ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

மோடி சிவன் விரைவில் வெற்றி.

சந்திரனில் தண்திரளின் தென் துரு வத்தில்
சடுதியிலே பதிவுகொளும் நெடுநோக் கத்தில்
உந்துபடை சீறியெழச் சென்று சேர்ந்தும்
ஓரிருகல் தொலைவுக்குள் ஒலிய லைகள்
முந்திவிலக் குண்டதனால் குந்த கம்தான்
மூண்டதெனி னும்வெற்றி நீக்க முண்டோ
வந்துநகை செய்திடுமே விரைவில் வண்ண
வாகைதனை மோடிசிவன் சூடு வாரே.

அரும்பொருள்

ண்ிரள் :   ிர்ந்ங்கிய ஒளியை வுகிற 
(நிலு.) 
ென் ுருவம்:  இு நிலின் ென் ுருவம்
ி :  விரைவு.
ிவு :  இறங்கி உலிடை வெற்றி பெறல்.
ெடு நோக்கம் -  ொலைவில் உள்ளக்
ைக் குறிவத்ல்.

ந்து பை -  எறிபை வான் கம் மிய
ல்  -  மைல் ொலைவு.

ஒலி அலைகள் :   ரேடியோ அலைகள்.  

ந்தி விலக்குண்ட -  மங்கூட்டியே  அறந்
அல்லுண்டிக்கப்பட்டுப் போன.

ந்தம்  =   கெடல்.

ெற்றி நீக்கம்  -  ோல்வி.
ிரிப்பு.   

ாகை =  வெற்றி மால

ோடி:   இந்தியப் பிரர்.

ிவன்  :  இந்தியிண்விக் கத் ைவர், 

புதன், 4 செப்டம்பர், 2019

கைவலி ( வெண்பா)

கணுக்கையின் நோவால் பணிக்கின்று தாழ்வே
தணிக்கவும்  யாதுசெய அந்தோ--துணிக்கொன்று
வந்தபயன் கண்டீர் வலித்துயான் கட்டினேன்
நொந்தநிலை மாற்றிற் றது.

16.8.2019

கையில் வந்த வலிக்கு   ஒரு துணி  கட்டியதில்  வலி  குறைந்தது.
துணிக்கும் ஒரு நல்ல பயன்  ஆயிற்று. இந்தப் பாட்டு
அதைப்பற்றியது.

அரும்பொருள்:

நோவு -   துன்பம்,
தாழ்வே  -  மந்த நிலைதான்.
தணிக்க -  வேதனை குறைக்க
அ ந்தோ  -  ஐயோ.
வலித்து  -  இழுத்து  இறுக்கமாக.
நொந்த  -  துன்புற்ற,

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

கடினத்தில் எளிமை

கடுமையை. உடையதாய் இருந்த மரத்திலிருந்து உருவான தாள்  சிறப்பாய் அமைந்துவிட்டது.

அதுதான் கடுதாசி.

கடுமையைக் குறிப்பது  கடு என்னும் முதனிலை..

தா என்பது உண்மையில் தாள் என்ற சொல்லின் கடைக்குறை.

தாள்  என்பது நெற்பயிர்களில் உள்ள தாள்.. அதுபோலும் பிற தாள்களையும் குறிக்கும்.  எடுத்துக்காட்டு:   வெங்காயத் தாள்.  பூண்டுத் தாள். பிற்காலத்தில்
காகிதத் தாளையும் குறித்தது.  "பேபிரஸ்"  என்னும்  இலை குறித்த சொல்லே பின் பேப்பர் என்ற ஆங்க்கிலச்சொல்லுக்கும் அடியாய் அமைந்தது,

எனவே  கடுதாசிக்குள்  தாவரத் தாள் புகுந்ததில் வியத்தற்கு ஒன்றுமில்லை.

கடு + தாள் + சி.>  கடு + தா(ள்) + சி.

ளகர ஒற்று மறைந்து சொல் தடை ஒலி ஏதுமின்றி ஒழுகுவதுபோல் அமைந்தது  ஒரு திரிந்துசிறத்தலே  ஆகும்.

சி என்பது விகுதி.   இதைச் சிறப்புக்கு அடையாளமாகக் கொள்ளுதலில் தவறில்லை.  சொல் அமைத்த ஒருவரோ  புழங்கிய   ஊர்மக்களோ  இவ்வாறு
ஒலித்தடையை விலக்கிக் குறித்த பொருளின் உயர்வை உணர்த்தி  யிருக்கலாம்..  கடுதாளி என்பதே கடுதாசி எனல் ஒருபுறம் இருக்க.


 திருத்தம் பின்,  (தட்டச்சு)

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

விருந்தாளியும் விருந்தாடியும்.

விருந்தாளி  என்ற சொல்  விருந்தாடி என்றும் உலக வழக்கில் வரும்.  உலக வழக்கு எனல் செய்யுள் வழக்கு அல்லாதது.

இங்கு  யாம் சுட்டிக்காட்ட விரும்பியது  ளகர டகரத் திரிபுகள்.

ஒன்றை ஆளுதல் அதை  நிறுவி நடத்துதலே ஆகும். எனவே  விருந்தாளுதல்  விருந்து ஏற்பாடு செய்து  அதில் பிறர்  பங்கு பெறச்  செய்தல்.  பங்கு பற்றியோர் விருந்தாளிகள்  ஆவர்.

ஆள்  என்பதை  இவ்வாறு உரைக்காமல் நபர் என்று கொள்ளுதலும்  கூடும்.

எவ்வாறாயினும் ஆளி  என்பது  ஆடி என்று திரிகிறது.

இவற்றைக் கவனியுங்கள்.

மள்  >   மாள். ( வினைச்சொல் )  பொருள்:  இறந்துபோ,  உயிர் குறைபடல் ஆகு,
மள்  >   (  மடு  ) >  மடி.   இறந்துபோ,
இன்னொரு காட்டு:  விள் >  விடி.
மள்  >  ( மளி  )  மளிகை   :    உயிரற்ற  விலைப்பொருட்கள்.
மள்குதல்  -  குறைதல்   மள் > மழு>   மழுங்குதல்.
மள் >  மர்
மள்  >   மர்  >  மரி  >   ,மரித்தல்  :  இறத்தல்.
மள் >  மர் >  மரணித்தல்.
மர்  >  மரி  >   மரணம்.
மர் >  மார் >  மாரகம்.

பின்னொருகால் விளக்குவோம்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

ஸ்மரண என்ற நினைவுநிலை.

மனிதன் நினைவு நிலைத்திருக்கும்போதே இறைவனை நினைந்துருகித் தன் ஆன்மாவுக்குப் பற்றுக்கோட்டினைப் பெற்றுக்கோடல் அறிவுடைமை ஆகும். அவன் நினைவிழந்து நீங்கும் நேரத்தில் இஃது வாய்ப்பதில்லை.

ஆகவே நினைவுநிலை என்னும் ஸ்மரணம்  மிக்க முன்மை வாய்ந்ததாகிறது.

இப்போது இச்சொல்லை  அறிந்தின்புறுவோம்.

சுருக்கமாக:

மற அறு அணம்

அதாவது மறத்தலை அறுத்த நிலை.

அணம் என்பது  நிலை குறிக்கும் விகுதி.

அறு  அணம் என்பன  அறணம்  ஆகிறது.

மற அறணம்  >  மறணம்   ( மறறணம் >  மறணம் :  ஈரெழுத்துக் கெட்டன  )

வகர உடம்படுமெய் தமிழில் இரு முழுச்சொற்கள் புணர்வில் வரும்.  பிற மொழிப்புனைவில் மற்றும்  தமிழ்ச் சொல்லமைப்பிலும் வராதும் போம். பழைய இடுகைகள் காண்க.  மறணம் என்பதை   ஸ்மரணம்  ஆக்க அழகிய சொல் கிட்டிற்று.

இனி இப்புனைவில்  பகுதி + பகுதி + விகுதி என்று சொல்லானது பழமை நெறியினாலே அமைவுண்டு  அது  பிறப்பிக்கப்பட்ட பின்புதான் முறைப்படி
தேவையற்ற ஒலிகள் விலக்குண்டன என்பதும்  அறிக. தலையெழுத்தே பிற்சேர்க்கை ஆயிற்று.  இஃது  இரு பகுதிப் புனைவு,

இதுவே நினைவு நிலையைச் சுட்டும் சொல்.




வியாழன், 29 ஆகஸ்ட், 2019

யகர ஒற்று இடைக்குறைந்த தமிழ்ச்சொற்கள்



தோய் >  தோய்து >  தோது.
(தோதில்லை என்றால், அத் தொடர்பில்ஈடுபடத் தருணமில்லை  )



தோய்+சை =  தோய்சை >  தோசை.
வேய்+ து + அம் = வேய்தம் > வேதம்.(  மறைமலையடிகள்)
உய் + (த்) + தி =  உய்த்தி >  உத்தி.
வாய்+ (த்) + தி = வாய்த்தி>  வாத்தி.  (வாய்ப்பாடம் சொல்வோன்).
சாய்+ (த்) +  இயம் = சாய்த்தியம்> சாத்தியம்.
சாய்த்தல் -  (வெற்றியுற முற்றுவித்தல்) 
(அரிச்சந்திர புராணம்,) ( மற்றும் வழக்கு)
பெய் + தி =  பெய்தி> பேதி.
(பெய்தல் =உடலினின்று கழித்தல். ஒ  நோ :   தூறுதல் (மலையாளம்) :மலம் கழித்தல்.)
வாய் + (ந்)+ தி =  வாய்ந்தி > வாந்தி.
பொய்+மெய் = பொய்ம்மெய் > பொம்மை.
வாய்தம் > வாதம்
.செய்தி -  சேதி   இதுவும் ஏற்கலாம்
இன்னும் பல

புதன், 28 ஆகஸ்ட், 2019

முச்சறிக்கை.

உடல் நலக் குறைவின் காரணமாக சில நாட்கள் எழுதவில்லை. நிலைமை இன்னும் சரியாக வில்லை.

என்றாலும் இன்று ஒரு சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

நாம் கவனிக்கப் போகும் சொல்  "முச்சறிக்கை"  என்பது.

பேசி முடித்தபின் ஏற்பட்ட உடன்பாட்டை வெளிப்படுத்துவதே "முச்சறிக்கை" ஆகும்.

கருத்து  -   முடித்து  அறிவித்தல்.
முடித்தறிக்கை
முச்சறிக்கை.
இங்கு டிகரம் மறைந்தது.
தகரங்கள் சகரங்கள் வருக்கமாயின.

எளிமையான திரிபுதான்.

முச்சரிக்கை என்பது வழு.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

தாமம் ( குடியிருப்புகள்.) மற்றும் தாமான் ( மலாய் )

நீங்கள் மலேசியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்தீர்கள் ஆயின்
மக்கள் வதியும் குடியிருப்புகளுக்கு  " தாமான்" என்ற சொல் வழங்கப்படுவதைக் கண்டு மகிழலாம்.

தாமம் என்ற தமிழ்ச் சொல் " நகரம் " என்று பொருள்படுவதாகும். இது பழைய தமிழ்நூல்களில் உள்ளது.  இது பல பொருளுடைய சொல்.  தாமம் என்பதற்குக் கயிறு என்றும் பொருள் உண்டு.  தாமம் என்பது நகரம் என்றும் பொருள்தருவது.  பி ங்கலந்தை நிகண்டு காண்க.

இது நகரை  அல்லது குடியிருப்புத் தொகுதிகளைக் குறிக்குமாயின்  சொல்லமைப்பினை இவ்வாறு காணலாம்:

தா என்பது  தாழ் என்பதன் கடைக்குறை.    இங்கு தாழ்தலாவது முயற்சிகள் வேலைகள் எல்லாவற்றையும் தாழ  இட்டுவிட்டு,  (  கீழே போட்டுவிட்டு) ஓய்தல்.



மன்னுதலாவது  தங்குதல்.  மன்னுதல் என்ற சொல்லின்
பொருள்களில்  இதுவொன்று.

மன் என்பது சொல்லாக்கத்தில் மம் என்று திரியும்.  அதாவது
 0ன் என்பது 0ம் என்றாகும்,   எடுத்துக்காட்டு:    அறன்   அறம்.

இதன்படியே  தாழ் மன் >   தாமன்  >  தாமம்   ஆகும்.

வீடு என்ற சொல்லும்  வேலைகளை விட்டு இருக்கும் இடம் என்னும் பொருளதே என்பது  காண்க.

இந்தத் தாமன் என்ற சொல்லே  மலாயிலும் சென்று  ஏறித் தாமான் ஆயிற்று.

அம் தாமம் எனின் அழகிய தங்கிடம்.   ஆகவே அந்தாமம் என்பது சொர்க்கம் என்ற பொருளை அடைந்தது.  அம் =  அழகு.

இனித் தாழ்தல் என்பது   அரச குடும்பத்தினரின் மனைகட்கு அப்பால் தாழ்ந்த குடியிருப்புகள் எனினும் ஒக்கும்.

இன்று தாமம், தாமான் (  மலாய்மொழி )  முதலியன அறிந்தோம்.

குறிப்பு:  அகத்து  மன்னுதல்:   அகத்துமன் >  ஆத்துமன் >ஆத்மன் >  ஆத்மம் >  ஆத்மா,  உடம்பின் உள்ளிருப்பதாகிய ஆத்துமா. மன்னுதல்:  தங்குதல் என்பது கூறப்பட்டது.  இங்கும்  னகர ஒற்று இறுதி மகர ஒற்றிறுதி  ஆனது கண்டுகொள்க


தட்டச்சுப் பிழைகள் :  பார்வை பின்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

நண்பருக்கு அனுப்பிய பதில்.

ஓர்  இனிய நண்பர் நன்`கு படித்துப் பட்டையம் (diploma)   வாங்கியவர்.  சரியான வேலை அமையவில்லை.  அதனால் இப்போது வாடகை வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

எனக்கு அம்மன் படம் ஒன்றை  அலைப்பேசிக்கு (mobile phone)  அனுப்பினார்,  அவருக்கு நான் எழுதிய ஒரு பதில் இது:

இஞ்சி டீ1 குடிக்கின்ற இனிய நேரம்;
வண்டியை நிறுத்துங்கள்  இடத்தில் ஓரம்;
ஒரு கோப்பை வாங்குங்கள் தாகம் தீரும்;
இழந்த பலம் எல்லாமும் வந்து சேரும்.

அனுப்பிய படத்துக்கு நன்றியைத் தெரிவித்தேன்.   மணி மாலை 4.

Footnote:

1   கொழுந்துநீர்  ( மொழிபெயர்ப்பு)
இஞ்சி இட்ட கொழுந்துநீர்.

புதன், 14 ஆகஸ்ட், 2019

பரிமாணம் என்ற சொல்.

மாணுதல் எனின் அது சிறத்தல்.

மாண் >  மாண்பு:     பு தொழிற்பெயர் விகுதி,
மாண் >  மாணவர்,  மாணவி.      அ+அர்.  அ+வி.   ஆண்பால் பெண்பால் விகுதி
மாண் +  ஆக்கு+  அர் =  மாணாக்கர்;    ~+ ஆக்கு+ இ =  மாணாக்கி.   சிறப்பு ஆக்கிய ஆண் பயில்வாளன்; பெண் பயில்வாளி.  பயில்வு+ ஆளன்,  ~ஆளி.
( பயில்வான்:  குத்துச்சண்டை முதலிய பயின்றவன்).
மாண் >  மாணி .  பிறப்பிக்கும் உறுப்பு.  பிறப்பிக்கும் சிறப்புக் குரியது என்பது பொருள். மணமிலி.
மாண் .>  மாணார்.   சிறப்பிலாதார்.  பகைவருக்குச் சிறப்பில்லை என்பதால் பகைவர் என்பதும் தரவுப்பொருள்.  அதாவது பகைவர் எவ்வாறு உயர்ந்திருப்பினும் அவரை அழைத்து நாம் சிறப்புச் செய்வதில்லை.( அதனால்).

மாணவகம் -  மாண்பு மிக்கதான கல்வி.    இதை ஆகுபெயராய்க் கல்விச்சாலைக்கும் பயன்படுத்தலாம்.

மாண் > மாணம்:  மாட்சிமை.

மாண் >   மாணல் - சிறத்தல்.

மாண் +  து :  மாண்டு.   ஓர் இராகம்.   சிறந்த இராகம்.

மாண் + சி  =   மாட்சி.   (  ஒப்புமை:   காண் + சி:   காட்சி).

மாண்டோர்:  மாண்பு பெற்றோர்;   மாண்+ து + ஓர்:  மாண்டோர்.

மாண் >  மாணிக்கம்;   சிறந்த ஒளிக்கல்.

மாணவ்வியம் :   சிறப்புக்குரிய சிறுவர் கூட்டம்.   மாண் +  அவ் இயம்.  வகர உடம்படு மெய்.

கோணல்மாணல் :  கோணல்கள் பல கொண்டு அதனால் தனித்து எண்ணப்படுவது.  அதன் காரணமாகச் சிறப்புற்றது.   இது ஒரு வஞ்சப் புகழ்ச்சிச் சொற்றொடர்.


ஆக இனி பரிந்து மாணுதல் என்று பொருள்படும் பரிமாணத்தைக் காண்போம்.

ஒன்று தன்வழியே ( பிற கலவை இன்றி)  மிகுந்து சிறத்தலே பரிமாணம்.

தொடக்கத்தில் உரைத்ததும் கவனிக்க.

பரி என்பதொரு முன்னொட்டு.  இதைப் பிற மொழிகளும் அணைத்தன.

எ-டு:  பரி வாரம்:  பரிந்து உடன்வருவோர்.  அன்புகொண்டு கூட வருவோர்.
வரு + அம் =  வாரம்:  வருதலைப் புரிவோர்.   முதனிலை நீண்ட தொழிற்பெயர்.

தட்டச்சுப்பிழைகள் பின் பார்க்கப்படும்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

கொடூரம்

உலகில் சில விரைந்து வருபவை;  ஓடிவரும் என்று சொல்லலாம். சில மெதுமெதுவாக வருபவை.  தீமை முதலியவை வேகமாக வருகின்றனவா அல்லது மெல்ல மெல்ல வருகின்றனவா என்பதை நீங்கள் உங்கள் பட்டறிவினின்று எமக்கு விளக்கும் வல்லமை உள்ளவர்கள்.

கொடுமை என்ற சொல் வளைவு குறிப்பது. கொடியது என்றால் வளைந்தது என்றுதான் பொருள்.  பண்டைத் தமிழனுக்கு அறவழியே நேரியது;  அதாவது வளைவு ஒன்றும் இல்லாதது.   அறமல்லாதது  வளைவுடையது;  கோணல்மாணல் எல்லாம் அறத்தின்பால் பட்டனவாக பண்டைத்  தமிழன் எண்ணவில்லை.

தனக்கு இரு கொய்யாக்கனி கிட்டினால் ஒன்றை பக்கத்து மரத்தில் வாழ்ந்தவனுடன் பகிர்ந்து உண்பது பிறனுக்குத் தருவதாகிய அறமே.  அதனால் அது தருமம் என்று எண்ணினான்.  அறமென்பது விரிந்த பொருள் உடையது;  தருமம் என்பது பல அறச்செயல்களில் ஒன்று. பிறனுக்கு ஒன்று தந்து மகிழ்வது.

தர்ம என்ற சங்கதச் சொல் அறநூல்களால் அறுதி செய்யப்பட்ட நல்லவை என்ற விரிந்த பொருளுடைமையால் அச்சொல்லின் பொருள் வேறு.

விளக்குவோர் சிலர்  அறம் எனின் தருமம் என்பர்.  சொல்லமைப்பின்படி பார்த்தால் தருமம் என்பது பிறனுக்கொன்று அன்புடன் வழங்குவதுதான்.  அறத்தின் ஒரு சிறு பகுதியே அது.  ஆனாலும் பெரிதாய்ப் பேசப்படுவது.  ஈதல் எண்ணம் பலருக்கு இல்லையாதலால் அவ்வெண்ணம் உள்ள சிலர் புகழ்ந்து பேசப்படுவது இயல்புதான்.

அறம் : இச்சொல்லின் பொருள் வரையறுக்கப்பட்ட நற்செயல்கள் என்பது.  அறு+ அம் =  அறம்.   (வரை)அறுக்கப்பட்டவை.  தருமம்:  வினைச்சொல் தருதல்.  ஈதல்,      ஈதல்:  ஈதல் அறங்களில் ஒன்று.  ஆதலின் "ஈதலறன்" என்றார் ஒளவையார். (கொடுத்தல், தருதல், ஈதல் என்பவற்றின் பொருள்வேற்றுமை இங்கு கருதப்படவில்லை).

பிறரை மிகுந்த கொடுமையுடன் நடத்துவது என்பதுதான் கொடூரம் என்பதன் வழக்குப்பொருள்,  இது அமைந்த விதம்:

கொடு +  ஊர் +  அம் =  கொடூரம்;

ஊர்தல் என்பது மெல்ல வருதல் என்று பொருள்பட்டாலும்,  கொடூரம் என்னும்போது மிகுந்த கொடுமை என்ற பொருளே வழக்கில் தென்படுகிறது.
"கொடூரக் கொலை"   என்னும்போது கொல்வது மட்டுமன்று,  ஒருவன் உடலை அறுத்து வீசுவது போலும் செயல்களைச் செய்வது என்று மிகுந்த கொடுமையைக் காட்டுகிறது இச்சொல்.

மெல்ல மெல்லக் கொடுமை செய்தல் என்று சொல்லமைப்பினால் பொருள்பட்ட இச்சொல் நாளடைவில் மிகுதியான கொடுமை செய்தல்  என்று பொருள்படலாகக் காரணம்,  கொடுமை செய்தோர் வரவரக் கொடுமைகளை மிக்குச் செய்தகாரணமே  ஆகும்.

கொடுமையில் எது மிகுதி;  எது மென்மை என்பது அறிந்து  சொல்வோனின் மனத்தைப் பொறுத்ததாகிறது. கொடுமையில் மென்மை இல்லை என்று சொல்வோருமுண்டு.

எனவே வழக்குப் பொருள் அமைப்புப் பொருளினின்றும் சற்று விலகி நிற்கிறது.  இப்படிப் பல சொற்கள் மொழியில் உள்ளன.

கொடூரம் என்பதில் இடைநிலையாய் நிற்கும் ஊர்தல் வினை, மெல்லச் செய்தல் என்பதிலிருந்து மிகவே செய்தல் என்று மாறிப் பொருள்தரும்.

ஊர்ந்து வருவனவற்றை உடன் அறிதல் சற்றுக் கடினம் எனவே மிகுந்த கொடுமை ஆயினும் உடன் அறியப்படாத கொடுமை என்ற பொருளும் இருத்தல் சிலரால் கருத்தில் வைக்கப்படவும் கூடும்.

நிட்டூரம்  ( நிஷ்டூரம் ) என்பது நெடிது ஊர்ந்து வரு துன்பம்.  நெட்டு+ ஊர்தல். இது பின் நிட்டு என்று முதல் திரிந்தது.

இன்னும் ஊர்தல் இடைநிலை வந்த சொற்களை  ஆய்வு செய்வீராக.

மறுபார்வை செய்யப்பெறும்.

சனி, 10 ஆகஸ்ட், 2019

விசுறு என்பதும் அதிற்பிறந்த விசிறியும்

உட்ணம் அதிகமானால் ஒர் காற்றுமட்டையினால் விசிறிக்கொள்ள வேண்டும்.   அப்போது கொஞ்சம் சுகம் பெறலாம்.

உட்ணம் ( உஷ்ணம் ).  இச்சொல்லை அறிய இங்கே செல்லுங்கள்.

1.https://sivamaalaa.blogspot.com/2019/05/blog-post_17.html


2.https://sivamaalaa.blogspot.com/2012/09/blog-post.html


உகந்த நல்ல நிலையே சுகமென்பது.  இதையறிய இவ்விடத்து ச் செல்க:

https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_7.html.

உகத்தல்:  உக + அம் =  சுக + அம் =  சுகம்.


இப்போது  விசிறி என்ற சொல்:

வீசு > விசுறு.

இங்கு வீ என்ற நெடில் வி என்று குறுகிற்று.  விசு என்றானது,  உறு என்ற துணைவினையின் இறுதியை உள்வாங்கி,    வீசு  +  உறு > விசுறு ஆனது .
வீசும் காற்றுமட்டை விசிறி   ஆனது ஓர் இகரம் ஏறியபடியால்.

சுருங்கச் சொன்னால்:

வீசு +  உறு =  விசுறு.

விசிறு என்று சொல்வர்.   உ- இ  திரிபு.

அழகிய வடிவம், இன்புறுத்தும் திரிபுகள்.

மக்கள் நாவு இவ்வாறான சொற்களைப் படைக்கிறது.  புலவன் இவ்வாறு படைக்க அறியான்.  புலவன் என்பவன் கண்டுபிடிப்பாளன் அல்லன்.

இதற்கு ஆலவட்டம் என்ற பெயரும் உண்டு. பெரும்பாலும் அரசவை போலும் இடங்களில் காற்றுவீசப் பயன்படும்  அது.    அகலம் >  ஆல(ம்).  இது தாலவட்டம் என்ற திரிவழக்கும் உடையது.

விசிறி என்பது சிவிறி என்றும் எழுத்துமுறைமாற்று  அடையும்.

சிவிறுதல் என்று வினையுருத் தோன்றும்.

இன்னொரு காட்டு:   மருதை>  மதுரை.




வியாழன், 8 ஆகஸ்ட், 2019

சிசுவும் சிறியவைகளும்

இப்போது சிசு என்ற சொல்லின் கதையைத் தெரிந்துகொள்வோம்.

கதை என்பது பெரும்பாலும் புனைவுகளையே குறிக்கும்.  என்றாலும் அறிஞர் வரதராசனார்  போன்ற புகழ்ப்பெற்ற ஆசிரியர்கள் எழுத்தின் கதை, சொல்லின் கதை என்றெல்லாம் தலைப்பிட்டு எழுதியுள்ளனர். இவ்வாறு தலைப்பிடும்போது  கதை என்பதற்கு வரலாறு என்றே பொருள்கொள்ள வேண்டும். ஒரு சரித்திரத்தை வரலாற்றாசிரியன் சொல்வதுபோல் கடினமாகச் சொல்லாமல் ஒரு கதைசொல்வோன் போல மென்மை தவழச் சொல்வதனால்  அதனைக் கதை என்றார். நாமும் இவ்வாறு மென்மைபடச் சொல்வோமே.

சிற்றூர்களில் சிறியது  என்பதைச் சிறிசு என்றும் சொல்வார்கள்.  பையன் சிறிசு, பாவம், அதிகமாக வையாதீர்கள் என்று சொல்வதைச் செவி மடுத்திருக்கலாம் .

இந்தச் சிறிசு என்ற திரிபுச் சொல் மேலும் ஒரு திரிபை அடைந்தது.

அதாவது இடையிலுள்ள றிகரம் குன்றிற்று.  சிறிசு என்பது  சிசு ஆயிற்று.

நான் ஒரு திராவிடச் சிசு என்ற புகழ்மிக்க வாக்கியத்தையும் நீங்கள் கேட்டிருப்பீர்களே?   யார் சொன்னது என்று நினைவில் இருக்கிறதா? இங்கு சிசு என்பது தன்னடக்கம் மிக்கு நின்றது.

நாளடைவில் சிசு என்பதற்கு மிகச் சிறிய குழந்தை என்ற பொருளும் ஏற்பட்டது.

சில திரிபுகள் புதுப்பொருள் தரவல்லவையாக பயன்பாட்டில் மாறிவிடுகின்றன.

 சிசு   இடைக்குறை. அறிந்தீர். மகிழ்ந்தீர்.

ஆனால் ஆங்கிலத்தில் வரும் "சைல்டு"  எப்படி என்று பார்ப்போமா?

சில் என்ற சிறுமை குறிக்கும் தமிழ் அடிச்சொல்.  இதிலிருந்து  சிறு என்ற சொல் தோன்றியது.  சிறுமை எனின் எண்ணிக்கைச் சிறுமையும் உருவச் சிறுமையும் என ஒன்றுக்கு மேற்பட்ட வகைப்படும்.

சில் > சிறு.
சில் >  சில.
சில் > சில்+து >  (சில்து )  >  சில்டு  (சைல்டு ).  ஒலிப்பு மாற்றம் ஏற்பட்ட சொல்.
சில் :  ஒரு பெரியதிலிருந்து பெயர்ந்த ஒரு சிறு துண்டு அல்லது கல்.
சில் > சிலை.   சிறிது சிறிதாக செதுக்கி எடுக்கப்பட்டு ஆனது.  கல்லுருவம்.
சில் > சில் பு > சிற்பு > சிற்பு அம் >  சிற்பம்.    சிற்பு + இ = சிற்பி.
சில் > சின் > சிந்து.   சிறிய பாடல் வகை.  அடிக்கு மூன்று சீர்கள் வருவது.
சில் >  சிந்து :  சிறு நூல் வகை  (  பி.டி. சீனிவாச ஐயங்கார் ).
சிந்து நதி,  சிந்து மாநிலம்  :  இந் நூல் விலையான இடம்.
சிந்து மொழி   அவ்விடத்ததான மொழி.

சிந்து > சிந்துதல்:  சிறிது சிறிதாக உதிர்த்தல்./ கொட்டுதல்
சிந்தித்தல் :  சிறிது சிறிதாக மனத்தில் எண்ணம் விளைத்தல்.,  வெளிப்படுத்துதல்.

சில் + நாள் = சின்னாள்.  சின்னாட்களில் யாமுரைத்தன மறப்பீரோ?
சின்னாள் = சில நாட்கள்.

இனிச் சந்திப்போம்.

இந்த ஆங்கிலச் சொல்லும் அதே அடியில் வந்து விழுகிறதே!  எப்படி என்பதை நீங்களே செப்பிடல் வேண்டும்.

மயூரமும் வைசூரியும்.

திருமயிலாடு துறை என்ற ஊருக்கு மயூரம்  என்றும் பெயர். 

மயூரம் பின் திரிந்து மாயவரம் என்றானது.    இதைப் பிரித்தால் மாய  = செத்துப்போக,  வரம் =  வரம் பெற்ற ஊர் என்று இரண்டாவது ஒரு பொருளும் வருகிறது.

பொருளாகச் சில எடுத்துக் கொள்ளும் வசதி உள்ள ஒரு நிலையை  சில + எடு + ஐ =  சிலேடை என்பார்கள்.  நல்ல அமைப்புச் சொல்.  ஆனால் புரியாமல் போனவர்கள் பலர்.  சிலேடை என்னும்போதெல்லாம் சல்லடை நினைவுக்கு வருதனாலோ என்னவோ!  சல்லடையில் ஏகப்பட்ட பொத்தல்கள்.

மயூரம் என்பது மயில் என்ற சொல்லுடன் தொடர்பு மிக்குள்ள சொல்லே.

மை+ இல் =  மயில்.

இல் எனப்பட்டது இடப்பொருள் தரும் பழந்தமிழ்ச் சொல்.  அது வீடு என்றும் பொருள்தரும்.   கண்ணில் மூக்கில் என்னும்போது இடப்பொருள் உருபாகவும் வரும் இனிய இடைச்சொல்லும் ஆகும்.  அல்லாதவிடத்து இல் - வீடு என்று முழுச்சொல்லாகவும் மிளிரும்.

இல் > இன் என்பதை மேலை மொழிகட்கும் தந்து மகிழ்ந்தவன் தமிழன்.

இவை நிற்க:


மை +  ஊர் + அம் =  மையூரம் ,  இதில் ஐகாரம் குறுகி,  மயூரம்.

இறக்கைகளில் பல இடங்களில் மை ஊர்ந்து நிற்கும் பறவை மையூரம்.> மயூரம்.  அம் என்பதை அமைப்பு குறித்த தொழிற்பெயர் விகுதி.  அமைப்பு இலாவிடத்தும் வரும்;  அமைப்பு உள்ளவிடத்தும் வரும்.  விரவி வரும்.
அமைப்பு அற்ற பொருள் நினைவுக்கு வரவில்லை.  வானம் என்றாலும் அதுவும் அமைப்புற்றதே என்னலாம்.  ஒருவேளை  வான் என்பதை வானம் என்று நீட்டி அதனால் குறிக்கப்பெற்ற அமைப்பு யாதுமில்லை என்று வாதிடாலாம்..  அமைப்பு பொருளில் வந்துவிட்டபடியால் விகுதியில் தேவையில்லை என்று வாதிட்டால் -   சரிசரி,   வாதம்  வைகுக.

மை இல்லென்று இருப்பின் என்ன,  மை ஊர்தல் என்று ஊர்ந்தால் என்ன, வேறுபாடு ஒன்றுமில்லை.

கொப்புளங்கள் ஏற்பட்டு, சுர சுர என்று  சுரசுரப்பாகி,   நுண் நோயுயிர்கள் கொப்புளங்களின் உள் சுரந்து,  உடலெங்குமே   ஊர்ந்தனபோல் தோன்றுவது    வை + சுர +   ஊரி.  =  வைசூரி.  சுரந்து ஊரும் கொப்புளங்கள் உடலெங்கும் வைக்கப்பட்ட நிலை!!

சுரந்து வரும் நீர்க் கொப்புளங்கள் சுரசுரப்பைத் தோலில் ஏற்படுத்துவன.  இங்கு சுர என்ற சொற்புகவு இரட்டைப் பொருத்தம்.

மயிலில் மை   ஊர்ந்தன;   இந்த   அம்மை நோயில் கொப்புளங்கள் ஊர்ந்தன.

ஊர்தல் வினைதான் எத்துணை அழகாகப் புகுத்தப்பட்டுள்ளது  எம் தமிழே!

தனிமைச் சுவையுள்ள சொல்லை எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாம் கண்ட திலை.  உண்மை உண்மை.

எல்லா மொழிகளும் இனிமையே ஆகும்.

எழுத்துப் பிழைத் திருத்தம் பின்.

கோப்பை என்னும் பெயர்ச்சொல்.

இப்போது கோப்பை என்னும் சொல்லை ஆய்வு செய்வோம்.

இன்று உள்ளவை போல் கோப்பைகள் பளிங்கினாலும் மண்ணினாலும் கனிமங்களாலும் செய்யப்படவில்லை,  முன் காலங்களில்.

நாம் குறிக்கும் முன் காலம் அவை இலைகளால் செய்யப்பட்டு,  அதில் ஊற்றப்படும் நீர்ப்பொருள் ஒழுகாமல் நல்லபடி திறமையுடன் அமைக்கப்பட்டுப் பயன்படுத்திய காலம்.  இத்தகைய திறமை இப்போது இல்லையென்றே கருதவேண்டி உள்ளது. இத்தகைய கைவினப் பொருள்கள் செய்பவர்கள் அறிவில்லாதவர்கள் ஏழைகள் என்று இகழப்பட்ட படியால் அத்திறமை அழிந்தது.

இலைகளைக் கோத்து முடைந்து செய்யப்பட்டதே கோப்பை.  இதற்குரிய வினைச் சொல் கோத்தல் என்பது.  இவ்வினை இன்னும்  நம்மிடையே இருப்பதும் நம் நற்பேறே  ஆகும்.   அதிலிருந்து " ஃபைல் "  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேராகக்  " கோப்பு " என்ற சொல் வந்ததும் நமக்கு நல்லதே ஆகும்.  நடப்பவை அனைத்தும் நன்மையே.

கோத்தல்  வினைச்சொல்.
கோப்பு >  கோப்பு + ஐ =  கோப்பை.
கோப்பை என்ற சொல்லில் இரண்டு விகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன.
பு என்பதும் ஐ என்பது.   பை என்று  வைத்துக்கொள்ளினும் நட்டமில்லை.

அறிந்து மகிழ்வதுடன் கூஜா என்ற முன் இடுகையையும் வாயித்து ( வாசித்து) மகிழவும்.

கூஜாவும் கோளாறும்

டகரம் அயற்றிரிபாய் ஜகரமாகு மென்பதை முன்னர் உணர்த்தியுள்ளோம்.

இது தமிழ் சங்கதத் தாவல்களில் மட்டுமின்றிப் பிற மொழிகளிலும் வரும்.

படி ( படித்தல் )   :   பஜி.

பாண்டுரங்க நாமம்
பஜி மனமே.  (பாடல்.)

இது படி அல்லது பாடு என்று பொருள்தரும்.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்:

கடை: கடைதல்.

கடை + அம் >   கடம்  > கஜம்.  (  கடைந்ததுபோலும் முகம்),   வழக்குப்பொருள்: யானை.

பிற மொழிகளில் இதுபோலும் திரிபு உண்டு.   எடுத்துக்காட்டு:

எஜ்  (  பொருள்:  நான் )  குர்திய மொழி.
எஜம் (  அவஸ்தான் )
அடம்  ( பழைய பாரசீக மொழி).   இது அகர எகரத் திரிபு,

ஆங்கிலத்தில் ஏ  ஆ இரண்டும் இடத்திற்கேற்ப மயங்கும்,

ஏப்  ( எழுத்துக்கூட்டலில் ஆப் ).

ஆ - ஏ தொடர்பு பல மொழிகளில் உண்டு.

மேஜர்  (  மெய்ஜ் அர்)    குரிதியம்
மேற்றத்  அல்லது மேட்டத்.       உருசிய மொழி.

ஹாட்யாய்  =  ஹாஜ்யாய்    தாய்லாந்து மொழி  ட் > ஜ்

இங்கு ஜ என்பது ட என்று  திரிந்தது. டவுக்கு அணிமிய ஒலிச்சொற்களும் மேலே காட்டப்பட்டன.

முன் காலத்தில் (  ஏறத்தாழ இருநூறு ஆண்டுகட்கு முன் வரை )  சிற்றூர் மக்கள் தொன்னைகளில் கஞ்சி உண்டனர்.  இவை ஓலைகளால் திறமையாகக் கைப்பின்னலாகச் செய்யப்பட்டவை.  தண்ணீர் கீழ் ஒழுகிவிடாமல் அழகாகப் பின்னப்பட்டிருக்கும்.  இவற்றைப் பொருட்காட்சி சாலைகளில் கிட்டினால் பாருங்கள்.  நமக்கு இப்படி ஏதும் பின்னத் தெரியவில்லை. காட்டுவாசிகட்கு நன்றாகத் தெரிகிறது.  பழங்காலத்தில் கூஜாக்களும் இப்படித்தான் ஓலைகளால் உருவமைக்கப்பட்டன.  கூடுபோல் பின்னினர்.  பின்னர் மண்ணாலும் பளிங்கினாலும் வெள்ளியினாலும் பொன்னாலும் செய்யப்பட்டன.  காலம் இடம் இவற்றைத் தீர்மானித்தன.

கூடு ( வினைச்சொல்)  கூடுதல். ஒன்றுசேர்த்துப் பின்னுதல்.

கூடு >  கூஜ் > கூஜா.  அல்லது கூடா  ( கூடு+ ஆ)  > கூஜா.

ஆ தொழிற்பெயர் விகுதி.   கூஜா என்பது அயலிலும் வழங்கும் சொல்.

திருத்தம் பின்
(திருத்தம் பின் என்றால் எழுத்துப்பிழைத் திருத்தம்,  தன் திருத்த மென்பொருள் கோளாற்றினல்  பின்னர் வந்து சேரும் பிழைகள்,  வெளியார் தலையீட்டினால் புகுத்தப்படும் அனுமதி இல்லாத திருத்தம் என்பவைதாம்.   கருத்தில் திருத்தம் செய்யவேண்டிய நிலையைக் குறிக்கமாட்டாது.)

குறிப்பு:

கோளாறு + இன் + ஆல் = கோளாற்றினால்.  கோளாறு எனில் அறிஞர் சரியென்று கொண்டதை (  கோள் ) (  அறு >) ஆறு -  அறுத்து முரண்படுத்துவது என்பது பொருள் .

இதைக் கோளார் என்று எழுதுவது பிசகு.




Kashmir and Modiji. comment

Ultimately it is all a matter of economic well-being. As to practice of religion, nobody stops anyone from praying a number of times a day.Thereafter you want food and clean water on your table, education.jobs and good life. India and with it, Kashmir has lost much time before Modiji came in as PM. A temporary arrangement in constitution cannot become a permanent feature. In three or four years into independence, then then government should have realised it and made changes. It is good that these have now been made. No further time is lost by failing to update and to usher in proper development. Pak noise should be brushed aside. It comes from a hollow throat and carries no meaning though the media is trying very   hard to sell their news and make some money, straining to make  these relevant. Whether Kashmir is a state or UT, Pakis knowledge for whatever purpose does not transcend beyond proxy war and terrorism. To Pakis there is  little change of substance. 

சனி, 3 ஆகஸ்ட், 2019

ஒளஷதம் - அவுடதம் - ....( மருந்து)

இப்போது மருந்துக்கு மற்றொரு பெயராகிய ஒளடதம் (ஒளஷதம் ) என்பதன் அமைப்பினை ஆராய்வோம். இச்சொல் தமிழ்நாட்டின் சிற்றூர்களிலோ பிற தேயங்களிலோ பேச்சு வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை. மருந்து அல்லது "மெட்சன்" (ஆங்கிலம்) என்பதே வழக்கில் உள்ளதாகும். ஒளடதம் என்பது எழுத்துலகிலும் அருகியே வழங்குகிறது.

மருந்துகள் பண்டைக்காலங்களில் பச்சிலைகளை அரைத்துக் கரைத்துக் குடிப்பனவும் தேய்த்துக்கொள்வனவும் அவித்துத் தேய்த்துக்கொள்வனவும் குடிப்பனவும் என வகைகள் இருந்தன. இவற்றுள் ஒளடதம் என்பது சொல்லமைப்பில் அவித்துப் பாவிப்பனவாகவே இருந்தன. ஏனைச் சொற்கள்போல நாளடைவில் இச்சொல்லின் பொருள் விரிந்து அவிக்காத மருந்துகளையும் அகப்படுத்திக்கொண்டது.

இச்சொல் அவித்தல் என்ற சொல்லினின்று வருகிறது. இவ்வாறு:

அவி + இடு + அது + அம்.
=அவி + இடதம்
=அவிடதம் > அவுடதம் > ஒளடதம்.

அவி என்ற சொல்லீற்றின் இகரம் வீழ்ந்து இடு என்பதன் இகரம் உகரமாய்த் திரிந்தது. உகரமே இன்றி அவ்டதம் என்று சொல்வாரே பெரும்பான்மை. பேச்சில் இவ்வாறு சொல் அடையும் குறுக்கங்களை எழுத்து மேதையர் கணக்கில் கொள்வதில்லை.

தமிழினின்று புறப்பட்ட சொற்களில் அவுடதமும் ஒன்று.

ழகர டகர ஷகரப் பரிமாற்றங்கள் மொழியில் உள்ளவை.
-டு: பாடை > பாழை > பாஷை. மற்றும் வாடகை < வாழகை. பொருள் வேறுபடுகையில் திரிபாகாது: -டு: கூழை/ கூடை

பிழைபுகின் திருத்தம் பின்
oru thiruththam cheyyappattathu  7.8.2019

சனி, 27 ஜூலை, 2019

வினியோகம் ஓர் அழகிய திரிபு.

இன்று வினியோகம் என்ற சொல்லைப் பற்றிய சிந்தனையில் சிறிது ஆழ்வோம். இதைப் பற்றி யாமெழுதியது உண்டெனினும் இது இப்போது ஈண்டில்லை யாதலின் மீண்டும் பதிவேற்றி மகிழ்வோம்.

வியன் என்பது ஒரு தமிழ்ச் சொல். இதைச் சுருங்க விளக்க முயல்வோம். இது விர் என்னும் அடிச்சொல்லிலிருந்து விய் என்று திரிந்து  அன் என்னும் விகுதி (மிகுதி) பெற்று  வியன் என்று வரும்.

விற்றல் ( வில்+ தல் ),   விற்பனை (  வில்+ பு + அன் + ஐ )  என்ற சொற்களில் வில் என்று வரும் அடிச்சொல்,  பின்னர் விர் என்றும் அதன்பின் விய் என்றும் திரியும்.   ஓர் இடத்திலுள்ள ஒரு பொருளைப் பிற இடங்களிலும் கொண்டுசெல்லும் செயலையே " வில் " என்பது குறிக்கிறது.  பணத்துக்காகவோ பண்டமாற்றுக்காகவோ அவ்வாறு கொண்டு செல்கையில் அது வில்> விலை ஆகி, ஒன்றுக்காக மற்றொன்றைப் பெறுதலைக் குறிக்கிறது. இதிலிருந்து "பொருட்பெறுமானம்" உண்டாகின்றது.

விர் என்பது விய் என்று திரிந்து பின் அன் என்ற விகுதி பெற்று " வியன் "  ஆகின்றது.

வில்,  விர், விய் எல்லா உருமாற்றுக்களுக்கும் கருப்பொருள்  விரிவு என்பதே.  வினியோகம் என்பது பொருள் விரிபாடு ஆகும்.  விலைப் பொருட்டாயினும் அன்றாயினும் விரிவே மையப்பொருள்.

இது விரிவு என்னும் பொருளில் தமிழ் நூல்களில் காணப்படுகின்றது.  எம் நினைவுக்கு வரும் எடுத்துக்காட்டு:

விரிநீர் வியனுலத் துள்நின் றுடற்றும் பசி என்ற வள்ளுவனார் வரியாகும். வியன் என்றால் இங்கு விரிந்த என்பது பொருள்.  வியாபித்தல் என்ற புனைவுச் சொல்லும் இதனடித் தோன்றியதுதான்.   வியன் +  ஆ + பி =  விய + ஆ + பி =  வியாபி என்றாகிறது.  0னகர ஒற்றும்  ஆகு என்ற வினையில் கு என்ற நீட்சி விகுதியும் களையப்பட்டுள்ளன.   வியன் ஆகுவித்தல் எனற்பாலதை மடக்கி,  விய ஆ பி (த்தல்)  என்று வேய்வித்துள்ளனர்.  (வேய்தல்:  வேய்> வேயம் > வேசம் > வேஷம்).

வியன் என்பது வினியோகம் ஆவது:

வியன் + ஓங்குதல்.

ஓங்குதல் என்பதை முன் எடுத்துக்கொள்வோம்.

ஓங்கு + அம் =  ஓங்கம்;  இடைக்குறைந்து:  ஓகம்.  ங் என்பது விடப்பட்டது.

வியன் + ஓகம் =  வியனோகம்

இங்கு எழுத்து முறைமாற்று புகுத்தப்படுகிறது.

வியனோகம்  >   வி -ன -  யோகம்.

இது விசிறி > சிவிறி என்பதுபோலும் எழுத்து முறைமாற்று.  இன்னோர் எ-டு:
மருதை > மதுரை.  ( மருத நிலங்களால் சூழப்பட்ட நகரம் ).

வியனோகம் > வினயோகம்.

நன்றாகவே உள்ளது.

இதை எளிதாக்க.  வினியோகம் என்று னகரத்தை  னிகரமாக்குக.  இது ஒலிப்பெளிமை புகுத்தல்.

விற்பனைக்குப் பகிர்தல் முறை என்பதைக் குறிக்க ஒரு சொல் கிடைத்துள்ளது.

வினியோகங்கள் தொடங்கிய காலத்து மனித குலத்துக்கு ஒரு யோகம் உண்டாகியிருக்கலாம்.  பொருட்பகிர்வு உண்டானதால்.  உடற்பயிற்சி மனப்பயிற்சி முதலிய குறிக்கும் யோகம் ஏதுமிருப்பதாய்க் காண இயல்வில்லை.

வியயோகம் என்று வந்திருந்தால் சொல்ல எளிமை இல்லையாகின்றது.  விசயோகம் எனினும் நேரன்று.  ய>ச.

பகிரோங்கம் என்றிருக்கலாம்.  குறுக்கிப் பகிரோக மாக்கலாம்.  ரோகம் வந்துவிடுகிறது.

பகிரோங்கம் என்பதைச் சீனமாக்கினால் " புவே லோங்"  வரை இழுக்கலாம்.
தொல்லை இன்றி. புரியாவிட்டால் விடுக.


வியனோகத்தைக் கொண்டாடுங்கள்.


பிழைபுகின் பின் திருத்தம்




   

வியாழன், 25 ஜூலை, 2019

கேழ்வரகும் கேவரும்.

செந்தமிழ்ச் சொற்களிலிருந்து  நம் பேச்சு மொழி எத்துணை திரிந்துள்ளது என்பதை, ஒப்பிடுங்கால் நாம் கண்டுகொள்ளலாம்.  பல இடைக்குறைச் சொற்களையும் பகவொட்டுச் சொற்களையும் நாம் சுட்டிக் காட்டியபோது இதை நீங்கள் உணர்ந்திருத்தல் கூடும்.

இன்று கேழ்வரகு என்ற பொருட்பெயரை  ஆய்ந்தறிவோம்.  இது  ஓர் உணவுப் பொருள்..  கேழ்வரகு என்பது ஒரு தானியம் அல்லது கூலம்.

விளைச்சலில் அரசுக்கு இறுத்தது போக குடியானவனுக்குத் தனக்கென்று தான் வைத்துக்கொள்வது " தானியம் ".  இஃது ஆங்கிலத்தில் வழங்கும் பெர்சனல் செட்டல்ஸ்,  பெர்சனால்டி முதலிய சொற்களைப் போன்று பொருளமைப்பு உடைய சொல்.  ஒன்றகக் கூட்டிச் சேர்த்து  எடுத்துச் \செல்லப்படும் காரணத்தினால் அதற்குக் கூலமென்றும்    பெயர்.   கு > கூ முதலிய எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் சில,  ஒன்று சேர்த்து எடுத்துச் செல்லப்படும் அல்லது பயன்பாடு காணும்  காரணத்தை அடிப்படையாகக் கொண்டவை.  கூ > கூலம்;  கூ> கூ ழ்  ( குழைந்து ஒன்று  சேர்வது ).  சேர்த்துவைத்தாலே கூலம் பொருளாகும்; இறைத்துவிட்டால் அல்லது  கொட்டிவிட்டு அள்ள முடியாவிட்டால் வீண்.   எறும்பு காக்கை குருவிகட்குப் பயன்படலாம்.

கூழ்வரகு என்பதுதான் கேழ்வரகு என்று திரிந்தது என்று அறிஞர் சிலர் கருத்துரைத்துள்ளனர்.

இவை நிற்க.

இடைக்குறை என்னுங்கால் கேழ்வரகு என்பது கேவர் என்று பேச்சு மொழியில் திரிதலை நீங்கள் கேள்வியில் உணர்ந்திருப்பீர்கள். இத்திரிபில் உள்ள இடைக்குறையைப் பாருங்கள்:

கேழ்வரகு >  கேவர்.
ழகர ஒற்று மறைந்தது.
வரகு என்பது வர் என்று மாறிவிட்டது.

இதுபோல் வகரத்தின் முன் ழகர ஒற்று வீழ்ந்த இன்னொரு சொல்
பாழ் >  பாழ்வம் >  பாவம்.

வரகு என்பது இன்னொரு தானியம்.  அது மென்மையும் வழவழப்பும் இல்லாமல்  (உண்ண அல்லது தடவ )  வரவர என்று இருப்பதால் அது வரகு என்று சொல்லப்பட்டது.
வறுத்ததும் கொஞ்சம் வரவர என்றுதான் இருக்கும்.   வர -  வற  - வறு - வறட்டு என்ற சொற்களின் உறவினைக் கண்டுகொள்க.  வரகை அறிந்தபின் தமிழர் கேழ்வரகை அறிந்தனர் என்பது தெளிவு.

கேழ்வரகு என்ற சொல்லமைப்பில் கு என்னும் இறுதி விகுதியை நீக்கிய பேச்சுமொழி,  வர என்று எச்ச வடிவிலின்றி வர் என்று இறுதிசெய்துகொண்டது திறமையே ஆகும். சொல்லிறுதிக்கு எது ஏற்றது என்பதைப் பேசுவோரும் அறிந்துள்ளனர்.  புலவர்பெருமக்கள் மட்டும் அல்லர்.

தட்டச்சுப் பிழை - பின் திருத்தம்.



செவ்வாய், 23 ஜூலை, 2019

மா மை மயிர் மயில்

இன்று மை,   மா,   மயிர் என்ற  சொற்களைத் தெரிந்தின்புறுவோம்.

மை என்பது பல்பொரு ளொருசொல் ஆகும்.  இதன் பொருண்மையில் கருப்பு   என்பதும் ஒன்றாம்.

" மையிட்ட கண்மலர்ந்தாள்"  என்று கூறின்,  கருப்பு மையிட்ட என்பது பொருளாகக் கொள்ளின் சரியாகும்.  இப்போது வேறு நிற மைகளும் உண்டெனினும் இந்தச் சொற்றொடர் போந்த காலத்து இவை கவனத்துக்கு வராமை உணர்க.

மா என்பதற்கும் வேறு பொருள் உண்டெனினும்,   மா நிறம் என்பதுபோலும் தொடரில் கருமையையே குறிக்கும்.   ஆனாலும் பேச்சு வழக்கில் இஃது முழுக் கருமையைக் குறித்திலது என்பர்,  சற்று வெண்மையொடு  பெரிதும் கருமை கலந்த நிறத்தையே குறிக்குமென்பர்:  இதையும் மனத்தில் இருத்திக் கொள்வீர்.

மயிர் என்ற சொல்லில் இர் என்பதே விகுதி என்று கோடல் பொருத்தமாம். பகுதியாவது ம என்பதே.

இந்த ம என்பது மா என்ற சொல்லின் குறுக்கமாகும்.

மா என்பது சொல்;  ம என்பது தனித்து வாராமையின் சொல்லன்று என்றும் திரிபிற் போந்த வடிவம் என்றும் கூறுப.

இப்போது யாம் கூறவந்தது:

மா >  மா+ இர் >  மயிர்.   ஈண்டு மா என்பது ம என்று குறிலாய் நின்றமையின் முதனிலை குறுகி அமைந்த சொல்லென்று காண்க.

இதுபோலும்  எடுத்துக்காட்டு வேண்டின்:

சா +  அம் =  சவம் என்பதைக் கூறலாம்.  சாவு+ அம் =  சவமெனினுமாம்.
கூ + இல் =  குயில் என்ற ஒப்பொலிப் பெயரையும் காட்டலாம்.
மா + இல்=  மயில் எனினுமது.

வினைகளும் இவ்வாறு குறுகுதல்:  வா -  வந்தாள். வந்து.  வந்த.

இதுவே விதியாம். இது வாதத்தின் அப்பால்பட்டதாகும்.  பழைய இடுகைகளில் பரந்துபட்டு விளக்கமுற்றுள்ளது இது.

இனி,  மை + இர் =  மயிர் எனினுமாம்.

மயில் என்பது கரும்புள்ளிகள் உள்ள பறவை என்பதாம் சொல்லமைப்புப் பொருள்.

வினையினின்று விகுதியேற்று அமைதலும் பிறவகையினின்று விகுதிபெற்றமைதலும் கண்டுகொள்க.

 பிழை புகின் பின் திருத்தம்,

ஞாயிறு, 21 ஜூலை, 2019

சூது வாது

சூது,  வாது முதலிய சொற்களை முன்னர் விளக்கியதுண்டு எனினும்  அவை ஈண்டில்லை ஆதலின் மீள்பதிவு செய்வோம்.

சூது என்பது  ஓர் இடைக்குறைச் சொல்.  

சூழ்தல் என்பது ஆலோசித்தல்.  சூது விளையாடும்போது ஆலோசித்தே விளையாடவேண்டும்; இன்றேல் தோல்வியைத் தழுவ நேரிடும்.  ஆதலின் சூழ்தல் என்ற வினையடியாய்ப் பிறந்தது இச்சொல்.

சூழ் + து =  சூழ்து >  ( ழகர ஒற்று வீழ்ந்து )  சூது.

சூழ்ச்சி என்ற சொல்லமைப்பும் காண்க.  சூழ் -  திட்டமிடு.

இவ்வாறு ழகர ஒற்று இடைக்குறைந்த இன்னொரு சொல், எடுத்துக்காட்டு:

வாழ்த்தும் இயம் >  வாழ்த்து இயம் >  வாழ்த்தியம்.

வாழ்த்தியம் >  வாத்தியம்.

வாழ்த்துவது என்பதை முன்னர் படிப்பறியார் வாத்துவது என்பர்.

பிற்காலத்தில் இச்சொல் வாழ்த்தாத இயங்களையும் உட்படுத்தி விரிந்தது.

ஆனால் வாத்து என்ற பறவையின் பெயர்  வாய் என்பதனடிப் பிறந்தது.

வாய் >  வாய்த்து >  வாத்து.   இதில் யகர ஒற்று வீழ்ந்தது.

இதுபோலும் இன்னொன்று:   வாய் > வாய்த்தி > வாத்தி > வாத்தியார்.

வாய்ப்பாடம் சொல்லிக் கொடுப்பவர்.

உப அத்தியாயி > உபாத்தியாயி என்பது வேறு.  குழப்பலாகாது.

வாயினால் பரப்பப்படும் கெடுதல் :  வாய் >  வாய்து >  வாது.

வாயினால் செய்யப்படுவது  வாதம்   :  வாய் >  வா > வாதம்.

வாய்ப்பட்டியை வாப்பட்டி என்பர் சிற்றூரார்.  படிப்பறிவு மிக்க ஊர்களில் இப்போது திருத்திக்கொண்டிருப்பர்.

சூது வாது என்பன இடைக்குறைகள். அறிக.

தட்டச்சுப் பிழைகள் திருத்தம் பின்.

வெள்ளி, 19 ஜூலை, 2019

ரகமா இரகமா ( இரு அகமா)?

ஈண்டு ரகமென்னும் பதத்தை உன்னி உணருவோம்.

ரகமென்பது  ஆங்கிலத்தில் உள்ள "kind"  ( type )  என்ற பொருளில் பயன்பாடு காண்கிறது.

ஒரு பொருளின் தன்மை என்பது அதன் உள்ளுறைவைப் பொறுத்தது ஆகும். தேனில் உள்ளுறைந்திருப்பது அதன் இனிமை. ஒரு குறித்த கருமஞ்சள் நிறத்தில் குழம்புபோல் சற்று இறுக்கமாக இருக்கும் இளகுநிலை. அதிகம் உண்டால் தெவிட்டவும் செய்வது.

உந்து வண்டிக்கு இடும் உயர்தர உருளையெண்ணெய்   ( சிலிண்டர் எண்ணெய்) தேன்போன்ற நிறத்திலும் குழம்பு வடிவிலும் இருந்தாலும் சுவையாலும் நிறத்தாலும் பயன்பாட்டினாலும் வேறுபட்டதே.  அதன் ரகமே வேறு.

இத்தகைய பொருள் உள்ளுறைவினாலே இரகம் ஏற்படுகின்றது.

தன்மையானது பொருளுடன் இயைந்து நிற்பதால் இதனை ரகம் என்றனர்.  அகத்து இருப்பதாகிய தன்மை.

இங்கு அகமென்றது கண்ணால் அறியத்தக்க உள்ளியைபுகளும் கண்காண முடியாத, பிற பொறிகளால் அறியத் தக்கவுமான உள்ளியைபுகளும் ஆம்.

இதைக் குறிக்க எழுந்த இரகம் என்பது எளிமையுடனமைந்த சொல்லே.

இரு அகம் >  இரகம் என்று அமைத்தனர்.

நம்ம பையன் முருகன் ஒரு ரகம்;  அடுத்த ஆத்துக் கிருட்ணன் இன்னொரு ரகம்.

ஆக ரகம் என்பது வகை எனலும் ஆம்.

திராவிட மொழிகள் ஒரு ரகத்தவை;   சீனத் திபேத்திய மொழிகள் வேறு ரகத்தவை.

ரகத்தை உள்ளுறைவால் உள்ளியைபுகளால் அறிக.

அகத்தில் இருக்கும் தன்மை என்பதை மறுதலையாகப் போட்டு இரகம் என்ற சொல் அமைந்தது.

இப்படித் தலைமாற்றாக அமைந்த சொற்கள் பல பழைய இடுகைகளில் விளக்க[ப் பட்டுள்ளன.   அவற்றைப் படித்துத் தமிழுணர்வு மேம்படுத்திக் கொள்வீர். 

7.3.2020 சில தட்டச்சுப்பிறழ்வுகள் சரிசெய்யப்பட்டன.

வியாழன், 18 ஜூலை, 2019

குணமென்னும் சொல்.

குணம் என்ற சொல்லின் அமைப்பையும் அது எவ்வாறு பண்பு என்னும் பொருளை அடைந்தது என்பதையும் தெரிந்துகொள்வோம்.

குணித்தல் என்பது இதற்குரிய மூல வினைச்சொல்.

குணித்தல் என்பது கணித்தல் என்பதன் வேறன்று.   கணி என்பது குணி என்றும் திரியும்.

ஒரு மனிதன் எவ்வாறான நடவடிக்கைகளை உடையவன் என்பதும் ஒவ்வொரு நிகழ்விலும் எப்படி நடந்துகொள்கிறான் என்பதும் பிறரால் கணிக்கப்படுகிறது அல்லது அளவிடப்பட்டு அறிந்துகொள்ளப்படுகிறது.

வாசலுக்கு வந்து உணவு கேட்டு இரந்து நிற்பவன் ஒருவனுக்கு வீட்டிலிருப்பவன் பரிந்து ஏதேனும் உண்ணக் கொடுக்கிறான். இதைப் பார்ப்பவர்கள் அவன் இரக்க குணம் உடையவன் என்று கணிக்கிறார்கள் அல்லது குணிக்கிறார்கள்.  (  கணி =  குணி முன்னர் கூறப்பட்டது.  )

குணி +  அம் =   குணம்.

அம் விகுதி சேர்க்க,  குணி என்பதன் ஈற்றில் நின்ற இகரம் கெட்டு,  குண் + அம் =  குணம்   ஆகின்றது.

குணி என்ற வினைச்சொல்லைத் தருவிக்காமல் குண் என்ற அடிச்சொல்லினின்றே குணம் என்னும் சொல் அமைதல் கூறினும் அதுவும்  ஏற்புடைத்ததே ஆகுமென்பதறிக.

எதையும் கணிப்பதோ குணிப்பதோ கண்களினால் அறிந்துகொள்வதே ஆகும். பின்னர்தான் மனம் அதை உருவப்படுத்துகிறது.  ( மனம் என்ற ஒன்று இல்லை என்பது அறிவியல் ).  உடல் முழுமைக்கும் இரத்தம் ( அரத்தம் )  என்னும் குருதியினை ஈர்த்து வெளிப்படுத்தி ஓடச்செய்யும் இருதயம் (  ஈர் + து + அ + அம் ) மனம் அன்று.   அது அரத்த ஓட்டம் ஏற்படுத்தும் ஓருறுப்பே ஆகும்.  இந்த இருதயம் என்ற சொல்லின் வினையடி ஈர்த்தல் என்பதே.  ஈர் என்பது இர் > இரு என்று குறுகிற்று.  தோண்டு >  தொண்டை,  சா > சவம் என்பன போலுமே ஆம்.

கண்களே  முதல் அறிகருவி ஆதலின்,   கண் > கணி > கணித்தல் என்று சொல் அமைந்தது.   கணித்தல்,  கணக்கு, கணிதம் என்னும் பல்வேறு  சொற்கள்  கண் என்பதனடிப் பிறந்தன அறிக.  கண் என்பதில் இகரமாகிய வினையாக்க விகுதி இணைந்து,  கணி என்பது அமைந்தது.   இகரம் இங்கனம் வினையை உண்டாக்குவது   அளைஇ,  நசைஇ  என்னும் பழஞ்சொற்களின் வாயிலாகவும் அறிந்தின்புறலாம்.

அகரத் தொடக்கத்தன இகர மாதலும்  பின்னது முன்னதாதலும் திரிபில் உளது  என்பதுணர்க.  எடுத்துக்காட்டு:  அண்ணாக்கு -  உண்ணாக்கு;   அம்மா> உ(ம்)மா.

குணம் என்பதுபோல் அமைந்ததே கணமென்னும் சொல்லும்.  கணம் என்பதற்குப் பல பொருளுண்டு.  எனினும் அடி கண் என்பதே.   அதைப் பின்னொரு நாளில் நுணுகி அறிவோம்.

குணமென்பது பல மொழிகளிலும் புகுந்து சேவை கண்ட சொல் ஆகும்.  இதுவும் தமிழர்க்குப் பெருமை தருவதே. 

தட்டச்சுப் பிழை தன்திருத்தப் பிழைகள் பின்னர் கவனிக்கப்படும்.