புதன், 7 மே, 2025

விக்கிரமா

 இன்று விக்கிரம என்ற சங்கதச் சொல்லை அறிந்துகொள்வோம். 

சங்கதம் என்பது  சமஸ்கிருதம் என்பதற்கு மற்றொரு பெயர். இம்மொழிக்குப்   பல பெயர்கள் உள்ளன. சந்தாசா என்றோர்  "அழைப்பும்" உண்டு. இது சந்த அசைவு என்ற தொடரின் மருவுதலே.

இனி  விக்கிரம என்ற என்பதைக் கவனிப்போம்.

இது வில் + கு+ இரு +அ+அமை +அ என்பவற்றின்  சேர்க்கையும் திரிபும்தாம். வில்லுக்குப் பெரியோனாய் அமை ந்தவன்  என்பது பொருளாம். வில் கு > விற்கு என்று தமிழிலும் விக்கு என்று அயலிலும் வரும். இரு என்றால் பெரிய என்பது. இரு என்பது எண்ணிக்கை என்றும் கொள்ளல் தகும். இருமடங்கு என்னில் அதுவும் பெருமைக்  குறிப்பே.

வில்லிற் பெரியோன் எனில் வீரன் என்பதன் பொருட்டு.  பெண்ணுக்கும் அமையும்.

விக்கிரம என்ற சொல் தமிழ் மூலத்தது. இது மனிதப் பெயர்களிலும் பயின்று வழங்கும் .

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பிறருடன் பகிர்க.



கருத்துகள் இல்லை: