மா என்பது கருமை நிறத்தையும் குறிக்கும். இச்சொல்லுக்குப் பல பொருள்கள். ஆதலால் "நிறத்தையும்" என்றோம்.
பேச்சு வழக்கில் மாநிறம் என்றால், மிகுந்த கறுப்பைக் குறிக்காமல், இடைப்பட்ட ஒரு நிறம் குறிப்பதாகும்.
மா நிறம் என்பதனுடன் தொடர்புகொண்ட இன்னொரு சொல்லைக் கவனிப்போம்.
மா இர் > மை இர் > மயிர்.
இதில் மா என்பது மை ஆகிவிட்டது. மை என்பது "ம" ஆனது.
சொல்வரலாற்றில் மைக்கு முந்தியது மா. அதனால் அதைக் காட்டினோம். நீங்கள் மை+ இர் என்ற முடித்துவிடலாம் என்று நினைக்கலாம். அப்படியே நீங்கள் வைத்துக்கொள்வதில் எமக்கு மறுப்பு ஒன்றுமில்லை. மை எப்படி வந்தது -- யாரும் கேட்டால் அப்போது நீங்கள் விரித்துக்கொள்ளுங்கள்,
இதுபோல் திரிந்த இன்னொரு சொல்: மை+ இல் = மயில் ஆகும். இல் என்பது
இடம் என்ற பொதுப்பொருள் உடைய சொல் மைப்புள்ளிகள் போலும் இடங்களை உடைய தோகைப் பறவை.
இர் என்ற இறுதி, இரு என்பதோடு உறவுற்ற சொல் இரு > இர்; அல்லது இர்> இரு. எவ்வாறு ஆயினும் உணர்ந்துகொள்வதே முதன்மை யானது ஆகும். இரு என்ற வினைச்சொல் முன்மை வாய்ந்தது. வினைச்சொல் எந்த மொழியில் உள்ளதோ அங்குதான் பெயர் ஏற்பட்டது என்பது சொல்லியலார் முடிபு.
மை இர் என்பது இணைந்து, மயிரானது. முதனிலைக் குறுக்கம்..
மயிர் என்பது மசிர் என்று வழங்குவது ய- ச திரிபு. இது பல மொழிகட்குப் பொதுவான திரிபு. தமிழில் வாயில் > வாசல், காண்க.
மெய்ப்பு - பின் வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக