திமிங்கலம் என்ற சொல்லோ தமிழில் அழகுற அமைந்த தாகும். இஃது அமைக்கப்பட்ட விதம் காண்போம்.
இந்த வகை நீர்வாழுயிரிக்கு ஆங்கில மொழியில் "வேல்"( ) என்பரென்பது நீங்கள் அறிந்ததே.
திமிங்கலங்கள் படகுகளை எதிர்கொண்டு கவிழச் செய்துவிடும் என்பது நம்பிக்கை ஆகும். இதுபோல் சில நடந்துள்ளனவாகவும் தெரிகிறது.
https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=26&cad=rja&uact=8&ved=2ahUKEwj855ORx7zfAhVQat4KHTZjD9sQFjAZegQIBxAB&url=https%3A%2F%2Fwww.canadiangeographic.ca%2Farticle%2Fhow-often-do-whales-attack-ships&usg=AOvVaw2bPOVekcDxIdBKBo0SrUvv
இவற்றுள் ஒன்று மேலே தரப்படுகிறது.
இவ் வுயிரிகள் கலங்களுடன் வலிமை காட்டவல்லவை ஆகும். திமிருதல் என்றால் வலிமை காட்டுதல். சிலர் இது சிறுபான்மை நடப்பு என்றாலும் அச்சம் இருக்கவே செய்கிறது.
திமிரும் + கலம் = திமிருங்கலம் > திமிங்கலம்.
இதில் ரு என்ற எழுத்து இடைக்குறைந்தது.
இவ் விலங்கும் ஒரு கலம் போன்ற பெரிய (பரிய ) உருவினதே.
காவலன் பிடிக்கத் திருடன் திமிரிக்கொண்டு ஓடிவிட்டான் என்ற வாக்கியம் காண்க. திமிருதல் - வன்மைகாட்டுதல்.
(புறநா. 258): ஈர்ங்கை விற்புறந் திமிரி.
உராய்ந்து, தடவி என்று பொருள்.
(நற். 360). மெய்யிடைத் திமிரும்.
கலங்களைத் திமிர்கின்ற கலம் போலும் உருவினதாகிய மீன் எனல்.
திமிர் என்பது திமி என்று கடைக்குறைந்துள்ளது.
திமிர்தல்
திமிர்த்தல்
திமிர்ப்பு
திமிர்ச்சி
திமிரன்: மெதுவான துடிப்புக்குறைந்த விலங்குமாம்.
திமிராளி
திமிரம் - இருள்
திமிதம் - நிலைநிற்றல்
திமிதமிடுதல் : களித்தல்
வலிமை ஒத்த நிலையில் நிலைநிற்றல் கூடுமாகின்றது.
பேருந்துக்குள் திமுதிமு என்று கூட்டம் புகுந்துவிட்டது எனல் காண்க.
திமுதிமு எனல் விரைவுக் குறிப்புமாம்.
திமி, திமிர் என்பன இலக்கிய வழக்கிலும் உள்ளவை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக