அந்தியம் என்ற சொல்லைக் கவனிப்போம்.
மனிதன் தன் அந்திய காலத்தில் துறவு பூண்டு வாழ்தல் மிகவும் நன்று என்ற வாக்கியத்தில் அந்தியம் என்ற சொல் காணலாம். தன் கடைசிக் காலத்தில் என்று இதற்குப் பொருள்..
இந்தச் சொல்லில் அண் என்ற தொடக்கப் பகவு உள்ளது. அண் என்றால் நெருங்கிய(து என்று பொருள்.. எதற்கு நெருங்கியது என்னில், முடிவை நெருங்கிய காலத்தை என்று கூறலாம். அந்தம் என்ற சொல்லும் இதனுடன் உறவுள்ள் சொல்தான்,
அண், அண்மை, அணித்தான, அண்டுதல், அண்முதல் என்ற பல சொற்கள் உள்ளன. அண்+ து+ இ + அம் > அண்தியம் என்றாகும். து இ என்பன இடைநிலைகள். அம் என்பது இறுதி அல்லது விகுதி.
சொல்லாக்கப் புணர்ச்சியில் அண்தியம் என்பது அந்தியம் என்றே அமைவுறும்.
அண்தியம் என்பது அண்டியம் என்று உரைநடையில் நிலைமொழி வருமொழிகள் போல புணர்க்கப்படா.
அறிக மகிழ
மெய்ப்பு பின்னர்
பகிர்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக