தலைப்பில் உள்ள இரு சொற்களையும் இப்போது அலசுவோம்.
இகரச் சுட்டு என்பது இங்கு என்ற கருத்தை ( இவ்விடம் என்னும் சுட்டுக் கருத்தை ) ஒருவகையில் அடிப்படையாகக் கொண்டது எனில் அத்துணைப் பிழையாகிவிடாது.
இங்கு இருப்பது - அதாவது இவ்விடம் என்பது - எப்போது அங்கு அல்லது அவ்விடமாக மாறுகிறது. இது பெரிதும் வரையறவு செய்யப்படாத ஒன்றாகும். இது பேசுவோனின் அல்லது குறிப்போனின் கருத்தெல்லைக்கே மொழி விட்டுவிடுகின்றது.
அங்கு என்பது முன்னிலை இடமாகவும் கூட இருக்கலாம். ஆனால் சற்றுத் தொலைவு இருக்கவேண்டும் என்று தெரிகிறது. பத்து அடிக்கு அப்பால் இருக்கிறாரே அவர்தாம் எங்கள் அண்ணன். என்று சொல்லாமல் அங்கு இருக்கிறாரே அவர்தாம் அண்ணன் என்றாலும் சரியென்றே சொல்லலாம்.
ஒரு மலையில் நீர் ஓடிவருகின்றது. அந்த மலைமுகடு எங்கே முடிகிறதோ, அப்போது நீர் இறங்கி விழுகின்றது.
இ > இங்கு;
இ > இறு (முடிதல் வினை). இறு + தி = இறுதி.
இற்று, இற்ற என்பன எச்சவினைகள்.
இறு விகுதி பெறாமல் முதனிலை (முதலெழுத்து ) நீண்டு ஈறு என்றாகும்.
இது சுடு > சூடு என்பது போலவே.
மலை முகட்டின் தரை எங்கு இறுகின்றதோ ( முடிகின்றதோ ) அங்கிலிருந்து நீர் இறங்குகிறது. இச்சொல் இறு+ அங்கு என்ற துண்டுகளால் ஆனது ஆகும்.
இறு > இறு+ அ+ கு = இறங்கு என்று காட்டி இறு என்பதில் உகரம் கெட்டது; பின் அகரம் ஏறி சேர்விடம் குறிக்கும் கு வந்து இணைந்து புணர்ச்சியில் ஙகர ஒற்று தோன்றிற்று என்று விளக்கலாம்.
இந்த இலக்கணம் கூறாமல் இறு + அங்கு = இறங்கு என்று சுருங்க உரைப்பின் எளிதாகிவிடும்.
இ : இங்கு. ஈ : இங்கு. எ-டு: இறு என்பதிலிருந்து ஈறு வந்தமை காண்க. இங்கு என்பதும்
ஈங்கு என்று வரும். அங்கு > ஆங்கு ;; உங்கு > ஊங்கு போல.
அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை;
ஈங்கிருந்து ஊங்கு போயின் விட என்பது பொருள்.
இ எனற்பாலது ஈ என வருதலின், இறங்குதல் கருத்தும் உளதாகலின், இறங்குதலென்பது மதிப்பின் அல்லது கணிப்பின் இறக்கமும் குறிக்கும்.
இ > இழி; இ> இழு > இழி.
இ > ஈ. ஈ : இழி ( இழிவு ). இ> ஈ> ஈ+ ( ன் ) + அம் = ஈனம். ( மதிப்பு இறங்கிய நிலை ). இன் என்ற இடைச்சொல் இகரமிழந்து 0ன் என்று நின்றது. இது ஒரு தலைக்குறை ஆகும்.
ஈனம் = ஹீனம்.
ஈ > ஈகை ( ஈதல் ). ஈதல் இசைபட வாழ்தல்.
ஈதலின் வருவது பெருமை; அதிலும் ஈனமுண்டோ? ஒருநாள் உரையாடுவோம்.
உரையாடுவோம் என்று சொல்லி அவற்றுள் விடுபாடு இருப்பின் தெரிவிக்கவும். மறந்திருக்கலாம். நன்றி.
பிழைத் திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக