நீரால் தான் இருக்கும் காலத்தில் கழுவித் தூய்மையாகத் தன்னை வைத்துக்கொள்ளும் மலர் கழுநீர்மலர். சிவப்பானது
செங்கழுநீர்மலர். இடையில் சில எழுத்துக்களை நீக்கிவிட்டால்
செங் ~ க ~ மல (செங்கமல) ஆகிவிடுகிறது. இது ஒரு சொற்சுருக்கம். நாளடைவில் தனிச்சொல்லாக ஏற்றம்பெற்று
உலாவரலாயிற்று. பல ஆண்டுகட்குமுன் யாம் இதை எழுதியிருந்தோம்.
அது இங்கு உள்ளதா என்று தெரியவில்லை. தமிழில் சுருக்கச் சொற்கள்
பல. இதுவும் அவற்றுள் ஒன்று. தெரியாதவன் இது தமிழ் அன்று என்று
வாதாடுவான்.
கழுநீர்மலர் > கழுமலர் > கமல.
கமல > கமலம் > கமலா.
கமல > கமல்.
கமலி > கமலினி.
எப்படியும் மாறும். - மனித மூளை வளத்திற் கேற்ப ,
செந்தமிழில் சொற்களை வெட்டி ஒட்டிக் கட்டிப் பயன்படுத்தும்
முறைகளை ஆதிநாளில் ஆசிரியர்கள் மறுத்தனர். செந்தமிழ்
இயற்கை சிவணிய நிலத்தினரான அவர்கள் கவனமாய் இருந்தனர்
இப்போது ஏனோ தமிழ் வாத்தியார்களுக்குக் குமுகத்தில் எடுபடா
நிலை நிலவுகின்றது. அவர்கள் மறுத்தவை, அக்கரை சென்று திரும்பி வந்து அவர்களை மருட்டுவது வேடிக்கைதான்.
அவர்கள் சொற்கள் பிறரிடம் சென்று ஒளிர்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக