இன்று வினியோகம் என்ற சொல்லைப் பற்றிய சிந்தனையில் சிறிது ஆழ்வோம். இதைப் பற்றி யாமெழுதியது உண்டெனினும் இது இப்போது ஈண்டில்லை யாதலின் மீண்டும் பதிவேற்றி மகிழ்வோம்.
வியன் என்பது ஒரு தமிழ்ச் சொல். இதைச் சுருங்க விளக்க முயல்வோம். இது விர் என்னும் அடிச்சொல்லிலிருந்து விய் என்று திரிந்து அன் என்னும் விகுதி (மிகுதி) பெற்று வியன் என்று வரும்.
விற்றல் ( வில்+ தல் ), விற்பனை ( வில்+ பு + அன் + ஐ ) என்ற சொற்களில் வில் என்று வரும் அடிச்சொல், பின்னர் விர் என்றும் அதன்பின் விய் என்றும் திரியும். ஓர் இடத்திலுள்ள ஒரு பொருளைப் பிற இடங்களிலும் கொண்டுசெல்லும் செயலையே " வில் " என்பது குறிக்கிறது. பணத்துக்காகவோ பண்டமாற்றுக்காகவோ அவ்வாறு கொண்டு செல்கையில் அது வில்> விலை ஆகி, ஒன்றுக்காக மற்றொன்றைப் பெறுதலைக் குறிக்கிறது. இதிலிருந்து "பொருட்பெறுமானம்" உண்டாகின்றது.
விர் என்பது விய் என்று திரிந்து பின் அன் என்ற விகுதி பெற்று " வியன் " ஆகின்றது.
வில், விர், விய் எல்லா உருமாற்றுக்களுக்கும் கருப்பொருள் விரிவு என்பதே. வினியோகம் என்பது பொருள் விரிபாடு ஆகும். விலைப் பொருட்டாயினும் அன்றாயினும் விரிவே மையப்பொருள்.
இது விரிவு என்னும் பொருளில் தமிழ் நூல்களில் காணப்படுகின்றது. எம் நினைவுக்கு வரும் எடுத்துக்காட்டு:
விரிநீர் வியனுலத் துள்நின் றுடற்றும் பசி என்ற வள்ளுவனார் வரியாகும். வியன் என்றால் இங்கு விரிந்த என்பது பொருள். வியாபித்தல் என்ற புனைவுச் சொல்லும் இதனடித் தோன்றியதுதான். வியன் + ஆ + பி = விய + ஆ + பி = வியாபி என்றாகிறது. 0னகர ஒற்றும் ஆகு என்ற வினையில் கு என்ற நீட்சி விகுதியும் களையப்பட்டுள்ளன. வியன் ஆகுவித்தல் எனற்பாலதை மடக்கி, விய ஆ பி (த்தல்) என்று வேய்வித்துள்ளனர். (வேய்தல்: வேய்> வேயம் > வேசம் > வேஷம்).
வியன் என்பது வினியோகம் ஆவது:
வியன் + ஓங்குதல்.
ஓங்குதல் என்பதை முன் எடுத்துக்கொள்வோம்.
ஓங்கு + அம் = ஓங்கம்; இடைக்குறைந்து: ஓகம். ங் என்பது விடப்பட்டது.
வியன் + ஓகம் = வியனோகம்
இங்கு எழுத்து முறைமாற்று புகுத்தப்படுகிறது.
வியனோகம் > வி -ன - யோகம்.
இது விசிறி > சிவிறி என்பதுபோலும் எழுத்து முறைமாற்று. இன்னோர் எ-டு:
மருதை > மதுரை. ( மருத நிலங்களால் சூழப்பட்ட நகரம் ).
வியனோகம் > வினயோகம்.
நன்றாகவே உள்ளது.
இதை எளிதாக்க. வினியோகம் என்று னகரத்தை னிகரமாக்குக. இது ஒலிப்பெளிமை புகுத்தல்.
விற்பனைக்குப் பகிர்தல் முறை என்பதைக் குறிக்க ஒரு சொல் கிடைத்துள்ளது.
வினியோகங்கள் தொடங்கிய காலத்து மனித குலத்துக்கு ஒரு யோகம் உண்டாகியிருக்கலாம். பொருட்பகிர்வு உண்டானதால். உடற்பயிற்சி மனப்பயிற்சி முதலிய குறிக்கும் யோகம் ஏதுமிருப்பதாய்க் காண இயல்வில்லை.
வியயோகம் என்று வந்திருந்தால் சொல்ல எளிமை இல்லையாகின்றது. விசயோகம் எனினும் நேரன்று. ய>ச.
பகிரோங்கம் என்றிருக்கலாம். குறுக்கிப் பகிரோக மாக்கலாம். ரோகம் வந்துவிடுகிறது.
பகிரோங்கம் என்பதைச் சீனமாக்கினால் " புவே லோங்" வரை இழுக்கலாம்.
தொல்லை இன்றி. புரியாவிட்டால் விடுக.
வியனோகத்தைக் கொண்டாடுங்கள்.
பிழைபுகின் பின் திருத்தம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக