நிட்டை என்ற சொல்லின் அமைப்பைப் பற்றிச் சற்று சிந்திப்போம்.
நீள் என்ற சொல் நீளுதல் என்று வினைவடிவம் கொள்ளும்.
நீள் > நீடு என்றும் மாறி நீடுதல், என்று தன்வினையாகவும்
நீட்டுதல், நீட்டித்தல் என்று பிறவினையாகவும் வரும்,
ஞானும் நீயுமாக ~ ஞானியாக ~ இறையும் தானுமாக நெடு
நேரம் அமர்ந்து மனம் நிலைநாட்டி இருப்போன் தானிருக்கும்
நேரத்தை நீட்டிக் கொள்கிறான். அவன் நினைப்பது என்ன
என்பது அவன்மட்டும் அறிந்தது. அவனைப் பார்ப்பவர்கள்
அறிவது ஒரு புற்றுக்குப் பக்கத்தில் ஆடாது அசையாது
கண்மூடி அமர்ந்திருப்பது. இவற்றிலும் அவன் இருக்கும்
நெடு நேரமே கவனிப்போர் அறிந்துகொள்வது. ஆகவே
அவன் நிட்டையில் இருக்கிறான் என்றனர்.
நீடு > நீடை > நிட்டை அல்லது நீடு > நிடு >
நிட்டை ஆகும். நீ என்ற முதலெழுத்து நி என்று
குறுகியது.@ நீட்டு > நீட்டை > நிட்டை எனினுமாம்
தன்வினையில் தோன்றியதாகக் காட்டினும் பிறவினையில்
தோன்றியதாகக் காட்டினும் மூலம் ஒன்றே. கால் கைகளை
ஒடுக்கினாலும் நேரத்தை நீட்டிக்கொண்டு அமர்ந்திருப்பது.
மக்கள் கவனத்தை ஈர்த்தது அதுவே. நேரச் செலவு .
இங்கு இங்ஙனம் குறுகல் விரிவாக ஆராயப்பட்டுள்ளது,
சாவு > சாவம் > சவம் என்று குறுகினாற் போல.
முன் இடுகைகள் காண்க.
கடு அம் கட்டம் கஷ்டமானது போல நிட்டை நிஷ்டை
ஆகி இந்தோ ஐரோப்பிய ஒப்பனை அழகு பெற்றது
உணர்க,
=================================================
@கூடு :> குடி ( கூடி வாழும் மக்கள் ) ( குறுக்கம் )
@ கூடு > குடு > குடும்பு > குடும்பம் ,
குடும்பி இதுவும் குறுக்கம் .
will edit

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக