வெளி நாட் டிலே ஒரு வேலை கிடைத்து
வீடொன்றும் கிடைத்திட்ட போதினிலே
தனியா ளாய்இருக்க வேண்டாமையா
தக்கசிறு நாய்க்குட்டி வைத்துக்கொள்ளும்;
தனிமை எனவொரு துன்பமுண்டே
தடுத்ததை இன்பமாய் மாற்றிக்கொள்வீர்
நனி யது வீட்டுக்குள் ஓடியாடி
நாளினைப் போக்கிடும் நலமே செய்யும்.
இந்தப் படத்துக்கு ஒரு விளக்கம் எழுத எண்ணினேம்
அது ஒரு கவிதைபோல் வந்துவிட்டது. படத்தையும்
வரிகளையும் நுகர்ந்து மகிழ்வீர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக