வியாழன், 11 ஏப்ரல், 2024

தனுஷ் என்ற சொல்தோன்றுதல்

 இன்று தனுஷ் என்ற சொல் எவ்வாறு தோன்றிற்று என்று அறிந்துகொள்வோம்.

தன்னில்தான் இயங்கும் நிலைதான் தனுஷ் என்று சொல்லப்படுதிறது.  ஒவ்வொரு இராசிக்கும் ஒரு தன்மை,  குண இசைவுகள் முதலியன இருக்கும் என்பது உண்மையாயினும்,  தனுஷுக்கு இது  சற்று நிறைவை ஒட்டி நிற்கிறது என்பர்.உங்கள் இருகைகளாலும் ஒரு பூனையைத் தூக்கி கீழே போட்டுவிட்டாலும்  அது  கண்டபடி போய் விழாமல் ஒரு தந்திரத் தாவல் மன்னன்போல் நாலு காலும் சமநிலைப் படும்படியாக விழுந்து நிற்கும். ஓர் எருமையால் தூக்கி எறியப்பட்ட சிங்கம்  கண்டமாதிரி போய்த் தரையில் விழுகிறது.  அதனிடம் தந்திரத்தாவல் இல்லை. தாக்கும்போது முன்னங் கால்களால் அடித்துக்கொண்டு வாயினால் கடித்துப் பிடித்துக்கொள்கிறது. வீழ்ச்சியில் தந்திரம் இல்லை.

தனுஷ் என்ற சொல் "தன் உய்வு"  என்ற இரு தமிழ்ச் சொற்களிலிருந்து வருகிறது. அல்லது அதற்கான தமிழ்ப் பதத்தின் சமகாலப் புனைவாதலும் கூடும். ஆகவே, தன் உய்வு > த(ன்)னுய்வு> தனுசி/(வு)> தனுஷ்  ஆகும்.  இது தனுர் என்றுமாகும். உர் என்பது உரு என்பதன் சுருக்கம்

தனுஷ்கோடி (ஊர்ப்பெயர்) என்பதில் கோடி என்பது மூலை.  கோடு> கோடி, இது வளைவுப் பொருள்.  ஒரு நேர்கோட்டின் முடிவு  அதன் வளைவுதான்.  தனுஷ்கோடி என்பது தானே நிற்கும்  அல்லது தனியாக நிற்கும் ஒரு நிலப்பகுதி,  திட்டு, தீவு.   தீவு என்பது நிலத்தின் தீர்வு அல்லது முடிவு.  தீவகம் என்பதும் தீவுதான்.  தனிநிலம்,  அல்லது பிற நிலப்பகுதிகளைச் சார்ந்து நில்லாத, ஒரு தனிப்பகுதி.  நாவலந்தீவு என்றால் பேச்சில் வலிமை காட்டிய தன்மை இங்கு வாழும் மக்களுடன் முடிந்தது,  மற்றவர்போல் அதிகம் பேசிக் கொள்கைபரப்புச் செய்யாதவர்கள் என்றுபொருள்.  புத்தமதத்தைச் சீனாவுக்குப் போதித்தவர்கள் இந்தியர்கள். சீனா அதைப் பிறருக்கு எடுத்துரைத்தது குறைவு.  இந்தியர்களே முன்னணியில் இருந்தனர்.  நாவற்பழம் கிட்டிய அழகிய இடம் என்றும் பொருள்.  தீவகம் + அல்+ பு + அம் > தீவகற்பம்  ( தீவுக்குறை.).  தீவகம் அல் =  தீவு அல்லாத. ஒருபக்கம் நிலத்தொடர் உடைய,

உய்>( உயி)> உசி.  இது யகர சகரப் போலி.   ஒ.நோ:  பசு > பை.  (பசுந்தமிழ் > பைந்தமிழ் )

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

கருத்துகள் இல்லை: