வியாழன், 8 ஆகஸ்ட், 2019

கூஜாவும் கோளாறும்

டகரம் அயற்றிரிபாய் ஜகரமாகு மென்பதை முன்னர் உணர்த்தியுள்ளோம்.

இது தமிழ் சங்கதத் தாவல்களில் மட்டுமின்றிப் பிற மொழிகளிலும் வரும்.

படி ( படித்தல் )   :   பஜி.

பாண்டுரங்க நாமம்
பஜி மனமே.  (பாடல்.)

இது படி அல்லது பாடு என்று பொருள்தரும்.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்:

கடை: கடைதல்.

கடை + அம் >   கடம்  > கஜம்.  (  கடைந்ததுபோலும் முகம்),   வழக்குப்பொருள்: யானை.

பிற மொழிகளில் இதுபோலும் திரிபு உண்டு.   எடுத்துக்காட்டு:

எஜ்  (  பொருள்:  நான் )  குர்திய மொழி.
எஜம் (  அவஸ்தான் )
அடம்  ( பழைய பாரசீக மொழி).   இது அகர எகரத் திரிபு,

ஆங்கிலத்தில் ஏ  ஆ இரண்டும் இடத்திற்கேற்ப மயங்கும்,

ஏப்  ( எழுத்துக்கூட்டலில் ஆப் ).

ஆ - ஏ தொடர்பு பல மொழிகளில் உண்டு.

மேஜர்  (  மெய்ஜ் அர்)    குரிதியம்
மேற்றத்  அல்லது மேட்டத்.       உருசிய மொழி.

ஹாட்யாய்  =  ஹாஜ்யாய்    தாய்லாந்து மொழி  ட் > ஜ்

இங்கு ஜ என்பது ட என்று  திரிந்தது. டவுக்கு அணிமிய ஒலிச்சொற்களும் மேலே காட்டப்பட்டன.

முன் காலத்தில் (  ஏறத்தாழ இருநூறு ஆண்டுகட்கு முன் வரை )  சிற்றூர் மக்கள் தொன்னைகளில் கஞ்சி உண்டனர்.  இவை ஓலைகளால் திறமையாகக் கைப்பின்னலாகச் செய்யப்பட்டவை.  தண்ணீர் கீழ் ஒழுகிவிடாமல் அழகாகப் பின்னப்பட்டிருக்கும்.  இவற்றைப் பொருட்காட்சி சாலைகளில் கிட்டினால் பாருங்கள்.  நமக்கு இப்படி ஏதும் பின்னத் தெரியவில்லை. காட்டுவாசிகட்கு நன்றாகத் தெரிகிறது.  பழங்காலத்தில் கூஜாக்களும் இப்படித்தான் ஓலைகளால் உருவமைக்கப்பட்டன.  கூடுபோல் பின்னினர்.  பின்னர் மண்ணாலும் பளிங்கினாலும் வெள்ளியினாலும் பொன்னாலும் செய்யப்பட்டன.  காலம் இடம் இவற்றைத் தீர்மானித்தன.

கூடு ( வினைச்சொல்)  கூடுதல். ஒன்றுசேர்த்துப் பின்னுதல்.

கூடு >  கூஜ் > கூஜா.  அல்லது கூடா  ( கூடு+ ஆ)  > கூஜா.

ஆ தொழிற்பெயர் விகுதி.   கூஜா என்பது அயலிலும் வழங்கும் சொல்.

திருத்தம் பின்
(திருத்தம் பின் என்றால் எழுத்துப்பிழைத் திருத்தம்,  தன் திருத்த மென்பொருள் கோளாற்றினல்  பின்னர் வந்து சேரும் பிழைகள்,  வெளியார் தலையீட்டினால் புகுத்தப்படும் அனுமதி இல்லாத திருத்தம் என்பவைதாம்.   கருத்தில் திருத்தம் செய்யவேண்டிய நிலையைக் குறிக்கமாட்டாது.)

குறிப்பு:

கோளாறு + இன் + ஆல் = கோளாற்றினால்.  கோளாறு எனில் அறிஞர் சரியென்று கொண்டதை (  கோள் ) (  அறு >) ஆறு -  அறுத்து முரண்படுத்துவது என்பது பொருள் .

இதைக் கோளார் என்று எழுதுவது பிசகு.




கருத்துகள் இல்லை: