வேள்வி செய்தல் (யாகம் ) - தமிழர் செய்யவில்லை என்பது உண்மையன்று. இறை வணக்கத்திற்கு வேள்வி செய்வது அவர்களுக்குப் பிடித்தமானதாய் இருக்கவில்லை. தானமும் தவமும் தமிழருக்குப் பிடித்தவை. யாகம் பிடிக்காத காரணம் அது ஓர் உயிரைக் கொன்று இயற்றுவதாய் இருந்தமைதான் . " அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ....." என்ற குறள் இதைக் காட்டுகிறது. ஆனால் மழை இல்லாமல் போனால் தானமும் தவமும் இயற்ற முடியாவே என்று வள்ளுவர் கவலைப்படுவதாகவே எமக்குத் தெரிகிறது . " வானம் வழங்கா தெனின் " இவை தங்கா என்று வள்ளுவர் கூறுகிறார்,
தானம் என்ற சொல் தா என்ற ஏவல் வினையடியே தோன்றியது. இது பல மொழிகளிலும் பரவி விட்ட சொல்தான்
தா + இன் + ஆம் = தானம் ஆகும்.
இன் என்பது உரிமை/ / உடைமை குறிக்கும் இடைச்சொல். 1.தருதற் குரியது ;- 2. தருதல் ஆகிய செய்கை;.
தருங்கால் பிறர்க்குரிய தாவதே தானம். இங்கு இன் மிக்கப் பொருத்தமாயுள்ளது. உரிமை பிறர்க்கு மாறுவதைக் குறிப்பால் உணர்த்துகிறது. மிக்க ஆழ்ந்த பொருண்மை மிளிரச் சொல் உருவாக்கப் பட்டுள்ளது.
இன் என்பதில் இப்பொருளைக் காணார் பலர்.
எ-டு : உரிமை உடைமைப் பொருளில் இன்:
இந்தக் காய்ச்சல் ஒரு நோய் நுண்மத்தின் (virus ) வேலை என்று மருத்துவர் கூறுகிறார்.
சொல் அமைகையில் இது தன் தலையெழுத்தை இழந்து "ன்" என்று மட்டும் நிற்கும். இல்லையென்றால் "தாயினம் " என்று போந்து வேறு சொல்லுடன் மயங்கிப் பயன்படுத்துவோரைக் குழப்பும் . தானம் என்பதே சரியான அமைப்பு.
ஆங்கில dOnation வரை பரவி உலகச் சேவை செய்யும் இத் தமிழ்ச்சொல்லை வாழ்த்துவோம்.
இன்னும் இதுபற்றி எழுதவேண்டும் என்று தோன்றினும் இத்துடன் அமைவோம். அடுத்துத் தவம் எனற்பாலதான சொல்லை நாடுவோம்.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக