ஆசீர்வாதம் என்ற சொல்லின் தென்றமிழ்ப் பிறப்பை முன் யாம் விவரித்ததுண்டு. ஆனாலும் இங்குக் கிடைக்கவில்லை.\
ஆகூழ் போகூழ், மற்றும் ஆகாயம் முதலிய சொற்களிற் போல ஆ= ஆதல் என்ற முன்னொட்டுப்பெற்ற சொல் இதுவாகும். ஆசீர் என்பது
சீராவது என்று பொருள்தரும்.
வாயில் தோன்றி விரிவது வாதம் ஆகும். பின் எழுத்திலும் வாதங்கள் வந்தன. ஆனால் வாதம் என்று இச்சொல்லின் விதந்து சு ட்டப் படுவது இருவருக்கு அல்லது அதனின் மேற்பட்ட ந(ண் )பருக்கிடையில் ஏற்படும் சொல்லாடல் அன்று. தம் வாயினின்று அல்லது பிறர் வாயினின்று புறப்படும் "சீர் ஆகுக" என்னும் வாய்மொழியையே குறிப்பது இது. ஆ - சீர் - வா- தம் என்று இயைந்து வந்திருப்பது காண்க. வழக்கில் பொருள் விரியும்.
ஆசீர் என்பது தமிழ் வழக்கே ஆகும். தோன்றியதும் தமிழரிடத்தே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக