திங்கள், 30 மார்ச், 2015

நீங்கள் அங்கிருப்பதாகவே நாங்கள் சொல்வோம்

வீடு  கட்டிக்கொடுத்தார்,  வீதி  போட்டுக் கொடுத்தார்,  காடு அழித்துக் கால்பந்துத்  திடல் அமைத்தார்,  கழனியே இல்லாத நாட்டில் கால்வயிறு என்று யாரும் கழறாமல் முழு நிறைவான உணவு கிடைக்க முன்னுரிமை தந்தார்,  போக்குவரத்துத் துறையில் புதுமைகள் செய்தார்,   தாக்கும் வெயிலைக் குறைக்கத்  தக்க மரங்கள் நட்டுப்  பூக்கும் அழகுப் பூந்தோட்ட நகரம்  நிறுவினார்,   ................(இத்யாதி  இத்யாதி...)   அவர்  செய்து முடித்தவை எல்லாம்  அடுக்கி எழுத,  இந் நாள்  போதாது;  பன்னாள்  வேண்டும்..

ஆனாலும் இவையெல்லாம்  இங்குள்ள மக்கள் சொல்பவைதாம்.   அவர்தம் பன்முகப் புகழில் ஒரு பகுதிதான்.  அவர் அரசியல் அறிஞர். அதை முழுமையாகப்  பேச , நமக்கும்  அரசியற் கலையும்  உலக அரசியலும் தெரிந்திருக்கவேண்டும்.

உலக அரசியலில் அவர் மன்னன்.

இப்போது அவர் மறைந்துவிட்டார்.   அவர் கருத்துப்படி,   அவர் மறைந்தபின் அவர் இல்லை. அவர் மனைவியும் இன்றில்லை.  சொர்க்கம்  நரகம் கடவுள் 
என்பவை  அவர்தம் அக்கறையில் இல்லை.  இதில் சிலர் மெத்த வருத்தம் கொள்கின்றனர்.  "  உங்கள் தொண்டுள்ளத்திற்கு  நீங்கள் சொர்க்கவாசியாய் இருக்கவேண்டும்; "  என்கின்றனர். " நீங்கள் இல்லை யென்றாலும்  நீங்கள்  அங்கிருப்பதாகவே நாங்கள் சொல்வோம் "  என்று சிலர் தெளிவாகச் சொல்கின்றனர். ...............

கருத்துகள் இல்லை: