எமது கட்சித் தொண்டர்களுக்கு ஊர்மக்கள் அமோக வரவேற்பை அளித்தார்கள் என்றார் ஒருவர். நாம் கடுமையான இலக்கணங்களை
இக்காலத்தில் கைக்கொள்வதில்லை. எமது என்பதில் அது என்பது
அஃறிணை ஒருமை. தொண்டர்கள் உயர்திணைப் பன்மை. ஆகவே சங்க கால இலக்கணப்படி, பிழை ஆகிறது. எம் தொண்டர்கள் என்றுதான்
சொல்லவேண்டும்.
ஆனால் நாம் சொல்லவந்தது அதுவன்று. அமோகம் என்ற சொல்லை
ஆய்வு செய்ய உங்களை அழைக்கவே இங்கு வந்தோம்
மோகம் என்பது விருப்பம், காதல், மோகப் பற்று > மொகபத் . நீ தி X அநீதி என்று அமைந்துள்ள எதிர்ச் சொல்லை நோக்கினால், அமோகம் என்பது
விருப்பமின்மை என்று அன்றோ பொருள்தர வேண்டும் ?
அப்படியானால் அமோக வரவேற்பு என்பது விருப்பமில்லா வரவேற்பு எனலாமா? அதை எப்படித்தான் விளக்குவது?
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
பதிலைப் பிறகு சொல்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக