திக் )  >  திகம்   ( அம் - விகுதி.)
(திக் )     திகை.   (திக்​ ஐ.)    ஐ - விகுதி,

ஆதரவான போக்கு  ஆத்திகம்  என்பது பொருள்.   கடவுளுக்கு (அவன் உண்மையை)  ஆதரிக்கும் போக்கு;   மனிதனுக்குக் கடவுள் ஆதரவு கிட்டும் போக்கு.  பொருள் விரித்தல் கூடும்.

ஆசு+  திகம்  என்பதில் ஓர்  எழுத்தை மாற்றி  ஆஸ்திகம்  ஆயிற்று.

இது இருபிறப்பி  அல்லது  இரட்டுறல் அமைப்பைக் கொண்டது.




மெய்ப்பு நிகழ்ந்தது. திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை.
29122020. No errors noted in our prepost draft (before posting). If errors appear in our
finished post in your screen , these may be owing to third party interference.( 
e.g. hacking or autochanges introduced into screen appearances not residing
in our system. Kindly report.

போர்த் தந்திரங்கள்


http://sivamaalaa.blogspot.sg/2016/03/blog-post_6.html

இதன் தொடர்பில் "He who runs away stays to fight another day"   என்பது ஆங்கிலப் பழமொழி ." Tactical withdrawal"  என்பதுமுண்டு .

"Tah tan;  tan tah"  என்பது சீனப் பழமொழி ."தயங்கு  தாக்கு; தாக்கு தயங்கு."

"பகைவனுக்கு  அருள்வாய் "  என்பது பாரதி பாடல்.

  -      

பகைப்போர்

புகை இல்லாமல்  நெருப்பு இலை என்பார்கள்.1 இப்போது எரிவாயு  அடுப்பைப் பற்றவைத்தாலே எந்தப் புகையும் இல்லாமல் அழகாக நீல நிறத்துடன்  எரிகின்றது. நீர் புகையைப் பார்க்கவில்லையே தவிர புகை ஒளிந்து கொண்டிருந்து பின் மறைந்து எரிந்தது என்று நீங்கள் கூறக்கூடும்! இருக்கலாம் .......எனக்குத் தெரியவில்லை.

பகை இல்லாமல் போர் இல்லை எனலாமா? போர்கள் பகை ஒன்றாலேயே ஏற்படுவதில்லை.  மூல காரணம் என்பது பொருளியலாக இருக்கலாம்.  அதனால் மனக்கசப்பு வளர்ந்து பகையாக முற்றிப்   போராய் முடியலாம். தொடக்கத்தில் பகை இல்லாவிட்டாலும், அது பின் ஏற்படலாம் என்று தெரிகிறது.

இது பற்றி நன்கு அறிந்த பட்டறிவாளராக  நீங்கள்  இருக்கக்கூடும்.

இப்போது பகைப்போர் என்ற சொல்லைக் காண்போம்.  \

பகை +  போர்  =  பகைப்போர் எனில்  பகையின் காரணமாகிய போர் என்று பொருள்படும்.

பகைப்போர் -   பகை கொள்வோர்  என்றும்  பொருளாகும்,

இவற்றை  அறிந்து பயன்படுத்துதல் உங்கள் பொறுப்பு..


1  நெருப்பு இல்லாமல் புகை இல்லை. ( நெருப்புக்குச் சான்று புகை) .  பழமொழி .

ஞாயிறு, 6 மார்ச், 2016

புறப்பொருளில் தோற்றவர்க்கு இரக்கம்.



இந்தப் புறப்பொருட் கொளுவைச் சற்றுக்  காண்போம்.

அழிகு நர் புறக்கொடை அயில்வாள் ஓச்சாக்
கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று.

என்பது 20-ம் பாடல்.  வஞ்சித் திணையில் இது ஒரு துறை ஆகும்.

சரணடைந்தவர்களைக் குண்டுவீசித் தாக்கிய கொடியவர்க்கும் அதற்குத் துணைபோன அடுத்தார்க்கும் உண்மையில் தெரியவேண்டிய ஒரு பண்பாட்டை இக்கொளு எடுத்துக்கூறுகிறது. தோற்றவர்க்கு இரங்கிய தூயபண்பினன் இறுதியில் ஒழிக்கப்பட்டது  எத்தகு கேடு!

போரில் வன்மை அழிந்தவர் இரு கைகளையும் உயர்த்தித் தம் முதுகையும் காட்டுகின்றார். அந்த நிலையில் வெற்றி பெற்றவன்  தன் கூரிய வாளைச் சரணடைந்தோனின் முதுகில் குத்திவிடுவது எளிதுதான்.   ஆனால் குத்தக்கூடாது என்கிறது தமிழர் பண்பாடு. வாளைக் குத்தாமையே வீரப் பண்பாடு என்கிறது.  இதைப் பக்கலில் நின்று கண்டோர் அந்த வீரப் பண்பினைக் காதலிக்கின்றனர் என்கிறது நம் புறப்பொருள் இலக்கணம்.

சரணடைந்தோனைக் குத்துதல் கோழைமை.  அவனைக் காப்பாற்றுவதே  வீரம்.

வஞ்சியில் இது தழிஞ்சித் துறை ஆகும்.


You may continue reading on this topic . Click for more:


வென்றபின் பகைவனுக்கு அருள்செய்
http://sivamaalaa.blogspot.sg/2014/07/blog-post_24.html


சேரனுடன்  மோதாதே
http://sivamaalaa.blogspot.sg/2014/07/blog-post_39.html


போர்த் தந்திரங்கள்
http://sivamaalaa.blogspot.sg/2016/03/blog-post_91.html


சனி, 5 மார்ச், 2016

"விற்பன்னர்"

ஒரு பொருளை விற்பதற்குச் சில வேளைகளில் வணிகர் சிலர் மிக்கத் திறமையுடன் பேசுவர்.  மந்திரங்கள் சொல்லி, பாம்பு  விளையாட்டும் காட்டி அது கடித்தால் இந்த மருந்தைப் போடுங்கள்  விடம் ஏறாது,  ஏறின விடமனைத்தும் இறங்கிவிடும் என்றெல்ல்லாம் விளக்கம் தருவதற்குப்  பேச்சுத் திறன் முதன்மை  யானது ஆகும்.  இவர்கள் விற்பனைக் கலைஞர்கள்

அறிஞர்  சிலர்க்கும் இத்தகு திறன் காணப்படுகிறது.

ஒரு சமயம் ஒரு சீன நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.  இவர் சிங்கப்பூர் வானூர்தி நிலையத்தில் அறிஞர்  நெல்சன் மெண்டெலா  அவர்களின் உரையை நேரில் கேட்டவர்.  "இது அன்றோ  உரை! சிலர்  எழுதி வைத்துக்கொண்டு பேசுகிறார்களே! அதிலும் கூட தடுமாறுகிறார்களே "   என்றார்.   நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்  அரசியல் அறிஞர் லீ குவான்  யூ அவர்களும் சிறந்த உரைவலர் ஆவார்.

இவர்கள் திறம் ஒரு வகையில் விற்பனைத் திறத்துடன் ஒப்பீடு செய்யத் தக்கது ஆகும்.  செலச் சொல்லும் செந்நாப்போதார் சீர்மிக்க இம்மாமனிதர் .

இது தொடர்பில் "விற்பன்னர்" என்ற சொல்லை அலசுவோம்.

விற்பு  =  விற்பனை . விற்பனைக் கலை குறிக்கிறது.

அன்னர்  =  போன்றவர்கள்.

கலை குறித்த "விற்பு"    அதன் கலை உடையாரைக் குறித்தது.   இது ஆகுபெயராய் நின்றது.

முழு விரிப்புடன் சொல்லின்  "விற்பரன்னர் " எனல் வேண்டும்.  இரண்டு "அர் "
இன்றி  ஒரு அர்  வரச்  சொல் அமைந்தது சொற்புனை புலமை ஆகும்.  ஒரு ரகரம் மறைந்த இடைக்குறை எனினுமாம்.

வில் போல் குறிவைத்துப் பன்னுவோர் என்று கூறுவதும் கூடும் .  பன்னுதல்  -  சொல்லுதல்.

அறிவோம்  மகிழ்வோம்.


வெள்ளி, 4 மார்ச், 2016

இராத்திரி

இரவு  இரா என்பன தமிழ் .   ஆனால் இராத்திரி என்ற சொல்வடிவமும் தொன்று தொட்டு தமிழ்ப் பேச்சில் இடம்பெறத் தவறுவதில்லை. இரவு என்பது தலை கிள்ளப்பட்டு ராவு என்றும் தோற்றரவு  (அவதாரம் )  செய்யும்.  சில வேளைகளில் ரா என்றுமட்டும் வரும்.  ராவிலே படுக்கும் போது கால் கை மூஞ்சி எல்லாம் கழுவிவிட்டுப் படு என்று அம்மா சொல்வதைப் பிள்ளைகள் கேட்டிருப்பார்கள்.  இரவு குறிக்கும் இச்சொல் ஏன் இத்துணை உருவுகள்  கொள்கின்றன ? எல்லாம் நம் தமிழரின் சொல் பல்வடிவப் புலமைதான் !

இனி இராத்திரி என்பதனை உற்று நோக்குவோம்.

இரா+   அத்து + இரி

அத்து  என்னும் சாரியை இங்கு வந்துள்ளது.

இவர் நடனத்தில்  புலி  என்கையில்  நடனம்+  அத்து + இல் என்று அத்துச் சாரியை வரும்.  அத்து என்பதை விட்டு, நடனமில் புலி என்று புணர்த்தினால்  அது நடனம் இல்லாத புலி என்று கொள்ளவேண்டி வரும்.

ஆங்கு, பொருள் கெடுமன்றோ?

இருத்தல்  என்பது மலயாளத்தில் இரி என்று வரும்.  அன்றேல் இரு என்னும் தமிழ் இகர விகுதி பெற்றது எனினுமாம்.

இதை ஒரு வாக்கியமாமாக  எழுதின்,  இரவு நேரமாக இருத்தல் என்று விரிக்க.

அத்து + இரி

அத்து  என்னும் சாரியை இங்கு வந்துள்ளது.


இதை ஒரு வாக்கியமாமாக  எழுதின்,  இரவு நேரமாக இருத்தல் என்று விரிக்க.

இரவில் தூங்கு.
இராத்திரி தூங்கு.
இரவு நேரமாய்........

 இருக்கையில் தூங்கு.

இதிற் சிறக்கும் பொருள் விரிப்பு யாதுமில்லை எனினும் இதுபோலும் விரிப்புகள் பேச்சில் வருவனவே. இயல் நூலை ஏந்தி உசாவிக்கொண்டு யாரும் உரையாடுவதில்லை.

திரி என்பதை திரி என்னும் தனிச்சொல்லாகக் காணின்,

இரா + திரி    இராத்திரி  ஆகும்.

இரவாகிய திரிபு,    இரவாகிய மாற்றம்  எனல் பொருந்தும்.

இப்படி இவ்வழக்கு எங்கும் பரவி நிற்பது தமிழன் ஒரு காலத்து யாண்டு பரவி இருந்ததைக் காட்ட வல்லது.

இராத்திரி என்பது இருவேறு வகைகளிலும்  பொருந்தி வரும் சொல் அமைப்பு.

edited on 21.10.2022











இடையில் நின்ற அதுவும் இதுவும்

சொற்கள் பலவற்றைப்  பிரித்து  ஆய்வு செய்வோர் பிரிக்கப் பட்ட துண்டுகளுக்கு இடையில்  அது  இது   என்பன  நிற்றலைக் காண்பர்.
எடுத்துக்காட்டாக  பருவதம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

பருத்தல் என்பது தமிழ் .  உள்ளது பரிது ( பெரிது ) ஆவதைக் குறிக்கிறது இந்தச் சொல்.  சிறு சிறு மேடுகளையும் குன்றுகளையும் பார்த்துப் பழக்கப்பட்ட ஒருவன்  ஒரு பெரிய மலையைக் கண்டவிடத்து  வியக்கிறான்;  பெருத்தது, பருத்தது என்று அவன் அதை வருணிக்கிறான். இப்படி அமைந்ததே பருவதம் என்ற சொல்.

பரு +  அது + அம் =  பருவதம்.

இதில் அது என்னும் சுட்டு இடையில் நின்று சொல்லமைப்புக்குத்  துணை புரிந்தது.  மலை என்ற சொல்லும் கண்டு வியத்தல் என்னும்  மலைவு என்பதனோடு தொடர்புடைய கருத்தே ஆதலின் இவற்றின் கருத்தொருமை நன்கு புலப்படுவதாகும்.

இடையில் நின்று சொல் அமைப்புக்குத் துணைசெய்வனவற்றை இடை நிலை என்றனர் இலக்கணியர் .  ஆனால் வினைமுற்றுக்களை ஆய்வு செய்த காலையே அவர்கள்  அங்ஙனம் கூறினர் .  வினைமுற்று அல்லாத பெயர்களிலும் இது காணப்படுகின்றமையின்  தமிழில் வினைமுற்றுக்கள் அமைந்த விதத்தினைப் பின்பற்றியே  பருவதம் முதலிய சொற்கள் பிற்காலத்துப் புனைவுற்றன என்று முடித்தல் பொருத்தமே.

இடையில் அது என்னும் இடைநிலை  நிற்றல் தேவை ஆயிற்று.   இன்றேல்  பரு+ அம்  =  பரம் என வந்து  பர+ அம் =  பரம் என  உருக்கொண்டு இறைவனைக் குறிக்கும் சொல்லுடன்   மலைவு  (குழப்பம் )   நேர்தல் காண்க.


தெய்வதம் என்ற சொல் இப்படியே புனைவு பெற்றது என்பது தெளிவு.

தெய்வம் + அது + அம் =  தெய்வ + அது + அம்  = தெய்வ +  து + அம் >   தெய்வ + த் + அம் >   தெய்வதம்.

இரண்டு அகரங்கள் வரின் ஓர் அகரம் வெட்டுப்படும். அது நிலைச்சொற்பாகத்தினது ஆயினும்  வருஞ்சொற்பாகத்தினதாயினும்  முடிபு வேறுபடுதல் இல்லை.

இடை நிலை இறுதி உகரமே மறையு,ம்,  இறுதி விகுதி அகரத் தொடக்கத்தினதாயின்

அப்தெய்வத என்ற சங்கதச் சொல்லில்   அது என்பது நின்று அம் என்பது  வாலிழந்த நிலையில் முற்றுப்பெற்றமை காண்க.   அப்தெய்வத எனின் நீரைத் தெய்வமாய்க் கும்பிடும் கொள்கையர் என்பதாம்.  இவர்களை வேறுபடுத்திக் காண ஒரு சொல் தேவைப் பட்டதுபோலும். அக்கினியை வணங்குதலினின்று  வேறுபாடு இதனால் அறியப்பட்டது. இக்காலத்து இரண்டும் இணைப்புற்றமை காணலாகும்.

பெரிது  சிறிது என்பவற்றில்  இகரம் வந்தமை காண்க.  வேறு சொற்களில்  " இது"   இடைநிலை  வந்தது பின் ஓர் இடுகையில் காண்போம்.

"  அது" இடை நிலையை  விரியப் பயன்படுத்திச்  சமஸ்கிருதமும் பெருவெற்றி அடைந்தது --  சொல்லமைப்புக் கலையில்.






சிவனுக்கு ஒரே ராத்திரி - நம் கடமை

சிவனில்லா இராத்திரிதான் எங்கே தம்பி -----அந்தச்
சிவனின்றிப்   பகலில்லை இரவுமில்லை
அவனில்லா உலகில்லை என்னும்காலை ----- பகல்
அவற்கில்லை  இரவொன்றே என்னலாமோ

அனைத்தினையும் விட்டு  நாமும் அவன்நினைந்து ----உள்ளம்
அவனிற்போய் மூழ்கிவிட  இரவும் ஒன்றே !
நினைத்தபடி வீண்பேச்சு பயன்இல் காலம் ----- வேண்டா
நேரியதோர் பண்பாட்டின் இராத்திரியாமே! 

புதன், 2 மார்ச், 2016

அபத்தம்

அபத்தம்

எதிரிகட்குப் பற்றலர் என்றும் கூறுவதுண்டு.  எவ்வாற்றானும் பொருந்திவராதவர்களுக்கு அந்தச் சொல் மிக்கப் பொருத்தமுடையதே. பானையில் உள்ளது பத்தாது ‍  அரிசி கிளைந்து வைக்கவேண்டும் என்று பேசுவர். பற்றாது என்பதே பத்தாது என்று பேச்சில் மாற்றம் பெற்று வரும். என்ன நடந்தது என்பதை எந்து பற்றி என்பர் மலையாள மொழியில்! எதைப் பற்றிப் பேச்சு நடக்கிறது என்று கேட்பதுண்டு.

பற்று என்ற சொல் பற்றி என்றாகிப் பின் பத்தி என்றாகி இறுதியில் பக்தி என்று விளைந்தது. "பத்தி செய்து பனுவலால் வைத்ததென்ன வாரமே!"  என்ற தாயுமானவரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.
தேவாரத்தில் "பத்தி" என்றே வரும்.  ஆனால் பக்தியைத்தான் பத்தி என்று பாடியுள்ளனர் என்று தமிழாசிரியன்மார் சொல்லிக்கொடுப்பர்.
ஆனால் பற்று > பற்றி > பத்தி பின் பக்தி என்பது இப்போது மிக்கத் தெளிவு பெற்றுள்ளது.  முத்தி  முக்தி ஆனாற்போல்.  முது >  முத்து > முத்தி > முக்தி;  முற்று > முத்து > முத்தி .

எமது எழுத்து அதைப்பற்றி அன்று.   அபத்தம் என்பது பற்றியே.

பற்றுதல் என்பது பொருத்துதல் என்றும் பொருள்தரும்.  இரும்புத் துண்டுகளைப் பற்றவைத்தல்  என்பதுண்டு,  அதாவது தீயினால் உருக்கிப் பொருத்துதல்  என்பதே இது.

அபத்தம் என்பது பொருந்தாதது.   பற்று >  பத்து > பத்தம்   அல்  >  அ .  அல்லாதது.   அ + பத்தம்  = அபத்தம்.

இதன் மூலமும் தமிழ் தான்.  இந்தோ ஐரோப்பியம் அன்று,

திங்கள், 29 பிப்ரவரி, 2016

ஐ and high

நீர்  (தண்ணீர், வெந்நீர்  என்பவை) தமிழில்போல் சங்கத மொழியிலும் உள்ளது.  சமஸ்கிருதத்தில் 1/3 பகுதி திராவிடச் சொற்கள்.   ஏறத்தாழ  1/3  மேலை மொழிகளுடன் தொடர்பு காணக்கூடியவை.  இறுதி 1/3  எங்கிருந்து  வந்தன என்று தெரியாதவை என்றார் டாக்டர் லகோவரி. தெரியவில்லை என்பவற்றில் பல தமிழில் காணக்கூடியவை.  நாமும்பல  சொற்களை எடுத்துக்காட்டியுள்ளோம். தமிழினின்று போந்தவை என்றால் அவற்றுக்கு மதிப்புக் குன்றுமென்பதால்,  ஒப்புக்கொள்ள வெட்கப்படுவான் வெள்ளைக்காரன்.

சமம்+மதி >  சம + மதி >  சம்+மதி = சம்மதி.  இதை இப்படிக் காட்டாமல் சம் என்பதை முன்னொட்டு என்றும் மதி என்பது வினைச்சொல் என்றும்  கூறுவான்  சங்கத ஆசிரியன்.

சம் எங்கிருந்து கிட்டியதென்றால், தமதென்பார்.

அமை> சமை > சம்  என்பது தெளிவித்துள்ளோம்.

ஒரு சீனனிடம் போய் சமஸ்கிருதப் பாட்டைப் பாடினாலும் தமிழ்பாட்டுப் பாடினாலும்  எல்லாம் ஒருமாதிரியாய் இருப்பதாகச்
சொல்கிறான்.   ஆகவே  மொழி நூல் அறிஞர் சட்டர்ஜி , ச‌மஸ்கிருத  ஒலிமுறை திராவிட மொழிகளின் அமைப்பைத் தழுவியது என்று உண்மையைச் சொல்லவேண்டியதாயிற்று.

சமஸ்கிருதம் தென்மொழி சார்ந்ததே. தமிழ் உள்ளிட்ட முன்னிருந்த‌
பாகதங்களிலிருந்து சொற்களைப் பெற்று இனிதாக அமைக்கப்பட்டதே
சமஸ்கிருதம்.

சமஸ்கிருதம் வளர்க்கத் தமிழ் மன்னர்கள் பலர் கடினமாக உழைத்துள்ளனர்.  தமிழ்ப் புலவர்களும்தாம்.  வேதம் பாடியோரில் பல தமிழர் இருந்தனர்.  தமிழ்ச்சொற்களை ஆண்டுள்ளனர். தென்கிழக்காசியா எங்கும் அதைப் பரப்பினான் ராஜ ராஜ சோழன்.

ஆரியன் என்று யாரும் வந்ததற்கு ஆதாரம் இல்லை. ஆர்ய என்பது தமிழ்ச்சொல் என்று ஆதாரம் காட்டியுள்ளார் தேவ நேயப் பாவாணர்.
ஆர்தல்,  அறிவு என்பன தமிழ்ச் சொற்கள்.  அரிவ் என்று அது அரபியிலும் சென்று வழங்கியது உண்மை.

Garden of Eden என்னும்  எழில் தோட்டம் தமிழ் நாட்டில் இருந்ததென்று சில அரபு  நூல்கள் சொல்வதாக ஓர் இஸ்லாமிய அறிஞர் எழுதியுள்ளார்.

சமஸ்கிருதத்திலிருந்து பல சொற்களை  மேலை மொழிகள்  மேற்கொண்டன.  தமிழிலிருந்து நேரடியாகவும் மேற்கொண்டன.

ஐ என்பது தமிழில் மேன்மை குறிப்பது.  ஐயன், தமையன்.
ஹை என்ற மேன்மை குறிக்கும் சொல் ஏன் ஒலியொத்து வருகிறது.

ஏர்   -  arable  என்ன தொடர்பு ?

ஆராயலாமே!

will  edit. enjoy the post first.

மோட்ச‌மும் மேலகமும். வாழ்க,!

மேலகம் என்ற சொல் இத்போது பெரிதும் வழங்குவதில்லை. இதற்குப் பதிலாக மோட்சம் என்ற சொல்லே பேச்சு வழக்கில் உள்ளது . எட்டாம் துக்கம், பதினாறாம் நாள் என்றெல்லாம் வருங் காலங்களில் மோட்சம் என்ற சொல் காதில் வந்து சேர்கிறது.

 மேல் என்ற சொல் மோள் என்று மலையாளத்தில் வழங்குகிறது. மோள்+ சு+ அம் என்ற விகுதிகள் இணைந்தால், மோட்சம் என்ற சொல் பிறக்கிறது. சு விகுதி பரிசு என்ற சொல்லில் இருக்கிறது,  அம் விகுதி பெறு பதங்கள் பற்பலவாம்.  அறம் என்ற சொல்லில் அறு+அம் என்ற இணைப்பில் நிறு நயம் செய்யப்பட்ட  ( நிறுவி நயம் ஆக்கப்பட்ட ) வாழ்க்கை விதிகள் என்ற சொற்பொருளமைப்பில் அம் வருகிறதன்றோ!. மலையாளப் பேச்சில் தோன்றிய  மோள்,  விண்கலம் செவ்வாயில் சென்றிறங்கினாற்போல யாண்டும் பரவி, தமிழில் தழைத்து, சமத்கிருதமொழியில் உழைத்து  மேலகம் எய்தியது வரவேற்கப்படவேண்டியதே ஆகும்.

மோட்ச‌மும் மேலகமும். வாழ்க,

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

முந் நீர் - சமுத்திரம்.

சமுத்திரம்  என்ற சொல்லைச்  சில ஆண்டுகட்கு முன்னரே  ஓர்  இடுகையில் அணுக்கமாகக் கவனித்திருந்தேன்.   இது   எங்ஙனம் உருவானது என்று மீண்டும் சிந்திப்பது நல்லது.

அமை -   அமைத்தல்.

இது பின்    இன்னொரு சொல்லைப் பிறப்பித்தது.

அமைத்தல் -  சமைத்தல்.

 அகரம்  சகரமாய்த்  திரியம் .   அமண்  -   சமண் ,

அகபதி  (அகத்துப் பதிவாய் விளங்கும் இறைவன் )  -  சகபதி.

அகர வருக்கத்துப் பிற எழுத்துக்களும் இங்கனம் திரியும்.


உக > சுக > சுகம்     உகந்த நிலையே சுக நிலை..

முன் இடுகைகளில் தந்த எடுத்துக்காட்டுகள் அங்குக் காண்க.

சமைத்தல் என்பது  வேகவைத்தோ  பொரித்தோ  அல்லது  வேறு வகையிலோ சூட்டினால் உணவு உண்டாக்குதலைக் குறிக்கும் சொல்லாயிற்று.  நுண்பொருள்  வேறுபாட்டு  விரிவு  இது ஆகும்.

சமை என்ற சொல்லில் இருந்து  இந்தோ ஐரோப்பியத்துக்கு  சம் என்ற அடிச்சொல்  கிட்டியது.   சமை என்பதிலிருந்து  வினையாக்க விகுதியாகிய ஐ பிரிவுண்டு விடுமாயின்  மிச்சமிருப்பது சம் அன்றோ?

சீரகம்  சோம்பு     ஏனை   மசாலைப் பொருள்கள்  முதலிய  இட்டுக்  கறி சமைத்து  உண்டவர் தமிழர் . ஆகவே சமைத்தல் என்பதற்குப்   பல பொருள்களை ஒன்று சேர்த்துக் கூட்டுதல், என்ற  பொருள் அமைந்தது  பொருத்தமே. இப்பொருள் ஒரு பின்வரவு ஆகும்.  குழந்தை  சமைந்தது  என்ற வழக்கும் உள்ளது    சமைதல் - தன் வினை;  சமைத்தல் -  பிறவினை.

இனிச்  சமுத்திரம் என்ற சொல்லுக்கு வருவோம்.  

இது முந்நீர் என்ற  தமிழ்ச்சொல்லைப் பின்பற்றியது.    சமுத்திரம்  என்பதன் பின்பகுதி முத்திரம்  -  இது உண்மையில் முத்திறம்  ஆகும். சம் என்பது ஒன்று சேர்தல், கூடுதல்;  (>  சமை).,  திரை (கடல்)  என்பதிலிருந்து  இந்தத் திரம்  வந்திருத்தல் கூடும் என்று  கூறுவர் சிலர்,

இங்ஙனம்  புதிய சொல் ஒன்று அமைக்கப்பட்டது.

முந் நீர்  -  சமுத்திரம்.

இப்போது முந்நீர் போல  சமுத்திரமும் பொதுவாகக் கடல் குறிக்கும் ,  மூன்று கடல் கூடுவதென்பது  சொல்லமைப்புப் பொருள் .  இப்போது அது  மங்கிவிட்டது.


முந் நீர்   -   முத்திறம் /      முத்திரம்
சம்  +  முத்திரம்  -   சம்முத்திரம் >   சமுத்திரம்

இப்படிச் சொற்களைப்  படைத்தவர்கள்  சிறந்த படைப்பாளிகள் என்பதில் ஐயமில்லை. சொற்களின் படைப்பு வழிகளைக் கண்டின்புறும்  இவ்வேளையில்  அவர்களையும் பாராட்டுவோம்.


சி-போதம் 6ம் பாடல் பொருளுரை

http://sivamaalaa.blogspot.sg/2016/02/6.html     இங்கிருந்து தொடர்வோம்.

ஆறாம் பாடலை இங்கு நினைவு கூர்வோம்:


உணர் உரு  அசத்து எனின் உணராது இன்மையின்
இரு திறன் அல்லது  சிவ சத்து  ஆமென‌
இரண்டு வகையின் இசைக்குமன்  னுலகமே.



சிவஞானபோதம் 6ம் பாடல் பொருளுரை

மன்னுலகு ‍  =  இவ்வுலகத்துள் வாழ் மெய்யறிஞர்கள்; பெரியோர் ,
உணர் உருவெனின் ‍=  சுட்டி அறியத்தக்க வெளிப்பாடாயின்;
அசத்து =  ( சிவமானது )  அது இவ்வுலகமே என்று கூறுவார்கள்.
உணராதெனின் =   உணரப் படாததென்றால் அதாவது சுட்டி
அறியத்தக்க பொருளன்று சிவம் என்று கூறுவார்களாயின்;
இன்மையின் =  அச் சிவமானது சூன்யம் என்று கூறுவார்கள்;

இரு திறன் அல்லது =  இவ்விரண்டும் சிவம் அன்று.
அதாவது உலகமும் சிவம் அன்று; இன்மை எனும் சூன்யமும் சிவம் அன்று.

இரண்டு வகையின் இசைக்கும் =  இப்படி இரண்டு விதமாக
சிவத்தை அறிய ஏதுக்களைக் கூறுவார்கள் என்றபடி.

எதையாவது சுட்டிக்காட்டி ஒருவற்குச்  சிவத்தை அறிவிக்க வேண்டுமாயின் என்ன செய்யலாம்?  வேறுவழியில்லை. இவ்வுலகத்தைக் காட்டவேண்டும். உலகத்தைப் பார்,உலகம் இருக்கிறது; ஆகவே சிவம் உண்டு என்று அறிக எனலாம். ஆனால்
அதன்காரணமாக உலகமே சிவம் ஆகிவிடாது; உலகம் வேறு; சிவம் வேறு.  ஆகவே உலகம் அசத்து என்போம். உலகத்தைச் சுட்டலாம் ஆனால் அதுவே சிவம் அன்று.

உலகத்தைக் காட்டாமல் இன்மையைச் சுட்டலாம். படைத்தனவன்றி வேறொன்றுமற்ற அகண்ட ஆகாய வெளியின் சூன்யத்தைச் சுட்டலாம்;  ஆனால் அதுவும் அசத்து அன்றோ?  சிவத்தை அறிய அது ஒரு காரணமன்றி அதுவே சிவம் ஆகிவிடாது.

உலகமும் சடப்பொருள்; இன்மையும் சடப்பொருள். ஆகவே சிவமன்று, இரண்டும் அசத்து; சிவமே சத்து என்பதாம்.

1சத்து: இதை சத் சித் ஆனந்தம்; சச்சிதானந்தம் என்பர். உலகிற்கும் இன்மைக்கும் விலட்சணமாய் ‍  அதாவது விலக்கணமாய்;  விலக்குண்டு தனியே நிற்பதான  சிவமாகிய‌ ஒருமையாம். அதற்கு நிகர் அதுவே. அதையறியப்  பிற பொருள்கள் உதவலாமே அன்றி அவை அது ஆகிவிடமாட்டா ,.

விலக்கணம்  விலட்சணம் இவற்றின் விளக்கம் இங்கு அறிக:  http://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_26.html

உணராதெனின் :  உணராததெனின் என்று இயைத்துக் கொள்க. செய்யுளில் த மறைந்தது.  இப்படியே அல்லது என்ற சொல்லை அல்லாதது என்று விரித்துக்கொள்க‌. இதுவும் செய்யுளின் வடிவச்சொல் ஆகும்.

--------------------------------------------------------------------------------------------------------------


1 சத்து - that which exists through all times, the imperishable.


அசத்து - of material or illusory nature. opposite of sattu. a matter of transitional form, perishable.


சனி, 27 பிப்ரவரி, 2016

சிங்கப்பூரின் பிடிவாதத் தூய்மை Thejakartapost

சாக்கடை நீர் சாலையில் ஆறுபோல் ஓடுகிறது, மாநகராட்சி வேலைக்காரர்கள் ஒன்றும் செய்யவில்லை!  என்ற செய்தி தொலைக்காட்சி வாயிலாக சிங்கபூரிலும் கேட்கப்படுகிறது.  சென்னை மாநகராட்சி  பற்றிய வேதனைக்குரல்தான் அது.  1

அண்மையில் மாட்சிமை தங்கிய ஜொகூர் சுல்தான்  அவர்கள் ஒன்று கூறினார்.  சிங்கப்பூரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிரம்ப உள்ளது என்றார்/  2 அவற்றுள் தூய்மை எனப்படுவதும் ஒன்று ஆகும்.


சிங்கப்பூர் மிகத் தூய்மையாக வைத்துக்கொள்ளப்படுகிறது.  அதனால் இங்கு வேலை தேடி வந்த பல இந்தியக் குடும்பங்கள் எல்லா நிறுவாக மேன்மையையும் அறிந்துகொண்டு,இங்கேயே தங்கிவிட முடிவுசெய்துவிட்டதாகக் கூறும்போது தேன்வந்து பாயுது காதினிலே என்றன்றோ பாடவேண்டியுள்ளது!


இப்போது  அண்டை நாட்டினர் தம் தாளிகையில் வரைந்த ஒரு கட்டுரையை வாசிக்கலாமே!  இதை அங்கு அப்ஸஸ்ஷன்
என்றனர். இருக்கட்டுமே! அந்தப் பிடிவாத உணர்வு இல்லையென்றால் தூய்மை முயற்சியில் தளர்வு ஏற்பட்டுவிடுமே!

http://www.thejakartapost.com/news/2005/09/24/singapore039s-cleanliness-obsession.htmlSingapore's cleanliness obsession

Singapore's cleanliness 

obsession


...........................................................................................................................................................
personal and environmental hygiene has become an even more serious issue in an already cleanliness-conscious Singapore. The country, long-known for its tough penalties on littering, chewing gum and spitting in public, is now getting tougher on public toilet contractors and food stall owners. This is the last in a series of five articles prepared by The Jakarta Post's Damar Harsanto who took a look at the city-state's most recent sanitation drive following his visit to the country at the invitation of Far East Organization Ltd. - See more at: http://www.thejakartapost.com/news/2005/09/24/singapore039s-cleanliness-obsession.html#sthash.FewQGYas.dpuf
For more click the above link.


Notes

1  Sun TV News -  27/2/2016

2  www.straitstimes.com/.../johor-sultan-says-much-to-learn-from-singapor... Dec 27, 2015

Johor Sultan says much to learn from Singapore, talks about ...

www.straitstimes.com/.../johor-sultan-says-much-to-learn-from-singapor...

Dec 27, 2015 - Sultan Ibrahim Ibni Almarhum Sultan Iskandar, the ruler of Malaysia's state of Johor, has said there is much to learn from Singapore's success.




Ponmudi song: கெடுமதிப் பெற்றோர்

பொன்முடி என்ற  பெயரில் வெளிவந்த ஒரு பழைய திரைப்படத்தைப் பற்றிச் சிறிது தெரிந்துகொள்வோம்.  இது ஒரு காதல் கதை.  இந்தப் படத்தின் இயக்குநர்  எல்லிஸ் டன்கன் என்னும் ஆங்கிலேயர். இப்படத்தில் பல இனிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன, அவற்றுள் ஒன்று இப்போது நம்முன் உள்ளது.  அது இது:

வான்மழை இன்றி வாடிடும் பயிர்போல்
நானுனைப் பிரிந்தே வாடுகிறேன்
சூழ் நிலையாலே கூண்டினில் வாடும்
பைங்கிளி போலிங்கு வாழுகிறேன்

வெளியில் விடாமல் வீட்டினுள் வைத்தே
கெடுமதியால் என்னைப் பூட்டினரே
வளர்காதல் ஜோதி உனையன்றிப் பாரில்
ஒளியுமே எதென் வாழ்விலே


காதல்மொழி பாவாய் கனவோ நம்வாழ்வு
கணமும் இனி  உயிர் நான் தரியேன்;
நாதமில்லாத யாழ்போலும் ஆனேன்
நானே உன் பிரிவால் காதலி.

என் அளி நீ ஒன்றாக இணையாய்
முன்போலவே நாம் சேர்ந்திடுவோமோ என்னுயிரே
என் அளி நீ ஒன்றாக இணையாய்
முன்போலவே நாம் சேர்ந்திடுவோமோ இன்னமுதே


இப்பாடல் நல்ல இலக்கிய நடையிலேதான் அமைந்துள்ளது. எதுகை மோனை எல்லாம் சிறப்புடன் இலங்குகின்றன . இப்பாடல் புனைந்த கவி பாடல்கள் பல இயற்றிய  பட்டறிவும் உடையவர் என்று தெரிகிறது. உவமை நயம் பாடலில் நம்மை ஈடுபடுத்துவதாய் உள்ளது.  வான்மழை இல்லாமல் வாடும் பயிர், கூண்டினில் வாழும் கிளி, நாதமில்லாத யாழ் என வருபவை காண்க. என் அளி என்பது என் அன்பே எனல் பொருட்டு. வளர்காதல் ஜோதி என்று காதலனை வருணிக்கிறாள் காதலி. அவனின்றி வாழ்வில் ஒளி இல்லை என்கிறாள். இருண்ட வாழ்வாகிவிட்டதென்கிறாள்.

 காதலன்  ஒருபடி மேல் சென்று  கணமும் இனி உயிர்வாழ மாட்டேன் என்கிறான்.  இந்த  முடிவு  அவன் திண்ணிய உள்ளத்தைக் காட்டுவது .இறுதியில் எண்ணிய எண்ணியாங்கு எய்தி இன்புறுவான் அவன் .

காதலிக்கப் புறப்பட்ட பெண்ணை அறைக்குள் போட்டுப்  பூட்டிவிட்டால்  பார்ப்போருக்கு உடனே சோக உணர்ச்சி வந்துவிடுவதில்லை.  சிலர் கேட்டு நகைக்கவும் செய்வர்.  பார்த்து,  அப்படித்தான் வேண்டும் அவளுக்கு என்பர். சிலர் . இப்படியெல்லாம் பல கோணங்களில் கருத்துகள் எழாமல், இப்பாடல் படம் பார்ப்பவர்களை ஒருமுகப் படுத்தி  சோகத்தைத் தூண்டி அழவைக்க முற்படுகிறது. இப்போது சோகப் படங்கள் வெளிவந்தாலும்  சோகப் பாடல்கள் வருவதில்லை.  துயரில் பாடல் எழாது என்ற ஆங்கில ஆசிரியர்களின் கருத்தாட்சி மேலோங்கியுள்ளது.  எனினும் காதல் இழந்து வாடும் துயரப்பாடல்கள் ஏனை மொழிகளில் இல்லாமலில்லை. காதலன் காதலி ஒரு திடலில் ஓடிக்கொண்டு இருகுரலிசை  வழங்குவது உண்மை நிலை ஆகிவிடுமா என்ன ? ஒரு வீரன் பதின்மரை நையப் புடைப்பது  உண்மை நிலை ஆகாது.  திரைப்படம் காண்போர் அழாமல்  காக்கப்படுவதாகக் கூறலாமே தவிர துயரப்  பாடல்களை  விலக்குவதால் வேறு நன்மை யாது  என்பதை நீங்கள்  கண்டுபிடியுங்கள்.  இதுபோலும் துயரப் பாடல்களைக் கேட்டால் மக்கள் காதலர்களைப் பிரிக்கலாகாது என்ற உணர்வைப் பெறக்கூடும் என்று சொல்லலாம் .

காதலைப் பிரிக்க நினைத்தது பெற்றோரின் கெடுமதி என்கிறாள் காதலி.

சங்க இலக்கியங்களின் தாக்கம் பாடலில் உள்ளது.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

விலட்சணம் ‍

.விலட்சணம் எனின் வேறாக இருப்பது என்று நீங்கள் அறிந்திருக்கலாம்.

இலக்கம் என்ற எண்ணுப்பெயர் இலட்சம், லட்சம் என்று திரிவது உங்களுக்குத் தெரிந்ததே.  இலக்கம் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உடையது எனினும், இங்கு நாம் கருதுவது நூறாயிரம் என்னும் பொருள்.

இலட்சம் :  இலக்கம் ஆதலின்,  விலட்சணம் : விலக்கண‌ம்  ஆகும் என்பதை எளிதாய் உணரலாம்.

விலக்கு + அணம் ‍=  விலக்கணம். அணம் என்பது ஒரு பின்னொட்டு அல்லது விகுதி. ( மிகுதி :  சொல் மிகுதல்)

விலகு ‍  விலகி நிற்பது.  எனவே வேறு என்ற பொருள் பெறப்பட்டது.  தமிழ்ச்சொல் ஆகும்.

இதை அடுத்துவரும் போத உரைகளிற் பயன்படுத்துவோம்.

இலக்கணம் -grammar

விலக்கணம் - something that stands apart.  separateness  விலட்சணம்

வியாழன், 25 பிப்ரவரி, 2016

கற்பனை : கற்பிக்கப்படும் பொய்மை

வி என்னும் பின்னொட்டுப் பெற்ற சொற்கள் சில உள்ளன. நம் நினைவுக்கு
வருபவை : கல்வி,  கேள்வி, வேள்வி,  கிளவி (சொல்).
அருவி, குருவி (குர்ர் என்பது ஒலிக்குறிப்பு),  முதலியவை.

இவற்றுள் கல்வி என்ற சொல்லுக்கு உரிய  அடிச்சொல் கல் ‍ கல்லுதல் என்னும் வினைச்சொல்.கல்லுதல் :  தோண்டுதல்.

கல்வியைப் பற்றிக் கூறியவிடத்து, வள்ளுவனாரும் : " தொட்டனைத் தூறும் மணற்கேணி"  என்று பாடினார். கல்வி ‍ தோண்ட ஊறும் மணற்கேணி அன்றோ?

கல்லுதல் என்ற சொல்லினின்று  பல சொற்கள் தோன்றின.

கற்றல்  ( கல் + தல் )
கற்பு.  அன்னை தந்தையரால் கற்பிக்கப்படும் ஒழுக்க நிலை..
கலை  ( கல் + ஐ )
கல் + ஆ  (  கலா )  நில்+ ஆ= நிலா போன்றது. பல்+ ஆ = பலா, பல சுளைகளை உடைய பழம்.

கற்பனை : கற்பிக்கப்படும் பொய்மை.  கல்+ பு + அன்+ ஐ.
விற்பனை படிப்பினை எனக் காண்க.

கல் என்னும் தமிழ் அடிச்சொல் பல மொழிகளிற் பரவிற்று.
கலா, கற்பனை முதலிய இனிய ஓசைச் சொற்கள் கவர்ந்துகொள்ளப்பட்டன.

கல்குலஸ், கல்குலேசன் முதலிய ஆங்கிலம் வரை சென்றன.

கல்குலுக்கிக் கணக்குப் பார்ப்பது தமிழர் திறம் என்று அறிவோம். அது கல்குலஸ் ஆயிற்று.

கால்சியம் என்ற சொல்வரலாறு யாது?

will edit.

புதன், 24 பிப்ரவரி, 2016

பொறுப்பு ஒப்படைக்க

ஒரு பழமொழிப் பாடலைப் படித்து மகிழ்வோம்.  பழமொழி என்பது நூலின் பெயர்.


உடைப்பெரும் செல்வத்து  உயர்ந்த பெருமை
அடக்கமில் உள்ளத்தன் ஆகி ===  நடக்கையின்
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக்
கொள்ளி கொடுத்து விடல்.

இப்பாடல் அடக்கமில்லாதவனைப் பற்றியது.  அடுத்த வீட்டான் உங்களுக்கு அடங்கிப் போகவேண்டும் என்று நினைத்து அவன் அடக்கமில்லாதவன் என்று பேசுதல் கூடாது. இப்பாடல்  அத்தகைய  சூழ்நிலையைப் பற்றியதன்று.

அதிகாரத்தை வழங்கும் நிலையிலுள்ளோன், அதை இன்னொருவனிடம்  ஒப்படைக்கும் முன்னர், அதைப் பெறுவோன் எப்படிப் பட்டவனாய் இருக்கவேண்டும் என்பதை   இப்பாடல் தெளிவாக்குகிறது.

அவன் செல்வச் செருக்கு உடையவனாய் இருத்தல் ஆகாது.  அதாவது அவன் செல்வனாய்  இருக்கலாம்  ஆனால் செல்வச் செருக்கு உடையவனாய் இருத்தலாகாது ; இரண்டும் வெவ்வேறாம்,  தன் உயர்ந்த பெருமைக்கு ஏற்ப அவன் நடத்தையில் சிறந்தவனாய்  இருக்கவேண்டும். அல்லாதவன்மேல் அதிகாரத்தை வைத்துவிட்டால் அவன் ஆடத்தொடங்கிவிடுவான்,  அது குரங்கின் கைகளில் எரியும் கோலைக் கொடுத்ததற்கு ஒப்பாகிவிடும். எரிகோல் பிடித்த குரங்கு ஊரையே  அழித்துவிடும். இதை நன்கு ஆராய்ந்து உணர்ந்துதான் எந்தப் பொறுப்பையும்  ஒப்படைக்க வேண்டும்.

மக்களாட்சி முறையில் தேர்தலுக்கு விருப்பாளர்களாக (candidates)  நிற்க முன்வந்தோரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.  முன்வராதோரில் அதற்குத் தகுதியானவர் அருகிலேயே இருக்கலாம்;  அவர் முன்வரவில்லை என்றால் மக்களால் அவரைக் கொண்டுவந்து தேர்ந்தெடுப்பது  இயலாதா காரியம்.

இப்படி வழிகாட்டுகிறது  பழமொழி நானுறு. 

கோழை

இனி  கு >  கோ  திரிபினைச்  சற்று காண்போம்,

குவளை என்ற சொல்லுக்குப்   பேச்சில்  கோளை என்று நாவருகின்றது பேச்சில் மட்டுமோ?  எழுத்திலும் வந்துள்ளது.
,
குழப்பம் என்பதோ பேச்சில் கொழப்பம்  என்று வருவது மட்டுமோ,   கோழம்பம் என்றும் எழுத்தில் உள்ளது.  மற்றும்  -ப்ப -  என்ற  நடு  -ம்ப - என்றும் திரிந்துள்ளது.  இது இருமடித் திரிபு ஆகும்.

கடினமான சூழ்நிலையைச் சமாளிக்க முடியாமல் சவத்துப் போகிறவனைக் கோழை என்கிறோம். இது ஒரு குழைவு ஆகும்.

குழை >  கோழை.

இதில் கு-கோ திரிபும் முதனிலை திரிதலும்  அடங்குகின்றன. குழை  என்பது முதனிலை திரியின் கூழை என்றே வரவேண்டும்;  மேலும் திரிந்து கோழை எனவருதனால்  இருமடித் திரிபாகிறது,

கூழை என்பது அறிவிற் குறைந்தோனைக் குறிக்கும்,

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

டகரம் ரகரமாக

டகரம் சொற்கள் சிலவற்றில் ரகரமாகத் திரியும். இதற்கு ஓர் எளிதான எடுத்துக்காட்டினைத் தரவேண்டுமானால்:

மடி >  மரி என்பதைக் குறிப்பிடலாம்.  இங்கு டி > ரி என்று திரிந்ததைக் கவனிக்கவும்,

கோடு என்ற சொல் வளைவும் குறிக்கும். மலையுச்சி வளைவைக்  கோடு என்பர். பின்னர் அது அம்மலை உள்ள ஊருக்கும் பெயரொட்டானது .

உதாரணம்:  திருச்செங்கோடு.   கசரக்கோடு .  அதங்கோடு.

வடக்கிலுள்ள பதன்கோடு வரை செல்லும் இச் சொல்லாட்சி. கோடு+ ஐ =  கோட்டை ஆயிற்று. கோட்டைகளும் வளைவாகக் கட்டப்பட்டனவாதலினால்,  கோடு அடிச்சொல்லாக நின்றது.

கொடு > கோடு.

கொடு என்பது இங்கு நீண்டது.  கருத்து வளைவுதான்,  நண்டுக்கொடுக்கு  வளைவானது.  கொடு> கொடுக்கு,     கொடுக்குப்பிடித்தல் என்ற வழக்கையும் நினைவுகூர்க.

செயலாலும் வளைவு உணரப்படும்.

கொடு > கொடுமை.

கொடு > கொடுங்கோல்  ( வளைந்த கோல்;  நேர்மையின்மை குறித்தது. )


கோடு > கோடம் > கோரம்.  ( மிகக் கொடுமை.)  ட > ர .

கோரக் கொலை என்பது காண்க.

கொடு > கொடுத்தல். ( வளைந்து நின்றபடி ஒன்றைத் தருதல்.)  இதுவே  சொல்லமைப்புப் பொருள்.  நாளடைவில் வளையாமல் கொடுத்தலும் கணினிக்கணக்கு வழி காசு கொடுத்தலும் எல்லாம்
கொடுத்தலில் உள்ளடங்கின .. இது பொருள் விரிவாக்கம். பயன்பாட்டு  விரிவு ஆம்.

வினோதம்

வினோதம் என்ற சொல்லின் அமைப்பைக் கண்டு அதன் வினோதம் உணர்வோம்.

வியன் என்ற சொல் நீங்கள் அறிந்ததொன்றாகவே இருக்கும், குறளில் விரி நீர் வியன் உலகத்து உள் நின்று உடற்றும் பசி  என்ற வள்ளுவனின் தொடர் சிறந்த நயம்பொருந்தியது.

வியன் எனின் பெரிது.விரிவானது

முன் பூனையையே கண்டு வளர்ந்தவனுக்கு யானை வினோதமானது. தினமும் காண்பவனுக்கு அது வினோதமாகாது.  வினோதமெனும் மனவுணர்ச்சி மறைந்துவிடும்.

ஆதலால் வியன் என்னும் சொல்லினின்று வினோதம் என்பது அமைந்துள்ளது.  எப்படி எனின் கூறுதும்.

வியன் + ஓது +  அம் = வியனோதம்.

இப்போது யகரத்தை விட்டிடுவோம்.

வினோதம் ஆகிவிட்டது.  ஒரே எழுத்தின் விடுபாட்டில் ஒரு புதிய‌
சொல் கிடைத்துவிட்டது.

வினோதமெனின் பெரிதாக மக்களால் பேசப்படுவது.  அவ்வளவுதான் .  ஓது என்பது  பேச்சைக் குறிக்கிறது.  மந்திரம் ஓதுவதைப் பிற்காலத்தில் குறித்தது.  தொடக்கத்தில்  ஓஓஓஓஓ என்று ஒலி  எழுப்புதலையே குறித்தது.  ஓலமிடுதல் என்ற சொல்லும்  அதே.  ஓஓஓஓ  என்பதுதான். ஒப்புதல் என்ற சொல்லும்  ஓ ஓ என்று சரி கொள்வதையே குறிக்கிறது.   இப்படி ஒலிக்குறிப்புகளைக் கொண்டு அமைந்த சொற்கள் பல்வேறு மொழிகளிலும்  ஏராளம்.  ஈண்டு விரித்தலாகது.  அம்  விகுதி/

புதிதாக உள்ளதைத்தான் பேசுவார்கள் . பழங்  குப்பைகள் பேச்கிக்குரியனவல்ல .

மகிழ்ந்து கொண்டாடலாம்.

ஆதி மனிதன் குகைகளில் வாழ்ந்து கரடி புலிகளுடன் போராடி உணவு தேடித் துன்புற்றான்.  அவனிடம் அகராதியுமில்லை  முகராதியுமில்லை. நாலைந்து சொற்களுக்கே அவன் சொந்தக்காரனாயிருந்தான். பல சொற்களைப் படைத்து மொழியை உருவாக்க வேண்டின், இதுபோன்ற தந்திரங்களைக் கையாள வேண்டுமல்லவா. இந்தப் பதங்களெல்லாம் ஒன்று தங்கத்தட்டில் வைத்து கடவுள் நீட்டினார் என்று எண்ணுகிறவன், மொழிவரலாறும் மனித வரலாறும் அறியாதவன். மனிதனின் கள்ளம் அவன் மொழியிலும் பளிச்சிடவேண்டுமே.

வி + நோ தம்  என்று பிரித்து  அதிலிருந்து  நூதனம் என்பதைப் பிறப்பித்தால் இன்னும் புலமை. பண்டையரைப் பாராட்டுவோம் .

edit later,  If we waited longer post may disappear from screen.  We have to upload quick.

சிவஞான போதத்தின் 6‍வது பாடல்

சிவஞான போதத்தின் 6‍வது பாடல்,  நம்மைச்   சிந்திக்க வைப்பது ஆகும். "சிவம் எது? எங்கே இருக்கிறது?" என்ற வினாவிற்கு, உலகத்தைக் காட்டலாம். நம் கண்ணுக்குத் தெரிவது இவ்வுலகமும் இதன்கண் இருக்கின்ற படைக்கப்பட்ட பொருள்களுமே . ஆனால் இவ்வுலகு சிவத்தால் படைக்கப்பட்டதொன்றே யன்றி, சிவம் ஆகாது. காரணம்,காரியம் என்ற இரண்டனுள் உலகத்திற்குக் காரணமாகியது சிவம். உலகம் சிவத்தின் காரியம் அல்லது செயலுரு ஆகும்.
இதையே "உணர் உரு" என்கிறது இந் நூல்.

உலகம் சிவமன்று. அடுத்து யாது உள்ளது  - எது சிவம் என்ற கேள்விக்குச் சுட்டுவதற்கு? ஒன்றுமில்லை!. சூன்யம் எனப்படும் இன்மையையே சுட்டுதல்  ஆகும் (கூடும் )  . சூழவுள்ள வெட்டவெளியில் ஒன்றுமில்லை.
எனவே சூன்யம் சிவமென்று சுட்டுவதாயின், அது சிவமாகாது என்பதே கேளவிக்கான பதிலாகும். இவ்விரண்டாம் திறத்ததும் மாயைதான் . உணர ஓர் உருவற்ற இன்மையும் மாயை. உணர் உருவாகிய உலகமும் மாயையே என்பர்.

உலகத்தினும் இன்மையினும் வேறாக நிற்பதே சிவ சத்து.   அதாவது
சிவமாகிய ஒருமை. தானன்றிப் பிறிது எதுவும் தனக்கீடில்லாத சிவமாகிய ஒருமை..இச் சிவத்தொருமை உணர, உலகமும் இன்மையும் ஏதுக்களாக நின்றன என்று புரிந்துகொள்ள வேண்டும்.

இதையே ஆறாம் பாடல் கூறுகின்றது. பாடல் பார்ப்போம்.

உணர் உரு  அசத்து எனின் உணராது இன்மையின்
இரு திறன் அல்லது  சிவ சத்து  ஆமென‌
இரண்டு வகையின் இசைக்குமன்  னுலகமே.

இதனுரை பின்  காண்போம்.













ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

நீட்டப் பட்டமிளகாய்

பட்ட மிளகாய்களிற் சில நீட்டமாகவும்  சில குட்டையாகவும் இருக்கும்.  சில காரமாகவும் வேறு சில காரம் குறைந்தும் இருக்கும்.  இதை எண்ணெயில் பொரித்துண்டால்  சோற்றுக்குச் சுவையாய் இருக்கக்கூடும்.  மோர் மிளகாய் என்றும் ஒரு வகையுண்டு. பெயரைக் கொண்டு பார்த்தால்  மோரில் ஊற  வைத்து அப்புறம் காயவைத்த மிளகாய் போல் "தெரிகிறது',  இவைகளெல்லாம் மிளகாய்  வகைகள் எனலாம்.

இவண் யாம் சொல்ல விழைந்தது யாது?

நீட்டப் பட்டமிளகாய்  என்பதற்கும்  நீட்டப்பட்ட மிளகாய் என்பதற்கும் ஒரு வேறுபாடு  உண்டு.

நீட்டபட்ட  மிளகாய் என்பது பட்டமிளகாய் வகைகளில் ஒன்றாக இல்லாமல் இருக்கக்கூடும். பச்சை மிளகாய் வகையே கொஞ்சம் நசுக்கி நீட்டப்பட்டதாகவோ அல்லது செயற்கையில் அறிவியல் முறையில் நீட்டம் அடைவிக்கப்பட்ட மிளகாயாகவோ இருக்கலாம்.  அதாவது குட்டையாக இருந்து பின் நீட்டம் அடையச் செய்யப்பட்டது  என்று பொருள்.  ----சொற்பொருளுக்காக  யாம் சொல்கிறேம்    (இது சரியான வினைவடிவம்.  தெரிந்துகொள்க ).

நீட்டப்    பட்டமிளகாய் நீட்டமான ( நெடிதான )   பட்டமிளகாய் வகைகளிலொன்று.

இத்தகு மிளகாய்கள் உள்ளனவோ இவை இல்லாதனவோ  எனின் இவற்றை நீங்களே  மிளகாய்  அறிஞர்பால்   உசாவி  அறிக.

லீலா LeelA leelai

 இன்று லீலா ‍  லீலை என்ற சொல்வடிவங்களைச் சற்றுக்  காண்போம்.

இலைத்தல் என்றால் தன்மை குன்றுதல் என்று பொருள். இதை உண்மை குன்றுதல் என்றும் சொல்லலாம்.  அதாவது, ஒரு மந்திரவாதி கயிற்றைப் பாம்பாக மாற்றுகிறான் என்றால், அது பாம்பாக மாறிவிட்டது போன்ற காட்சியை ஏற்படுத்துகிறான்.   அது  "போன்மை உருவாக்க" மாகும்.  அதனை இலைத்தல் என்பது பொருத்தமானதே ஆகும். ( இளைத்தல் என்பது வேறு. )

இங்கு இரண்டாவது சொல்லை (வருமொழியை) முதலில் எடுத்துக்கொள்வோம்.

இலை என்பது  தன் தலையை இழந்து,  ‍  -லை  >  -லா   என்று சொல்லில் நின்றது.    பல சொற்களில் இதுபோலத்  தலை இழந்திருத்தலால் இதற்கு விரித்துரை தேவை இல்லை.  வேண்டின்   எம் பழைய இடுகைகளைக் காண்க.

லீலா என்ற சொல்லில் முன் நிற்பது  (நிலைமொழி )  இல் என்ற இன்மை குறிக்கும் சொல்.  "நடப்பில் இல்லாதபடி, அல்லது உண்மை இல்லாதபடி,"  என்று இங்கு பொருள்படும்.

இல்+ இலை > இலிலை > இலீலை > லீலை.>  லீலா


இல்+ இலை > இல்லிலை > இலிலை >  இலீலை > லீலை.>  லீலா

உண்மை இல்லாதபடிக்குத் தன்மை குன்றுதல். இதைத் தமிழர் விளையாடல் என்று கூறினர்.  விளை ‍  :  உண்டாக்குதல், விழை -  விரும்பு.   விழை  விளை யானது என்பர் அறிஞர்  சிலர்.

சொல்லை  மேற்கண்ட படி அமைத்தனர்  என்க.

அதை இலக்கண முறைப்படி  வடிவமைத்துக் காட்டுவதாயின்:

இல் + இலை =  இல்லிலை (லகர இரட்டிப்பு) (இலை: முதனிலைத் தொழிற்பெயர்)
இல்லிலை > இலிலை ( இடைக்குறை)
இலிலை >  இலீலை  (இலை > ஈலை, முதனிலை திரிந்த தொழிறெயர்),   அதாவது: இல் + ஈலை = இலீலை)
இலீலை > லீலை  ( முதற்குறை) (தலையெழுத்திழப்பு)
லீலை > லீலா  (திரிபு)

எனக்காண்க.

தமிழிலக்கணப்படி   லகரம் சொல்லின் முதலெழுத்தாய்  ஆகாது எனினும் இது ஒருவரின் பெயராய் வருங்காலை கவிதையிலன்றி  மற்ற விடத்து இலீலை என்று எழுதவேண்டுவதில்லை.   பாண்டையர் எழுதியவை பெரும்பாலும் பாடல்களும் அவற்றிற்கு உரைகளுமே. அது செய்யுளுக்குரிய இலக்கணம்.  செய்யுளில் போற்றற்குரியது  அவ்விலக்கணம்.

இயற்கையை மீறிய செயல்காட்சிகளும் இலீலைகளாய் அடங்கின.

இவ்விதமாக இலீலை என்ற சொல்லும் தமிழ்ச்சொற்களினடிப் பிறந்த திரிசொல் ஆகும்.

இதை ஒரு play  என்று ஆங்கிலத்தில் குறிக்கலாம். இறைவன் அப்படி மாயங்கள் காட்டினால்  அதையும் லீலைகள் என்கிறோம். திருவிளையாடல் என்றும் சொல்கிறோம்.

Play என்ற சொல்லைப் பாருங்கள்.  விளை  compares with pla.   வி and p are interchangeable, in many languages.    ~lay and  ளை   are  of proximate sound. There are many Tamil words which are close to English and other European language words. A Tamilian published a long list of such words but I do not know if the  list is still available.

மாய(ம்)  and magic,   மா  =  ma.   g  (ic)  -  pronounced  -j-  ஜ -  ய  interchangeable.   -ic  suffix.

ஒரு சொல் எம்மொழியில் தொடங்கிற்று என்பதே இவ்வாய்வு. அது எங்கு சென்று குடியேறிற்று  என்பது இவ்வாய்வின் இலக்கு அன்று.


====================================================================

Notes

மாயம் <  மாய்தல்.  மாய் + அம் . அறிவை மாய்ப்பது.


mAyA

f. art , wisdom , extraordinary or supernatural power (only in the earlier language) ; illusion , unreality , deception , fraud , trick , sorcery , witchcraft magic RV. &c. &c. ; an unreal or illusory image , phantom , apparition ib. (esp. ibc= false , unreal , illusory ; cf. comp.) ; duplicity Illusion (identified in the Samkhya with Prakriti or Pradhana and in that system , as well as in the Vedanta , regarded as the source of the visible universe) IW. 83 ; 108 ; (with Saivas) one of the 4 Pasas or snares which entangle the soul Sarvad. (with Vaishnavas) one of the 9 Saktis or energies of Vishnu L. ; Illusion personified (sometimes identified with Durga , sometimes regarded as a daughter of Anrita and Nirriti or Nikriti and mother of Mrityu , or as a daughter of Adharma) Pur. ; compassion , sympathy L. ; Convolvulus Turpethum L. ; N. of the mother of Gautama Buddha MWB. 24 ; of Lakshmi1 W. ; of a city Cat. ; of 2 metres Col. ; du. (%{mAye@indrasya}) N. of 2 Sa1mans ArshBr. - Lexicon.

lIlA f. (derivation doubtful) play , sport , diversion , amusement , pastime MBh. Ka1v. &c. ; mere sport or play , child's play , ease or facility in doing anything ib. ; mere appearance , semblance , pretence , disguise , sham Ka1v. Katha1s. Pur. (ibc. sportively , easily , in sport , as a mere joke [903,3] ; also = %{lIlayA} ind. for mere diversion , feignedly) ; grace , charm , beauty , elegance , lovelniess Ka1lid. Katha1s. Ra1jat. ; (in rhet.) a maiden's playful imitation of her lover , Dalar. Sa1h. Prata1p. ; a kind of metre (4 times $) Col. ; N. of a Yogini HParis3

Note: Derivation was doubtful for the lexicographers because they did not look into Tamil before writing their lexicon. It only proves the present exposition,

Some of these meanings are not etymological. (subsequently acquired meanings ).











வியாழன், 18 பிப்ரவரி, 2016

அயல்.

அயல் என்ற சொல் எவ்வாறு அமைந்தது.

அ =  அங்கு என்று பொருள்படும் சுட்டு ஆகும்.

அல் என்பது அன்மைக் கருத்து.  அல்லாதது என்று பொருள்.

அங்கு இல்லாதது,  இங்கும் இல்லாதது எங்கோ வெளியிடத்துக் குரியதென்று பொருள்.

அ + அல் =  அயல்.

யகர உடம்படுமெய் வந்துள்ளது,

அ + ( ய்    )  +  அல் =  அயல்.

இவ்வாறு அ என்னும் சுட்டும்  அல் என்ற   மறுப்பும்  சேர்ந்தது  அயல் ஆகும்.

விருத்தி.

விருத்தி என்பது உலக வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் அவ்வப்போது வழங்கும் சொல். " மரம் நட்டு உரமெல்லாம் போட்டுப் பார்த்தாகிவிட்டது, ஒன்றும் விருத்தி ஆகவில்லை" என்று பேசுவது கேட்டிருக்கலாம். "குடும்பம் ஒன்றும் விருத்திக்கு வரவில்லை" என்றும் சொல்வர். இப்போது ஆங்கிலம் கலந்து பேசும் பழக்கம் பரந்து காணப்படுவதால், விருத்தி என்ற சொல்வழக்கு சற்று மறைந்துவருகிறது என்று தெரிகிறது.

விருத்தியுரை என்ற வழக்கும் காணலாம்.  விரித்து எழுதப்பட்ட உரை விருத்தியுரை.  அகலவுரை என்ற பயன்பாடும் உளது. An elaborate commentary or gloss.

விரி >  விரு >  விருத்தி.

விரி > விரித்தி >  விருத்தி.

இரண்டும் ஒன்றே.  இதன் அடிப்படைக் கருத்து விரிவு என்பது.

விருத்தி என்பது விரித்தி என்ற பேச்சு வழக்கிலிருந்து வந்தது ஆகும்.  நாளடைவில் அது பல்வேறு  கருத்துவளர்ச்சிகளை உள்ளடக்கி விரிப்புற்றது.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

அந்நியன் ஒரு மறுபார்வை

அந்நியன்  என்ற  சொல்லுக்கு முன் விளக்கம் எழுதியுள்ளோம்.  அதை இங்கு சுருங்கச் சொல்வதானால்      அ  என்பது தமிழில் ஒரு சுட்டு,   அங்கு என்று படர்க்கையை  அது சுட்டும்,   ஆனால்  அ  என்பது  அன்மை என்றும் பொருள் படுவது,   அன்மையாவது  அல்லாமை;  அல்லாதது.  அல்லாதன;  அல்லாதவன்  என விரியும் . இதுவன்று   அவை அல்ல   என வரும்.  அல் திணை >  அஃறிணை ;  அல்வழி '  அன்மொழி என்பவை பழஞ்சொற்கள்

அல்  தன்  லகர ஒற்றை இழந்து  அ என்றும் நிற்கும்.   மங்கலம் >  அமங்கலம் போல.  அதாவது  மங்கலம் அல்லாதது.

அல்  + நீ  + அன் =  அன்னியன்    (  நீ  அல்லாதவன் ;   அடுத்தவன்;  பிறன் )
இங்கு  நீ  என்பது  நி  என்று   குறுகியது.  நீ  சிலவிடத்து   நி  என்று  குறுகும்.   நின்  என்ற சொல்லில்  அது குறுகியது காண்க.   நின்  புகழ்  =  உன் புகழ்.

அல்  என்பது   அ  என்றும் குறையும்  என்பதால்     அ + நீ + அன் =  அந்நியன்
என்றும்   ஆகும்.  நகரம் இரட்டித்தது. மற்றும் முன் கூறியதுபோல   நீ  குறிலாகிற்று.

நீ  என்பது நீக்கப் பொருளது என்பதை முன் இடுகையில் விளக்கியுள்ளேன்,
http://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_13.html
அதையும் மறுபார்வை செய்துகொள்ளுங்கள்.   நிவாரணம் என்ற சொல்லில்
நீ  குறுகியுள்ளது.   நீ +  வரு+   அணம்  >  நிவாரணம் .    நீங்கி வருதல்.   நீக்க நிலை  அண்மி வருதல் என்று விரிக்கலாம் எனினும்   ஒன்றே.     இந்தச்     சொல் எங்கும் பரவிப் புகழ் பெற்ற  சொல்.  நீ . என்பதே நீங்குதல்

அடுத்து  அயல் என்பது காண்போம்.

குறிப்பு:
பழனி  என்பதில்  பழம் நீ  என்பது  நி என்று  குறுகிற்று என்ப


செடியிற் பூத்ததொரு சிறுபூ‍‍‍‍

ஒரு வலைத்தளத்தைப்  புகழ்ந்து எழுதியது,

செடியிற்  பூத்ததொரு சிறுபூ‍‍‍‍----  அதன்
செழுமைஎன் சொல்வது
வளமையில்  வெல்வது
அடியில் இருந்து நுனி வரையில் ‍‍--- பார்க்கின்
அதுவொரு தேனடை
அழகாம்  தமிழ் நடை,

பழுத்து  விளைந்தபல  கருத்து ----  அது
பயன்மிகத் தந்தது
பளிங்கென்  றொளிர்ந்தது
தழுக்கும் தமிழுணர்வும் உலகில்  ---- பெறும்
தகுந்த  ஊக்கமினி
தகைத்தல் நீக்கும்கனி  .



சொற்குப்  பொருள் காட்டும்   ஆடி ---- தமிழ்
சொந்தம்  எனவு ணர்த்தும்
சோர்வில்  நிலைஇ  ணர்த்தும் ;
தெற்கில்  இலகு தமிழ்  உலகை ---  எந்தத்
திக்கும்  புகழ்ந்திடவே
தக்க   நிகழ்ந்திடவே.,                                            (செடியிற்)

தகைத்தல்  =  இளைத்தல், களைத்தல் .
தழுக்கும் -  செழிக்கும்.
சொற்கு  -  சொல்லுக்கு 
ஆடி  -  கண்ணாடி 
சோர்வில்  -  சோர்வு இலாத 
இணர்த்தும் -  நெருங்கச்  செய்யும் 
இலகு  - விளங்கும் 
தக்க   -  தக்கவை .



திங்கள், 15 பிப்ரவரி, 2016

ஆசாரி ஆனாலும் பூசாரி ஆனாலும் MURDER

ஆசாரி  ஆனாலும்  பூசாரி  ஆனாலும்
கூசாமல்  கொத்துவோர்  நிற்பரோ -----  நேசமொடு
நோய்ப்பட்டார்  என்றே  இரங்குவரோ சாவினது
வாய்ப்பட்டார்க் கியாமிரங்கு வோம் ,


யாப்பியல் குறிப்பு:
டார்க் கியாமி  இங்கு அலகு பெறாது.  பொதுவொரு நாலசையே என்பது காரிகை . நாலசை வருமென்பார் பண்டித நா.மு.வே . நாட்டார்.


ஒரு சீனக்கோவிலில் நடந்தது ஒரு கொலை   அது பற்றி:


https://sg.news.yahoo.com/case-of-dead-man-in-temple-reclassified-to-murder-094659836.html






சிவ,போதம் பா,5 உவமை நயம்

முன் இடுகை  http://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_56.html   இங்குக்  தொடர்கிறது . பாடல் மற்றும்   அதன் பொருள்  அவண் காண்க .  உவமை  நயம் மட்டும் இங்குக்  காண்போம்/


ஐந்தாம் பாடல் காந்தக் கல்லின் முன்னிருப்பினால் இரும்புத்  துண்டு அசைவு கொள்வதுபோல்,  சிவம் முன்னிருப்பதனால் உயிரர்கள் விடையங்களை அறியலாகின்றது என்று தெளிவுறுத்தியது.

இவ் வுவமையின் நயம்  அறிந்து இன்புறுகிறோம்.   இரும்பு காந்தத்தினால் ஈர்க்கப்படினும் இரும்பே அவ்வீர்ப்பினால் அசைவதன்றி  காந்தத்துக்கு எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.

இறைவன் முன்னிற்பினால் உயிரர்கள் விடைங்களை அறிதலாற்றல்
பெற்று இயங்குதல் நடைபெறுகின்றதெனினும் இதனால் இறைவற்கு மாறுதல் அசைவு யாதும் உண்டாவதில்லை. அவன் யாண்டும் முன்னிருந்தபடியே இருக்கின்றான்.

எனவே காந்த உவமை மிக்கப் பொருத்தமாய இனிய உவமை என்பது உணரப்படும்,

உயிரர்கள் என்றும் சித்துருவாய் உள்ளனர். ஆனால் அவர்கள் மெய் வாய் முதலான இந்திரியங்கள் அல்லது பொறிகள் போலும் சடங்கள் அல்லர். இவ்விந்திரியங்கள் உயிரர்களின் உறுப்புகளாயிருந்து அறிபொருளை உள்வாங்கி உயிரர்கட்கு அறிவிக்கின்றன எனினும்
அவை சடப்பொருள்களே. அவை உயிரரை இல்லாமல் இயங்க வல்லன அல்ல. அவைகட்கு தன்னியக்கம் இல்லை.  உயிரனுக்கும் இறையின்றித் தன்னியக்கம் இலது, உயிரும் உறுப்புகளும் இறையை எதிரிட்டு இயங்குவனவல்ல. உயிர் இறைச்சார்பும் இந்திரியங்கள் உயிரன் சார்பும் உடைமை அறிக. சார்பின்மை இயக்கம் இவற்றுக்கில்லை.

will edit and review later


சனி, 13 பிப்ரவரி, 2016

நீயும் நிவாரணமும்

  நிவாரணம் என்ற பதத்தில்  நல்ல பொருள் பதிந்துள்ளது.  நீயும் நிவாரணமும் ஆய்வோம் .

தொடர்புடைய வெளிப்பொருள் உள்சென்று பதிவதனாலேயே அது பதம் ஆகிறது. இயற்கையில் எந்த ஒலிக்கும் பொருள் இல்லை. எல்லாம் ஒலிகளே.  ஓர் ஒலி புறப்பட்டவுடன் அதற்கு முன்னரே கொடுக்கப்பட்ட அல்லது ஏற்பட்டுள்ள ஒரு பொருளில்  நாம் அதனைப் புரிந்துகொள்கிறோம். ஆகவே பொருள் பதிவு பெற்ற பின்னரே அது பதமாகிறது. பதி + அம் = பதம். கட்டட வேலை நடக்கும் ஓரிடத்தில் ஒலிகள் பல எழுகின்றன.
இரும்பும் இரும்பும் மோதும் டம்டம் ஒலி கேட்கிறது. அதில் ஏதும்
நாம் உணரத்தக்க பொருள் இல்லை, டமாரம் அல்லது தமாரம் என்று
சொல்லை உண்டாக்கி  அதற்குப் பொருளை ஊட்டியவுடன் அந்த ஊட்டத்தில் அது பதமாகிறது, சொல் பொருளை அருந்துகிறது.  சொல்லுக்குப் பொருள் அருத்தப்படுகிறது.  (Feeding meaning into a word or term )  - .அருத்தமாகிறது. அர் என்பது ஒலி என்றும் பொருள் படும்,  ஆகையால் அர்த்தம் என்ற சொல் ஓர் இருபிறப்பி ஆம், ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் பொருந்திய சொல்,

நிவாரணம் ஆவது துன்பம் அல்லது இடர் நீங்குவது.   நீங்கு என்பதிலும்  நிவ் > நீவு > நீவுதல் என்பதிலும் நீ உள்ளது. நீவுதல் இரண்டாகப் பிரிப்பதுபோலும் எழுகைத் தடவல். நீட்டுதல் என்பதிலும் நீ இருக்கிறது.தொடங்கிய இடத்திலேயே முடங்கிவிட்டால் அது நீட்டல் அன்று. அப்பால் அகன்று விரித்தலே நீட்டமாகும். என்னிலிருந்து நீங்கி வேறான ஒருத்தி "நீ". ஆகவே ஒரு தாய் தன் பிள்ளையை "நீ" என்பது எத்துணைப் பொருத்தம்.நான் என் தோழியை நீ என்கையில், அவள் என்னில் இருந்து பிறந்து நீங்கியவள் அல்லள் எனினும் இடத்தால் விலகி நிற்பவள் ,  அதனால் முன்னிலையாக "நீ"  பொருந்துதல் ஒப்புமை கருதியாகும்.

நீ என்பது சீன மொழியிலும் உள்ளது.இதை நான் சில ஆண்டுகட்கு முன்பே  எழுதியிருந்தேன்,

இதை உணர்ந்தபின் நிவாரணம் என்ற சொற்குப் பொருள் சொல்வது
எளிதன்றோ?  அது கொம்பிலாக் குதிரை,

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?

=== இத்தலைப்புடைய நூலை கவி கா.மு. ஷெரீப் எழுதியுள்ளார். இது கலாம் பதிப்பகம். 6 இரண்டாவது பிரதான சாலை, சி ஐ டி காலனி மயிலாப்பூர் சென்னை 600 0024 என்ற முகவரியில் கிடைக்கிறது. தொ.பே. 044 2499 7373 ஆகும்.

ஒளியச்சு, வடிவழகு, வெளியீடு என்றெலாம் நூல் முன் பக்கங்களிலேயே காணப்படுகிறது. வெளியீட்டாளர்தம் தமிழ்ப்பற்றினை இது தெளியக் காட்டுகிறது.

இந்நூலாசிரியர் சிறந்த கவிஞர், சீறாவின் உரையாசிரியர், தமிழ் முழக்கம் என்னும் இதழாசிரியர், பல இனிய திரைப்பாடல்களை ஆக்கியவர் என்று இவர்தம் பெருமையை அடுக்கலாம். வாராய் வாராய் (மந்திரிகுமாரி), பாட்டும் நானே (திருவிளையாடல் ) என்று பல பாடல்களை எழுதியவர். எழுதிய பாடல் சில வேறு கவிஞர்களின்  பெயரில் வெளிவரவும்  வழிதந்தவர்.


இவர்தம் திரைப்பாடல்களில் "முடிவிலா மோன நிலையை நீ மலை முடிவில் காணுவாய் வாராய்' என்றும், "அலைகள் வந்து மோதியே ஆடியுன்றன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே." "உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வைக் காட்டுதே" என்றும் வரும் வரிகள் கேட்போரின் செவிகளை இன்புறுத்தும் சொல்லினழகும் கருதினாழமும் கொண்டவை. தெளிந்த நீரைப் போன்ற காதல் என்பது இவர்தம் ஒப்பீடு.  " பாடும் உனை  நான் (கடவுள்)  பாட வைத்தேனே .... என்னிடம் கதை சொல்ல  வந்தாயா?"  என்பது நகைச்சுவையுடன் இறையாற்றலைப் புலப்படுத்தும் வரிகள். .

இஸ்லாம் ஒரே கடவுட் கொள்கையுடைய மதம். இதில் மறுபேச்சுக்கு என்றும் இடமில்லை. இந்து மதத்திலும் ஒருகடவுட் கொள்கை, நூல்களில் பரக்கக் காணப்படுகிறது.வேதங்கள், உப நிடதங்கள், குறள் எனப்பல. பல் பெயரும் பல் வடிவுமும் ஒரு குறியதே என்பது இந்து மதம். இவற்றில் பல ஒற்றுமைகளை எடுத்துக்காட்டி ஆசிரியர் இம்மதங்கள் ஒன்றுக்கொன்று மாறுபடுவன அல்லவென்று நிறுவுகிறார். கொள்கைவிளக்கில் ஒருதன்மையன எனினும் கடைப்பிடியில் வேறுபடுவன என்பதைக் குறிக்கிறார். ஓர் உயர்கொள்கையை யாண்டும் நிலவுமாறும் மாறுபடுதல் சிறிதுமின்றியும் நிலை நிறுத்திய பெருமைத்து இஸ்லாமியமென்று இவர் கூறுகையில் அஃது மறுக்கொணா உண்மையென்றே ஒப்புவோம். நாள்தொறும் பயில்முறையில் இந்து மதம் வேறுபடினும் இந்துக்களும் முஸ்லீம்களும் காலகாலமாய் ஒன்றுபட்ட நாட்டுவாழ்வினரென்பதைச் சுட்டுகின்றார். தம் ஆட்சி நிற்கவைக்க, முஸ்லீம்கள் இந்துக் கோயில்களை இடித்தனரென்று பரப்புரைத்த 1   ஆங்கிலேயன் புனைகதையை ஆசிரியர் அம்பல மாக்கியுள்ளார்.


செந்தமிழ்க்  கவியின் இந் நூல் படிக்க இனியதே.  


அரிதின்  முயன்றார்  அழகுத் தமிழில் 
இனிதே புனைந்த கவிஷரீபின்  இன்னூல் 
பலரும் படித்துநயம் பண்பொடு பெற்று 
குழறு   படிதீர்வர் கூறு.   ---  Sivamala,


1  Much of the theories in history concocted during the British Raj by British historians and researchers seem intended to retain India in their possession.   Examples are the Aryan Invasion
Theory and Aryan Migration Theory. That Muslims were against Hinduism was a similar theory. In any case, the British were successful in dividing India and causing rifts. The author Sheriff pointed out that Muslim rulers including  Aurangzeb  had donated extensively even for the building of Hindu temples. Many Hindus were also in their employ.

Political assasinations

காட்டர சென்று கழறும் குலைவாட்சி
மீட்டுற  மக்கள் மிடையொழுங்கு சட்டமே
நின்று நிலைப்பட  நேராம்  செயலமைப்பு
என்றாகும் மன்னோ இனி.

குலைவாட்சி  - ( அராஜகம்.) ஆட்சிக் குலைவு
அல்லது குலைந்துவிட்ட ஆட்சி 
மிடை -  அணுகும்.

Bihar BJP vice-president killed, another shot dead


http://www.thehindu.com/todays-paper/bihar-bjp-vicepresident-killed-another-shot-dead/article8230535.ece



விக்ருதி விகுதி difference

விக்ருதி  என்ற  சமஸ்கிருதச் சொல் வேறு;   விகுதி  என்ற தமிழ்ச் சொல் வேறு   ஆகும்.

விக்ருதி என்பது பின்னொட்டுப் பெறாத திரிபு. எடுத்துக்காட்டாக:

திருஷ்டி   என்பது மூலச்சொல்  ( பிராகிருதி )  என்று வைத்துக்கொண்டால், திட்டி என்பது விக்ருதி ஆகும்.1  நாம்  தமிழில் சொல்லும் விகுதி இதுவன்று.  தமிழில் விகுதி என்பது  பின்னொட்டு அல்லது இறுதிநிலை. சொல்லிறுதியில்  நிற்பதே  விகுதி.

எனவே இவை வெவ்வேறு  சொற்கள்.

குறிப்புகள் 

1.  தெலுங்கு ஆசிரியன்மார்  இங்ஙனம் முடிவு செய்கிறார்கள்.
2  திருஷ்டி  என்பது தெருட்டி என்பதன் திரிபு.    தெருள்:  தெளிவு.
  

வியாழன், 11 பிப்ரவரி, 2016

ஓரம் என்ற சொல்

ஓரமென்பது  ஒரு பக்கத்தின் முடிவு அல்லது எல்லை.    இதை ஓர் என்ற சொல்லுடன் தொடர்புறுத்தவேண்டும்.  ஓர்  என்பது ஒரு பெயர்ச்சொல்  அல்லது எண்ணுப்பெயர் ,  ஓர்தல் என்ற வினைச்சொல் உண்டென்றாலும்  அது ஒருபக்க இறுதிக்குச் செல்வதைக் குறிக்கவில்லை.  இதிலிருந்து நாம் அறிவது யாதெனின்  ஒரு பெயரிலிருந்து விகுதி இணைந்து இன்னொரு பெயர் தோன்றுமென்பதுதான்,  விகுதி வினைச்சொல்லில்தான் இணையவேண்டுமென்பதில்லை என்று உணர்ந்துகொள்ளவேண்டும்,

ஓர் ​+ அம் >  ஓரம்   ஆகும்.
ஓர் + அல்  =  ஓரல்   (பொருள்:  ஒடுக்கம்).

ஒரு பக்கமாகப் போ என்றும் பேச்சில் உள்ளது.  ஓரம் கடந்தால் வீழ்ச்சி  ஏற்படலாம் ஆகையால்  வீழ்ச்சி ஏற்படுமுன் உள்ள இடமே பக்கத்தின் எல்லை  ஆகும்.

விகுதி பெறும் சொல்  உண்மையில்  நீண்டு விடுகின்றது ,   நீள்வது  மிகுதி . மிகுதி என்பது விகுதி என்று திரிந்து வழங்குகிறது.   ம -  வ  திரிபு  இது.

மிஞ்சுதல் -   விஞ்சுதல் .
மழித்தல்  -  வழி த்தல்
மிரட்டுதல் -  விரட்டுதல்
         விரட்டுதல் என்பதற்கு  அச்சுறுத்தல் என்றும் பொருளுண்டு.
மிருகம் :  இது விருகம் என்றும் வரும்.
மீதம் -   வீதம் ( விடப்பட்டது,  மிகுந்தது  என்ற பொருளில் )
(  மிகுதம் > மீதம் ,     பகுதி > பாதி எனல் போல.
பகு  பா,   மிகு > மீ.

இது  மிகுதி > விகுதி என்பதை உறுதி செய்கிறது,

விகற்பித்தல் என்பதும் மிகற்பித்தல்  (மிகல்+ பு+ இ+ தல் ) என்பதன் திரிபே.. மிகுதி என்பதும்  வேறுபடுதலே.  குறைதல் இன்னொரு வேறுபாடு.\\

சொற்கள் சிறப்புப் பொருளில் வழங்கிப்   பின் பொதுப்பொருள் அடைகை  இயல்பாம்.

இதன்மூலம்  ஓரம் என்பது விளக்கப்பட்டதுடன், தொடர்புடைய சிலவும் அறிந்து இன்புற்றோம்.


   






புதன், 10 பிப்ரவரி, 2016

சி-போதம் ஐந்தாம் பாடற் பொருளை......

முன்  இடுகை:http://sivamaalaa.blogspot.sg/2016/01/5.html


சிவஞான  போதம் ஐந்தாம் பாடற் பொருளை இப்போது அறிந்து மகிழ்வோம்.

விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு 
அளந்தறிந்து  அறியா  ஆங்கவை போல 
தாம் தம் உணர்வில் தமியருள் 
கா ந்தங் கண்ட பசாசத்து  அவையே ,

விளம்பிய  உள்ளத்து -  முன் சொன்ன  உடற்கண் உள்ளதாகிய உயிரால்;

உள்ள அத்து  = உள்ள அது = உள்ள (உயிர்)  காரணமாக;  அது என்பது  உயிரைச்  சுட்டியது.

இங்கு அது என்பது அத்து என்று  இரட்டித்து நின்றது.

மெய்வாய் கண் மூக்கு செவி  : ( இங்கு கூறிய )  ஐந்து புலன்களும்

அளந்து  -   அளவிட்டு;

அறிந்து  -  தெரிந்து  (கொள்ளுமென்றாலும்)

அறியா  -   உண்மையில் அவை தாமே எதையும் அறியவில்லை;

ஆங்கு அவை  போல  -    அந்த ஐம்புலன்களும் தாமே அறிதல் போலும் தோற்றத்தை உண்டாக்கி ;

தம்  தமி  அருள் -  தம்    தம்மில் ஒன்றாயிருக்கும்  சிவத்தின் அருளினால்;; (அறிதல்  நடைபெறுகின்றது )

தமி =   தமித்து இயங்கும்  சிவம்;  வேறோர்  ஆற்றலின் துணையின்றி இயங்கும் .  இறைவன்;

காந்தம் கண்ட பசாசத்து  =  காந்தத்தை  அணுகிய இரும்பு  போல  ஐம்புலன்களுக்கும்  அவ்வாற்றல்  வந்து  சேர்ந்து  இயக்கத்தையும்  உணர் ஆற்றலையும்  அளிக்கும் தன்மை  அதுவாகும்,

பசாசம் - இரும்பு.    அது,    பசாசம் > பசாசம் அத்து என்று இரட்டித்தது. 
  பசாசம்   அதுவாகும் என்றபடி 

.பசாசம்  -   இச்சொல் பைசாசம் @ என்றும்  வழங்கும்.  பச்சை இரும்பு என்ற வழக்கும்  உள்ளது.    இரும்பு வேலைக்காரனால்   அடித்துச் செய்யப்படாத   இரும்பை   இது  குறிக்கும்.    பசுமை +  அசம்   =  பசாசம் . மை விகுதி கெட்டு  சகரம்  நீண்டது.    அயம் ( இரும்பு ) >  அசம்     யகரம் - சகரமாய்த் திரிந்தது.   நேயம் >  நேசம்  போல.

@   பசாசம் -  பைசாசம்   இது  பசுந்தமிழ் > பைந்தமிழ்  போன்ற திரிபு.   (  பிசாசு - பைசாசம்  என்பது வேறு .    குழம்பலாகாது. ) 

காந்தம்   <   காந்தி  இழுத்தல் .   காந்துதல்  அதன் இழுப்பு  ஆற்றலைக் குறித்தது. தீயினால்  காந்துதலோடு  ஒப்பிட்டு ச்  சொல் அமைந்துள்ளது.
சோற்றுப்பானை  சூடேறிச்   சோறு   காந்தும்போது   உள்  அடியில்  சோறு  ஒட்டிக் கொள்கிறது,   இதையறிந்த தமிழர் ,   இழுக்கும் இரும்பிலும்  உட்சூடு 
இருக்குமென்று  எண்ணி  அதைக் காந்தம்  ( காந்து ​+ அம )  என்றனர்.  இரும்புத் துண்டுகளை  உரசினால்  சூடு ஏறும்;  கூடினால் பொறிகூடப் பறக்கும்.   ஊர்மக்கட்கும்    கருமகற்கும்  இது  போதுமே!

Some changes in the commentary text were noticed and corrected.  Anti-Virus facility warned that some add-ons are making unintended changes. 





Print staff can mess up

சாதிசமம்  அக்கொடுமை தானெண்ணார்  பெண்ணடிமை 
 ஆதிப் புதியவுல  கார்/

-----  பண்டித  வீ  சேகரம் பிள்ளை . of  Colombo,
         circa 1938 in Singapore
Editor of  Puthiya Ulagam a Tamil Monthly Magazine. Singapore.
printed at Star Press/

The Kural veNpaa appeared as signature verse in the front page of the Magazine.

பதிப்பிப்பவர்களுக்குப்  புரியாவிட்டால் அவர்கள் பாட்டைத் திருத்த முற்படுவதுண்டு. பதிப்பின்போது:

"சாதிசம  மக்கொடுமை "  என்று  சேர்த்து எழுதப்பட்டிருந்ததால்  அதை அவர்கள் :சாதிசம  யக்கொடுமை "   என்று  மாற்றினராம்.   ஆசிரியர் பிள்ளை அவர்கள்  பதிப்போரை  மிகவும் கடிந்துகொண்டாராம்.  பின் அது திருத்தம்பெற்று வெளியிடப்பட்டதென்ப .  நவசக்தி ஆசிரியர்  திரு வி  க  அவர்களுக்கும்  நூற்படி  ( copy )    அனுப்பப் பட்டதென்பர்.

நம் காலத்துக்கு முந்திய வரலாற்றில்  ஒரு துணுக்கு.



ஆயிரம்

பத்து என்ற சொல் பல் ( பல,  பன்மை)  என்னும் சொல்லினின்று தோன்றியது. ஒன்று முதலாக எண்ணக்கற்றுக்கொண்ட மாந்தர்க்குப்  பத்தை எட்டியவுடன் அது மிகப்பலவாகத் தோன்றியதே,  பல் என்பதன் அடிப்படையில் பத்தை எண்ணியதற்குக் காரணம் ஆகும்.  இன்று மனிதன் ஆயிரங்  கோடிகளாகக் கணக்கிடுகின்றான்.
ஐந்துக்கு அப்பால் பெரியதாவது  ஆறு ;  இது நதி என்றும் பொருள் படுகிறது.  ஐந்துக்கு அப்பால் செல்வது ஆறுபோல் நீள்வது என்று அயர்ந்தான்  அவன். அந்த நீட்சி குறிக்க  ஆறு என்றே  கூறினான்.  அதிலிருந்து மேல் இன்னொன்றைச் சேர்த்தால்  அது  ஓர் எழுச்சி ஆகிவிட்டது .....எழு > ஏழ் > ஏழு  என்று அதைக் குறித்தான்.

இங்ஙனமே  ஆயிரத்தை அடைந்த போது  அவன் எண்களை  எண்ணுவது  "ஆகிவிட்டது -   இறுதி  ஆகிவிட்டது  -  இனி ஏது பிறவென்ற நிலைக்கு வந்து
அதை  "ஆய்  + இரு +  அம்  -=  ஆயிரம்  என்று கூறினான்.  எண்ணிக்கை முடிவாகி இருக்கின்றது  என்று  கருதினான்.

இன்னும் சென்ற காலை   இனி முடியுமோ -   திரும்பவன்றோ வேண்டும் என்ற கவலை.  கோடு  என்றால் மலையுச்சி.   கோடு என்றால் வளைந்து திரும்புதல்.   இதை  அடிப்படையாக ஏற்று,   கோடு> கோடி  என்றான். கோடி என்பதோ  முடிவு என்றும் பொருள்.  தெருக்கோடி என்ற வழக்கை உன்னுக.

ஆயிருக்கும் ஆயிரமும்  கோடுயர்ந்த கோடியும் கண்டு மகிழ்ந்தோம்.


செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

வாரணம் ஆயிரம்

வாரணம்  ஆயிரம் சூழ வலம்வந்து 

என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள் .

வாரணம் என்றால் யானை.  ஆயிரம் ஆனைகள்  ( யானைகள்  என்றும் எழுதப்பெறும் )  வலம்  வந்தன என்றால்  இங்கு காட்டு யானைகளைக் குறிக்கவில்லை.

வாரணம் என்ற சொல்லே காட்டு யானைகளைக் குறிக்காது.  அந்த யானைகள் வலம்  வர உதவாதவை என்பது மட்டுமன்று;  வாரணம் என்ற சொல்லே அவற்றை  உட்படுத்தாது.

வாரணம் என்பது  வரையப்பெற்ற யானைகளைக் குறிக்கும் என்று அறியவேண்டும். வண்ணங்கள் தீட்டப்பெற்று அழகு படுத்தப்பட்ட யானைகளையே  பாடல் குறிக்கும்;  அதில் வந்த சொல் குறிக்கும்.
வரி வரியாகத் தீட்டப்பட்டு வலம் வருபவை அவை .

வரி + அண் + அம்  =  வாரணம் .
அல்லது:
வரை +  அண் + அம்  =  வாரணம் .

இதில்  வ என்ற குறில்  வா என்று நீண்டது.

எடுத்துக்காட்டுகள்

படி  + அம்  =  பாடம்.
உங்கள் கண்ணும்  கருத்தும் எழுதப்பட்டவற்றில் படிந்து  பின் நீங்கள்  அவற்றைத்  தெரிந்து  வாயிப்பதால்  ( வாசிப்பதால் )  (வாய்விட்டுப் படிப்பதால் )  அது  பாடம் ஆகின்றது.

இதன் முன் கருத்து படிதலே.   படித்தல் பிறவினை.

இப்புணர்ச்சியில்   (ட் + இ = டி ​ )  இகரம்  மறைகிறது.   இகரம்  கெட்டது  என்பர் இலக்கணியர்.  சுடு  > சூடு என்று பெயர் ஆவது போல் முதல் (எழுத்து) நீண்டு
ப > பா  ஆகிறது.

இன்னும் பல உதாரணம் காட்டலாம் என்றாலும்  இக்கருத்தே வலியுறும்.
உங்களுக்கு நேரமில்லை அன்றோ?

இப்படித்தான்  வரி +அணம்  என்பதிலும்  முதல்  (தலை) நீண்டு  இகரம் கெட்டு
வாரணம் என்றாகி,  அலங்கரிக்கப் பட்ட யானையைக் குறிக்கிறது,

வரை + அணம்  என்பதில் ஐ கெட்டு  முதல் நீண்டு புணர்ந்தது என்றாலும்  அதுவும்  இதே.

என்மட்டில் இவற்றுள் எதையும் நீங்கள்கொள்ளலாம். பெரிய வேறுபாடு ஏதுமில்லை.  விவாதம்  வேண்டியதில்லை.  ( வி(ரி) + வா (ய் ) + து ​+   அம் )  

அறிந்து இன்புறுவீர்.


--------------------------------------------------
அணம்  என்ற  இடைச்சொல் -   முன் இடுகைகளில் காண்க.
will edit