வழிப்பறிக் கீழ்மகன் உலவுகிறான் மடியில் விலைப்பொருள் சுமைவிலக்கி உழைப்பினில் கைவரு பொன்னணிகள் ஒன்றையும் உடன்கொடு நடைதவிர்ப்பாய் விழிப்புடன் ஜொகுர்நகர் கடந்துசெல்வாய் இழப்புகள் இலாத பிழைப்புறுவாய் அழைப்புடன் நிற்பவன் எவனவனோ அவன்நாம் கலங்கிடும் கள்வனல்லோ தொழில்தனைச் செய்பெறும் ஊதியத்தில் தோல்வியில் லாதொரு தூய்மையிலே எழில்பெற இப்புவி வாழ்கவெனும் ஏற்புறு கொள்கையும் வீழ்படுமோ விழிதரும் ஒளியினி ஒழிவுறுமோ வீண்மகார் பல்கிடும் உலகிதிலே கழிநிலைச் செய்கையர் பொழுதிதுவோ கண்கெடு நடபடி விழுதிடுமோ
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
சனி, 26 நவம்பர், 2016
வழிப்பறிக் கீழ்மகன் உலவுகிறான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக