அதிசயம் என்ற சொல்லுக்கு உங்கள் வாத்தியார் பொருள் கூறியிருப்பார். நீங்கள் படித்த நூல்கள் சொல்லாக்கவியல் நூலா யிருந்திருந்தால், அதில் வேறுவிதமான சொற்பகுப்புகளை கூறியுமிருக்கலாம். இன்று இதை நாம் வேறொரு கோணத்திலிருந்து காண்போம்.
ஒன்றை ஓர் அதிசயம் என்றால், உங்களை வியக்க வைத்தது என்ன என்ற கேள்வி எழுகிறது. வியப்புக்குரியது ஒவ்வொரு நிகழ்விலும் மாறுபடுகிறது. இந்த ஒவ்வொரு வியப்புக்கும் என்ன உள்ளடக்கம் என்று பார்த்து ஒரே பெயரைக் கொடுத்து எல்லாவற்றையும் ஒருங்கே முன்னிறுத்திவிட முடியாது. அதனால் இதற்குள் ஒரு கடினநிலை தோன்றியது.
ஒரு பெயரில் அடக்க இயலவில்லை.
அதனால் இந்தப் பெயரை இப்படி அமைத்தனர்.
அது இசையும்
> அதிசையும்
> அதிசயம்.
எது இசையும் என்பது கேள்வியாக வந்தால், அது, வியப்பை உண்டாக்குகிறதே, அது! அது வேறுபடு பொருளாம்.
நாலு கண்கள் இருக்கும் ஒரு விலங்கைக் கண்டுவிட்டால், அதில் வியப்பைத் தருமாறு இசைந்திருப்பது கண்களின் எண்ணிக்கை.
எதிசையுமோ அதிசையும் - அதிசயம்.
இந்தச்சொல்லை இப்படி உருவாக்கிய புலவன் மிகுந்த அறிவாளி என்று அறிக.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக