முக்கம் என்றொரு சொல் தமிழில் உண்டு எனினும் பேச்சு வழக்கில் உள்ள முக்கமென்னும் இன்னொரு சொல்லின் பொருள் அகரவரிசைகளில் காணப்படவில்லை.
முக்கம் என்பது முற்கம் என்பதன் திரிபாகும்போது:
பல்லி செய்யும் ஒலி
நாவு கொட்டும் ஒலி
ஒவ்வாமைக் குறிப்பு ஒலி
என்று பொருள்படுகிறது.
இச்சொல்லின் இன்னொரு பொருள் பயறு வகைகளைக் குறிக்கிறது, இது திவாகர நிகண்டில் காணப்படுவதும் ஆகும்.
ஆனால் பேச்சு வழக்கில் முக்கம் என்பது வழியில் உள்ள திருப்புமுனை அல்லது தெருச்சந்திப்பு என்று பொருளாகிறது, இதை இப்பொருளில் பேச்சில் யாம் கேட்டதுண்டு. எழுத்தில் இப்பொருளில் இதைச் சந்தித்ததில்லை.
அகரவரிசைக்காரர்கள் விடுபாட்டில் இதுவும் ஒன்று என்று தெரிகிறது.
கடத்தற்கு அரிய அல்லது கடக்கு மிடம் கடம் எனப்படும். வேங்கடம் என்னும் சொல்லில் இஃது உள்ளது. வெம்மை மிக்கக் கடப்பிடம் என்னும் பொருளது இதுவாம். தாம் கடத்தற்கரிய இடையூறு சங்கடம் ஆகிறது. இது தம் கடம் > சங்கடம் என்னும் திரிபு. கடு> கடம்; கடு>காடு. இவ்வாறு கடு என்ற உரிச்சொல்லினின்று போந்து கடிய காட்டினையும் குறிக்கும். இன்னும் கயிறு, பாலைநிலத்துவழி, சுடுகாடு, கும்ப இராசி, யானை மதம் ( கட யானை ), ஒரு நிறுவை, உடம்பு என்றெல்லாம் பொருள் பல. இன்னும் உள. கடத்தற்கரியது என்னும் கருத்திலே கடல் என்ற சொல்லுமமைந்தது.
முக்கம் என்பது சாலைகளில் முக்கடப்புகளைக் குறித்த சொல். மூன்று என்று பொருள்தரும் மு என்பது முன் நிற்றலால். இது மற்ற முக்கம் என்னும் சொற்களினின்று வேறான சொல் ஆகும்.
முக்கடம் > முக்கம். இங்கு டகரம் இடைக்குறைந்தது.
டகரங்கள் குறைந்த சொற்கள் பல நம் பழைய இடுகைகளில் அவ்வப்போது காட்டப்பெற்றுள்ளன. நினைவுகூர:
பீடுமன் > பீமன். டுகரம் குறைந்தது. பீடுடைய மன்னன் என்பது பொருள்.
பீடுமன் > பீஷ்மன். பீமன் > வீமன் என்பதும் திரிபு. ப-வ.
பேச்சில் முக்கம் நிலைத்தபின் முக்கடம் மறைந்தது. இத்தகைய சொல் இறுபுகள் இயல்பே ஆகும். இறுபு - ஒழிதல்,
அறிந்து மகிழ்க.
பிழை : திருத்தம் பின்.

3 கருத்துகள்:
A good comment. We suggest you give yourself a name (any name you like, sir/madam). Approved for discussion. Other readers are invited to participate. Thank you.
Admin for Sivamala.
ಮುಕುತಿ (முகுதி) means மகுடம் ( அரசர் முடி).
"முகுத்தல்" could not be found in Winslow.
Pl elaborate. A photo of your dictionary entry will be useful.
கருத்துரையிடுக