கருத்துகள் கணிப்புகள் கொஞ்சமோ---- சொல்லும்
கனிச்சுவை ஆரூடம் பஞ்சமோ?
பொருத்துறார் உண்மையைப் பொய்களில் ----- நம்மைப்
பொய்யறியார் என்றோ புனைகிறார்?
வாக்குகள் எண்ணிட அறிகிறோம் ---- இதற்கு
வரட்டுரை ஆக்குதல் என்பயன்?
நாக்குக்குக் கொடுங்கள் ஓய்வினை---- வரும்
நாள்வரையில் காக்க வாய்மையே.
ஆனை கிடக்குது பானைக்குள் ---- அதை
அறிந்துவிட் டாலென்ன பொல்லாப்பு?
தேனென்னும் தீஞ்சுவை கிட்டுமே ---- இனித்
தேசத்தார் பாங்கினில் தென்றலே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக