வெள்ளி, 20 நவம்பர், 2020

சூழ்தருதனம் அல்லது செல்வச்சூழல்.- சுதர்சனம்

 பண்டமாற்றுப் பொருளியல் தேய்ந்து பணப்புழக்கம்  நாட்டில் ஏற்பட்ட பின்பு மக்கள் தாங்கள் தேட்டினை உலவும் பணத்தாள்களாக மாற்றிவைக்க முனைந்துவிடவில்லை. நகைபகை1*யெல்லாம் ஒரு குடத்துக்குளிட்டுப் புதைத்து வைத்துக்கொள்ளவே தலைப்பட்டனர். கல்யாணம் காட்சி என்று வரும்போது தோண்டி எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள இவ்வழக்கம் உதவியது.

ஓருவனின் செல்வம் குடத்துள் இட்டுப் புதைப்புறாமல்,  அவனிடத்துச் சூழப் பலராலும் காணப்படுமாயின், அத்தனத்தைச் சூழ்தரு தனம் என்று சொல்வதே சரி.  புதையல் அன்று என்பது யாரும் அறிவார்.  தனம் என்பது தன் சொந்தச் சேமிப்பில் தான் வைத்திருப்பது.  தன் + அம் = தனம்..  இதைத் தனம் என்க.  த என்பதை எடுத்தொலிக்கவேண்டாம். இது பெர்சனால்டி என்பதுபோலும் சொல்.

இனித் திரிபு காண்போம்.

சூழ் >  சூ > சு. (கடைக்குறையும் முதனிலைக் குறுக்கமும்).

தரு -  தர். உகரம் கெட்டது.

தனம் > சனம்.    முன் இடுகைகளில் த ச திரிபு கண்டுகொள்க.

சு + தர் + சனம் = சுதர்சனம்.( பாக்கியவான்.)

சுதர்சனம் > சுதனம்


குறிப்புகள்:

1*நகை என்பது பெரும்பாலும் பொன்னாலான அணிகலன்கள் அல்லது ஆபரணங்கள்.  பகை என்பது எதிரிகள் அல்லர்.  ஒருவர் வைத்திருக்கும் முழு நகைத்தொகுதியிலும் ஒரு பகுதி.    பகு > பகு+ ஐ > பகை. --  எனில் பகுதி.  பகை என்ற பகுதி  எதிரியைக் குறிக்கக் காரணம் அவன் நம்மிலிருந்து பகுந்து வேறுபட்டு நிற்பதுதான்.  இப்பொருளும் சொற்பொருண்மையுடன் தொடர்புபட்டதே ஆகும்.

எழுத்துப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

கருத்துகள் இல்லை: