உறக்கம் என்பது அலை அலையாக வருவது.
ஓர் அலை வருகிறது. அதில் அமிழ்ந்து உறங்குகிறீர். ஆழ்ந்த உறக்கம் சற்று மாறி இன்னோர் அலை வருகிறது. மீண்டும் உம்மை அழுத்துகிறது. அதில் அமிழ்ந்து தொடர்ந்து தூங்குகிறீர். இப்படிப் பல் அலை அமிழ்வுதான் உறக்கம் ஆகும்.
இப்போது நித்திரை என்ற சொல்லைக் காண்போம்.
நி என்பது நில் என்பதன் கடைக்குறை. நில்> நி. திரை என்பது அலை என்று பொருள்படும். அது ஒரு விகுதியுமாகும்.
நி + திரை = நித்திரை.
நில் + திரை = நிற்றிரை > நித்திரை எனினுமாம்.
இதன் பொருள் , "நிற்கும் அலை " என்பது: அலையாக வந்து உறக்கத்தில் அமிழ்த்தி நின்றுவிடுகிறது. நிற்றலே உறக்கத்தின் தொடக்கம் அல்லது தொடர்தல். Sleep comes in circles என்று பிறரும் கூறுவர். இதை நம் முற்கால மனிதரும் உணர்ந்திருந்தனர். அதனால்தான் இச்சொல் இப்படி அமைந்துள்ளது.
தமிழில் உள்ள சொற்கள் சிலவற்றை ஆய்ந்தால் பிறமொழியில் புரியாதது
புரிந்துவிடுகிறது என்று ஸ்ரீ அரவிந்தர் சொன்னதன் உண்மை இப்போது புலனாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக