வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்,
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ,
உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ,
மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே,
இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு,
புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே;
மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே!
புறநானூறு 197, கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது து:( சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனை), : பாடாண்திணை, : பரிசில் கடாநிலைத்துறை
பாடலின் பொருளைப் புரிந்துகொள்வோம்.
இவுளியொடு ~ குதிரைகளுடன்;
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்,
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ,
உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ,
மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே,
இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு,
புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே;
மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே!
புறநானூறு 197, கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது து:( சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனை), : பாடாண்திணை, : பரிசில் கடாநிலைத்துறை
பாடலின் பொருளைப் புரிந்துகொள்வோம்.
இவுளியொடு ~ குதிரைகளுடன்;
வளி நடந்தன்ன வாஅய்ச் செலல் - வீசும் கற்றினைப் போல் விரைந்து வழிச் செல்லுகின்ற;
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ ~ கொடிகள் மேலே ஆடிப் பறக்கும் தேருடைய அரசர்கள் என்றாலும்;
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு கடலைப் போன்ற தோற்றம் தருகின்ற ஒளி வீசும் படைக்கருவிகளையுடைய் படையுடன்;
மலைமாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ - மலையை எதிர்க்கும் மலைபோன்ற யானைகளை உடையோர் என்றாலும்;
உரும் உடன்றன்ன உட்குவரு முரசமொடு ` யாரும் அஞ்சுகின்ற இடிபோலும் போரிடும் பேரொலியைக் கிளப்புகின்ற முரசுகளுடன்; (உரும் ~ எண்ணத் தோன்றுகிற )
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ ~ படைத்திறன் காட்டும் வெற்றியுடையார் என்றாலும்;
மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர் வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே ~ மண்ணாள்கின்ற படையுடைய அணிகள் பூட்டிய முடியரசரர்களின் வெண்கொற்றக் குடை காட்டும் செல்வச் செழிப்பினைக் கண்ணுற்று மலைத்து நிற்றலோ அது நம்மிடம் இல்லையே!
எம்மால் வியக்கப் படூஉ மோரே - அப்படியானால் யாங்கள் யாரைக் கண்டுதான் அசந்துபோவோம் என்று கேட்கிறீர்களா? அது:
எம் வயின் பாடறிந்து ஒழுகும் பண்பினோரே ~ எங்கள் வாழ்வின் உறுபவைகளை அறிந்து ஏற்றபடி எங்களைப் போற்றிக்கொள்ளும் பெற்றியுடையாரையே யாங்கள் கண்டு மலைத்துப் போற்றி உயர்த்தி எண்ணி நிற்போம்; அவர்கள்: -
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த குறு நறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்று அடகு ~ முள் அகற்றாது விடப்பட்ட பின் தோட்டத்தில் செம்மறி ஆடு மேய்ந்து மிஞ்சிக் கிடக்கும் வளமான பறித்த இலைகள் ;
புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம் - புன்செய் நிலத்து வரகு உணவோடு கிட்டுகின்ற
சீறூர் மன்னர் ஆயினும் - ஒரு சிற்றூரின் ஆட்சியாளர் ஆனாலும்;
மிகப் பேர் எவ்வம் உறினும் எனைத்தும் உணர்ச்சியில்லோர் உடைமை உள்ளேம் - எத்துணை துன்பம் வந்தாலும் எம் பால் பற்றுணர்ச்சி இல்லாதவரின் பொருளை எண்ணிப்போகமாட்டோம்
நல்லறி வுடையோர் நல்குரவு உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே! ~ இதனை, பெரும யாம் நல்லறிவு உடையோர் நல்குரவு நனி பெரிதே! உவந்து உள்ளுதும் ,என்று மாற்றிக்கொள்க.
பரிசில் = மன்னன் புலவர்க்கு அளிக்கும் கொடை. அது கிட்டாத நிலையைப் பாடியதனால் பரிசில் கடாநிலை. கொடை மன்னனைக் கடந்து புலவர் கைக்கு வரவேண்டும். அது அங்ஙனம் கடந்து வாராத நிலையே பரிசில் கடாநிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும்..
நல்லறி வுடையோர் நல்குரவு உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே! ~ இதனை, பெரும யாம் நல்லறிவு உடையோர் நல்குரவு நனி பெரிதே! உவந்து உள்ளுதும் ,என்று மாற்றிக்கொள்க.
பரிசில் = மன்னன் புலவர்க்கு அளிக்கும் கொடை. அது கிட்டாத நிலையைப் பாடியதனால் பரிசில் கடாநிலை. கொடை மன்னனைக் கடந்து புலவர் கைக்கு வரவேண்டும். அது அங்ஙனம் கடந்து வாராத நிலையே பரிசில் கடாநிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும்..
blocked by error ,messages. will return after repair.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக