பஞ்சமி என்ற சொல்லைப் பார்க்கலாம்.
அம்மன் பற்றிய வரலாறு அறிய எழுங்காலை அவள் ஐந்தாம் வகுப்பினள் என்பது சாதிகள் பற்றிய கருத்து வேரூன்றி விட்டபின் வெளிப்பட்ட விளக்கமாகும்.சாதிக் கருத்துக்கு இது ஒளி தருவதுபோல் தோன்றினாலும் இது வரலாற்றுக்கு இயைந்தது அன்று. இதற்குக் காரணி யாதெனின் பஞ்சமி என்னும் சொல் சாதிகள் ஆளுமை பெறுமுன் அமைந்த தாகத் தெரிகிறது.
பண்கள் அமைததுப் பாடுகிறவர்கள் "பண் சமைப்பவர்கள். " சம்> சமை என்பதே சொல்லமைப்பு ஆதலின் சம் > சமி என்னும் வடிவம் உணரற் பாலதாகிறது. இதற்கு " அமைப்பவள் " என்று பொருளுரை பகர்தல் ஆய்வறிவு ஆகும்.
பண் சமி என்பதே பஞ்சமி ஆயிற்று. பிற்காலத்தோர் இதை ஐந்தாம் வகுப்பினள் என்றது அவர்கள் கொண்ட கருத்து ஆகும் . கருத்துக்கள் காலத்திற்கு ஏற்ப மாறுபவை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்ந்து படிக்க.
ப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக