செவ்வாய், 6 மே, 2025

உத்வேகம் என்ற சமஸ்கிருதமும் அதற்குரிய மூலச்சொல்லும்.

 இன்று உத்வேகம் என்ற சமஸ்கிருதச் சொல்லையும் அதன் தமிழ் மூலத்தையும் காண்போம்.

சுட்டடிச் சொல்வளர்ச்சியில்  அ , இ , உ  என்ற மூன்று சுட்டுகள் இடம்பெறுகின்றன.  இவற்றுள் அ ( அகரம் )  மற்றும் இ  (இகரம் )  இரண்டும் இந்நாள் வரையில் தொடர்ந்து வாழ்ந்துள்ளன.  ஆனால் உகரம் என்பது பல்லாயிரம் சொற்களைப் படைத்துவிட்ட பின் வழக்கொழிந்து அல்லது குன்றிவிட்டது  உத்வேகம் என்ற சொல் இந்த உகரத்தைச் சார்ந்து எழுந்தது ஆகும். இதன் முழுமை யாதெனின் உது வேகம்  என்பதுதான்.   இது அது வேகம் என்றும் இது வேகம் என்றும் வருமாறு போல உண்டான பயன்பாடுதான்.  உது வேகம் என்றால் முன்னுள்ள வேகம் என்பதுதான்.  மனிதனின்  எண்ணத்தில் செயலில் முன்னே எழுநிலையாக நின்று அவனை வழிப்படுத்துவது என்று பொருள் பெறுகிறது/  இந்தப் பொருள் சுட்டடிக் கருத்து அடிப்படையில் எழுந்து வேறு பயன்பாடுகளால் மங்கி விடாமல் உத்வேகம் என்ற சொல்லிலும் இன்றும் காணப்படுவதும் பயன் கொள்வதும் ஆகும்.

உதுவேகம் என்பது சமஸ்கிருதத்தில் உத் வேகம் ஆகிறது.  இதில் து என்பதில் உள்ள உகரம் கெட்டது அல்லது விலக்குண்டது என்பதுதவிர  வேறு மயக்கம் யாதும் இலது கண்டுகொள்க.

தமிழ் முறைப்படி காணப்படும் சொற்கள் சமஸ்கிருதத்தில் இவ்வாறு குறுக்கமுற்று வழங்குவது அம்மொழிக்குரிய இயல்பு  ஆகும்.  

இன்று இதைப் ப்யன்படுத்த வேண்டின் உத்துவேகம் என்று விரித்துப் பயன்படுத்தலாம்.  ஆனால் அதற்கீடான தென்மொழிச் சொற்கள்  தடையின்ரிக் கிடைப்பதால் இவ்வாறு விரித்துப் பயன்படுத்துதன் தேவையானல் செய்துகொள்ளலாம்.  இல்லை என்றால் வேறு தனித்தமிழ்ச் சொற்களைப்  பயன்படுத்திக் கொள்க.

வேகம் என்பது வேகுதல் என்பதன் தொடர்பில் எழுந்ததே.  வேகுதலால் அல்லது வேக்காளத்தால்  பொருள்கள் விரைவில் அழிந்து அல்லது மாறிவிடுகின்றன.  இவ்வேக்காளம் வெப்ப மிகுதியால் ஏற்படும் அழிவு. விரைந்து அழிதற்குக் காரணமாவதால் வேகு+ அம் > வேகம் என்ற சொல்லுக்கு விரைவுப் பொருள் வழக்கில் உண்டானதே ஆகும். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


YOUR ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may  share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.




கருத்துகள் இல்லை: