வழிபாடு இன்னொரு சொல்
வழிபாடு என்பதை எழுத்துத் தமிழில் சொல்லப் பல சொற்கள் உள்ளன. இறைவழிபாடு என்று இன்னும் தெளிதிருத்தமாகச் சொல்வதும் உண்டு.
பழந்தமிழ் நூல்களிலிருந்து "பணியல்" என்ற சொல்லும் கிடைக்கின்றது. இந்தச் சொல்லைப் பயன்படுத்தி அது வழக்கிறந்துவிடாமல் காப்பாற்றுவதும் தமிழர் கடனாகும். இது பணி(தல்) என்ற வினையினின்று அமைந்த சொல்லே ஆகும்.
ஒரு வீட்டில் ஒரு விழாப்போல எடுத்துப்ெரிய அளவில் பணியல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. யாமும் சென்றிருந்தோம். அப்போது ஒருவர ் வந்து உரையாடத் தொடங்கினார். "இவர்கள் ரொம்ப மும்முரமாகச் சாமி கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள்" எ்ன்றார் அவர். இவர்கள் என்றது வீட்டாரை. இதிலிருந்து "சாமி கும்பிடுதல்" என்பதே பணியல் என்பதற்குப்ேச்சு வழக்குச் சொல் என்பதை அறிந்துகொள்ளலாம்.
பணியல் என்பது பணிதல் என்ற வினையடிச் சொல்லே என்பது யாம் சொல்லாமலே உங்கட்குப் புரியும்.
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக