புகை இல்லாமல் நெருப்பு இலை என்பார்கள்.1 இப்போது எரிவாயு அடுப்பைப் பற்றவைத்தாலே எந்தப் புகையும் இல்லாமல் அழகாக நீல நிறத்துடன் எரிகின்றது. நீர் புகையைப் பார்க்கவில்லையே தவிர புகை ஒளிந்து கொண்டிருந்து பின் மறைந்து எரிந்தது என்று நீங்கள் கூறக்கூடும்! இருக்கலாம் .......எனக்குத் தெரியவில்லை.
பகை இல்லாமல் போர் இல்லை எனலாமா? போர்கள் பகை ஒன்றாலேயே ஏற்படுவதில்லை. மூல காரணம் என்பது பொருளியலாக இருக்கலாம். அதனால் மனக்கசப்பு வளர்ந்து பகையாக முற்றிப் போராய் முடியலாம். தொடக்கத்தில் பகை இல்லாவிட்டாலும், அது பின் ஏற்படலாம் என்று தெரிகிறது.
இது பற்றி நன்கு அறிந்த பட்டறிவாளராக நீங்கள் இருக்கக்கூடும்.
இப்போது பகைப்போர் என்ற சொல்லைக் காண்போம். \
பகை + போர் = பகைப்போர் எனில் பகையின் காரணமாகிய போர் என்று பொருள்படும்.
பகைப்போர் - பகை கொள்வோர் என்றும் பொருளாகும்,
இவற்றை அறிந்து பயன்படுத்துதல் உங்கள் பொறுப்பு..
1 நெருப்பு இல்லாமல் புகை இல்லை. ( நெருப்புக்குச் சான்று புகை) . பழமொழி .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக