சனி, 6 ஏப்ரல், 2024

மித்திரம் நட்பு - காக்கும் காஉசிக முனிவர்.

 தேவர் தம் நூலில் நட்பினை நன்கு  ஆராய்ந்து விளக்குகிறார். அவர்:


மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. 800


என்று தெளிவாகப் பாடுகிறார்.  ஆனால் இதிலுள்ள தொல்லை என்னவென்றால் ஒருவன் மாசற்றவன் என்று அவனுடன் பழகுமுன் எப்படித் தெரிந்துகொள்வது?  பிறகு பிறகு தானே ஒவ்வொருவன் வண்டவாளமும் தண்டவாளத்தில் ஓடுகிறது?

ஒருவன் ஒவ்வொரு மாலையிலும் போய்ச் சங்கிலி திருடுகிறான் என்று,  நாம் வீட்டிலுருந்துகொண்டு எப்படித் தெரிந்துகொள்வது?  ஒருநாள் பிடிபட்டபின் என்னை வந்து பிணையில் எடு ( bail me out please)  என்று தொலைபேசியில் அழைக்கும்  போதுதான்  தெரிகிறது. 

நட்பு என்பது மிக்கத்திறன் வாய்ந்தது.  அவனுக்காகச் சொத்தை அடைமானம் வைத்து காசு கட்டி அவனை மீட்டு வருகிறோம்.

இது நம் அளவில் நாம் செய்த நன்மை.  நாம்  அவனுக்கு மிக்கத்திறன் வாய்ந்த ஒரு நண்பன். நட்பு என்பதே ஒருவனையாவது காப்பாற்றவேண்டிய ஒன்று. இப்படி உலகில் பலரைக் காப்பாற்றியவர்தாம் கவுசிக முனிவர்.   அவர்: உலகம் என்றால் அதில் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களுக்கு நோய் வந்தாலும் மருத்துவர் மருந்து கொடுக்கத்தான் செய்கிறார்.  அப்போதுதான் ஒருவர் உலக நண்பன் ஆகிறார்.

காவு  உசிக  முனிவர்.

காவு உயிக முனிவர்

காவு உய்வு இக முனிவர்.  காவலின் உயர்வு மிக    வாழ்ந்த முனிவர்.

காவு என்றால் அது காவல். 

அவரல்லரோ  உலக நண்பரான முனிவர்.



நட்பும் மிகத்திறம் உடையது. அதனானாலேதான்  மிக்கத்திறம் >  மிகத்திரம்>  மித்திரம் ஆயிற்று

மித்திர(ம்)  என்றால் சம்ஸ்கிருதத்தில் நட்பு. மிக்கத்திறன் என்பது நட்புத்தான்.

காத்தல் என்பது ஒரு கடவுளியல்பு.  முனிவர் அவரின் பதில்நிலையராக (representative) நின்று உலகுக்கெல்லாம் நண்பராகிறார்.

மிகத்திறம்> மி(க)த்திரம் > மித்திரன்.

கா உய் இக அன் >  காவுயிகன் >  காவுசிகன் > கௌசிகன்.
பொருத்தமான புனைவு ஆகும்.


கருத்துகள் இல்லை: