வியாழன், 26 நவம்பர், 2020

உகர ஒகரத் திரிபுகள்

 உகரம் ஒகரமாக மாறுவது தமிழில் இயல்பான திரிபுதான். இதைப் பலர் கண்டுகொள்வதில்லை.

ஒங்க வீடு எங்க இருக்கு என்று கேட்கும் போது,  உங்கள் என்பது ஒங்க என்று மாறிவிடுகிறது.

சொந்தமுன்னா திங்க உங்க ஒண்ணுக்குள்ளே ஒன்னா ஒத்துமையா இருக்கணும் என்ற பேச்சுமொழி வாக்கியத்தில் வரும் உங்க என்பது உண்ண என்ற சொல்லே ஆகுமென்பதைச் சொல்லவேண்டியதில்லை. இதில் உங்க என்பது எதுகைநோக்கிய திரிபு போன்றதாகும்.

உன்னாலே முடிந்ததைப் பார்

ஒன்னாலே முடிஞ்சதைப்  பாரு. (பேச்சு)

உறவு > ஒறவு      ஒறமொறெ

பேச்சுத் தமிழின் திரிபுகளை இமனோ அண்ட் பரோபோல யாராவது முற்ற ஆராயவேண்டும்.

எழுத்துமொழியில்  ஊங்கு - ஓங்கு என்பவற்றிலும் இது காணலாம்.

அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை.

அறந்தினோங்கிய ஆக்கமும் இல்லை.

ஊங்கு என்பது எச்சவினையன்று எனினும் அதன் உறவு தெளிவாகவே உள்ளது.

கருத்துகள் இல்லை: